…
…
துவக்கத்திலிருந்து, இறுதி வரை –
பாஜகவுடன் கூட்டணி என்கிற செய்திக்கு
முக்கியத்துவம் கொடுக்காமலே பார்த்துக் கொண்டது –
அடக்கி வாசித்து, வெளியில் தெரியவராதபடி
நிறைய கட்சிகளுடன் உடன்பாடு கண்டது –
கடைசிவரை, திமுகவுடன் போகலாமா என்று
நப்பாசையுடன் முயற்சித்துக் கொண்டிருந்த
அன்புமணியை சமாளிக்க,
அப்பா ராமதாசுக்கு 7+1 சீட்டுகளை அள்ளிக் கொடுத்து
உள்ளே இழுத்துக்கொண்டது –
…

…
தம்பித்துரையும், பொன்னையனும் நிஜமாகவே பாஜக கூட்டணிக்கு
எதிராக பேசுகிறார்களோ என்று தோன்றும்படி “சீன்” போட்டது –
அதிமுகவில் தங்களுக்கு எதிராக கிளம்பும் கோஷங்களை பார்த்து –
கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படும்
அளவிற்கு பாஜகவுக்கே ஒரு டென்ஷனை –
உண்டுபண்ணி அவர்களை 5 சீட்டுக்குள் அடக்கியது –
அலட்டிக்கொண்ட திருமதி பிரேமலதா வி.காந்தை
லட்சியம் செய்யாமல் பாமக, பாஜக இரண்டையும்,
தங்களுடன் தனித்தனியே கையெழுத்து போட வைத்து,
இனி கூட்டணியில் சேரவும், கையெழுத்து போடவும் –
தங்கள் பின்னால் அலையும் நிலையை
திருமதி பிரேமலதா வி.கா.வுக்கு உண்டு பண்ணியது –
பாராளுமன்ற தேர்தலை அனைவரும் முக்கியமாக கருதி,
பார்த்து வந்த நேரத்தில், சத்தம் போடாமல்,
21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும்,
தங்களை ஆதரிக்க பாமகவிடம் உறுதிமொழி வாங்கியது…
பாமக தேர்தலுக்குப் பின்னால், ஜகா வாங்கி விடாதபடி, ராஜ்ய சபா சீட்
என்கிற காரட்டை முன்னே நீட்டிக்கொண்டே சட்டமன்ற தேர்தலை
எதிர்நோக்குவது –
திருவாளர் பியூஸ் கோயலை, செய்தியாளர் சந்திப்பில்
அனைவரின் எதிரிலும் –
“அம்மா” “அம்மா” என்று புலம்ப வைத்தது…
…

…
———–
நடக்கும் என்பார் நடக்காது –
நடக்காதென்பார் நடந்து விடும்….
கிடைக்கும் என்பார் கிடைக்காது –
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்….!!!
-என்கிற MGR சினிமா பாட்டு கூட நினைவில் இன்றி –
நித்திரையில் ஆழ்ந்து விட்ட “நிரந்தர” “அடுத்த” முதல்வரை –
———-
” கையெழுத்து போட்ட டாக்டர் ராமதாசுக்கு –
வெட்கமில்லையா,
மானமில்லையா,
சூடு இல்லையா, சொரணை இல்லையா….?
– என்று கதற வைத்தது —
—————
அத்தனையையும் வைத்துப் பார்த்தால், சந்தேகம் இல்லாமல்
முதல் ரவுண்டில் வெற்றி இரட்டையர்களுக்கு தான்….!!
(இந்த கூட்டணி நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட…. )
_____________________________________
மறந்து விட்டேனே – இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் –
தைரியமாக, திருவாளர் அமித்ஜீயை – இங்கு உங்கள் திருமுகத்தை
காட்டினால் உள்ளதும் போய் விடும்… அப்படியே திரும்பி பார்க்காமல்
ஓடிப்போய் விடுங்கள் என்று சொல்லி மும்பையிலிருந்தே டெல்லிக்கு
return flight -ல் அனுப்பி விட்டதை…. 🙂 🙂 )
.
—————————————————————————————————–



சுடச்சுட விமரிசனம் சூப்பர்.
அதிமுகவின் காவல்தெய்வங்களாய் உங்களால் வர்ணிக்கப்பட்டவர்கள் கூட ஏன் இப்படி மாறினார்களாம்?,
மறந்து விட்டேனே – இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் –
தைரியமாக, திருவாளர் அமித்ஜீயை – இங்கு உங்கள் திருமுகத்தை
காட்டினால் உள்ளதும் போய் விடும்… அப்படியே திரும்பி பார்க்காமல்
ஓடிப்போய் விடுங்கள் என்று சொல்லி மும்பையிலிருந்தே டெல்லிக்கு
return flight -ல் அனுப்பி விட்டதை…. 🙂 🙂 )
– REALLY SUPER
ஸ்டாலின் over confidence காரணமாக கூட்டணி அமைப்பதில் “கோட்டை” விட்டு விட்டார். தோழமைக்கட்சிகளிடமும் கூட சரியாக முகம் கொடுத்து பேசாமல்
கர்வம் கொண்டு நடந்ததால் ஸ்டாலின் ஏமாந்து போக – மிக வலுவான கூட்டணியை சப்தம் போடாமல் அமைத்து விட்டது அதிமுக என்பது உண்மையே.
என்றும் இல்லாத சரித்திரமாக, டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, திமுகவுடன் கூட்டணியை ராகுல் காந்தியும் இதர தமிழக காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஸ்டாலினின் பலவீனத்தை காட்டுகிறது.
இந்த இடுகையில் நான் மிகவும் ரசித்த இரண்டு இடங்கள் ;
ஒன்று –
//நடக்கும் என்பார் நடக்காது –
நடக்காதென்பார் நடந்து விடும்….
கிடைக்கும் என்பார் கிடைக்காது –
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்….!!!
-என்கிற MGR சினிமா பாட்டு கூட நினைவில் இன்றி –
நித்திரையில் ஆழ்ந்து விட்ட “நிரந்தர” “அடுத்த” முதல்வரை –
———-
” கையெழுத்து போட்ட டாக்டர் ராமதாசுக்கு –
வெட்கமில்லையா,
மானமில்லையா,
சூடு இல்லையா, சொரணை இல்லையா….?
– என்று கதற வைத்தது —//
————-
இரண்டு –
//மறந்து விட்டேனே – இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் –
தைரியமாக, திருவாளர் அமித்ஜீயை – இங்கு உங்கள் திருமுகத்தை
காட்டினால் உள்ளதும் போய் விடும்… அப்படியே திரும்பி பார்க்காமல்
ஓடிப்போய் விடுங்கள் என்று சொல்லி மும்பையிலிருந்தே டெல்லிக்கு
return flight -ல் அனுப்பி விட்டதை…. 🙂 🙂 )//
உங்களுக்கு இயல்பாகவே நகைச்சுவையாக எழுத வருகிறது. நீங்கள் தான் அதை கோபமாக மாற்றிக் கொள்கிறீர்கள். 🙂
கா.மை. சார்… நல்ல ரசனையா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.
1. அமித்ஷா வராததற்கு நான் நினைக்கும் காரணம், கூட்டணி முழுமை பெறலை, பஞ்ச சீலக் கொள்கைகள்தான் கிடைக்கும் என்பதால் கட்சித் தலைவர் வரவேண்டியதில்லை என்று நினைத்ததுதான்.
2. இந்தக் கூட்டணி, இதுவரை அமைத்த விதம் (how AIADMK conducted themselves) எனக்கு ஆச்சர்யத்தையும், அவர்கள் மீது நம்பிக்கையையும் அளிக்கிறது. பாஜகவினால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சரியான சமயத்தில் உடைத்த விதம் ஆச்சர்யம்தான். 7 சீட்டுக்கு மேல் கொடுத்திருந்தால் ‘அடிமைகள் ஆகிவிட்டார்கள்’ என்ற வெறுப்பு தோன்றியிருக்கும். (முதலில் 10 சீட்டுகள் என்று மீடியாக்கள் வதந்தி பரப்பின. இன்றைக்கும் ஸ்டாலினின் முதிர்ச்சியற்ற பேச்சை பல முறை அளவுக்கு அதிகமாக ஒலிபரப்பின சில சேனல்கள்-ஒருவேளை அழுத்தம் காரணமாகவோ, கரன்சி காரணமாகவோ இருக்கலாம்)
3. தே.தி.மு.கவை இதுவரை அதிமுக treat செய்த விதமும் commendableதான். இப்போ, ‘வந்தால் 2+1 சீட்டு, 1 சீட்டு கூட்டணியின் ஒரு கட்சிக்கு, இல்லைனா, கூட்டணிக்கு ஒரு ஒரு சீட்டு கொடுத்து கல்லாவை இழுத்து மூடிவிடுவோம்’ என்பதான மெசேஜைத்தான் நான் பார்க்கிறேன்.
4. இந்த அணிக்கு ஒரு இஸ்லாமியக் கட்சி தேவைப்படுகிறது. பாஜக காரணமாக ஒதுங்கினால், அது அவர்களுக்குப் பெரிய நஷ்டமாக இருக்கும்னு (அதாவது இஸ்லாமியர்களுக்கு) என்று எனக்குத் தோன்றுகிறது.
ஸ்டாலின் அவர்களின் பேச்சு நன்றாக இல்லை. ‘பழம் கனிந்து என் கையில் விழும்’ என்று வாயைத் திறந்துகொண்டு ஏமாந்தபோதும் கருணாநிதி வசை பாடி தன் வசத்தை இழக்கவில்லை. ‘சூடு சுரணை..’ இதுக்கு அர்த்தமாவது ஸ்டாலினுக்குத் தெரியுமா என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. இன்னும் 5 வருடங்களாவது ஆகும், ஸ்டாலின் ஒரு ‘தலைவர்’ அந்தஸ்து பெற.
இருந்தபோதும் அதிமுக அணி வெற்றி பெறும் என்று எனக்குத் தோன்றவில்லை. தினகரன் அணி சேர்ந்தால் மிகக் கடுமையான பலப்பரீட்சையாக இருக்கும். பாமக எந்தவிதமான பிரச்சாரத்தை செய்யப்போகிறது என்பதும் முக்கியம்தான். அடுத்து நல்ல வேட்பாளர்களை அதிமுக நிறுத்தவேண்டும். (ஜெ.வின் சென்ற சட்டசபைத் தேர்தலின்போது யதேச்சையாக ஒரு அதிமுக களப் பிரமுகரை திருப்பதி கியூவில் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சொன்னது, ‘மக்களுக்குத் தொந்தரவு கொடுக்காத ஆட்சி கொடுத்திருக்கோம். எதிர்ப்பு ரொம்ப அதிகமாக மக்களிடம் இல்லை. வேட்பாளர்கள் செலக்ஷன் நல்லா வந்திடுச்சுன்னா 125-130 சீட் கண்டிப்பா ஜெயித்துவிடுவோம் என்றார். அவர் சில உதாரண வேட்பாளர்களையும் பெயர் சொல்லிச் சொன்னார். அவர் சொன்னபடியே கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் அதிமுக வெற்றி பெற்றதை எண்ணி நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். களத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவு நிலவரம் தெரியும்)
Latest news is Dinakaran will have friendly fight or no fight with ADMK , so ADMK votes do not split between ADMK & TTV. We are having interesting times ahead. With money power and government support, ADMK alliance in TN may win atleast 15 MP seats. #pakkalam
it is a masterstroke by EPS and OPS for having reigning in PMK into the alliance and having BJP IN the alliance. It will certainly boost their chances in western tamilnadu and north tamilnadu.
Stalin”s comment about Dr Ramadoss is in frustration for not having him in his fold. Stalin is overconfident and arithmetic wise the aiadmk alliance will give a good fight in parliament elections.
நைனா அளவுக்கு இவருக்கு துப்பில்லை என்பது ஒருபக்கம் — வார்த்தை பிரயோகங்களில் நைனாவை மிஞ்சவில்லை என்பது ஒரு பக்கம் — இன்னும் ஒன்று இருக்கிறது — அதுதான் ” உடைப்பது — பிரிப்பது — இழுப்பது ” என்று தனக்கு ஒத்துவராத — கட்சிகளை கதிகலங்க அடிப்பதில் நைனா கில்லாடி — ! சென்ற பல தேர்தல்களில் இதை நாமெல்லாம் பார்த்தவர்கள்தான் நாம் — இந்த சாமர்தியமாவது இந்த ” வாரிசு தலைவருக்கு ” இருக்கிறதா என்பதுதான் அடுத்தகட்டம் — காட்சிகளை காணும் ஆவலில் நோக்கர்கள் …?