கண்ணில் படாமல் இருக்கும் பல சுவாரஸ்யங்கள்… (பகுதி-14 இன்றைய சுவாரஸ்யம்…)


சுவாரஸ்யமாக, பலனுள்ளதாக, நாம் விரும்பி ரசிக்கக்கூடியதாக –
நிறைய செய்திகள்… நிறைய தகவல்கள்…இணையத்தில் பல இடங்களில் நம் கண்களில் படாதிருக்கின்றன.

இதில் யூ-ட்யூப் – மிகப்பெரிய சுரங்கம்… பல ஆண்டுகள் தொடர்ந்து
பார்த்துக்கொண்டே இருந்தாலும் கூட பார்த்து முடிக்க முடியாதது.

ஆனால், சிரமம் என்னவென்றால் – நமக்குப் பிடித்த எந்த விஷயம், எங்கே இருக்கிறது என்பது நமக்கு வெளிப்படையாக தெரிய வழியில்லை. அட்டவணை என்று எதுவும் கிடையாது….

முதலில் நமக்குப் பிடித்த எந்தெந்த விஷயங்கள் இதில் இருக்கின்றன என்று கூட வெளிப்படையாகத் தெரியாது…தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்…

அடுத்த பிரச்சினை, பல காணொளிகள் – பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தாலும் கூட – அவற்றின் நீளம் நம்மை பயமுறுத்துகிறது…. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நீளத்தைப் பார்த்ததுமே – நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறோம்.

இன்றைய காலகட்டத்தில், 10-15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் எந்த
விஷயத்தையும் தொடர்ந்து பார்க்க – பெரும்பாலானவர்களுக்கு
நேரமோ, பொறுமையோ கிடையாது…

நான் ஒரு உருப்படியான வேலையை செய்யலாமென்று இருக்கிறேன்.

ஏற்கெனவே, இங்கே எழுதுவதைத்தவிர, நான் – எனக்கு பிடித்தமானவற்றை எல்லாம் தேடித்தேடி, கண்டுபிடித்து படிக்கிற, பார்க்கிற பணியையும் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்.

அப்படி நான் காணும் விஷயங்களில், மற்றவர்களுக்கும் சுவாரஸ்யம்
இருக்கும் என்று தோன்றும் தகவல்களை, கட்டுரைகளை, காணொளிகளை –

– இங்கே விமரிசனம் தளத்தில் “இன்றைய சுவாரஸ்யம்” என்கிற தலைப்பில் தொகுத்து பதிவிடலாமென்று நினைக்கிறேன்….

என்னைப் போன்ற ஒத்த ரசனையுள்ளவர்களுக்கு அது மிகவும் உதவியாகவும், பிடித்தமானதாகவும் இருக்கும்… ( ஏற்கெனவே சில நண்பர்கள் என்னிடம் நான் பார்ப்பது, படிப்பது எல்லாவற்றையும் தங்களுக்கும் forward பண்ணும்படி தனிப்பட்ட மெயில் தொடர்புகளின் மூலம் கேட்டுக்கொண்டதும் – இதற்கான காரணங்களில் ஒன்று….( நான் இப்போது உத்தேசித்திருப்பது, அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் பயன்படும்….)

நீளமாக இருக்கும் காணொளிகளை – 15-20 நிமிடங்களுக்கு மேல் போகாதபடி, பகுதி பகுதியாக பிரித்து அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து பதிவிடலாம் என்று தோன்றுகிறது….

இனி – விமரிசனம் தளத்தில் – இரண்டு தினுசு பதிவுகள் இருக்கும்.
ஒன்று – தொடர்ந்து நான் என் மனதில் தோன்றும் விஷயங்களை
எல்லாம் வெளிப்படுத்தி எழுதி வரும் வழக்கமான இடுகைகள்.
இவை பாட்டிற்கு ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மற்றொன்று – நான் பிற இடங்களில் காணும் –
சுவாரஸ்யமான, பயனுள்ள விஷயங்களை தொகுத்து தரும்
“இன்றைய சுவாரஸ்யம்” என்கிற பகுதி.
இது அவ்வப்போது, கிடைக்கிற தலைப்புகளையொட்டி, தொடர்ந்து கொண்டிருக்கும்…! எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி, இது எத்தகைய தலைப்புகளுக்குள் வேண்டுமானாலும் வரும்… இதற்கு வானமே எல்லை…!!!

இது கிட்டத்தட்ட ஒரு Readers Digest மாதிரி இருக்கும்….!
இந்த பகுதியில் எழுதப்பட்டிருப்பவையோ, படைக்கப்பட்டிருப்பவையோ –
நான் எழுதியவை அல்ல –
அவை படைத்தவர்களுக்கே சொந்தமானவை – அதை தேடிக்கண்டுபிடித்து, தொகுத்து நண்பர்களின் பார்வைக்கு தரும் பணியை மட்டுமே இதில் நான் மேற்கொள்கிறேன்.

( இதில் சம்பந்தப்பட்ட படைப்பாளர்களுக்கு(creators)
இங்கே முன்னதாகவே நன்றி தெரிவித்துக் கொள்வதோடு,
ஒரு வேண்டுகோளும் வைக்கிறேன் –
தயவுசெய்து இதில் காப்பிரைட் உரிமைகள் எதுவும் பாதிக்கப்படுவதாக
எடுத்துக் கொள்ள வேண்டாம்… அவர்களின் படைப்புகள்
இன்னும் அதிகமான வாசகர்களை / ரசிகர்களை சென்றடையச் செய்யும்
ஒரு முயற்சி தான் இது…இதில் வர்த்தக நோக்கம் எதுவுமில்லை…இந்த படைப்புகள் இன்னும் அதிகம் பேரை சென்றடைவது அவர்களுக்கு மகிழ்ச்சியையே அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்….இருந்தும் கூட ஒருவேளை அவர்களுக்கு இதில் ஆட்சேபம் எதுவும் இருக்குமேயானால், நான் அவற்றை பதிவிலிருந்து விலக்கி விடத்தயாராக இருக்கிறேன்….)

இந்த புதிய முயற்சியை குறித்து நண்பர்களுக்கும் எதாவது கருத்துகள் / ஆலோசனைகள் இருக்குமேயானால் அவற்றை வரவேற்கிறேன். அத்தகையோர் பின்னூட்டம் மூலம் தங்கள் கருத்துகளைச் சொல்லலாம்.

————————————————————–

இன்றைய சுவாரஸ்யமாக –
புவியைப் போற்றுவோம் …என்கிற தலைப்பில்
திரு.சுகி சிவம் அவர்களின் உரையின்
முதல் பகுதி …..

….

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கண்ணில் படாமல் இருக்கும் பல சுவாரஸ்யங்கள்… (பகுதி-14 இன்றைய சுவாரஸ்யம்…)

  1. சிவக்குமார்'s avatar சிவக்குமார் சொல்கிறார்:

    பாராட்ட வேண்டிய முயற்சி. தொடருங்கள்

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    இந்த தளத்தின் சுவாரஸ்யத்தை இன்னும் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும் இந்த முயற்சி. தினம் இடுகைகளை இனி இன்னும் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். உங்கள் புதிய யோசனையை வரவேற்கிறேன்.

  3. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    Readers Digest மாதிரி – ?
    உற்சாகம் தருகிறது உங்கள் அறிவிப்பு. வாழ்த்துகள்.

  4. சேகரன்'s avatar சேகரன் சொல்கிறார்:

    மிகவும் பாராட்டபட வேண்டிய முயற்சி.
    வாழ்த்துகள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.