…
…

பச்சைபசேல் புல்வெளியை நாசமாக்கி ஒரு ராட்சச பந்தல் …
…

1000 ஆண்டு புராதனகோயிலை
டாய்லெட் உட்பட, தகரக்கொட்டகை போட்டு அசிங்கப்படுத்தும் ராட்சசர்கள் ….
…
1000 ஆண்டுகளாக மாமன்னன் ராஜ ராஜ சோழனின் ஆவி
நிம்மதியின்றி அலைந்து கொண்டிருக்கிறதாம்…
அதை இந்த ஃப்ராடுகளிடம் – ஓலைச்சுவடி மூலமாக வந்து சொன்னதாம்…. இவர்கள் வந்து இங்கே ஆட்டம்போட்டுதான்
அதை “சாந்தி” செய்யப்போகிறார்களாம்…
பாஜக ஆட்சியில் கார்பரேட் சாமியார்களின் ஆட்டம் அளவிற்கு மீறிப் போய் விட்டது. வடக்கே போட்ட ஆட்டம் போதாதென்று இப்போது தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைத்து இங்கே வந்து கதை விடுகிறார்கள்….
வர வர எந்த சாமியாரையும் நம்ப முடியவில்லை…
நிஜமான துறவிகளுக்கு கூட இவர்களால் களங்கம் விளைகிறது.
எவரிடமும் பணமோ, நன்கொடையோ வாங்கவில்லையாம்.
5 ஸ்டார் வசதியுடன் நிகழ்ச்சியை “சும்மா” நடத்துகிறார்களாம்.
தஞ்சை பெரிய கோயிலில் இவர்கள் எதற்காக நிகழ்ச்சி நடத்த விரும்பினார்கள் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜியின் ஒருங்கிணைப்பாளர் சொல்வதை கீழே பாருங்கள்….
…

..

.
—————————————————————————————————



தமிழ்நாட்டில் கோவையில் ஒரு மோசடி கும்பலோடு விட்டது என்று நினைத்திருந்தோம்; போட்டிக்கு புதிய கூட்டம் பங்களூரிலிருந்து படையெடுத்து வந்து விட்டது. இது முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டிய விஷயம்.
பொய்சொல்லிகள். ஊரைஏமாற்றும் மோசடி பேர்வழிகள்.
பெரிய கோயிலுக்குள் டாய்லெட் போட்ட பொறுக்கிகள்;
கோர்ட் அவர்களையும், அவர்களுக்கு அனுமதி கொடுத்தவர்களையும்
கடுமையாக தண்டிக்க வேண்டும்.
அய்யா ..! எவனாே தியான வகுப்பில் கற்றுக்காெண்டால் ஆவி எப்படி சாநதமடையும்…வினாேதமாக இருக்கிறது … ? யமுனா நதி தீரத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கியதை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள் …. பல் பாெருள் அங்காடி ஓனரெல்லாம் சாமி? யார்கள் …? அப்பா சிவனே உன் சாெத்தை நாசம் செய்ய நினைக்கின்ற இந்த பதர்களை மன்னிக்காதே …!!!
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் திருச்சியில் பணிபுரிந்து வந்த காலத்தில், பல பௌர்ணமி மாலைகளில் தஞ்சைக்கு பெரிய கோயிலை நாடிச்செல்வேன்.
இப்போது இந்த பாவிகள் “டேரா” அடித்திருக்கிறார்களே – இதே புல்வெளியில் சாய்ந்து படுத்துக்கொண்டு,
வானத்தில் முழு நிலவின் பின்னணியில் தெரியும், அந்த கோபுரத்தை – அந்த பிரம்மாண்டமான structure-ஐ பார்த்து பார்த்து வியப்பேன்… பரவசமூட்டும் அனுபவம் அது.. கிளம்பவே மனம் வராது… இரவு 10 மணிக்கு மேல் தான் கிளம்புவேன்…ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் எவ்வளவு உயர்வாக சிந்தித்திருக்கிறார்கள்; செயல்பட்டிருக்கிறார்கள்…!!!
எரிகிறது… இன்று இந்த சுயநலமிகள் செய்வதைப்பார்க்க…
அய்யா …! இது முன்பு நீங்கள் திரு . சுஜாதா அவர்கள் பற்றி எழுதிய ஒரு இடுகையில் குறிப்பிட்டு இருந்த வரிகள் முழுவதுமாக :
// சுஜாதா அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் பற்றி சொன்னது போன்ற வேறு சில உணர்வுகள் எனக்கு அதற்குப் பல வருடங்கள் முன்னரே தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பட்டதுண்டு.
திருச்சியிலிருந்து – தஞ்சை ஒன்றரை மணி நேரப்பயணம் தான். பவுர்ணமி நாளாகப் பார்த்து போவேன். அஸ்தமிக்கும் நேரத்திற்குப் போய், நந்தி சிலைக்கு இடது பக்கத்தில் இருக்கும் பரந்த புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு, நிலவொளியின் பின்னணியில் கோபுரத்தை
பார்த்துக் கொண்டே இருப்பேன்., கூட்டம் குறைந்த பிறகு – அப்படியே புல்வெளியில் சாய்ந்து படுத்துக் கொண்டு கோபுரத்தையும், கோயில் முழுவதையும் பார்த்துக் கொண்டே, இதைக் கட்டும்போதும்,
கட்டி முடித்தபின்னரும் – அந்த மாமன்னன் ராஜராஜ சோழன் நடந்த இடம், நின்ற இடம் அல்லவா இது….
இந்த இடத்தில் இருந்து கொண்டு தானே கோபுரத்தைப் பார்த்திருப்பான் –
அப்போது அவன் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் நினைப்பேன். ஆயிரம் ஆண்டுகள் முன்னரே இவ்வளவு செயலாக்கத்தோடும், பராக்கிரமத்தோடும் இருந்த நம் பரம்பரை
ஏன் இன்று இப்படி இருக்கிறது – என்கிற
வருத்தமும் தோன்றும். // …. இதெல்லாம் உண்மையான உணர்வுபூர்வமான ரசனைகள் ..ஆனால் இந்த ஆசாமிகளுக்கு ….?
செல்வராஜன்.
தஞ்சை பெரிய கோயில் உணர்வுகள் பற்றி முன்னதாக நான் எங்கோ எழுதி இருந்தேன் என்கிற வரையில் என் நினைவில் இருந்தது… எங்கே என்பது
நினைவிற்கு வரவில்லை. இப்போது சரியான இடத்தில் எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட அதையே தான் இப்போதும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி செல்வராஜன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
///வர வர எந்த சாமியாரையும் நம்ப முடியவில்லை…
நிஜமான துறவிகளுக்கு கூட இவர்களால் களங்கம் விளைகிறது///
மட்டும் அல்லாமல் இந்த கயவர்களால் இந்து மதமே கேலிக்குள்ளாவதற்கும் தீவிரவாத சகிப்புத்தன்மையற்ற மதம் என்று தூற்றப் படுவதற்கும் தான் இவர்கள் மாய்ந்து மாய்ந்து பாடுபடுகிறார்கள்.
Rightly the court stopped the congregation planned by this Swamiji. See how Baba Ramdev has created a mini empire that could challenge the decades old Nestles and Levers – smooth transition from Yoga to Big Business just in a couple of years!! Somehow I cannot accept any of the present Swamijis. For me, ‘Maha Periva’ was the last saint that our generation knew of.
எழுதவேண்டிய விஷயத்தைத் தவறாமல் எழுதிவிடுவதற்கு பாராட்டுகள் காமை சார்…. நடந்தது மிகப்பெரும் தவறு. அதை ஜஸ்டிஃபை பண்ணும் விதமாக அவர்கள் சொல்லும் காரணங்கள், நூற்றாண்டின் மிகப்பெரும் ஜோக்.
அதே சமயம், கருணாநிதி, பட்டுவேட்டியுடன், இதேபோன்று புல்வெளிகளை அலங்கோலமாக்கி, தனக்கென தனி வாசல் மூலமாகப் பிரவேசித்து ராஜராஜன் கோவிலில் தனக்குப் பாராட்டுவிழா நடத்துவதுபோல நிகழ்ச்சி நடத்தியதும் எனக்கு ஞாபகம் வருகிறது.
அரசியல் காரணங்களுக்காக ஒருவர் தன் அதிகாரத்தை நிலைநாட்டியபோது, இதுபோன்று பிறர் முனைவதற்கும் அது இடம் கொடுத்துவிடுகிறது. நடந்தது தவறுதான்.