ஏழரை கோடி தமிழர்களின் ஏக்கத்தை திரு.ஸ்டாலின் உடனே போக்கி விடலாம் ….!!!


இன்றைய தமிழ் இந்து நாளிதழிலிருந்து திரு.ஸ்டாலின் வெளியிட்டதாக
வந்திருக்கும் அறிக்கையிலிருந்து –

https://tamil.thehindu.com/tamilnadu/article26328145.ece?
utm_source=HP&utm_medium=hp-latest

———-

மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன்,
பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய
ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று
தமிழக அமைச்சரவை கூடி 2018 செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்து உத்தரவு பிறப்பிக்காமல், ஆளுநர் தொடர்ந்து கெட்டியான அமைதி காப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

————–

இவர்களது விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏழரைக் கோடி
தமிழர்களுக்கும் இது பெரும் ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும்
ஏற்படுத்தியிருக்கிறது.

————–

ஆனால், ஒரு அமைச்சரவைத் தீர்மானத்தை இத்தனை மாதங்களாக ஆளுநர் நடவடிக்கையின்றி கிடப்பில் போட்டு இருப்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை;

மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆளுநருக்கு
அறிவுறுத்தவும் கோரவில்லை.

தற்போது பாஜகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி வைத்திருக்கும் முதல்வர் –

7 தமிழர்களின் விடுதலை, நீட் தேர்வு மசோதாக்கள்,
ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் கைவிடுவது, காவிரியின் குறுக்கே
மேகேதாட்டு அணை கட்டுவதை கைவிடுவது உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிபந்தனை வைத்திருக்கலாம்.

பாஜகவுடன் இப்போது தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் முதல்வர்,
ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தாவது முதலில் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பல்லாண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்த வேண்டும்”

—————————————————————————–

எடப்பாடி அவர்களின் பின்னால் தொங்கிக்கொண்டிருப்பதை
விட்டு விட்டு ஸ்டாலின் சுலபமாக ஒரு வேலையைச் செய்து,
ஏழரை கோடி தமிழர்களின் துயரத்தை உடனடியாக போக்கி விடலாம்….

30 வருடங்கள் பொறுத்துக் கொண்டவர்களுக்கு இன்னும் 3 மாதங்கள்
பொறுப்பது பெரிய சிரமமல்ல.

மே 2-வது வாரத்தில், ஸ்டாலின் ஏற்கெனவே அடையாளும் காட்டிய நபர் தான் பிரதமர் பதவியை ஏற்கவிருக்கிறார்… அவரிடம் சொல்லி –

மே மாதம் தாங்கள் பதவியேற்றதும், 7 தமிழர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பை இப்போதே வெளியிட்டு விட்டால் –

ஏழரை கோடி தமிழர்களும் நிம்மதியாக தூங்கப்போகலாம்…

கூடவே, போனசாக – நீட் தேர்வு மசோதாக்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் கைவிடுவது, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை
கட்டுவதை கைவிடுவது உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பல்வேறு
கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் –

– மே மாத பிரதமரை இப்போதே அறிவிக்கச் செய்து விடலாம்…

ஏழரை கோடி தமிழர்களும் – இப்போதே அதை கொண்டாடியும் விடலாம்.

———————————————————————-

பின் குறிப்பு –

( கண்ணாடி வீட்டில் குடி இருப்பவர்கள் – கல்லெறியக்கூடாது …..
என்கிற அடிப்படையைக் கூட, அடுத்த முதல்வருக்கு, 60 வயதான பின்பும் அப்பா வந்து தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி….? )

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஏழரை கோடி தமிழர்களின் ஏக்கத்தை திரு.ஸ்டாலின் உடனே போக்கி விடலாம் ….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. ரொம்பவும் சாஃப்டா எழுதியிருக்கீங்க. எனக்கே இரண்டு நாட்களாக ஸ்டாலின் அவர்கள் பேச்சு தொலைக்காட்சியில் வரும்போது எரிச்சலாக இருக்கிறது. அவர், மக்கள் மடையர்கள் என்றே நினைத்திருக்கிறார். 7 தமிழர் விடுதலை செய்யவேண்டும் என்ற எண்ணத்துக்கும் திமுகவுக்கும் எப்போதுமே சம்பந்தம் கிடையாது. ஆனானப்பட்ட பிரபாகரனின் வயதான தாயாரை சென்னையில் இறங்கவிடாமல் விரட்டிய பெருமைக்கும், ஈழத் தமிழர்கள் அழித்தொழிப்பில் பங்குபெற்ற பெருமைக்கும் உரியதுதானே திமுக.

    அதிமுக+பாமக கூட்டணியை என்ன என்னவோ சொல்லி வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஏன் காங்கிரஸ் தலைமையிடம்,
    1. காவிரியில் மேக தாது அணைக்கட்டு கட்ட விடமாட்டோம். முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனையில் தமிழகம் சார்ந்துதான் இருப்போம்.
    2. காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிதான் காங்கிரஸ் செயல்படும். அதற்கு மாறாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட மாட்டார்கள்.
    3. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு.
    4. ஜி.எஸ்.டி.யிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு
    என்பன போன்று எழுதி வாங்கிக்கொள்ளலாமே. அதுவே அவருக்கு வாக்குகளை அள்ளித் தருமே. பிரச்சாரத்துக்குப் போகவே வேண்டாம், எதிர்க்கட்சிகளைப் பற்றிப் பேசவே வேண்டாம்.

    அவர், பாமக, அதிமுகவைப் பற்றி என்ன பேசியது, ஜெ.வுக்கும் பாமகவுக்கும் என்ன பிரச்சனை இருந்தது, அதிமுக+பாமக சேர்ந்தால் அது தோல்விக்கூட்டணி என்றெல்லாம் புலம்பித் தள்ளுவதை விட்டுவிட்டு,

    தன்னைக் கேவலமாக விமர்சித்த விசிக திருமாவளவன், வைகோ, தனக்கு எதிரியான (அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிற) ராஜபக்‌ஷேவைச் சந்தித்து பரிசில்கள் பெற்றுச் சென்ற கனிமொழி,, ‘2ஜியில் கொள்ளையடித்து எங்களுக்குத் தீரா அவப்பெயரைத் தந்த திமுக’ என்று சொன்ன காங்கிரஸ், ‘கூடா நட்பு, இனி காங்கிரஸோடு கூட்டு கிடையவே கிடையாது’ என்று சொன்ன திமுக துணை முதல்வர் ஸ்டாலின் இவர்களைத் தன்னுடைய கூட்டணியிலிருந்து விலக்கி வைக்கலாமே.

    • mekaviraj's avatar mekaviraj சொல்கிறார்:

      வைக்கலாமே 🙂 🙂

      GST ஒரு மட்டமான திட்டம் கிடையாது. பொருளாதாரம் குறித்த எந்த அறிவும் இல்லாத அகந்தையான மட்டரகமான அரசு செயல்படுத்திய விதத்தில்தான் பிரச்சனை. உர்ஜித் படேல் பிஜேபி அரசாங்கம் கொண்டு வந்தவர் – அவர் ஏன் பதவி விலக வேண்டும்?

      ஒரு வேலை செய்பவர் அந்த வேலையின் அறத்துக்கு அப்பாற்பட்டு வேலை செய்ய முடியாது. ( ஒரு ஆசிரியரிடம் நீங்க daily class வந்தா போதும் – பாடம் எடுக்க வேண்டாம்னு சொல்லி நிறைய சம்பளம் கொடுத்தாலும் கொஞ்சூண்டு அறம் உள்ள மனிதராக இருந்தாலும் அந்த வேலைய ரிசைன் செய்துவிடுவார் )

      மற்ற பதில்கள் கீழே.

      அரசியல்ரீதியாக இது தான் ஏன் பாதை என்று தேர்ந்தெடுத்த பின் உங்களுக்கு எவ்வளவு பதில் கொடுத்தாலும் பத்தாது புதியவன் சார்

  2. hari1964@rediff.com's avatar hari1964@rediff.com சொல்கிறார்:

    உங்கள் ஆரிய அரிப்பு புரிகிறது. ஏழு தமிழர்களின் விடுதலை என்பது, ஒரு நாகரிக சமூகம் காட்டவேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமானம். நீட், ஹைட்ரோகார்பன் காவிரி போன்றவைகள் மாநில மக்கள் நலன் சார்ந்தது. வர்ணாசிரம மனோபாவம் கொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

    ஸ்டாலின் ஒன்றும் உத்தமர் அல்ல. இருப்பினும், இப்போதைய கொள்ளைக்கார அடிமைகளை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

    • mekaviraj's avatar mekaviraj சொல்கிறார்:

      <<ஸ்டாலின் ஒன்றும் உத்தமர் அல்ல. இருப்பினும், இப்போதைய கொள்ளைக்கார அடிமைகளை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

      வழிமொழிகிறேன் – ஒரு எதிர் கட்சி தலைவரா என்ன செய்யணுமோ அதை செய்றார் –
      காங்கிரஸ் , பிஜேபி ரெண்டு கட்சி தலைமையுமே காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஆதரவான நிலை எடுக்காது. கோர்ட் வழி மட்டும் தான் ஒரே வழி.

      ஏழு பேர் விடுதலையில் மாண்புமிகு கவர்னர் பிஜேபி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் தூங்கி கொண்டு இருக்கார் – இந்த விஷயத்தில் ஸ்டாலின் சரியான கேள்வி தான் கேட்டு இருக்கார்.

      நீட் விவகாரத்தை பொறுத்த அளவில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதாய் ராகுல் சொல்லியுள்ளார்.

      ஒரு வேளை ஸ்டாலின் நாளைக்கு ஆட்சிக்கு வந்து இந்த விவகாரங்களில் சரியான முடிவு எடுக்கலன்னா கேள்வி கேட்போம் .

      அவர் கேள்வியே கேட்கக்கூடாது சொல்ற மாதிரி இருக்கு கா மை சார்.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        மேகவிராஜ் சார்,

        ஸ்டாலின் கேள்வி கேட்ககூடாது என்று நான் சொல்லவில்லை.
        புத்திசாலித்தனமாக கேட்கவேண்டும் என்று தான் சொல்கிறேன்…
        முதல்வர் பதவிக்கு தயாராக காத்துக் கொண்டிருப்பவருக்கு –
        இதையெல்லாம் 60 வயசுக்கு மேலும் அப்பா வந்து சொல்லிக்கொடுக்க
        முடியாது என்று தான் சொல்கிறேன்… 🙂 🙂

        ஏன் இதையே அவர் மாற்றிச் சொல்லி இருக்கலாமே –

        ” மே மாதம் நாங்கள் பதவிக்கு வந்தால், இத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் – எனவே எங்களை தேர்ந்தெடுங்கள்…” …

        ????????

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

        • mekaviraj's avatar mekaviraj சொல்கிறார்:

          ” மே மாதம் நாங்கள் பதவிக்கு வந்தால், இத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் – எனவே எங்களை தேர்ந்தெடுங்கள்…” …

          தேர்தல் அறிக்கை தயாரிப்பில் இடம் பெறும் என்று நினைக்கிறேன் –

          நான் கண்டிப்பா DMK அனுதாபி அல்ல – இருக்கிறவர்களில் DMK கொஞ்சம் உருப்படியானதாக தோன்றுகிறது. இப்போது இருக்கும் மத்திய மாநில அரசாங்கங்களை வீட்டுக்கு அனுப்பியே தீரவேண்டும்.

          • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


            மேகவிராஜ்,

            //தேர்தல் அறிக்கை தயாரிப்பில் இடம் பெறும் என்று நினைக்கிறேன் //

            பாமக மாதிரி, திமுகவும், தனது தேர்தல் அறிக்கையில் இதைச் சேர்ப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை.

            ————-

            நாங்கள் ஆதரிக்கும் மத்திய அரசு
            ” இதைச்செய்யும்” என்று ஸ்டாலின் உறுதிமொழி கொடுப்பாரா…?

            ——————-

            திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு மறக்காமல் இதைப்பற்றி
            நீங்கள் எழுத வேண்டும்.

            .
            -வாழ்த்துகளுடன்,
            காவிரிமைந்தன்

    • mekaviraj's avatar mekaviraj சொல்கிறார்:

      ஹரி ,
      <<உங்கள் ஆரிய அரிப்பு புரிகிறது.. வர்ணாசிரம மனோபாவம்..
      இது போன்ற வார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டியவை. இதன் மூலம் கண்னுக்கு தெரியாத எதிரிக்கு கம்பு சுற்றுகிறீர்கள்.

      உங்கள் பிற கருத்தோடு உடன்படுகிறேன்.

  3. palaniappan's avatar palaniappan சொல்கிறார்:

    arumai iya

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … சும்மா ஒரு மாறுதலுக்காக ……

    சங்கத் தமிழ் என்ற நூலில் கலைஞர் அவர்கள் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதியுள்ளார்…. அந்த 100 பாடலுக்கும் ஒரு வண்ண ஓவியம் என்று சிறந்த ஓவியர்களைக்கொண்டு ஓவியம் வரையப்பட்டு உள்ளது….. இந்த விளக்கப் பாடல்கள் முதலில் குங்குமம் இதழில் வாரம் ஒரு பாடல் என்ற கணக்கில் வெளிவந்தது. பின்னர் நூல்வடிவமாக ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ்(பி)லிட் பதிப்பகத்தின் வெளியீடாக 1987இல் வெளிவந்தது. மூன்றாம் பதிப்பாக நவம்பர் 1987இல் வெளிவந்தது…

    அப்போது தமிழகத்தில் திரு . எம்.ஜி .ஆர் அவர்களின் ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்த காலம் — வேறு ஒருவருடைய ஆட்சியில் தான் இவர்களுக்கு ” மக்களின் மீதும் — அவர்களின் உரிமைகளின் மீதும் ” அலாதி பிரியம் ஏற்படும் — தங்கள் ஆட்சியில் அதைப்பற்றி நினைக்க மறந்து விடுவார்கள் என்று அனைவரும் கூறுவது வாடிக்கை ….!

    அந்த சங்கத் தமிழ் புத்தகத்தில் ” ஏழைகளின் வயிற்றில் அடித்து பணத்தை கொள்ளை அடிப்பது ‘ பற்றிய ஒரு கவிதை 288 வது பக்கத்தில் உள்ளது .. அந்தப்பாடல் அனைவரும் படிக்க :–

    மந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
    மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !

    பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
    தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை !

    பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
    பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை !

    இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
    பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி!

    வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ;
    வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!!

    மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?
    வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
    முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா
    குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

    என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
    குன்றமெனச் செல்வம் குவிக்கின்ற மனிதரிடம்;
    மன்றமேறி அறிஞர் அண்ணா கேட்டார் – அதனை
    மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !

    உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
    உண்மைதனை உணர்ந்த பின்னும்,
    வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
    பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

    உலகில் பிறந்தார் அனைவருக்கும்;
    உடல், உள்ளத் தேவையெல்லாம்
    ஒன்றாக இருக்கும் போது – இதனை
    நன்றாகச் சிந்திக்காமல்
    வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
    பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?

    தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத்
    தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
    வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்…! … என்ன மனதில் நன்றாக பதிந்ததா — வாழ்வெடுத்த பயன் …?

    அப்புறம் என்ன …. // ஏழரை கோடி தமிழர்களின் ஏக்கத்தை திரு.ஸ்டாலின் உடனே போக்கி விடலாம் ….!!! //

  5. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    பொதுவாகவே தமிழக மீடியாக்கள் செய்தி இதழ்கள் ஸ்டாலின்
    என்னவோ வானத்தில் இருந்து தேவதூதர் போன்று வரிந்து கட்டி
    இப்போதிருக்கும் ஆட்சியை குறைகூறி எதற்கெடுத்தாலும் மோடிதான்
    காரணம் என்று சொல்வது paid media என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மோடி
    விதித்த பணக்கட்டுப்பாட்டு ஏராளமான கிறித்தவ ,இஸ்லாமிய
    டிரஸ்ட் நிறுவனங்களுக்கு அயல்நாட்டில் இருந்து வந்து கொண்டிருந்த
    நிதியை தடுத்துவிட்டது. மோடி எதிர்ப்பை
    கையில் எடுத்த ஸ்டாலின் இதன் மூலம் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள்
    தனக்கு என்று கருதி இந்து மத எதிர்ப்பை தீவிரமாக செய்கிறார், இந்த தேர்தலில்
    இந்துக்கள் அவருக்கு நல்ல படிப்பினை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
    அதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சுவாரஸ்யம் இல்லை .அவர்களுக்கு
    22 சட்டமன்ற தொகுதிகள்தான் முக்கியம் . அதில் அதிக இடங்களை வெற்றி பெற்றால்தான்
    ஆட்சியில் நீடிக்க முடியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.