கன்னடா-டமில் ….பாய் பாய் (brothers.. brothers…)…!!!


புதிய ஞானோதயம் பிறந்திருக்கிறது….
கர்னாடகாவின் காங்கிரஸ்-ம.ஜ.தள் கூட்டணி நீர்ப்பாசன மந்திரி
திருவாளர் சிவகுமாருக்கு …

” கன்னடியர்களும், தமிழர்களும் சகோதரர்கள்…
கர்நாடகாவிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்;
தமிழ்நாட்டிலும் கர்நாடகத்தவர்கள் இருக்கிறார்கள்;
நமக்குள் எந்தபேத பாவமும் இல்லை;
நாம் சகோதரர்கள் – நமக்குள் எதற்கு வீணான சண்டை…? ”


ஆகையால் (மரியாதையாக) மேகதாது அணை கட்ட
தமிழ்நாடு ஒத்துழைக்க வேண்டும்…

“எங்கள் மாநிலத்திற்குள்,
எங்கள் காவிரி ஆற்றில் –
எந்த அணையையும் கட்ட – எவரின் அனுமதியும்
தேவையில்லை” – என்று முழக்கமிட்டவர்கள் தானே இவர்கள்…

100 ஒம்னி பஸ்களை கொளுத்தியதையும்,
பங்களூர் தமிழர்களை பாடாய்ப்படுத்தியதையும் இன்னமும்
நாம் மறந்து விடவில்லை…

ஆனால் – இப்படி திடீரென்று உல்டா அடிப்பது ஏன்…?

காவிரி வழக்கில் – அண்மைக்கால சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பிறகு,
காவிரிப்படுகையில் எங்கே அணை கட்ட வேண்டுமானாலும்,
அதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் அவசியம்.
இது தான் சட்டபூர்வமான நிலை…

இன்னமும் 4 மாதத்தில் -ஏப்ரல் 2019-ல் தேர்தல் வருகிறது.
கர்நாடகா மக்களுக்கு “பாவலா” காட்ட வேண்டும்…
“மேகதாது” அணை கட்ட நாங்கள் தான் முழு அக்கரையுடன்
செயல்படுகிறோமென்று…

பாஜகவும், காங்கிரசும் போட்டி போட்டுக்கொண்டு
“ஷோ” காட்ட முயற்சிக்கின்றன.

பாஜக மத்திய அரசு, (தான் செய்வது சட்டவிரோதமானது என்று
தெரிந்துகொண்டே …) –
மேகதாதுவில் அணை கட்ட – சுற்றுச்சூழல்
அனுமதி பெற, திட்ட அறிக்கை சமர்ப்பிக்க அனுமதி கொடுக்கிறது….

மாநில காங்கிரஸ், ம.ஜ.தள் கூட்டணி அரசு – தாங்கள் தமிழகத்தின்
ஒத்துழைப்பை பெற்று திட்டத்தை நிறைவேற்ற சின்சியராக
முயற்சிப்பதாக காட்டிக் கொள்கிறது.

இதே மந்திரி ஜூன் மாதம் – தேர்தலுக்குப்பின் – எப்படி பேசுவார்
என்பதையும் இப்போதே யூகிக்க முடியும்…!

“காரியம் ஆக வேண்டுமானால் கழுதை ஆனாலும் காலைப்பிடி…”
அது தான் நடந்துகொண்டிருக்கிறது இப்போது…

நேற்று காலை தளபதி – டெல்லிக்கு கப்பல்(ஆகாய) ஏறும்போது,
“சோனியா காந்தி, ராகுல் காந்தி, குமாரசாமி ஆகியோரிடம்
மேகதாது விவகாரம் பற்றி பேசுவேன்…” என்று செய்தியாளர்களிடம்
சொல்லிவிட்டுப் போனார்.

டெல்லியில் என்ன பேசி இருப்பார்…?
நம்மால் யூகிக்க முடியாதா என்ன…?

“பார்லிமெண்ட் தேர்தல் முடியும் வரை மேகதாது விஷயத்தை
அடக்கி வாசியுங்கள்; இல்லையேல் தமிழகத்தில் நமது கூட்டணியின்
வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்…”

ஓட்டு போடும் மக்களை எப்போதுமே வடிகட்டிய மடையர்கள்
என்று நினைத்துச் செயல்படும் இவர்கள் எல்லாருமே –
“ஒரே குட்டையில் ஊறிய மட்டை”கள் தான் என்பது
நமக்குத் தெரியாதா என்ன…..?

.
—————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to கன்னடா-டமில் ….பாய் பாய் (brothers.. brothers…)…!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    என்ன இப்படிச் சட்டுனு சொல்லிட்டீங்க கா.மை. சார்….

    ஸ்டாலின் அவர்கள் சோனியாவைச் சந்திப்பதே இந்த விஷயம் குறித்து விவாதிக்கத்தானே. பாருங்கள்…. உடனே அவர்கள் அணை பற்றிய திட்ட அறிக்கையைத் தயாரிப்பதை நிறுத்திவிடுவார்கள்.. தமிழகத்தப் பற்றி ஸ்டாலினுக்கு இல்லாத அக்கறையா? (யாரது…. சபரீசனை அறிமுகப்படுத்தத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று சொல்வது… கபர்தார்..)

    பாஜக, அரசியல் காரணங்களுக்காக, நெறிமுறைகளை காங்கிரஸ் போன்றே மீறுகிறது. தேச நலனைவிட, ஆட்சியைப் பிடிக்கும் ஆசைதான் அவர்களிடமும் மிதமிஞ்சி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தேசநலனை நாம் பார்க்க முடிவதில்லை.

    பாஜக, சிவசேனா போன்ற கட்சிகளின் ‘அயோத்தியாவில் ராமர் கோவில்’ என்ற முழக்கத்திற்கும், காவிரியில் ‘மேகதாது அணை’ என்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இரண்டும், இந்திய மக்களின் பிளவுக்குத்தான் வழிவகுக்கும்.

  2. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    It is a ploy by stalin that he will discuss Mekadatu issue with Cong highcommand. People know DMK very well. that it is the most opportunic party and the alliance with Congress is to win more MP seats and if by chance cong comes back to power DMK will certainly bypass Mekadatu issue , and will try to secure PLUM portfolios of ministries at center to add more money to its already swollen coffers.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! அணைகட்ட நினைக்கிற இவர்களும் — அனுமதி கொடுக்கிற அவர்களும் புரிகிற ஓட்டரசியல் கோல்மால்கள் நம் மக்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே … பழகிப்போன ஒன்றுதானே …. ! ஏகப்பட்ட கோளாறுகள் தினமும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கிறது — அதில் ஒன்று :—

    // அரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன் //
    Read more at: https://tamil.oneindia.com/news/delhi/urjit-patel-s-resignation-statement-protest-raghuram-rajan-336202.html

    முன்பு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா என்று தொடர்ந்து — இந்த ஆட்சியில் ராஜினாமாக்கள் பெருகியதின் காரணம் என்ன …? சொற்படிநட . இல்லையேல் நடையைக்கட்டு என்பதுதான் லேட்டஸ்ட்டா ….?

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திரு.உர்ஜித் பட்டேலின் செய்கையை என்னால் பாராட்ட முடியவில்லை.
    அவர் நாட்டிற்கான தன் கடமையிலிருந்து தவறியதாகவே நான் பார்க்கிறேன்.

    அவர் முன்னர் 2 வாய்ப்புகள் இருந்தன…

    ஒன்று – அதே பதவியில் தொடர்ந்து, தன் நிலையில் உறுதியாக இருந்துகொண்டு…முடிந்தால் அரசு தன்னை வலுக்கட்டாயமாக அகற்றிக் கொள்ளட்டும் என்று இறுதிவரை எதிர்த்து நிற்பது….

    இரண்டு – என் பதவிக்குரிய கடமையை செய்ய விடாமல், மத்திய அரசு தலையிட்டு தடுக்கிறது… என்று சொல்லி உண்மையான காரணங்களை முழுவதுமாக, தெளிவாக – விளக்கிவிட்டு ராஜினாமா செய்வது.

    அவர் இந்த இரண்டையும் செய்யத்தவறியதோடு –
    “தன் சொந்த காரணங்களுக்காக'” – ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்… இப்போது அரசுக்கு இது மிகவும் வசதியாகப் போய் விட்டது.

    மத்திய அரசை எதிர்க்க பயந்துகொண்டு –
    மத்திய அரசின் தவறான போக்கை நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லும்
    கடமையிலிருந்து அவர் தவறி விட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

    • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

      அய்யா … உண்மைதான் … ! பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … !! // அடுத்த ராஜினாமா: பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் திடீர் விலகல் // https://tamil.thehindu.com/india/article25716156.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers … இவருமா … என்னதான் நடக்குது .. நடக்கப்போகிறது …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.