…
…

…
முதலில் செவ்வாய்க்கிழமை 12.12.2017 அன்று பாஜகவின் சார்பாக, மோடிஜியின் “ரோட் ஷோ” நடத்த உத்தேசித்திருந்தார்களாம்….. ஆனால்,
(குஜராத்) போலீஸ் அதற்கு அனுமதி மறுத்ததால் (பாவம்..!!!!!!! ??????? )
( வேறு வழியின்றி …??? ) செவ்வாயன்று சீ-ப்ளேனில் பயணிக்கப்
போவதாக, திங்களன்று அஹமதாபாதில் மோடிஜி அறிவிக்கிறார்….
ஆதார செய்தி –
————
Mr. Modi announced at a poll rally here on Monday.
“Our party had planned my road show tomorrow. However, the administration
has not given permission and I had so decided to go to Ambaji in the sea-
plane,” Mr. Modi said.
———————————————————————————
ஆனால், அந்த “சீ-ப்ளேனை” ஓட்டிவந்த கனடா நாட்டைச் சேர்ந்த
பைலட் (விமானி) ஜான் கௌலெட் என்பவர் பத்திரிகையாளர்களிடம்
கூறுகிறார்….
” 4 நாட்களுக்கு முன்னர் (…!!!! …?????) –
நான் பிரதம மந்திரியை சீ-ப்ளேனில் அழைத்துச் செல்ல வேண்டும்
என்று எனக்கு சொல்லப்பட்டது…”
செய்தி ஆதாரம் –
——————-

…
“John Goulet, the pilot of the Quest Kodiak 100 seaplane, said he was told
four days ago that he will be flying the Prime Minister.”
——————————————————————————-
அடடா, இத்தனை செய்தவர்கள், இந்த பைலட்டிற்கு
சொல்லிக் கொடுத்திருக்கக்கூடாதா…? எதைப்பேசலாம்….
எதைப்பேசக்கூடாதென்று…!!! 🙂 🙂 🙂
அவர்பாட்டிற்கு உண்மையை உளறி விட்டாரே – 4 நாட்களுக்கு முன்னரே
ஏற்பாடு செய்து விட்டார்களென்று…!
———————————————————————————



ஐயோ பாவம், அவர் எங்கே போனாலும் என்ன சொன்னாலும் கட்டைய போடுறாங்க. பிளான் பண்ணி பண்ணாலும் பல்ல காட்டுதே. அவருடைய மைன்ட் வாய்ஸ் “இப்போவே கண்ண கட்டுதே, 2019 க்கு என்ன செய்ய ?. (கட்சிகாரர்களை) இவங்களெல்லாம் வச்சிக்கிட்டு என்ன செய்ய ?”
இன்னும் இரண்டாவது செய்தியைப் படிக்கவில்லை. அதற்கு முன்பே, ஏன் பிளேனை உபயோகப்படுத்தி ஒரு பிரதமர் பிரச்சாரம் செய்யவேண்டும் (சாலையில் தடை இருக்கும்போது) என்று தோன்றியது. மோடி அவர்களின் செயல்களும் பிரச்சாரங்களும் ஏமாற்றமளிக்கின்றன.
“ரோட் ஷோ” நடத்த தானே தடை … ! நீர் வழிக்கு ஏது தடை … எங்களுக்கு தெரியாத வழிகளா …?
அட..டா … இது என்ன பிரமாதம் …! // முகேஷ் அம்பானி மகனின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ்- சோசியல் மீடியாவில் வைரல் …. // https://tamil.oneindia.com/news/india/mukesh-ambani-son-s-rs-1-5-lakh-wedding-card-goes-viral-304833.html …. ஒரு வேளை உணவுக்கு அல்லாடுகிற மக்கள் நிறைந்த நாட்டில் … அம்பானி காட்டில் மழை … ?
பிரனீஷ்,
நம்மை போன்றவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் கிடைக்க வாய்ப்பு இல்லை…
நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கவாவது செய்வோமா…?
…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பிரனீஷ் – இதுல தவறு இல்லையே. வெறும்ன கதர் அணிந்து, நடந்து போய், சம்பாதித்த பணத்தை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுக்கணும்னு எல்லோரும் நினைக்கறதில்லையே. அவர்களெல்லாம் என்ன செய்து பணத்தைச் செலவழிப்பது என்று யோசிக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த மாதிரி ஆடம்பர அழைப்பிதழும், அந்த அந்த ஸ்டேடஸ் உள்ளவர்களுக்குத்தான் போய்ச்சேரும். அதில் உள்ள எதையும் அவர்கள் (அழைப்பிதழ் பெறுபவர்கள்) உபயோகப்படுத்தமாட்டார்கள், குப்பைக்கூடைக்குத்தான் போகும். இவங்க திருமணத்திலும், 150 ஐட்டங்கள் உள்ள உணவு வகைகளைப் பறிமாறுவார்கள். கலந்துகொள்பவர்களில் பெரும்பாலும், பெரும்பாலான உணவுவகைகளைச் சுவைத்து மகிழும் உடல் நிலையோ எண்ணமோ இருக்காது. எல்லாம் திரும்பவும் குப்பைக்கூடைக்குத்தான். இதில் கொடுப்பவர்களுக்கும் போலி திருப்தி, வாங்குபவர்களுக்கும் போலி திருப்தி. உண்மையான திருப்தி யாருக்குமே இருக்காது.
ஆனால், மனதளவில் யோசித்தோம் என்றால், ஆடம்பரச் செலவில் ஒரு அர்த்தமும் இல்லை. அதனால் எதுவும் மாறாது, எதுவும் சிறக்காது. நல்ல பசி உள்ளவனுக்கு, மோர் சாதமோ, ரெண்டு ரொட்டிகளோ போதும். எல்லோரின் வயிறும் ஒரே கம்பெனி செய்த பிராடக்ட்தான். உண்மையான சந்தோஷம், அடுத்தவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதில்தான் இருக்கிறது.
என்னே ஒரு முரண். முதல் பத்திக்கும் அடுத்த பத்திக்கும்.
குப்பை தொட்டிக்கு போரது தவறு இல்லையா? அதிக வங்கி கடன் வைத்துக் கொண்டு இந்த ஆடம்பர செலவு செய்வது தவறு இல்லையா?
கதராடை கட்டி நடந்து சென்று ஆடம்பரம் செய்தாலும் தவறு தான். இந்த மாதரி ஆட்கள் செய்தாலும் தறாக தானே இருக்கமுடியும்.
சரியான முறையில் சம்பாரித்திருந்தால் இப்படி செய்ய மனது வருமா என்ன.
கர்நாடக முன்னால் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தன் மகள் திருமணத்திற்கு எல்.சி.டி திரை கொண்ட பத்திரிகையை அடித்தார்.
அதைவிட தன் வீட்டு திருமண பத்திரிகை ஆடம்பரமாக இருக்கவேண்டாமா?
அதில் என்ன தவறு……!
அடுத்து அதானியா இருக்குமோ?
அதில் என்ன தவறு……!
True – unless people who are rich, wealthy spend their money , there will not be any big development with other class of people. Marriage hall decorators, light contractors , photographers, cook, and many other contractors employs ordinary folks – ultimately some one is benefited.
Do you mean to say , the money earned by Ambani is through unlawful means. Though Kejriwal and left might keep saying Ambani , Ambanai – he is a businessman, employs capital , put up plants, take risks, he is big player. In fact NDTV is indirectly owned by him , so as they say. ( and its a Anti BJP TV by any standard ) .
Kamalahassan who speaks so much in tandem with communists , drives a foreign car, wears a expensive watch, am sure he uses a imported perfume, his camera and make up tools are expensive and imported , ( which he need for his professional performance ) . if given a chance , will say few words against this marriage . All are hypocrites.
// Do you mean to say , the money earned by Ambani is through unlawful means. //
சுந்தரராமனுக்கு அடுத்த உத்தமர் அம்பானி தான் என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் அதற்கு முன்னால் உங்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தி அம்பானி சாம்ராஜ்யத்தை பற்றி எழுதிய கட்டுரைகளை எல்லாம் படியுங்கள். The Polyester Prince புத்தகத்தை படியுங்கள். அதற்கு பிறகு
இங்கு வந்து, ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னதெல்லாம் பொய் என்று சத்தியம் செய்துவிட்டு பிறகு எத்தனை அம்பானி ராமாயணம் வேண்டுமானலும் படியுங்கள்.
ஏற்றுக்கொள்கிறோம்.