மோடிஜி ஆட்சியில் – அய்யோ பாவம் டாக்டர் சு.சுவாமி…!!!

டாக்டர் சு.சுவாமியை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது..
அவரும் எவ்வளவோ முயன்று வருகிறார் – மோடிஜி ஆட்சியில் உள்ள
ஊழல்வாதிகளை ஒழிக்க வேண்டுமென்று…

ஏகப்பட்ட தடவை மோடிஜிக்கு இது குறித்து கடிதங்களும்
எழுதி விட்டார். ஆயிற்று… ஐந்து வருட ஆட்சியே முடியப்போகிறது..

சு.சுவாமி சொல்லும் ஆலோசனைகளில் ஒன்றைக்கூட மோடிஜி
இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கூட பரவாயில்லை…
பொறுத்துக்கொள்ளலாம்…… ஆனால், முகத்தில் அடிப்பது போல்,
சு.சுவாமி சொல்வதற்கு நேர் மாறான செயல்களை வேறு செய்தால்…?
மானமுள்ள மனிதர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்ன…?

திரு.சக்திதாஸ் பொருளாதாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்து செயல்பட்ட விதத்தையும், அவர் மீது சில ஊழல் குற்றச்சாட்டுகளையும் கூறி, ஏற்கெனவே சு.சுவாமி மோடிஜிக்கு பல தடவைகள் எழுதி இருக்கிறார்.

சு.சுவாமியின் கருத்துகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு –
திரு.சக்திகாந்த தாஸ், (நேற்று ராஜினாமா செய்த உர்ஜித் பட்டேல் அவர்களுக்கு மாற்றாக) ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மோடிஜி அரசால்
நியமிக்கப்பட்டிருக்கிறார்….

சு.சுவாமி என்ன மான, ரோசம் இல்லாதவரா என்ன…?
வெட்கங்கெட்டவரா என்ன…?

மோடிஜி என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு விடுவாரா என்ன…?
அவருக்கு உள்ள 6 வருட ராஜ்யசபா உறுப்பினர் பதவியை
மோடிஜியால் பறித்து விட முடியாது; அந்த 6 வருட காலம்
முடிவதற்குள், யார் எங்கு இருக்கிறார்களோ…!!! யார் கண்டது…?
இனி சு.சுவாமிக்கு மோடிஜியின் தயவு தேவை இல்லை.
அடுத்து 4 மாதங்களில் தேர்தல்கள் வருகின்றபோது மோடிஜிக்குத்தான்
சு.சுவாமியின் தயவு தேவைப்படும்…(வாயைத்திறந்து விடாமல் இருக்க…!!!)

சு.சுவாமி மிகுந்த தன்மானமுள்ள ஒரு தலைவர்…!!!
ஆனால், அதை அவர் மட்டும் சொல்லிக்கொண்டால்
போதாது….மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
எனவே, விரைவில் சு.சுவாமி – தனக்கும் மான,ரோசம் உண்டு
என்பதை நிரூபிப்பாரென்று நம்புவோமாக…!!!

இப்படியெல்லாம் மொட்டையாகச் சொன்னால், நண்பர்களுக்கு புரிவது
கடினம்… இதன் பின்னால் ஒரு பழைய சரித்திரம் இருக்கிறது.
முழு சரித்திரம் மிகவும் சுவாரஸ்யமானது… ஆனால், இடுகை மிகவும்
நீளமாகி விடும். எனவே –

அந்த சரித்திரத்தின் ஒரு பகுதியாக ஹிந்து ஆங்கில நாளிதழில்
வெளிவந்த ஒரு பழைய செய்தியை கீழே தருகிறேன்…
அதைப்படித்தாலே போதும்…
நீங்களே மற்றதை புரிந்துகொள்வீர்கள்…!!!

————————————

Now Shaktikanta in Swamy’s crosshairs
SPECIAL CORRESPONDENT NEW DELHI: , JANUARY 10, 2017 01:21 IST

BJP MP Subramanian Swamy has written to Prime Minister Narendra Modi asking him to remove current Economic Affairs Secretary Shaktikanta Das from a
shortlist of candidates for the post of Chairperson, Securities and Exchange
Board of India (SEBI). Citing a news report that Mr. Modi had shortlisted Mr. Das for the position,

Dr. Swamy wrote, “It would be wholly improper to appoint
such a person as the chairman of the SEBI as it would be entirely
inconsistent with the anti-corruption campaign of our party.”

In his letter, he says Mr. Das, as Finance Secretary, was widely perceived as
working to protect the interest of a former Minister.

He also accuses Mr. Das of having stalled investigations by the CBI
(monitored by the Supreme Court) in some of these cases.


( https://www.thehindu.com/news/national/Now-Shaktikanta-in-Swamy%E2%80%99s-crosshairs/article17015331.ece )
.
——————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மோடிஜி ஆட்சியில் – அய்யோ பாவம் டாக்டர் சு.சுவாமி…!!!

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    கா. மை. ஐயா…!

    ஏதோ உங்களால் முடிந்ததை செய்கிறீர்கள். சிண்டு….!?

    பாஜகவில் உள்ளவர்களுக்கும் அங்கு போய் சேருகிறவர்களுக்குமே அது இல்லாமல் போய் விடுகிறதே என்ன செய்ய….!?

    அதுதான் ப.சி. கேட்டார், ‘மானமுள்ள யாரும் மோடி அரசின் கீழ் வேலை செய்ய முடியாது என்று’.

    பார்ப்போம்.

    இருக்கா…இல்லையா…என்று….!

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    24 மணி நேரம் ஆச்சு. புது கவர்னர் நியமனம் பற்றி சு.சுவாமி வாயே திறக்கவில்லையே. கல்லுடன் மோதினால் மண்டை தான் உடையும் என்று
    தெளிந்து விட்டாரா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.