…
…
குஜராத் போலீஸ் கடைசி நாள் ‘ரோடு ஷோ’ பிரச்சாரத்திற்கு திடீரென்று
தடை விதித்ததன் காரணமாகத்தான் “சீ-ப்ளேனில்” வரவேண்டியதாகி
விட்டது என்று சொல்லப்பட்டது.
இது உண்மையா…?
முன்னதாகவே இதற்கு திட்டமிடப்படவில்லையா…?
கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தின்போது இது “சர்ப்ரைஸ்”ஆக
இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே திட்டமிடப்படவில்லையா…?
இதில் திரு.கட்கரிஜியின் பங்கு எதுவும் இல்லையா…?
அப்படியானால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் பேசி, அவர்கள் முன்கூட்டியே தங்கள் ஜப்பானிய காண்டாக்டுகளின் மூலமாக Quest Aircraft தயாரித்த Kodiak 100 “சீ-ப்ளேனை” 3 நாட்கள் முன்னதாகவே சனிக்கிழமையன்று மும்பை அருகே, கடலில் சோதித்துப் பார்த்தது எப்படி ??? …. முற்றிலும் தற்செயலாகவா…?
மும்பை அருகே சனிக்கிழமை கட்கரிஜி நடத்திப்பார்த்த
முன் ஓட்டம்… (trial run) ….
…
…
ஒன்றும் புரியவில்லையா….
அது சுந்தரத்தெலுங்கு- லோக்கல் சேனல் …காமெடி எஃபெக்டுடன்…
இப்போது புரியும் -பாருங்கள்…
(இதற்காக எங்கெல்லாம் தேட வேண்டியதாகி விட்டது….!!! )
…
…
அடுத்து 3 நாட்களில் செவ்வாயன்று, ” அதே ” – “அதே” – “சீ-ப்ளேனில்” தலைவர் குஜராத்தில் நிகழ்த்திய நிஜ ஓட்டம்….!!!
….
……………………..
கொடுத்து வைத்த குஜராத் மக்கள்…!!!
————–
ஒரே ஒரு சந்தேகம்…
இதெல்லாம் தேர்தல் செலவில் வருமா…?
தேர்தல் ஆணையம் கணக்கு வைக்குமா…?
யார் கணக்கில்…???



gandhi kanakkil thaan…. (i mean yours, mine and the rest of our fellow citizen’s account)
பொய்,
ஏமாற்றுதல்,
திருட்டு,
மோசடி –
படாடோபம் – இதிலிருந்து நாம் எப்படி விடுபடப்போகிறோம் ?
புரியாத புதிர்; குஜராத் தேர்தல் முடிவுகள் பதில் சொல்லுமா ?
திரு
கட்கரி மகள் திருமணத்திற்கு 50 விமானங்களில் வி.ஐ.பி.,க்கள்? என்று அனைவரையும் வாயை பிளக்க வைத்த நமது மத்திய அமைச்சருக்கு இதெல்லாம் சும்மா ஜு…ஜு…பி …! கணக்கு ….?
// உணவகங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை! // http://www.minnambalam.com/k/2017/12/13/1513169171 — கிராமத்து மரத்தடி பஞ்சாயத்தா இருந்தா ….. நாமளும் ” நாட்டாண்மை தீர்ப்பை மாத்தி சொல்லு ” என்று கூக்குரல் இடலாம் … ஆனால் இது ‘ பெத்த ‘ இடமாச்சே .. என்ன கூற முடியும் ….? எல்லாம் நம் தலையெழுத்து என்று விட்டத்தை பார்ப்பதை தவிர … !!!
கா.மை. சார்…. உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதற்கெல்லாம் தனிப்பட்ட உழைப்பு தேவை. நிறைய இடுகைகளில் உங்கள் உழைப்பைப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
உங்களுக்கு ஒன்று சொல்லணும்னு நினைக்கிறேன். ஒருத்தரின் செய்கைகளைப் பார்த்து ஆரம்பத்திலிருந்தே சொல்பவர்களைவிட, அப்படி இல்லை, நல்லதுதான் செய்கிறார், என்ன சில பல கட்சிகளைப்போல் மலிவு அரசியலும் செய்கிறார்கள், அதனால் என்ன, என்று நம்பிக்கையோடு இருப்பவர்கள் ஏமாறும் காலம் வந்தால், அவர்கள் கோபம் மிக அதிகமானதாக இருக்கும்.
புதியவன்,
// நிறைய இடுகைகளில் உங்கள் உழைப்பைப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.//
நன்றி.
// உங்களுக்கு ஒன்று சொல்லணும்னு நினைக்கிறேன். ஒருத்தரின் செய்கைகளைப் பார்த்து ஆரம்பத்திலிருந்தே சொல்பவர்களைவிட, ………………… //
மே 2014 பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் நான் எழுதிய இடுகைகளை நீங்கள் பார்த்ததில்லையா…?
அப்போதெல்லாம் மோடிஜியை நானும் வரவேற்றவன் தான்…
பிற்பட்ட காலங்களில் நெகடிவ்வாக எழுத காரணம் நான் இல்லை…அவரே தான்..
அவரது செயல்களே தான்….
என்ன… நான் அவரை சீக்கிரமாக “போலி” என்று புரிந்து கொண்டேன்….
மற்றவர்கள்…..
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
// அரசியல்வாதிகளின் முறைகேடான விமான பயணங்கள் – மக்களை ஏமாற்றுவது எப்படி …? //
Posted on திசெம்பர் 25, 2014 by vimarisanam – kavirimainthan
private planes-1
ஆண்டுகள்தான் உருண்டாேடுகின்றன… சீ ப்ளேன் … முன்னேற்றம்….!!!
இத 1940 லேயே சென்னை ரெட் ஹில்ஸ் நீர் நிலையில் பிரிட்டிஷ்காரன் பயன்படுத்தியதாக் சொல்கிறார்களே.
அப்ப நம்ம தல இத முதன் முதலில் பயனடுத்தல.
ஓ…ஓ… தேர்தல் பிரச்சாரத்திற்கு தலதான் முதல்ல.
ஓ……அப்படியா…..!