…
…
“திமுக சங்கர மடம் இல்லை” –
கலைஞர் எப்போதோ சொல்லி விட்டார்…
இப்போதும் அதே நிலை தான் …
ஆனால், நடுவில் இருப்பது மட்டும் தான் “சபரீசன்” … 🙂 🙂 🙂
…

…
மேலே இருப்பது நேற்று முன் தினம் டெல்லியில்
திருவாளர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் இல்லத்திற்கு
சென்றபோது எடுக்கப்பட்ட படம்…
எல்லாருக்கும் “நடு நாயக”ராக நிற்பது ஸ்டாலின் அவர்களின்
மனதுக்குகந்த “மாப்பிள்ளை சார்…”
எங்கே ஸ்டாலின் தனது “வாரிசை” நியமித்து விட்டாரோ என்றஞ்சி –
கழகத்தோழர்கள், சீனியர்கள் யாரும்
அநாவசியமாக … சந்தேகப்படவே வேண்டாம்….
கலைஞர் ஏற்கெனவே உறுதியாகவும், இறுதியாகவும்
சொல்லி இருக்கிறார்… வாரிசு அரசியலுக்கு திமுகவில்
என்றும் இடமில்லை….
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் எப்படி திமுக தலைவராக வந்தாரோ –
அதே வழிமுறை என்றும் திமுகவில் தொடரும்…!!!
“மாப்பிள்ளை சார்” – க்கு விளையாட்டு புத்தி…
போட்டோ எடுக்கும்போது “சும்மா”
நடுவில் நுழைந்து நின்று கொண்டார் அவ்வளவே…!!!
.
—————————————————————————————————–



காமை சார்… கூட்டணி சம்பந்தமாகவோ இல்லை ரகசியமான தகவலையோ பரிமாரிக்கொள்ளணும்னு நினைத்தால் (காங்கிரஸ் தலைமையோடு), யாரை ஸ்டாலின் நம்பமுடியும்? கனிமொழியோ இல்லை டி.ஆர்.பாலுவோ அவங்க சொந்த நலனைத்தானே பார்ப்பார்கள், தவறாக கம்யூனிகேட் பண்ண வாய்ப்பிருக்கு அல்லவா? அதனால்தான் தன் ஆள் என்று சபரீசனைக் காண்பித்துக் கொடுக்கிறார் ஸ்டாலின். நாளை (ஒருவேளை) உதயநிதிக்கு உதவியாக இருக்குமல்லவா? இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, மாறன் குடும்பத்துக்கு இங்க இடமில்லை என்பது. ஹா ஹா ஹா.
கருணாநிதியே எப்போது தன் வீட்டினரை முன்னிலைப்படுத்த ஆரம்பித்தாரோ அப்போதே திமுக, கருணாநிதியின் குடும்பத்துக்கும், மாவட்ட குறுநில மன்னர்களுக்கும் உழைக்கும் கட்சியாகிவிட்டது.
// ஹா ஹா ஹா.//
ஹி ஹி ஹி ஹூ ஹூ ஹூ ஹே ஹே ஹே
புதியவன்,
அந்த ஹா ஹா ஹா எனக்கு கூட irritating ஆக இருக்கிறது.
தவிர்த்து விடுங்களேன். கருத்தை எழுதினால் போதுமே…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//“திமுக சங்கர மடம் இல்லை// – கருணாநிதி சொன்னது.
ஆனால் காமை சார், ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?
திமுக மற்ற கட்சிகளைப் போல இல்லை. திமுகவில் குடும்பம் குடும்பமாகத்தான் உறுப்பினர்கள் உள்ளனர்.
அதனால் சபரீசன் திமுக குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் சோனியா காந்தியைச் சந்திக்க அழைத்துப்போனார். அப்போ மற்ற சாதாரணத் தொண்டர்கள்? அப்படீன்னு கேள்விலாம் கேட்கக்கூடாது. பல்லக்குத் தூக்குபவர்களுக்கு, பல்லக்கில் ஏறும் ஆசை வரலாமா?
//“திமுக சங்கர மடம் இல்லை” – // உண்மைதான் …. ! குடும்ப வகையறா மடம் என்பதுதான் உண்மை ….! மருமகன் சபரீசன் சென்ற மாநில தேர்தலின் போதே பின்னால் இருந்து வேலைபார்த்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் … சு.சா முதல் டபுள் ஸ்ரீ வரை அனைவரையும் அழைத்து மாமாவை சந்திக்க ஏற்பாடு செய்தது எல்லாம் இவர்தான் …
உதய நிதி உள்ளே நுழைந்து விட்டார் — அடுத்து இவரும் உள்ளே நுழைக்கப்படுகிறார் … கனிமொழியை ஓரங்கட்ட சிலவற்றில் அவரை கண்டுக்காமல் இருந்தவர் ஸ்டாலின் …… அதாவது :
திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம்,… மேக்கே தாட்டூக்காக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம்,…கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் தங்கையை உடன் அழைத்துச் சென்றதற்குக் காரணம், மருமகன் சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால்தான்….
இந்தமுறை வெளிப்படையாகவே சபரீசன் முன்னிலைப்படுத்தப்பட்டதை சீனியர்கள் ரசிக்கிறார்களா என்பதும் . நம்பிக்கைக்குரியவராக கட்சிக்குள் அவரைக் கொண்டுவருவது ஏற்கப்படுமா என்பதும் போகப்போக தெரியுமா …?. எது எப்படியிருந்தாலும் கட்சியின் பழைய பெருச்சாளிகளின் பெருமூச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் புது தலைவருக்கு நிச்சயம் உண்டு அப்படித்தானே …? இந்த நேரத்தில் விஜயகாந்தின் மச்சான் ஞாபகம் வருவது எதனால் …?
பரங்கிமலையையும், இமயமலையையும் ஒப்பிடலாமா… ?
விஜய்காந்த் கட்சியையும், திமுக-வையும் ஒப்பிடலாமா … ?
நியாயம் இல்லையே… !
அய்யா … ! நியாயம் — தர்மம் என்பதெல்லாம் அரசியலில் இருக்கிறதா என்ன …? அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே மூத்தவர் … பழம் நழுவுகிறது ..விழப்போகுது என்று ….! மலைகளில் வித்தியாசம் இருக்கலாம் — ஆனால் மச்சான் – மருமகன் முன்னிறுத்தலில் …?
அய்யா …. ! // ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்? // https://www.minnambalam.com/k/2018/12/11/77
செல்வராஜன்,
ரங்கராஜ் பாண்டே திறமையானவர் (சில சிறிய குறைகள் இருந்தாலும் கூட…). அவரது சாதுரியத்திற்கு சான்று கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி.
அவரது முழு பொறுப்பில் ஒரு புதிய தொலைக்காட்சி வருகிறதென்றால் –
அது நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்குமென்று நம்பலாம்.
ஒன்றிரண்டு சஸ்பென்ஸ்-கள்….
தொழிலதிபர் யார்…?
கட்சி சார்பு இருக்குமா…?
பொறுத்திருந்து பார்ப்போம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நல்லது நடந்து இருக்கிறது. இது பாராளுமன்ற தேர்தலிலும் தொடரனும்.
ரொம்பவும் குதித்து சந்தோஷப்பட்டு கொண்டாடக் கூடிய வெற்றியா என்றால்…அப்படி ஒன்றும் இல்லை தான்.
ஆனால், இது ஆனவத்தால் தறிகெட்டு நெறிகெட்டு எல்லா முறைமைகளையும் விட்டு விலகி நடக்க துணிந்தவர்களுக்கு ஒரு தடை தான்…அடி தான்.
இது எதிர் கட்சிகளின் ஒற்றுமையை மேலும் உறுதி படுத்தி அடுத்த பொது தேர்தலில் பெரு வெற்றி கிட்டும் வரை அயராது இருக்க உழைக்க கிடைத்திருக்கும் டானிக் என்றால் மிகையாகாது.
அடுத்த பொது தேர்தலில் யார் வெற்றி பெருவா என்பது முக்கியம் அல்ல என்னை பொறுத்த வரையில்.
ஆபனால், பாஜக ஒழிய வேண்டும். அதன் அராஜகம் அழிய வேண்டும்.
என் இறைவா…..!
ஆர்எஸ்எஸ்/பாஜக கொட்டத்தை அடக்கி அவர்களின் இந்த தோல்வியை நிரந்தரமாக்கி அந்த கும்பலிடம் இருந்து இந் நாட்டை காப்பாற்றுவாயாக.
நானும் இதையே வழிமொழிந்து வேண்டுகிறேன்.
நன்றி நண்பா.
இஸ்லாமியர்களின் மதவெறி அழிய வேண்டும்
மதவெறி பிடித்த ஓவேசி போன்ற இஸ்லாமிய வெறியர்கள் அழிய வேண்டும்
நண்பரே,
பொதுவாகவே எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், தங்களிடையே “மத அபிமானிகள்” என்கிற பெயரில் உலவும் ஆபத்தான “மதவெறியர்களை” அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சொல்வது இன்னமும் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வழிமொழிகிறேன்.
சரியான மத நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் மதவெறியர்களை ஆதரிக்க மாட்டார்கள். அப்படி ஆதரிப்பவர்களும் மதவெறியர்களேயன்றி வேறில்லை.
இன்று, எடப்பாடியார் அருமையாகப் பேசி இருக்கிறார் –
// சாதாரண கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, உழைத்து, படிப்படியாக முன்னேறி இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன், உங்களைப் போல் குறுக்கு வழியில் வரவில்லை. நான் என்று எம்.எல்.ஏ ஆனேனோ, அப்பொழுதுதான் ஸ்டாலினும் எம்.எல்.ஏ ஆனார். 1989-ல் நான் சேவல் சின்னத்தில் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் நுழைகின்றபொழுதுதான், ஸ்டாலினும் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு வந்தார்.
ஆனால், ஸ்டாலின் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு. நான் உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்து, இன்று முதல்வராகியுள்ளேன், நீங்கள் அப்படியல்ல, உங்கள் அப்பா திமுக தலைவராக இருந்தார், முதலமைச்சராக இருந்தார், அதனால் நீங்கள் எம்.எல்.ஏ ஆகி வந்துவிட்டீர்கள். கிராமத்தில் பிறந்தவன் முதலமைச்சராக வேண்டுமென்றால் எவ்வளவு கடினம் என்பது மக்களுக்குத் தெரியும்.//
இன்று, எடப்பாடியார் பேசியது மீதி –
//பாரதீய ஜனதா ஆட்சியின்பொழுது, கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார்கள். அதற்கு சறுக்கல் வந்தவுடன், காங்கிரசிடம் கூட்டு சேர்ந்து அங்கே மத்திய அமைச்சராக இருந்தார்கள், அவர்களுக்குத் தேவை அதிகாரம் ஒன்றுதான். 14 ஆண்டுகாலம் தொடர்ந்து மத்தியில் ஆட்சிசெய்த ஒரு கட்சி திமுக தான், தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, அவர்கள் குடும்பம்தான் வளர்ந்தது, கருணாநிதி, அவருடைய பையன், இப்பொழுது பேரனும் வந்துவிட்டார், எல்லாம் வாரிசு.
14 ஆண்டுகாலம் மத்தியில் திமுக ஆட்சி செய்தபொழுது, தமிழகத்திற்கு தேவையான தொழிற்சாலைகளை கொண்டு வந்திருக்கலாம், புதிய, புதிய திட்டங்களை போடுவதற்கு நிதியை பெற்றுத் தந்திருக்கலாம், ஒன்றும் கொண்டு வரவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதாவது பாடுபட்டார்களா? மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்தான் இவற்றையெல்லாம் செய்ய முடியும், அந்த வாய்ப்பு திமுக-விற்கு இருந்தும் செய்யவில்லை.
மக்களைப் பற்றி கவலையில்லை, அவர்களுடைய வீட்டு மக்களைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். யார் பெரியவன் என்று சர்வே போட்டு, மூன்று பேரை எரித்தே கொன்றார்கள். இவையெல்லாம் கடந்தகால வரலாறு. //