இவர்கள் – கடமையை முடித்து – பெட்டிகளில் உறங்குகிறார்கள் … இனியும் இத்தகைய பெட்டிகள் உருவாகாமல் இருக்க என்ன செய்யப்போகிறோம் நாம்….?


இவர்கள் –
இந்த தேசத்திற்கான
தங்கள் கடமையை முடித்த திருப்தியுடன் –
பெட்டிகளில் நிம்மதியாக உறங்குகிறார்கள் …

இவர்களுக்கான, நம் கடமை என்ன….?

தொடர்ந்து பெட்டிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போவதை தடுக்க –
என்ன செய்யப்போகிறோம் நாம் …?

.
—————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இவர்கள் – கடமையை முடித்து – பெட்டிகளில் உறங்குகிறார்கள் … இனியும் இத்தகைய பெட்டிகள் உருவாகாமல் இருக்க என்ன செய்யப்போகிறோம் நாம்….?

  1. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:
  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // புல்வாமா தாக்குதல்: ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது?, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா?- காஷ்மீர் ஆளுரின் ஆலோசகர் விஜயகுமார் விளக்கம் // https://tamil.thehindu.com/india/article26289032.ece?utm_source=HP&utm_medium=hp-tslead — இன்னும் அதிகமான கவனத்துடன் இருந்திருக்க வேண்டுமோ … ? கண்டிப்பாக ஒரு தீர்வு ஏற்பட்டே ஆக வேண்டும் …!

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // ‘புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் பழிக்கலாமா?’- நவ்ஜோத் சிங் சித்து கேள்வி // https://tamil.thehindu.com/india/article26280373.ece
    இப்படியும் சில பிறவிகள் …?

  4. Saravanan's avatar Saravanan சொல்கிறார்:

    Highly condemnable terror act. Sure whoever did this will pay a heavy price for it… very soon! Surprise to see few tamil media tv channels cover this issue extensively this time…. may be because of this below video effect????

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      சரவணன்,

      இந்த ராணுவ வீரருக்கு மட்டுமல்ல. பெரும்பாலான பொதுமக்களுக்கும் கூட மீடியாக்களைப் பற்றி இத்தகைய அபிப்பிராயம் தான் இருக்கிறது.

      நான் பல வருடங்கள், ஒரு சிவிலியனாக – ராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றவன்.
      அவர்களது உத்தியோக நிர்பந்தங்கள், பணிபுரியும் சூழல், குடும்பத்துடன் நீண்ட தொலைவில், நீண்ட காலங்களுக்கு பிரிந்து வாழ்வதால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள் ஆகியவை பற்றி நன்றாகவே அறிவேன்.

      2-3 வருடங்களுக்கு முன்னர், காஷ்மீர் சென்றபோது, கிட்டத்தட்ட இந்த இடங்களையொட்டிய பகுதிகளுக்கு சென்றிருந்தேன்.. அங்கு ராணுவத்தினர் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன்… அதில் நிறைய தமிழர்களும் உண்டு.

      காஷ்மீரின் இன்றைய நிலைக்கு – பெரும்பாலும் நமது அரசியல்வாதிகளே காரணம்…

      காஷ்மீர் இயல்புக்கு வருவதை நமது அரசியல்வாதிகளே விரும்புவதில்லை. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் –
      வெகு சீக்கிரம் இந்த சம்பவத்தையும் – மத உணர்வுகளை கிளறிவிடவும், தேர்தல் ஆதாயம் பெறவும் – முயற்சிகளைத் துவங்கி விடுவார்கள்.

      பாழாய்ப்போன அரசியல்வாதிகளால் நாசமாகிக் கொண்டிருக்கிறது இந்த நாடு.

      -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.