…
.
“கேளடா மானுடா – இங்கு தாழ்ந்தவர் உயர்ந்தவர் இல்லை …”
-என்று சொன்ன புரட்சிக்கவியை –
…
…
” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” – என்று கேட்டு,
நொந்து, வெந்து, மறைந்தவர்களை –
…
…
அவர்கள் செய்த தியாகங்களை,
அவர்கள் நெஞ்சம் உருகி சொன்ன வார்த்தைகளை –
நினைத்து – அவர்கள் மீது மட்டற்ற அபிமானமும், மரியாதையும்
கொண்டவர்கள் மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் நாளிது –
மஹாகவி பாரதி பிறந்த நாள்….
…

.
——————————————————————————————————-



இன்று நாம் அனுபவிக்கும் இந்த இனிய சுதந்திரத்தைப் பெற்றுத்தர சொல்லொணாக்கொடுமைகளுக்கு உள்ளாகி, தங்களது இன்னுயிரையும் பறிகொடுத்த அந்த தியாகிகளுக்கு நமது வீர வணக்கங்கள்.
அய்யா .. ! நம் மஹா கவி கூறுகிறார் :– நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நமது வானுயர கோயில்களையும் …நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பாடல்
”முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே” என்ற பாரதி, இதைத் தொடர்ந்து,
”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே”
நம் நாடும் அதன் கலாசாரமும் எவ்வளவு பழமையானது என்றால், ‘பழங்காலத்தில் நிகழ்ந்ததை, இன்றைய காலகட்டத்தில் துல்லியமாக உணரும் ஆற்றல் வாய்ந்த கலை நிபுணர்களாலும் வகுத்துக்காட்ட முடியாத அளவுக்கு நம் நாட்டின் ” பழமை சிறப்பு அறியதாக ‘‘ உள்ளது என்பார் பாரதி.
”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல் பினளாம் எங்கள் தாய்”
இதைப் பாடுகிற குழந்தைகளுக்கு தாய்நாட்டைப் போற்றும் தன்மை தானாக வந்திடுமே !…. வந்திட வேண்டும் …!!
நம் மக்கள் வீறு பெற்று , அன்னிய சக்திகள் நம்மீது மீண்டும் ஆளுமை செலுத்தாமல் இருக்க, பாரதியின் இப்பாடல் வழிகாட்டும் :
”ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே- புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர் தம்சேனைக்
கடலினிலே உயர்நாடு” … உம் எல்லாம் சொன்ன பாரதி வாழ்க …. ஆனால் இன்று நாடு செல்லும் பாதை …?