…
…

…
இன்று காலை – ஒரு மணி நேரம் முன்னதாக – சுப்ரீம் கோர்ட் ஒரு உத்திரவு பிறப்பித்திருக்கிறது….
ஸ்வீடனைச் சேர்ந்த எரிக்சன் கம்பெனிக்கு
தரவேண்டிய 550 கோடி ரூபாய் கடன் பாக்கியை
கொடுக்காமல் டபாய்த்து வந்த அ.அம்பானியிடம் –
மரியாதையாக இன்றிலிருந்து 4 வாரங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்து; இல்லையேல் 3 மாதங்கள் சிறைக்கு போ என்று உத்திரவு பிறப்பித்திருக்கிறது…
சுப்ரீம் கோர்ட் உத்திரவு பிறப்பித்த 30 நிமிடங்களுக்குள் அம்பானி கம்பெனி, கோர்ட் உத்திரவுப்படியே பணத்தை செலுத்தி விடுகிறோம்
(“உள்ளே” அனுப்பி விடாதீர்கள்…..) என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
உத்திரவை பிறப்பிக்கும் முன்னர் –
வாங்கிய கடனை திரும்பக்கொடுக்கும் எண்ணமே இல்லாமல், சுப்ரீம் கோர்ட் முன்னதாக பிறப்பித்த உத்திரவையும் நிறைவேற்றாமல், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அ.அம்பானிக்கு -கடும் கண்டனத்தை உ.நீ.மன்றம் தெரிவித்திருக்கிறது.
இதே அ.அம்பானி, பொதுத்துறை வங்கிகளிடம் தனது ஆர்.காம். கம்பெனிக்காக வாங்கிய சுமார் 40,000 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல், தற்போது “திவால்” நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.
அந்த கம்பெனியின் சொத்துக்களை விற்று, வங்கிகள் தங்கள் கடனை
சரி செய்து கொள்ள வேண்டுமாம்…
விற்றுப் பணமாக்கிக் கொள்ளும்படி அப்படி என்ன சொத்து இருக்கிறது அந்த கம்பெனிக்கு என்று பார்த்தால் – நாடு முழுவதும் எலும்புக்கூடுகளாக நிற்கும் செல்போன் டவர்களைத்தான் சொல்கிறார்கள்…
இந்த நாட்டின் தற்போதைய சட்டம் அவருக்கு துணையாக இருக்கிறது….
இந்த சொத்துக்களை ஏலம் போட்டு விற்று,
அதில் வரும் பணத்தை இந்த வங்கிகள் தங்களது 40,000 கோடி
கடனுக்கு எதிராக வரவு வைத்துக்கொண்டு —
வைத்துக் கொண்டு…..?
– கடன் அக்கவுண்டை க்ளோஸ் செய்து விட வேண்டும்.
அவர் அத்தனை கடன்களிலிருந்தும் விடுபட்டு விடுவார்…
ஆம்…. இந்த நாட்டின் தற்போதைய சட்டங்கள்
அதைத்தான் சொல்கின்றன.
நியாயமாகப் பார்த்தால், 550 கோடி கடனுக்கு 3 மாதம் சிறை என்றால்,
40,000 கோடி ரூபாய்க்கு எத்தனை மாதம் உள்ளே போக
வேண்டியிருக்கும்…..? மோடிஜி சர்க்காரைத்தான் கேட்க வேண்டும்.
( இதே அ.அ. தான் நமது ராணுவத்திற்கு தேவையான ரஃபேல்
விமானத்தை தயாரிக்கும் டசால்ட் கம்பெனியுடன் 30,000 கோடி
ரூபாய் முதலுக்கு கூட்டு வைத்திருக்கிறார்…
இது எப்படி சார் முடியும் என்கிறீர்களா….?
ஆமாம் சார்…
அதுவேறு பெயரில் இயங்கும் கம்பெனி…
இது வேறு கம்பெனி…அது வேறு கம்பெனி….
முதலாளி தான் ஒரே அம்பானி….!!!
இவர்கள் எல்லாம் திருடர்கள் இல்லை –
இப்போதெல்லாம் இவர்களுக்கு பெயர் – தொழிலதிபர்கள்…!!!
இந்த கம்பெனி நஷ்டம் வந்து திவால் ஆகி விட்டது….
ஆனால், அது இப்போது தான் புதிதாக திறக்கப்பட்டிருக்கிறது…
இனிமேல் தான் அதன் பெயரில் கடனெல்லாம் வாங்கி,
திரும்ப கொடுக்காமல், திவால் ஆக்கியாக வேண்டும்…
அதற்கு இன்னும் சில வருடங்கள் பிடிக்கும்…. 🙂 🙂
கவலையில்லை…. மோடிஜி தான் 2026 வரை பிரதமராக இருப்பாரே…!!!
(நாஸ்டர்டாம் …. கணிப்பு…!!! )
———————————
பட்டுக்கோட்டையார் இப்போது இருந்திருந்தால் –
பாட்டை திருத்தி இருப்பார்….!
“திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது…
அதை சட்டம் போட்டு தடுக்க வேண்டிய கூட்டம்,
திருடனுக்கே துணை போகுது….
.
—————————————————————————————————————-



//இது எப்படி சார் முடியும் என்கிறீர்களா….?
ஆமாம் சார்…
அதுவேறு பெயரில் இயங்கும் கம்பெனி…
இது வேறு கம்பெனி…அது வேறு கம்பெனி….
முதலாளி தான் ஒரே அம்பானி….!!!
இவர்கள் எல்லாம் திருடர்கள் இல்லை –
இப்போதெல்லாம் இவர்களுக்கு பெயர் – தொழிலதிபர்கள்…!!!
இந்த கம்பெனி நஷ்டம் வந்து திவால் ஆகி விட்டது….
ஆனால், அது இப்போது தான் புதிதாக திறக்கப்பட்டிருக்கிறது…
இனிமேல் தான் அதன் பெயரில் கடனெல்லாம் வாங்கி,
திரும்ப கொடுக்காமல், திவால் ஆக்கியாக வேண்டும்…//
இந்த இடுகையில் நான் துக்ளக் துர்வாசர், சத்யா நடையைப் பார்க்கிறேன்.
பாராட்டுகள் கா.மை சார்.
பாராட்டுதலுக்கு நன்றி புதியவன்.
(சம்பவங்களின், சம்பந்தப்பட்டவர்களின் மீதான ) கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, நகைச்சுவை
கண்ணோட்டத்தோடு விஷயத்தை நோக்கினால் – இடுகை கொஞ்சம் நன்றாக வருகிறது என்று தோன்றுகிறது.
ஆனால், பொதுவாக இத்தகைய செய்திகளை படிக்கும்போதும், பார்க்கும்போதும் – கோபமும், கடுப்பும் தானே முந்துகின்றன.
தனிப்பட்ட வாழ்க்கையில், கோபப்படுவதை கடந்த சில ஆண்டுகளாகவே, அநேகமாக விட்டு விட்டேன் என்று
தான் சொல்ல வேண்டும்… ஆனால் பொது விஷயங்களில், அது கைகூட மாட்டேனென்கிறதே…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தம்பியின் கம்பெனியில் இருந்து 800 Mhz ஸ்பெக்ட்ரம் அண்ணன் வாங்குவதாக இருந்தது .
அப்புறம் அண்ணன் வாங்குகின்ற வழியைக் காணோம் .
இப்ப தம்பி கம்பெனி படுத்தே விட்டது .
சட்டப்படி ஏலம் விடப்படும் .
ரூபாயிற்கு பதினைந்து புதிய காசுகள் கொடுத்தால் போதும் .
கடன் கொடுத்தவனுக்கு இலவச மொட்டை !