“ஊரான் வீட்டு நெய்யே” …பாஜக அரசு வங்கிப்பணத்தை இப்படி தாரை வார்ப்பது சரியா…?


இப்படியும் சொல்லலாம்…”கடைத்தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” …!!!

வாராக்கடன் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை;
செய்யப்படவும் மாட்டாது –
என்று ஒரு பக்கம் பலமாக உறுதி அளிக்கிறார் நிதியமைச்சர்….

மத்தியஅரசு பெரிய அளவில் வெளிப்படையாகச் செய்தால் தானே பிரச்சினை… லோக்கலில், வங்கியளவிலேயே தள்ளுபடி சமாச்சாரத்தை முடித்து விட்டால், வெளியே தெரியாமல் கதையை முடித்து விடலாம் என்பது நினைப்பு போலும்….

பொதுத்துறை வங்கிகளில் 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக வாராக்கடன்கள் இருக்கும் நிலையில் – இந்த வாராக்கடன்களை வசூலிக்கவும் முடியாத நிலையில், எப்படியாவது கணக்கிலிருந்து ஒழித்துக்காட்ட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இப்போது வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது….. அதையடுத்து, பல குறுக்கு வழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

அதில் சில தற்போது வெளியே தெரிய வந்திருக்கின்றன… இன்னும் வெளியில் தெரியாமல் எவ்வளவு நடந்திருக்கிறதோ…நடந்து கொண்டிருக்கிறதோ….!

ஏற்கெனவே, ஐ.ஓ.பி. வங்கி – பூஷன் ஸ்டீல் நிறுவனத்துக்கு கொடுத்திருந்த கடனை தள்ளுபடி விலையில், கடனின் 40 சதவீதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, வேறோரு நிறுவனத்திற்கு விற்று விட்டது.

தற்போது, அடுத்தபடியாக, ஐ.ஓ.பி. தனது கணக்கில் நிலுவையில் இருக்கும் சுமார் 7000 கோடி ரூபாய்(6978.94) கடனை ஒழித்துக்கட்ட
(அதாவது ஒழித்ததாக காட்ட…?) –

இதுவரையில் இல்லாத ஒரு புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறதாம்.
இந்த கடனை தன்னுடைய வசமிருக்கும் பிரிமியம் ஷேர் அக்கவுண்டிலிருந்து கழித்து விட்டதாக (written off) தெரிகிறது.

இப்போதைக்கு அந்த வங்கியின் ஷேர் பிரிமியம் அக்கவுண்டில் சுமார் 7,659 கோடி ரூபாய் இருப்பதால், இந்த கடனை தள்ளுபடி செய்ய அதுவே போதுமானது என்றும், வங்கி தனக்கிருக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டே இதை செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ‘பிரிமியர் ஷேர் அக்கவுண்ட்’ என்பதை வங்கியின் லாபக்கணக்கு
என்று சொல்லலாம். ஷேர் விலை அவ்வப்போது ஏறும்போது, வங்கி சொந்தமாக வைத்திருக்கும் ஷேர்களின் மதிப்பில் கிடைக்கும் மதிப்பு
உயர்வை(லாபம்) இந்த கணக்கில் தான் வைத்திருப்பார்கள்.

உதாரணத்திற்கு, 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஷேரின் விலை 80 ரூபாய் அளவிற்கு உயர்ந்தால், இந்த வித்தியாசமான 70 ரூபாய் வங்கியின் பிரிமியர் ஷேர் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.

பொதுவாக, இந்த பணத்தை வங்கியின் லாபத்திலிருந்து கணக்கில்
வைக்கப்பட்டிருக்கும் சேமிப்பு என்று தான் சொல்ல வேண்டும் … இதன் உண்மை உரிமையாளர்கள் – ஷேர் ஹோல்டர்கள் தான்…. அதாவது, இந்த பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமான அரசு – (அதாவது பொது மக்களாகிய நாம்), மற்றும் இதன் பங்குகளை வாங்கி வைத்திருப்போர்.

இந்த – மற்றவர்களுக்கு / நமக்கு சொந்தமான பணத்தை எடுத்து,

ஆயிரக்கணக்கான கோடிகள் பணத்தை கடனாக வாங்கி – திரும்பத் தராமல் ஏப்பம் விட்ட,

அயோக்கிய பெருமுதலாளிகளிடமிருந்து – வசூலிக்கப்பட வேண்டிய கடன்களை தள்ளுபடி செய்ய பயன்படுத்தப்பட்டால் அதை என்னவென்று சொல்வது…?

அரசே மக்களை ஏமாற்றத்துவங்கினால்… அதற்கு என்ன பெயர்…???

லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஒட்டுமொத்தமாக சேர்த்து 4000 அல்லது 5000 கோடி ரூபாய் விவசாயக்கடனை தள்ளுபடி செய்வதற்கு மாநில அரசுகள் எக்கச்சக்கமாக யோசிக்கும்போது,

அது சரியான, ஊக்குவிக்கப்படக்கூடிய முறை அல்ல என்று ரிசர்வ் வங்கி வேறு எச்சரிக்கைகளை அவ்வப்போது வெளியிடும் நிலையில் –

கோடீஸ்வரர்களான, பெரும் முதலாளிகளின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் ரகசியமாக தள்ளுபடி செய்து பைசல் செய்வது ஏன்…?

நிதியமைச்சரின் ஒப்புதல் / தூண்டுதல் இல்லாமலா இவையெல்லாம்
நடக்கும்…?

ஆட்சியாளர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் அப்படி என்ன
ஒரு நெருக்கம்…. உறவு…???

——————————————————————————-

———————————————————————-
பிற்சேர்க்கை – ( மதியம் இரண்டு மணி )
———————————————————————–

இன்று காலை நான் பதிவேற்றிய பிறகு தற்போது ( just now )
வெளியாகியுள்ள, இந்த இடுகையுடன் அவசியம் சேர்த்து படிக்க
வேண்டிய – ஒரு கொதிப்பூட்டும் செய்தி –

———————–
..


..

ரூ.27 ஆயிரம் கடனுக்காக அவமானப்படுத்திய வங்கி…
திருவண்ணாமலையில் பெண் தற்கொலை! Posted By: Gajalakshmi
Published: Tuesday, January 9, 2018, 13:41 [IST]

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி என்ற பெண்
சுயஉதவிக் குழுவின் உறுப்பினராக உள்ளார். தன்னுடைய கணவரின்
சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக தேன்மொழி தனியார் வங்கியான
எச்டிஎஃப்சியின் சுயஉதவிக்குழு மூலம் ரூ.27 ஆயிரம் கடன்
வாங்கியுள்ளார்.

ஆனால் கடந்த 3 மாதங்களாக தவணைத் தொகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார் தேன்மொழி. இதனால் நேற்று தனியார் வங்கியின் 3 ஏஜென்ட்டுகள் தேன்மொழி வீட்டின் முன்பு வந்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தவணை செலுத்தாததால் இதனால் மனமுடைந்த தேன்மொழி திடீரென தனது வீட்டின் அறைக்குள் சென்று தாழிட்டுள்ளார்.

தேன்மொழி பணம் எடுக்கத் தான் சென்றிருக்கிறார் என்று நினைத்து கலெக்ஷன் ஏஜென்ட்டுகளும் வீட்டு வாசலிலேயே காத்திருந்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் வாசலில் நின்ற போதே தேன்மொழியின் கணவர் சேகரும் வீட்டின் வெளியே தான் இருந்துள்ளார். ஆனால் வங்கி கலெக்ஷன் ஏஜெண்ட்டுகள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போதே தேன்மொழி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வசைபாடிய வங்கி ஏஜென்ட்டுகள் சுமார் அரை மணி நேரமாகியும் தேன்மொழி வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த போது தான் தேன்மொழி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

https://tamil.oneindia.com/news/tamilnadu/thiruvannamalai-lady-commits-suicide-alleged-private-bank-collection-307923.html

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to “ஊரான் வீட்டு நெய்யே” …பாஜக அரசு வங்கிப்பணத்தை இப்படி தாரை வார்ப்பது சரியா…?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    தனியார் வங்கி என்பதிலிருந்து பொதுத்துறை வங்கி என்று மாறியதால் நாம் அடைந்த பயன் என்ன?

    நான் கல்லூரியில் சேர்ந்த புதிதில், இந்திரா காந்தி ஆரம்பித்துவைத்த லோன்மேளா நடந்துகொண்டிருந்தது. சக மாணவன் (இளைஞர் காங்கிரசில் இருந்தவன்), என்னையும் 3000 ரூ கடன் வாங்கிக்கொள்ளச் சொன்னான் (கொஞ்சம் குறைத்துத்தான் என் கைக்கு பணம் வரும், நிச்சயம் தள்ளுபடி செய்வார்கள் என்று உறுதி கூறினான். இது 1981ல்).

    இப்போது நடந்துகொண்டிருக்கும் ‘தள்ளுபடி’, ‘குஷ்ட ரோகத்தைக் குணமாக்கத் தெரியாமல் அதன் மேல் பெயின்ட் அடித்துவிடுவது போல் இருக்கிறது.

    இந்த மாதிரி தள்ளுபடிகளைப் பார்க்கும்போது, எதையாவது செய்து பேலன்ஸ் ஷீட்டைச் சரி செய்வதுபோல்தான் உள்ளது. நிச்சயம் தணிக்கைத் துறை, அடுத்த 5 லட்சம் கோடி கொள்ளை என்ற புள்ளிவிவரத்தோடு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த இடுகையை ஏற்கெனவே படித்து விட்ட நண்பர்கள், இப்போது (மதியம் 2 மணி) புதிதாக சேர்த்திருக்கும் பிற்சேர்க்கையையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை அவசியம் படிக்குமாறு வேண்டுகிறேன்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      செய்தியைப் படித்துவிட்டேன். அது தனியார் வங்கி (ஹெச் டி எஃப் சி). அதனால் அது அடியாட்களை வைத்து மிரட்டியுள்ளது.

      பொதுத்துறை வங்கிகள் சாமானியனுக்கு கணக்கு காண்பிக்க கடன் கொடுக்கும். அவங்க அதிகமா கடன் கொடுப்பது, யாருக்குக் கொடுத்தால் அது திரும்பி வராதோ அவர்களுக்கு மட்டும்தான். அதுல ஒரே ஒரு கண்டிஷன், கடன் வாங்குபவர்கள், அரசியல்வாதி தொடர்பு இருக்கவேண்டும், கமிஷன் கொடுக்கவேண்டும்.

  3. tamil_alagu's avatar tamil_alagu சொல்கிறார்:

    இங்கு கடனை திருப்ப கட்ட சொன்னாலும் குறை கூறுகிறார்கள்.கடன் வாங்கியவர்கள் நிச்சயமாக வங்கிக்கு வட்டியையும் முதலையும் திருப்பி செலுத்தி ஆகா வேண்டும்.இதில் எந்த சந்தேகமும் இல்லை.
    இப்படி கடன் வாங்கியவர்கள் எல்லாரும் தற்கொலை செய்து கொண்டே இருந்தால் ஒரு நாள் நிச்சமயமாக பேங்க் ongalukku கொடுக்க வேண்டிய பிஸேட் டெபாசிட் வட்டியை நிறுத்தி விடும்.
    அதற்கு நீங்கள் தயாராக இருந்தால் இந்த தற்கொலைக்கு நீங்கள் அனுதாபம் therivikkalam.

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      தமிழ் அழகு – நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், 1 கோடி ரூபாயை ஏமாற்றுபவனை ஒன்றும் செய்யாமல், 10 ரூபாயைக் கொடுக்காதவனை மிரட்டுவது சரியா? ஒரு ரூல் என்னன்னா, 20% தான் 80%க்குக் காரணம். இதை எல்லா இடத்திலும் உபயோகப்படுத்தலாம். இந்த வங்கிக் கடன் விஷயத்துல, 5% பேர், 80% கடனுக்குக் காரணம். அவர்களிடம் பருப்பு வேகாமல், எளியவர்களின் கழுத்தைப் பிடிப்பது சரியா? அந்த 5% பேருக்கு, ‘கடன் தள்ளுபடி’ சலுகை.

      அப்போ சாதாரண மக்கள் என்ன நினைப்பாங்க? அரசு, அவங்கள்ட கமிஷன் வாங்கிக்கிட்டு, நம்ம பணத்தைத் தள்ளுபடி பண்ணிடறாங்க, ஆனா சாதாரண ஏழை மக்களின் கழுத்தை நெறிக்கிறார்கள்.

      பிற்சேர்க்கையையும் படித்தால், ‘சாதாரண மக்களுக்கு’ உள்ள மானமும், சூடு சுரணையும், வங்கிக் கொள்ளையில் (பெரிய அளவில் கடன் வாங்கி திருப்பச் செலுத்தாமலிருப்பது, அந்த மாதிரி ஆட்களுக்கு தெரிந்தே கடன் வழங்குவது, அப்படிப்பட்டவர்களுக்கு ‘தள்ளுபடி’ செய்வது) ஈடுபடுகிறவர்களுக்குக் கிடையாது.

      இதைத்தான் இடுகை சொல்லுது.

  4. tamil_alagu's avatar tamil_alagu சொல்கிறார்:

    சார்
    ஏமாற்றுபவர்களில் ஏழை , பணக்காரன் என்று எந்த வித்தியாசமும் இல்லை. கிரெடிட் கார்ட் கடனை பெற்று கொண்டு தலை மறைவாக உள்ள என் நண்பர்களை நான் அறிவேன்.
    விஜய் மல்லையா முதல் சாதாரண ஏழை வரை அனைவரும் பேங்க் கடன் வாங்கிய பிறகு அதை கட்ட விரும்புவதில்லை.
    அதனால் விஜய் மல்லையா கடனை காட்டாமல் தப்பி விட்டதால் ஒவ்வொருவரும் அதை போல் விளக்கு அளிக்க வேண்டும் என்ற நியாயம் ஆபத்தானது. மேலும் விஜய் மல்லையா அடமானம் சொத்துக்களை போதுமான அளவில் வைத்துதான் கடன் பெற்றதாக நான் அறிகிறேன்.
    இது போன்ற தற்கொலை செய்திகளுக்கு முக்கிய துவம் கொடுப்பது தவறான முன்னுதாரணம். இல்லையென்றால் நாளை வங்கிகள் திவால் ஆவதை தவிர்க்க முடியாது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தமிழ் அழகு,

      நீங்கள் செய்வது வாதம் இல்லை…. விதண்டாவாதம்.
      எதிர்த்து எழுத வேண்டுமென்று நினைத்து எதையெதையோ எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

      இடுகையின் அடிப்படையே – கடன்களை தள்ளுபடி செய்வது தவறு… அதுவும், பெரும் முதலாளிகளின் கடன்களை வங்கியின் ப்ரிமியம் அக்கவுண்ட்டை பயன்படுத்தி தள்ளுபடி செய்வது கொள்கை விரோதம்.. என்பது தான்.

      அதே போல் – ஏழை மக்களின் சிறிய கடன்களை வசூலிப்பதில் காட்டப்படும் தீவிரம், பெருமுதலைகளின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாராக்கடன்களை வசூலிப்பதில் காட்டப்படாதது ஏன்..? என்பது தான்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      @தமிழ் அழகு- கிரெடிட் கார்ட் கடனை பெற்று கொண்டு தலை மறைவாக உள்ள என் நண்பர்களை நான் அறிவேன்.” – நான் வெளி’நாட்டில் இப்போது இருக்கிறேன். எனக்குத் தெரிந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வங்கியில் கடன் வாங்குகிறார்கள், கடைசியில் கம்பி நீட்டிவிடுகிறார்கள். (நிறைய பேர், எங்கள் கம்பெனியில் வேலை பார்த்தவர்கள்). பொதுவா இங்கு வங்கிகள் கொடுக்கும் பணத்துக்கு இன்சூரன்ஸ் எடுக்கும். பணம் 6-7 லட்சம் ரூபாய்தான் பாக்கி என்றால், அதைத் தேடுவதில் மிகுந்த நேரத்தைச் செலவழிப்பதில்லை (கடன் வாங்கியதில் 20%க்கு கம்மி). ஆனால், இந்த விவரங்கள் (பாஸ்போர்ட், போன்ற பல அடையாளங்கள் உள்பட) இமிக்ரேஷன் டிபார்ட்மென்டுக்கு அனுப்பப்பட்டுவிடும். அவர்கள் ஏர்போர்ட் Databaseல் update செய்துவிடுவார்கள். தப்பித் தவறி கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் அந்த ஏர்போர்ட்டுக்கு வந்தால், உடனே சிறையில் தள்ளி, கடன்பாக்கியைத் தந்தபிறகுதான் விடுவிப்பார்கள், அவர்கள் Blacklistம் செய்யப்படுவார்கள். நிறையபேர்கள், இனி எங்க துபாய் வரப்போகிறோம், இனி எங்க சௌதி வரப்போகிறோம் என்று நினைத்துக் கம்பி நீட்டிவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள், தவறான இந்திய முகவரி, போன் நம்பர்கள் கொடுப்பார்கள்.

      சில மாதங்களுக்கு முன்பு, சில வருடங்களுக்கு முன்பு இப்படி கடன் வாங்கி (துபாயில்) கம்பி நீட்டியவர், கத்தார் வேலைக்காக நேரடியாக திருவனந்தபுரத்திலிருந்து (நினைக்கிறேன்) கத்தார் செல்லும் விமானத்தில் ஏறினார். அவரது துரதிருஷ்டம், அது துபாயில் இறங்கியது (என்ன காரணம்னு தெரியலை. தொழில் நுட்பக்கோளாறு என நினைக்கிறேன்). எப்படியோ, அவர் துபாய் ஏர்போர்ட்டில் பிடிபட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார்.

      யாரும் வங்கியை ஏமாற்றக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், அடியாட்களை வைத்து பணத்தை ஏழைகளிடம் அல்லது குறைவான கடன் வாங்கியிருப்பவர்களிடம் மீட்கும் வங்கி, கோடிக்கணக்கான பணத்தைத் தராதவர்களிடம் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கிறது?

      விவசாயக் கடன் வாங்கி, திரும்பித் தராதவர்களிடம் (நியாயமான காரணம் இருந்தால்), வங்கி அவர்களுக்கு இன்னும் ஒரு வருட அவகாசம் தரலாம். பிறகும் தரவில்லையென்றால், அவர்களுக்கு திரும்ப வங்கிக் கடனே (குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும்) கொடுக்கக்கூடாது. பெரும்பாலும் ஏழை மக்கள் (மேற்கண்ட செய்தியில் உள்ளவர் உட்பட) மான அவமானத்துக்குப் பயந்தவர்கள், ஏமாற்ற நினைக்கமாட்டார்கள்.

      Sorry to give lengthy reply though கா.மை சார் பதில் கொடுத்தபோதும்.

  5. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    The so called NPA loans were given by whom? ( by congress rule – PC/Pranab as finance ministers ) and right under the nose of R3- of course strictest action is required to collect, one can not be very lethargic in collection. There was some news circulating that , quite a few industrialists , including TATA , Videocon, Sunil Mittal etc., were selling their foreign owned assets and repaying to the banks. In the absence of any authenticated reports/feed back to SC / Parliamentary replies , that news is not yet confirmed. This adjustment of share premium is not permitted for any companies , but in case of banking companies , it is permitted under their banking regulation act.

    Even in case of Mallaya , it seems they have recovered sizable amount through taking back their cars, house, resorts, and shares . We do not know , as how much was the loss ( or I don’t know ) . What the courts are doing is also a big pain – once they say play National Anthem, now they say don’t, they are the ones who let off Mallaya . They can easily see through the games of business people, but they are all supported by a big legal team .

    ………………..
    ………..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      சுந்தர்ராமன்,

      1) உங்கள் பின்னூட்டத்தின் கடைசி பாரா நீக்கப்பட்டிருக்கிறது…. நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்பதை இன்னுமொரு தடவை படித்துப் பாருங்கள்…. காரணம் உங்களுக்கே புரியும்.

      தயவுசெய்து கொஞ்சம் பொறுப்புணர்வுடன் எழுதவும்.

      —————————

      2) இந்த இடுகையின் மூலம் எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி – வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் வெளியே சொல்கிறார். ஆனால், உள்ளூர வங்கி அளவிலேயே அதை நிகழ்த்துகிறார்கள். இது சரியா…?

      3) ஷேர் ப்ரிமியம் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை – பெரு முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய பயன்படுத்துவது சரியா, தர்மமா, நியாயமா…?
      இது சரி தான் என்று அரசு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுமா…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

        நான் எழுதும் போதே நினைத்தேன் …இப்படி எழுதக்கூடாது , எழுதியவுடன் நினைத்தேன் தவறு என்று ..இப்பவும் தவறென்றே நினைக்கிறேன் .

        ரொம்ப நாள் முன்பு , மாபியா கும்பலின் தாக்கம் அதிமாக இருந்த பொழுது , அமெரிக்க அரசாங்கம் , அதன் தலைவரை ஒன்றும் செய்ய முடியாமல் திணறி கொண்டிருந்தார்கள் , பின்பு ஒரு சாதாரண வருமான வரி வழக்கு மூலம் உள்ளே தள்ளினார்கள் .

        நிச்சயமாக கடனை தள்ளுபடி செய்ய கூடாது , ஷேர் பிரீமியம் மூலம் தள்ளுபடி செய்வது சரியல்ல . But it is allowed under banking law , Banks need to lend money , carry out the banking operations. UPA மூலம் கிடைத்த இந்த கொடை (?) … மிகவும் கடினமானது …very difficult problem they have in hand, instead of corporate loans, now a very large amount is given in Mudra loans , it is creating a history among the women self help groups /NGO’s .

        Definitely there is no interference by Ministers or PM in the working of the bank, no single case of crony capitalism in sanctioning the loans for industrial companies .

        This may be unrelated – Mr. Khrge , the congress leader has 50,000 crores of wealth, it seems, – may be it is exaggerated, may be it is only 5,000 crores or it is only 500 crores , he is a Dalit leader – what has he done to uplift the dalits in Karnataka, that’s the alternative we have .

  6. venkat's avatar venkat சொல்கிறார்:

    This blog has been written with zero understanding of banking industry and its regulation. It is yet another ‘athigaprasangithanam’ article, thinking rbi, bank and banking regulators are idiots.
    1. banks are in the business or lending money and make money in the interest difference between what is paid to depositors and what is collected from debtors. The interest charged to debtors has a risk premium built in. certain percentage of loans are expected to go bad. There is no business without risk. KM sir after claiming so many years of working experience should know this basic.
    2. There is no point is leaving the NPAs as such in the books. They have to be cleaned up at some point in time. There are two ways to do this. One is to sell the debt to asset restructuring companies at a discount. For example, if i have to collect Rs.1 from debtor and i am not able to receive it, i can sell this loan book to some for 40 paisa, leaving the responsibility of liquidation to the buyer of loan book. This is an established industry practice.
    3. Writing of this loan against share account surplus… unless it is allowed as per company law and banking regulation no banker will be able to do this. If it is against company law no auditor will sign this. Is this ethics are not is not a valid question as banks are running for PROFIT. If you ask that question, then you have to also ask the question should banks exist! we will have to go for sharia banking.
    4. This government is keen in cleaning up bank’s book so that merger of banks can be easily possible. Without the merger of banks, current banking system and its inefficiencies cannot be rooted out.
    5. NPAs are not written of easily. FM statement should be interpreted in that sense. See how the banks ( based on governement’s directive ) is going after Mallya, JP group, Unitech etc.,

    Stop writing tabloid style, cheap publicity articles. Do your home work and do justice to your followers.

    • NS Raman's avatar NS Raman சொல்கிறார்:

      Good points mr Venkat.

      If all government decisions viewed in political angle nothing can move.

      Overall benefits to public and other stake holder to be analysed. Also
      Introduction of IBC and other initiatives needs to be viewed along this decision.

      • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

        ” we will have to go for sharia banking.” புதுசா ஒரு டேர்ம் உபயோகப்படுத்தியிருப்பதால் இதை எழுதுகிறேன். ஷரியா பேங்கிங் என்பதற்கும் பொதுவான பேங்கிங் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஷரியா பேங்கில் வட்டி கொடுப்பதில்லை, ஆனால் PROFIT SHARE என்ற முறையில் பணம் பிரிக்கப்படுகிறது (வட்டி என்ற வார்த்தை இஸ்லாமில் தடை செய்யப்பட்டிருப்பதால்). வங்கி என்பது எல்லா இடத்திலும் வங்கிதான். ஆனால் ஷரியா Banking Process has been okayed by Islam Religious leaders. ‘உயிர்களைக் கொல்லாதே’ என்பதற்கும் (அதன் அர்த்தம் புலால் உண்ணாதே), நான் கொல்லலை, மற்றவர்கள் கொன்றதற்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும் என்பதற்குமுள்ள வித்தியாசம்தான். (Please dont read this in the context of religion. See this as business practice)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      திரு.வெங்கட்,

      நான் இந்த வலைத்தளத்தை இயக்குவது, என் மனதில் தோன்றும் சுதந்திரமான எண்ணங்களை இங்கு வெளிப்படுத்தி, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே. இதை படிக்கும் யாரையும் என் கருத்துகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை; அப்படிச் சொல்ல நானும் முட்டாள் அல்ல…

      நான் சொல்வதால் மட்டும் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இந்த வலைத்தள வாசக நண்பர்களும் உங்களைப்போல் பக்குவம் அற்றவர்கள் அல்ல.

      தங்களைத் தாங்களே அதிமேதாவிகள் என்று கருதிக்கொண்டு, மோடிஜியையும், பாஜகவையும் – கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உங்களைப்போன்ற மூர்க்க பக்தர்களுக்காக நான் இந்த வலைத்தளத்தை நடத்தவில்லை. நீங்கள் சொல்கிற வழியில், நீங்கள் எதிர்பார்க்கின்ற விதத்தில் எல்லாம் நான் எழுத முடியாது…

      இந்த வலைத்தளத்து வாசக நண்பர்கள் பண்பட்டவர்கள்… எதையும் ஆராய்ந்து பார்த்து, பக்குவமாக வாதிக்கக்கூடியவர்கள்.
      ( உங்களை நான் அதில் சேர்க்கவில்லை…! உங்களைப் போன்ற மோடிஜி வெறியர்களை அதில் சேர்ப்பதற்கில்லை…)
      ————

      வலைத்தள நண்பர்களுக்கு –

      “வெங்கட்” என்கிற பெயரில் வரும் இந்த நண்பர் மோடிஜிக்கோ, பாஜகவுக்கோ – எதிராக எழுதினால் வந்து குதித்து விடுவார்… அவரை நண்பர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக, அவர் முன்னதாக எழுதிய பின்னூட்டங்களிலிருந்து – சாம்பிளுக்கு சிறு பகுதி:-

      // I started reading your blog say about 8 months ago. I liked it for its well articulated blogs and the insights provided by you. It went into my book mark. //

      //Off late it has become a platform for bashing subramanya swamy and namo. The quality of blogs further deteriorated….//….

      //MODI magic is still working. Like I do, millions of Indians are still hopeful that THIS MAN can uplift them and the country. //

      // i will continue to be his BAKT.// //

      //crony capitalism is what the country needs now. let the L&T and JayPee build roads, let Adani and ambani build ports, let Birla and Tata build power plant…. whats your problem?//

      // The results shows the country and people are behind Modi. There is hope that this MAN can make a difference in their life.HIS intentions and ACTIONS are with the best interest of the country.//

      //I like “MY MAN” //

      //Good luck. Like I said, I am signing off!!!//

      ———————————————————————-

      நீங்களே சொல்லுங்கள் – இப்பேற்பட்ட கண்மூடிகளை எல்லாம் CONVINCE செய்ய வேண்டும் என்று நமக்கென்ன அவசியம்….???

      இந்த “பக்த”ருடைய ( மேலே – அவரே சொல்லிக் கொண்டதைத்தான் நான் சொல்கிறேன் – நானாக அல்ல ) அத்தனை வாதங்களையும் தகர்த்தெறிந்து
      விளக்கமாக எழுத என்னால் முடியும்…ஆனால், நான் என் நேரத்தையும்,
      உங்கள் நேரத்தையும் – மூர்க்க பக்தர்களுக்காக வீணடிக்க விரும்பவில்லை …என்ன எழுதினாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதால்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  7. MUTHUKUMAR's avatar MUTHUKUMAR சொல்கிறார்:

    Dear Sir,
    written off and waving both are totally different. Written off accounts should be repayable by the borrowers and legal action should be initiate by the banks. In PSU Sector most of Agri NPA accounts transferred to write off and converted to AUCA at first we have to know the difference between the wave and write off

  8. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    எனக்கு அதிகம் தெரியாது. சில வார்த்தைகளை என் நண்பர்கள் சொல்லி அறிந்த வகையில்,

    “வட்டி”: கூடாது. ஏனென்றால் அது தீர்மானிக்கப்பட்ட சதவீதம். லாப நட்டம் பணம் வாங்கியவரோடு.

    “வியாபாரம்”: கூடும். லாப நட்டம் பகிர்ந்து கொள்ளும் விதமாக இருக்கும்.

    Profit shares – ம் இந்த வகையில் தான் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மாதமும் கூடும் குறையும்.

    ஹலால் (உணவு): கடவுள் பெயர் சொல்லி அறுக்கப்படனும்.

    இது சம்பந்தமாக இஸ்லாமிய நண்பர்கள் யாராவது இருந்தால் தெளிவாக சொல்ல கடமைப்பட்டவர்கள்.

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திருவாளர் தினகரன், நமது வலைத்தளத்தை படிக்கிறாரோ….?

    இந்த இடுகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு பழமொழிகளையும்
    இன்று பேட்டியின்போது சொல்லி இருக்கிறார்…. 🙂 🙂

    // எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வை கலாய்த்த டிடிவி தினகரன்-

    எம்எல்ஏக்களை தக்கவைக்க எடப்பாடி பழனிச்சாமி என்ன வேண்டுமானாலும் செய்வார். கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல ஊதிய உயர்வை கொடுத்துள்ளார் என்றார்……

    அவர் வீட்டு பணமா? யாருடைய பணமோதானே. ‘ஊரான் வீட்டு நெய்யே… எங்க அண்ணன் பொண்டாட்டி கையேன்னு ஒரு பழமொழி இருக்கு… //

    https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-explains-proverbs-mlas-salary-increase/articlecontent-pf287691-308043.html

    -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.