பாஜகவை தவிர்க்கும் ஒரு புத்திசாலித்தனமான மூவ் ….!!!


இன்று, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்,
ரஜினிகாந்த் தனது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்….

இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம்
நடப்பது பற்றியோ, அதில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் பற்றியோ மீடியா
ஒன்றும் அறியாத, சொல்லாத நிலையில் திடீரென்று கூட்டம் நடந்து முடிந்து அறிக்கையும் வெளியாகி விட்டது….

கீழே ரஜினியின் அறிக்கை…

பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார்
என்று எதிர்பார்த்து,
தொடர்ந்து அவருக்கு எதிராகவே பேசிவந்த
அத்தனை அரசியல் கட்சிகளையும்,
தமிழக மீடியா விவாதங்களையும் தாண்டி –

பாஜக கொடுத்த அத்தனை அழுத்தங்களையும் மீறி,

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவு இல்லை என்கிற அறிவிப்பை ரஜினி முந்திக்கொண்டு அறிவித்து விட்டார்…

பாஜகவைத் தவிர வேறு யாருக்கும் இவர் ஆதரவு அளிப்பார் என்கிற
எதிர்பார்ப்பு யாரிடமும் இல்லை.

இவர் பாஜகவை தவிர்க்க வேண்டும்
என்று நான் மிகவும் விரும்பினேன்….எதிர்பார்த்தேன்..

முதலில் தனது கூட்டணியை முடிவுசெய்து அறிவித்து விட்டு,
அதன் பின்னர் பாஜக ரஜினியிடம் ஆதரவு கேட்க முற்படும் முன்னரே,
அதனை தவிர்க்கும் வண்ணம் – முன் கூட்டியே
தனது அறிவிப்பை வெளிப்படையாக அறிவித்ததன் மூலம், ரஜினி
புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.

இதில் இன்னொரு புத்திசாலித்தனமாக நான் பார்ப்பது –

“பாராளுமன்ற தேர்தலில், உங்கள் விருப்பம் போல் ஓட்டு போடலாம்”
என்று நேரடியாக தன் ஆதரவாளர்களுக்கு சொல்வதற்கு பதிலாக –
மறைமுகமாக –

” வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான,
வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின்
தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து
வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாகச்
செயல்படுத்துவார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு
நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் உங்கள் வாக்குகளை
அளியுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன் ”

இரண்டு விஷயங்கள்
தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் – –

1) வரவிருக்கும் தேர்தலில் – தனிப்பெரும் மெஜாரிடியுடன் எந்த கட்சியும்
ஆட்சிக்கு வரும் என்கிற சூழ்நிலை இன்று இல்லை… தேர்தல் கணிப்புகளும் அதையே உறுதி செய்கின்றன…

எனவே “நிலையான, வலுவான ஆட்சியை தரும் கட்சி” என்று தனியாக எதுவுமே இல்லையென்று தான் சொல்ல வேண்டும். பாஜகவோ, காங்கிரசோ –
எது ஆட்சிக்கு வந்தாலும், அது கூட்டணி உதவியுடன் தான் சாத்தியமாகும்.

2) “பாஜகவோ, காங்கிரசோ – எது மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு ஆதரவாக தண்ணீர் பிரச்சினையில் செயல்படப்போவதில்லை…

” தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாகச் செயல்படுத்தக்கூடிய கட்சி” என்று ஒன்று களத்தில் இல்லவே இல்லை….

ஆகையால் தான்……
“வாக்காளர்களே, …. நீங்களே சிந்தித்து ஆராய்ந்து ” …..???

———————-

இதே போல் – அதிமுகவின் இரட்டைத் தலைமையும், பாஜக கொடுக்கும் அத்தனை அழுத்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் மீறி –

இறுதியாக, பாஜகவுடன் கூட்டு இல்லை என்கிற முடிவிற்கு வந்தால் –
அது இன்றைய தமிழக அரசியலுக்கு ஓரளவு நல்லது என்றே தோன்றுகிறது….

ஆனால் – இது நடக்கும் என்கிற நம்பிக்கை –
குறைந்துகொண்டே போகிறது…

.
——————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to பாஜகவை தவிர்க்கும் ஒரு புத்திசாலித்தனமான மூவ் ….!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்து, உச்சநீதிமன்ற உத்திரவிற்கும் மாறாக, தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டது, மேகதாது விஷயத்தில் கர்நாடகாவிற்கு திட்ட அனுமதி கொடுத்தது, முல்லைப்பெரியாறு விஷயத்தில், புதிய அணை கட்ட ஆய்வு நடத்த கேரளாவிற்கு அனுமதி கொடுத்தது – என்று பல விஷயங்களை பாஜகவிற்கு எதிராகச் சொல்லி பிரச்சாரம் செய்ய ரஜினி நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். எனவே, ரஜினியின் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      அரவிந்தன் – இதையும் நான் நம்பலை. காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இந்த விஷயங்களில் ஒரு வேறுபாடும் கிடையாது. நமக்கு மின்சாரப் பற்றாக்குறை இருந்தபோது, மத்திய அரசு (மன்மோகன், சோனியா, கருணாநிதி) நமக்கு மின்சாரம் தராததற்குக் காரணம் சொன்னது. காவிரி விஷயத்தில் அவங்க ஒரு துரும்பும் கிள்ளிப்போடலை. அதனால் இந்த விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் ஒரே நிலைதான். காங்கிரஸ் இன்னும் மோசம்னு சொல்ல ஒரே காரணம், அவங்க 20 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தை ஒதுக்கினாங்க. இவங்க ஒரே ஒரு டெர்ம்லதான் ஒதுக்கியிருக்காங்க. (உடனே, அடுத்த டெர்ம் வந்தா மாறியிருவாங்கன்னு நான் சொல்லலை. மா ற வே மா ட் டா ங் க – பாஜகவும் காங்கிரசும், அவர்களை அண்டிப்பிழைக்கும் திமுக மற்றும் அனைத்துக் கட்சிகளும். என்ன ஒண்ணு, அதிமுக-யாராக இருந்தாலும், திமுக போல தமிழகத்துக்கு துரோகம் இழைக்காது, தங்கள் பிற மாநில பிஸினெஸைப், சொத்துக்களைப் பாதுக்காத்துக்கொள்ளும் பொருட்டு)

      • Siva Sankaran's avatar Siva Sankaran சொல்கிறார்:

        தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இருந்து ஒரு பயனும் இல்லை என்றானதனால் அவர்கள் இந்த விஷயத்தில் நமக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். ஒரு வேளை கர்நாடகாவைப் போலவோ குறைந்த பட்சம் கேரளத்தில் உள்ள பா.ஜா.கா-வின் நிலைமையிலோ தேசியக் கட்சிகள் தமிழகத்தில் இருந்தால் அவர்களுடைய அணுகுமுறை மாறலாம். தி.மு.க-வுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருந்தது காவிரி விவகாரத்தில் அவர்கள் அதை எந்த அளவுக்கு பயன்படுத்தினர் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்லலாம். முதன்மையாக ராஜதந்திர தருனங்களை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய தமிழக நலனைப் பேணக்கூடிய ஒரு தரப்பு உருவாகாததே காரணம். தமிழக ஜனநாயக சக்தியின் ஒரு கரும்புள்ளியே இது

  2. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    வழக்கம் போல நழுவுகிறார் . சட்ட சபை தேர்தலில் மட்டும்
    இவர் தனித்து நின்று வெற்றி பெற்று விடுவது போல பேசுகிறார்.
    இத்தாலிய மற்றும் குடும்ப அரசியல் கூட்டு கொள்ளைக்காரர்கள்
    தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்துவிடுவார்களா?
    போகாத ஊருக்கு வழி சொல்கிறார்.

  3. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    காங்கிரஸுக்கு அவர் எங்கே ஆதரவு கொடுத்தார் ? இல்லாத கற்பனையெல்லாம் ஏன் ? தமிழ்நாட்டு தண்ணீர் பிரச்சினையை காங்கிரஸ் தீர்த்து விடுமென்று அவர் சொன்னாரா ? பாஜக ஜால்ராக்களுக்கு இது தான் ஒரே வெறுப்பு. தண்ணீர் பிரச்சினை என்றவுடனேயே தங்களுக்கு எதிராகத்தான் ரஜினி பேசுகிறார் என்று தீர்மானத்திற்கு வந்து விட்டார்கள். குற்றமுள்ள மனது. குறுகுறுவென்கிறது.

    ரஜினி தங்களுக்கு ஆதரவு இல்லையென்று தெரிந்ததும், இத்தாலி, காங்கிரஸ் எல்லாவற்றையும் கூப்பிட்டு ஏசத்துவங்கி விடுவார்கள்.
    எப்படியும் ரஜினி தங்கள் வட்டத்தை விட்டு வெளியே போக மாட்டாரென்று நினைத்திருந்தார்கள். பாஜகவிலிருந்து எத்தனையெத்தனை பெருந்தலைகள்
    அவரை நெருக்குதல் செய்தன. குஜராத் ரெட்டையர்கள் என்ன, நாக்பூர் தலை என்ன,
    குருமூர்த்தி அவர்களின் துரியோதன ஆலிங்கனம் என்ன ?
    அத்தனை கிடுக்கிப்பிடிகளிலிருந்தும் தைரியமாக தன்னை விடுவித்துக்கொண்டு
    சுதந்திர பிரகடனம் செய்த ரஜினி நிச்சயம் பாராட்டிற்குரியவர்.
    வேறு எது எப்படி இருந்தாலும் கூட,
    பாஜகவிற்கு ஆதரவு இல்லை என்கிற ஸ்டாண்டை எடுத்த ஒரு விஷயத்திற்காகவே
    ரஜினி தமிழக மக்களின் அன்பிற்குரியவராகி விடுகிறார்.
    பிஜேபி காரர்கள் நல்ல கருங்கல் சுவராகப் பார்த்து முட்டிக்கொள்ள வேண்டியது தான். இங்கே வந்து புலம்பி பிரயோஜனமில்லை.

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ரஜினி பாஜகவுக்கு ஆதரவாகப் பேசவில்லை. அதனால் தப்பித்தார்.
    காங்கிரசுக்கும் திமுகவுக்கும் ஆதரவாகப் பேசவில்லை. (அவர் எதுக்கு இந்த இரு கட்சிகளுக்கும் காவடி தூக்கணும்?).

    ஒரு முடிவு எடுக்கமுடியாமல் வழ வழ கொழ கொழ வென நழுவுபவர்கள், அல்வாக்கடை வைக்க லாயக்கே தவிர அரசியல்கட்சி நடத்த லாயக்கில்லை. தைரியமாக பார்லிமென்ட் எலெக்‌ஷனில் நிற்காதது, அலை ஓய்ந்தபிறகு கடலில் குளிக்க நினைத்தவனின் நிலையை ஒத்தது என்பது என் எண்ணம்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      ஒருவேளை, ரஜினி – பாஜக+அதிமுக கூட்டணியை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் என்றால்,
      உங்கள் கருத்து என்னவாக இருந்திருக்கும்…. சொல்ல முடியுமா…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        ரஜினி பாஜக+அதிமுக கூட்டணியை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தாலும் என் கருத்தில் மாற்றம் இருந்திருக்காது (ஒருவேளை நான், ‘அறுக்கமாட்டாதவன் கையில் அறுவது அருவாள்’ என்று நினைத்திருந்திருக்கலாமோ?)

        அரசியல் களத்தில் வருபவர்களுக்கு பாராளுமன்றம் என்ன, சட்டமன்றம் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      புதியவன்

      உங்கள் பின்னூட்டத்தில் ரஜினி மீது உங்களுக்குள்ள காழ்ப்புணர்ச்சி தான் தெரிகிறது. பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று அவர் சொல்வது கோழைத்தனம் எங்கீறீர்களே; அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் சொன்ன அப்போதே அவர் கூறி விட்டாரே தமிழக சட்டமன்ற தேர்தல்கள் தான் தமது இலக்கு என்று. நீங்கள் என்னவோ அவர் இப்போது தான் புதிதாக முடிவெடுத்திருப்பது போல் கருத்து சொல்கீறீர்கள்.
      அலைகள் ஓய்ந்த பிறகு கடலில் குளிக்க நினைக்கிறாரென்று சொல்கிறீர்களே சட்டமன்ற தேர்தல்களின்போது அலைகளே இருக்காது என்பது உங்கள் நினைப்பா ?

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        மணி – எனக்கெதற்கு ரஜினி மீது காழ்ப்புணர்வு? அவருடைய அரசியல் காலம் 95-2004களிலேயே ஆரம்பித்திருந்தால் ஒரு அர்த்தம் இருக்கும். சரி.. அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னவுடன் ஆரம்பித்திருந்தால் அதிலும் அர்த்தம் இருக்கும் (ஆனால் விளைச்சல் இருக்காது. அவர், அவருடைய செயல்படும் காலத்தைக் கடந்து 10 வருடங்களாகிவிட்டது என்பது என் எண்ணம்). ஏன் மக்கள் விஜயகாந்தை ஆரம்பகாலத்தில் ஆதரித்தார்கள்? மக்கள் இன்னொரு தலைவரை எதிர்பார்க்கிறார்கள். அந்தத் தலைவர், ‘வழ வழா கொழ கொழா’ என்று இருந்து மீண்டும் திமுக/அதிமுக அடிமைகளாக மாறினால், அவர்களை மக்கள் ஆதரிப்பதில்லை. (உன்னை ஏன் ஆதரிக்கணும்? நீ அவங்களோடு கூட்டு வச்சிக்கறதுக்கு அவங்களையே நான் நேரடியா ஆதரிச்சுக்கறேன் என்று நினைத்து கழட்டிவிட்டுடறாங்க)

        உங்களை நான் கேட்கிறேன்,
        1. ஏன் சட்டமன்றத் தேர்தல் அவர் இலக்கு? அதுக்கு 3 வருஷம் இருக்கு (அவர் இந்தக் கதையை இந்த முறை ஆரம்பித்தகாலத்திலிருந்து) என்பதாலா? எதுக்கு இப்போ வரணும்? ஜெ., கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லை, தமிழகத்தில் இப்போது இருப்பவர்கள் யாரும் நல்ல தலைவர்கள் இல்லை என்பதாலா? அப்படி என்றால் கருணாநிதியும் ஜெவும் இருந்தவரை, தமிழகத்துக்கு வேறு கட்சிகள் தேவையில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரா?
        2. அவருக்குன்னு ஒரு கூட்டம் இருக்கிறது (25+ லட்சம் – ஒரு அளவுக்குச் சொன்னேன்) என்று அவர் நம்பினால், அவரது அறிக்கை என்ன சொல்லுது? எனக்கு யாருக்கு ஓட்டுப்போடணும்னு சொல்லத் தெரியலை. நான் நிற்காததால் நீங்க யாருக்கேனும் ஓட்டுப்போட்டுக்கோங்க. சட்ட மன்றத் தேர்தல் வரை ‘ஆளை விடுங்க’ என்கிறாரா?

        மணி – நான் இப்போது சொல்வதை நான் நம்புகிறேன். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். சொல்லிவிட்டோமே என்று மீறி வந்தால், நிச்சயம் 5-8 சதவிகித வாக்குகளைப் பிரிப்பாரா என்பதே சந்தேகம். இன்றைய ரஜினி, ‘தொலைக்காட்சி மற்றும் அறிக்கை ரஜினி’. விஜயகாந்த் அளவுக்கு (அவர் அரசியலுக்கு வந்தபோது) வீரியம் உடையவரல்ல. பத்திரிகைகள் தாங்கிப்பிடிக்கும் ரஜினிக்கு வாக்குவங்கி கிடையாது.

  5. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    ரஜினியின் அறிக்கையை சீரியசாக எடுத்து விவாதிப்பது, தமிழ்நாட்டு அரசியலை சரியாக புரியாததின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.

    சமீபத்தில் பிரபல ஜோதிடரின் நேர்கானல் ஒரு வீடியோவை பார்க்கநேர்ந்தது. அதில் அந்த ஜோதிடர், 1996 இல் ரஜினி மிகுந்த ஆர்வத்துடன் அரசியலில் இறங்க தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும், தான் ரஜினிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்று கூறி தடுத்ததாகவும் சொல்லியுள்ளார்.

    தற்போது ரஜினி அரசியலில் இறங்குவது போன்று நடிப்பது பி ஜெ பி யின் வருமான வரித்துறையின் மிரடடலுக்கு பயந்துதான்.

    தற்சமயம் அவர் பயம் தெளிந்ததற்கு காரணம் இனிமேல் வருமான வரி துரையின் ரெய்டு நடந்தால் அது பி ஜெ பி க்கு தான் பாதகத்தை ஏற்படுத்தும்.

    சரி,
    ரஜினி கட்சி தொடங்குவாரா என்றால், தேர்தலின் பி ஜே பி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், பெயரளவில் விருப்பம் இல்லாமல் கட்சி தொடங்குவார்.

    இல்லையென்றால்
    உடல்நலத்தை காரணம் காட்டி கட்சி தொடங்கமாட்டார்.

    பொறுத்து இருந்து பாருங்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      Jksmraja

      //ரஜினியின் அறிக்கையை சீரியசாக எடுத்து விவாதிப்பது, தமிழ்நாட்டு அரசியலை சரியாக புரியாததின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.//

      எனக்கு தமிழ்நாட்டு அரசியல் புரியாது என்று கண்டுபிடித்துச் சொன்னதற்கு மிக்க நன்றி அரசியல் வித்தகரே.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு // https://www.dinamani.com/india/2019/feb/18/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3098255.html … முக்கியமான ஒரு தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் — திரு வை.கோ. மீது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் — அவரது உச்ச நீதிமன்ற வாதத்தை நாம் பாராட்டிதான் ஆக வேண்டும் … ! அந்த விவாதம் பற்றி அறிய // தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதத்தில் வைத்த மூன்று அதிசயங்கள் // https://tamil.thehindu.com/tamilnadu/article26205842.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      வைகோ, தன் கட்சிக்காக வாதிட்டிருக்கிறார். அதில் நான் பெரிய அதிசயத்தைக் காணவில்லை. 1994க்குப் பிறகு இரண்டுமுறை திமுக அரசும் இரண்டு முறை காங்கிரஸ், திமுக மத்திய அரசு அமைந்திருக்கிறது. அந்த சமயங்களில் வைகோ, காங்கிரஸ், திமுகவின் பங்கு ஸ்டெர்லிங் ஆலை நடந்ததில் என்ன? ஜெ. தலைமைச் செயலகத்தை மாற்ற முயன்றபோது பசுமைத் தீர்ப்பாயம் (னு நினைக்கிறேன்) அதனைத் உடனே தடுக்க முடிந்தபோது, எது ஸ்டெர்லிங் நிறுவனத்துக்கு எதிரா காங்கிரஸ், திமுக, வைகோ ஆகியவர்களைச் செயல்படாமல் வைத்திருந்தது? இன்றைக்கு, “நீட் தேர்வு விலக்கப்படும், காங்கிரஸ் அரசு கர்நாடகா, கேரளா அரசுகளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றும், காவிரி தண்ணீரைத் திறந்துவிடும், மதுவிலக்கை முதல் நாளிலேயே கொண்டுவரும் (பாலு, கனிமொழி ஆகியோர் பாதகமடைந்தாலும்) என்ற வாக்குறுதிகளை எழுத்தில் வாங்கியபிறகு வைகோ, திமுக ஆகியோரின் காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்பதையும் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.

      இன்றைக்கு தீர்ப்புக்குக் காரணம் தமிழக அதிமுக அரசு. இதற்காக வாதாடிய நிறைய வழக்கறிஞர்களுக்கு அந்தப் பலன் போய்ச்சேரணும். திமுக, வைகோ க்களுக்கு அல்ல.

      தமிழ நலன் என்று வந்தால் அதிமுக அரசுகள்போல் கடந்த 60 ஆண்டுகளில் எந்த அரசும் செயல்பட்டதில்லை. தமிழக நலனுக்கு எதிராக நடந்ததில் கருணாநிதிக்கும் திமுகவுக்கும் முதல் இடம். இதில் வைகோ பங்கும் உண்டு (திமுகவில் இருந்தபோது, பிறகு திமுகவுடன் இருந்தபோது)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.