…
…
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்,
பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்,
மிகப்பெரிய தொழிலதிபர்,
ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படி –
எந்த தொழிற்சாலையும் இல்லாதவர் ….
– திரு.முகேஷ் அம்பானி 3 நாட்களுக்கு முன்னர்,
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக விரைவில்
பொறுப்பேற்பார் என்று நம்பப்படும்
திரு.ஸ்டாலினை, அவரது வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்தார்.
வந்தது, தனது இல்லத்தில் நடக்கவிருக்கும்
ஒரு திருமணத்திற்கான அழைப்பிதழை
நேரில் அளிப்பதற்காக என்று ……… சொல்லப்படுகிறது.
( 2 மாதங்களுக்கு முன்பு நடந்த அதே இல்லத்தின் திருமணத்திற்கு
அவர் இவ்வாறு அழைக்கவில்லை … என்பதும் –
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய செய்தி…)
முகேஷ் அம்பானியும், ஸ்டாலினும் இந்த அளவிற்கு
நெருங்கிய நண்பர்கள் என்பது இப்போது தான்
முதல் முதலாக வெளியுலகிற்கு தெரியும் என்பதும் செய்தி ….!!!
—————————————–
இன்று வெளியான ஒரு அரசியல் வார இதழில் வெளிவந்திருக்கும் ஒரு
தகவலை கீழே தருகிறேன்…
இரண்டிற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா….?
வாசக நண்பர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்…!!!
அம்பானி தான் மோடிஜிக்கு நெருங்கிய நண்பராயிற்றே –
என்று யோசிப்பவர்களுக்கு ஒரு தகவல்…
அவர் வேறு – இவர் வேறு –
“அது” சின்ன அம்பானி…. இது “பெரிய” அம்பானி….!!!
—————————————–


.
—————————————————–
சந்திப்பில் – எடுக்கப்பட்ட புகைப்படங்கள் –
இது வரவேற்கும்போதே கைகுலுக்குவது –

இது வந்து உட்கார்ந்த பின் கைகுலுக்குவது – !!!

—————————————————————



கடந்த தேர்தல்களுக்கும், இப்போது நடக்கப்போகிற தேர்தலுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. மோடி எப்பேற்பட்ட சாதனையை செய்திருக்கிறார் என்பதை இப்போது தான் மக்கள் உணரப்போகிறார்கள்.
எப்போ 500 /1000 ரூபாய் நோட்டை ஒழித்தாரோ அப்போதே நாட்டிலுள்ள கருப்புபணம் அத்தனையையும் மோடி ஒழித்து விட்டார். கூடவே ஒரு சட்டம் கொண்டு வந்தார் பாருங்கள் ; சூப்பர் சட்டம். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் யருமே
கேஷ் ஆக பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று.
இப்பபோது அம்பானி, ஸ்டாலினுக்கு தேர்தல் செலவுகளை சமாளிக்க அஞ்சு கோடி கொடுத்தாலும், 300 கோடி கொடுத்தாலும் ரொக்கமாக கொடுக்கவே முடியாது.
செக்’காகத்தான் கொடுக்க வேண்டும். அதையும் வருமான வரி இலாகாவிற்கு தெரிவிட்த்தாக வேண்டும். ஸ்டாலின் அதை மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்தாலும் ரொக்கமாக கொடுக்க முடியாது. அத்தனையையும் கேஷ் ஆகத்தான் கொடுத்தாக வேண்டும். அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுத்தாலும், வங்கியிலிருந்து எடுத்து தான் கொடுக்க வேண்டும். அது எப்படியும் வருமான வரி இலாகாவுக்கு தெரிந்து விடும். தேர்தலில் கருப்புப்பணம் அறவே தொலைந்தது.
//அத்தனையையும் கேஷ் ஆகத்தான் கொடுத்தாக வேண்டும். //
தயவு செய்து திருத்திக் கொள்ளவும் –
//அத்தனையையும் செக் ஆகத்தான் கொடுத்தாக வேண்டும். //
நாட்டிலுள்ள கருப்புபணம் அத்தனையையும் மோடி ஒழித்து விட்டார்.
இப்ப லஞ்சம் கொடுக்கிறது எல்லாம் செக் மூலமாத்தான் !
அதற்கு ஜி.எஸ்.டி.யும் உண்டோ…?? 🙂 🙂
கா.மை. சார்,
எல்லோரும் அம்பானிக்கு மோடி அவர்கள் எல்லாம் செய்யறார், அவர் கம்பெனியை வளர்க்கப் பாடுபடுகிறார் என்று சொல்றாங்க. நம்ம எல்லாரோட பெர்செப்ஷன் காங்கிரஸ் ஆள் அம்பானி, அவரை வளர்த்துவிட்டது காங்கிரஸ், மோடி தன் ஆள் அதானிக்கு நிறைய சலுகை செய்கிறார் என்று (ஆரம்பத்தில்). போன இரண்டு ஐந்து வருடங்களில் (காங்கிரஸ்/திமுக மத்திய அரசில்), திமுக எப்படி தன் தொழிலதிபர்களை வளர்த்தது (டி.ஆர் பாலு, ஆ ராசா, தயாநிதி மாறன்), பிறகு டாடா எப்படியும் தயாநிதி வரக்கூடாது என்பதற்காக திமுகவிடம் பேசி (ராஜாத்திஅம்மாள்), ஆராசா மந்திரியானது., வோல்டாஸ் நிலம் என்று பல்வேறு செய்திகளைப் படித்தோம். அதேபோல, காங்கிரசும் விஜய் மால்யா முதற்கொண்டு ஏகப்பட்ட தொழிலதிபர்களை வளர்த்திருக்கிறது. சரத்பவாருடைய மகளின் கப்பல் மெரீனாவில் தரை தட்டியபோது அரசு செலவில், அதனை மீட்டு மும்பைக்கு அனுப்பிவைத்தது என்று ஏகப்பட்டது சொல்லலாம். தொழிலதிபர்கள் அவர்கள் நிறுவனத்தை வளர்ச்சி பெறச் செய்ய என்னவேணுமானாலும் செய்வாங்க. இப்போ டாட்டா, ராஜாத்தி அம்மாளை சந்தித்ததாகவோ அல்லது தொலைபேசியதாகவோ செய்தி கேள்விப்படறோமா? ரா.அ அவர்களோட பவர் காலம் இப்போ இல்லை. நாளை ஒருவேளை அழகிரி லைம் லைட்டுக்கு வந்தால், முன்ன இருந்ததுபோல அவங்க வீடுதான் ஜே ஜேன்னு இருக்கும்.
திமுகவுக்கு நாட்டைப் பற்றியா கவலை. அவங்களுக்கு தேர்தல் வெற்றி, பசையுள்ள பதவி, வரவு என்று ஏகப்பட்டது சிந்திக்கவேண்டியிருக்கு.
அது சரி… படங்கள் சொல்லும் செய்தி புரியுதா? பொதுவா கருணாநிதி இந்த மாதிரி படங்கள் எடுக்கும்போது, நிலைமைக்குத் தகுந்தவாறு, அண்ணா போட்டோ, அம்மாவோட சிலை, இல்லை கனிமொழி, ஸ்டாலின் (அல்லது தனக்குத் தேவையான ஆட்கள் அருகில் இருக்க) என்று பின்னணில வருமாறு எடுத்த படங்கள்தான் பத்திரிகைக்கு வரும். இங்க, ஸ்டாலின் படம் மட்டும்தான் இருக்கு. இந்த மாதிரி தவறு கருணாநிதிட்ட நடக்காது.(அல்லது ஒருவேளை வேண்டுமென்றேதான் இப்படி நடக்கிறதோ?)
புதியவன்,
தேவலை….நிறைய பழைய விஷயங்களை நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்.
எனக்கு பல விஷயங்கள் நினைவில் நிற்பதில்லை. ஆனால், நீங்கள் அல்லது செல்வராஜன் போன்று
யாராவது அது குறித்து எழுதும்போது, மறந்து போனதெல்லாம் மளமளவென்று கண்ணெதிரே தோன்றத் துவங்கி விடுகின்றன… 🙂 🙂
பொதுவாக டெல்லி அல்லது மஹாராஷ்டிராவைப் போல், தமிழகத்தில் தொழிலதிபர்கள் அரசியலை ஆட்டி வைப்பதில்லை… அதிக பட்சம், ஆளும் கட்சித் தலைவர்களிடம் சிநேகிதம் பாராட்டி..( ??? ), தங்கள்
காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.
ஆனால், இப்போது ஸ்டாலின் காலத்தில் தான் – தொழிலதிபர்களின் நட்பும், செல்வாக்கும் – வெளிப்படையாக தெரியத் துவங்கி இருக்கிறது…
ஆமாம் – பண உதவி பற்றி…. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…? (பெரிய) அம்பானி நேரடியாக திமுகவுக்கு உதவி செய்வாரென்று நம்புகிறீர்களா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்கு ஜெயிக்கும் குதிரை தான் முக்கியம். அது யார் என்று முக்கியம் இல்லை. ஸ்டாலின் போன்ற அரசியல் வாதிகளுக்கு பணம் தான் முக்கியம். அதை யார் கொடுக்கிறார், எதற்கு என்ற கேள்விகள் தேவை இல்லாதவை. அப்புறம் என்ன! collusion of corrupt elements !
ரெண்டு வரில சொல்லிட்டீங்க பந்து சார்… அரசியல்வாதிகளும் அப்படியேதான். அதுனாலதான் மோடி அவர்கள், சசிகலா, நடராஜன் தலையைத் தடவிக் கொடுப்பார், திமுகவின் மீது மென்மைப் போக்கைக் கடைபிடிப்பார். நாளை, திமுகவின் எம்பிக்கள் ஆதரவோட பாராளுமன்றம் நடக்கும்போது, ‘காமன் மினிமம் ப்ரோக்ராம், மோடி அவர்கள் அத்வானியைப் போலக் கிடையாது, முந்தைய அரசுக்கும் இப்போதைய அரசுக்கும் வித்தியாசம் உண்டு’ என்றெல்லாம் ஜல்லியடிக்கும்போது, நமக்குக் கொண்டாட்டமா இருக்கும், விமரிசனம் பண்ண. ‘அந்த ஆட்கள்’-காங்கிரஸ்-திமுக ஜால்ரா கோஷ்டி, ‘திராவிடம், பெரியார், பிற்படுத்த வகுப்பைச் சேர்ந்த மோடி’ என்றுஆதரவுக் குரல் எழுப்புவாங்க.
விமர்சனம் தளத்துல, ஆதரவு எதிர்ப்பு கோஷ்டிக்குக் குறைவிருக்காது.
சார், நீங்க தென் தமிழகத்தின் வைகுண்டராஜனை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள் அவரின் அரசியல் செல்வாக்கு மற்ற மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்களுக்கு சற்றும் குறைவில்லாதது . திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் உள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வைகுண்டராஜனின் பினாமிகள் தான் எல்லா கட்சிகளுமே அவரிடம் நிதி வாங்கிதான் அப்பகுதிகளில் இயங்குகின்றன. ஆனால் இப்படி ஒருவர் இருக்கிறார் என்று முக்கால்வாசி பொதுமக்களுக்கு தெரியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சாமி திரைபடத்தின் பெருமாள் பிச்சை கதாபாத்திரம் தான் இவரை பற்றி நினைக்கும்போது தோன்றும். ஆனானபட்ட டாடா நிறுவனத்தையே தனது டைட்டானியம் டை ஆக்சைடு ஆலையை மூடிவிட்டு தூத்துகுடியை விட்டு விரட்டியவர்
சிவசங்கரன்,
நீங்கள் இது குறித்து எழுதியதற்காக பாராட்டுகிறேன்.
நீங்கள் சொல்லுகின்ற ஆசாமியைப்பற்றி நான் ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், செய்தித்தாள்களிலோ,
புலனாய்வு பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சி மீடியாக்களிலோ, இவரைப்பற்றி எந்தவித அலசல்களும் மேற்கொள்ளப்படுவதில்லை… நான் கூட இவரது பின்னணி பற்றி எங்கேயாவது கிடைக்குமா என்று தேடியிருக்கிறேன்… ஊஹூம்… அத்தனையும் நிழல்… இருட்டு. இவரிடம் மிகப்பெரிய பணபலமும், ஆள்பலமும்,
அரசியல் செல்வாக்கும் இருப்பது புரிகிறது…. ஆனால் உருப்படியான செய்திகள்…?
ஏன் அத்தனை ஊடகங்களும் மௌனம் சாதிக்கின்றன என்பது தான் தெரியவில்லை.
நண்பர்களுக்கு இதன் மூலம் ஒரு வேண்டுகோள்; இவர் பின்னணி பற்றி, ஓரளவு ஆதாரபூர்வமாக செய்திகள் கிடைத்தால் அனுப்பி வையுங்களேன்…அல்லது பின்னூட்டங்களில் எழுதுங்களேன்… ஆனால் – வெறும் அவதூறு வேண்டாம்.. கொஞ்சமாவது ஆதாரம் இருக்க வேண்டும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வைகுண்டராஜன் அவர்கள் பொதுவாக முன்பெல்லாம் அதிமுகவின் ஆள் என்று அறியப்பட்டவர். ஒரு நேரத்தில் ஜெ.வுக்கும் இவருக்கும் பிரச்சனை வந்து நிறைய சட்டப் பிரச்சனை, தொழிலுக்குப் பாதிப்பு என்பதைச் சந்தித்தார் (அப்போ இவரிடமிருந்த ஜெ டிவி பங்குகள் வாங்கப்பட்டுவிட்டன என்று படித்திருக்கிறேன்). அந்த சமயத்தில், ‘நாடார்’ என்ற போர்வையில் இவருக்கு நிறைய சப்போர்ட் ஏற்படுத்தப்பட்டது. (போலீஸுக்கு எதிராக ஆதரவு ஆட்கள் குவிக்கப்பட்டனர்). காங்கிரஸின் கார்னெட் மணல் சட்டவிரோதமாக அள்ளும் தொழிற்சாலைக்கு (டக் என பெயர் மறந்துவிட்டது. அவர் காங்கிரஸ் எம்.பி. ஒரு தடவை அவரது மகள் ஓட்டிய கார் (அப்பா, அம்மா காரில் இருந்தனர்) விபத்தில் சிக்கி, அதற்கப்புறம் அந்த முன்னால் காங்கிரஸ் எம்பி பிழைத்ததே துர்லபம்னு ஆகி, அரசியல் வாழ்க்கையும் போச்சு. அப்புறம், வைகுண்டராஜன் அவர்களது தொழில் வெளிச்சத்துக்கு வந்தது.
தமிழ்நாட்டில், இப்படிப்பட்ட ஆட்கள் நிறையப்பேர் உள்ளனர். (மணற்கொள்ளை ஆறுமுகம், அப்புறம் கல்வித் தந்தைகள் ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், பச்சமுத்து, அவரது மகன் போன்று பலர் உள்ளனர் லைம் லைட்டில் வந்து பிறகு செய்திகள் அப்படியே அமுங்கிவிடும்)
KM Sir please read this too.
https://nakkheeran.in/special-articles/special-article/pulwama-terrorist-attack
அய்யா … திரு பாய் அம்பானி வெறும் 15000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்தது இன்று இந்தளவுக்கு வளர்ந்து இருப்பதை பற்றி ஒரு ” பின்னோட்டம் ” பற்றி அறிய : // 89-ஆம் வருடத்திய கொலைமுயற்சி வழக்கு …..//
Posted on செப்ரெம்பர் 8, 2014 by vimarisanam – kavirimainthan …. https://vimarisanam.wordpress.com/2014/09/08/89-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/
இந்த இடுகையில் : // குஜராத் கிராமம் ஒன்றைச் சேர்ந்த எளிமையான பள்ளி ஆசிரியர் ஒருவரின் மகனான திருபாய் அம்பானி, இளம் வயதில் ஏமன் நாட்டிற்கு சாதாரண குமாஸ்தா வேலை செய்யப் போய் பல சாகசங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பி,
அந்தக்கால பாம்பே யில், 1960-ல் –
Reliance Commercial Corporation என்கிற பெயரில்,
வெறும் ரூபாய் 15,000′- (பதினைந்தாயிரம் மட்டுமே )
முதல் போட்டுத் துவக்கிய கம்பெனி தான் இன்று இந்தியாவின்
சர்வ வல்லமை பொருந்திய நம்பர் ஒன் கம்பெனியாக
வளர்ந்திருக்கிறது.
இன்று இந்தியாவில் ரிலையன்ஸ் கால் வைக்காத
துறைகள் மிகச்சிலவே. திருபாய் அம்பானியின்
மகன்கள் இன்று இந்தியாவின் நம்பர் ஒன்
மற்றும் டூ பணக்காரர்கள்…..
இந்த அளவிற்கு இந்த கம்பெனி வளர்ந்ததற்கு திருபாய் அம்பானியின் கடின உழைப்பும், தொழில் முனைப்பும் மட்டுமா காரணம்….??? //
என்று வினவி பல காரணங்கள் இருப்பதில் தலையாய காரணம் ” அரசியல்வாதிகள் ” தான் என்பதையும் டில்லியில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய
எழுத்தாளர் ஹாமிஷ் மெக்டொனால்டு என்பவர். ‘ The Polyester Prince – The Rise of Dhirubhai Ambani ‘
என்கிற பெயரில் 1999-ல் விவரமாக ஒரு புத்தகம் எழுதினார் – அதில் // மத்திய அரசில் பதவியிலிருந்த யார் யாரிடம்,
எப்படி எப்படியெல்லாம் – தன் செல்வாக்கையும்,
தந்திரங்களையும் பயன்படுத்தி
திருபாய் அம்பானி தன் கம்பெனியை வளர்த்தார்
என்பதைப்பற்றி விலாவாரியாக அலசி இருந்தார்
ஹாமிஷ் மெக்டொனால்டு. //
இன்று இந்த திமுக வாரிசு தலைவரை முகேஷ் அம்பானி சந்திப்பது வரை எல்லாமே எதுக்கு …? — என்ன பாஜக யாருடன் கூட்டணி அமைத்தாலும்—- [ அதான் அடிமைகள் கட்சியுடன் 25 — 15 என்று முடிவாகி இருக்கிறது என்பது செய்தி ] நேரடி போட்டியை தவிர்க்க வேண்டும் என்று கேட்க வந்திருப்பாரோ … ? எல்லாம் ” அவன் ” செயல் …?
கார்பரேட்களும் அரசியல்வாதிகளும் கூட்டு என்பது அம்பானி
மு க stalin சந்திப்பு உறுதி செய்கிறது . இப்போது டாடா தேவையில்லை
போலும். இதில் மோடிக்கும் அம்பானி அதனிக்கும் கூட்டு என்று பிரச்சாரம்
வேறு.
சந்தடி சாக்கில் சிந்து பாடுகிறீர்களே.
மோடிக்கும் அம்பானிக்கும், மோடிக்கும் அதானிக்கும் கூட்டு. crony capitalism என்பதன் இலக்கணத்தை வகுத்திருப்பவரே மோடி தான் என்று நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லுமே.
So i can expect the subsequent post will support the ADMK and its allies for the General and by elections. To downgrade Stalin in all areas, I will not be surprised that Vimarsanam may start supporting the ruling alliance.
ராமன்,
நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்… நான் பல தடவை சொல்லி விட்டேன்…. அலுத்தே போய் விட்டது.
நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளனாகவோ, அனுதாபியாகவோ மாறி என் சுதந்திரத்தை இழக்கத் தயாரில்லை.
இப்போது நான் ஒரு சுதந்திர மனிதன்… யாரையும் பாராட்டலாம்… யாரையும் விமரிசிக்கலாம்.
அந்தந்த நேரத்தில் என் மனம் சொல்கிற மாதிரி…
உங்களுக்கு இப்போது நம்பிக்கை வரவில்லையென்றால் – காத்திருந்து பார்ப்பதைத்தவிர வேறு வழி இல்லை.
2014 மே -க்கு முன்னால் விமரிசனத்தில் வந்த இடுகைகளை பார்த்ததுண்டா….?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Dear KaMai,
Whether I support your views or not I am regular reader of your blog, but rarely I comment. I surely have a comment about your blog, is that you become very soft when you write about JJ or MGR, even if its a big blender, in turn even if a trivial mistake of Stalin it is magnified. Still you claim you are unbiased. I don’t know what I am going to get from your followers for this statement, but still want to express my view. Still I will read your blog continuously.
Pranam…
Raman A V
Raman A V,
Thank you for your comments.
I believe my conscience….
I again wish to re-iterate –
//நான் ஒரு சுதந்திர மனிதன்…
யாரையும் பாராட்டலாம்… யாரையும் விமரிசிக்கலாம்.
அந்தந்த நேரத்தில் என் மனம் சொல்கிற மாதிரி…//
.
-with all best wishes,
Kavirimainthan