…
…
நேரில் பார்த்தால், சுஜாதா அவர்கள் அப்படி ஒன்றும் நகைச்சுவை
உணர்வு கொண்டவர் மாதிரி தெரிவதில்லை… கொஞ்சம் சீரியசாகவும்,
ரிசர்வ்டாகவும் தான் தோற்றம் ….
ஆனால் அவரது எழுத்தில் தான் எவ்வளவு கிண்டல் …
எவ்வளவு சீரியசான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்தாலும் கூட,
அவரது நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமே இல்லை பாருங்கள் ….
——————————

…
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு
என் பரிந்துரைகள்…
முடிந்தால் அட்மிட் ஆவதை தவிர்க்கவும்.
அப்படி தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம்
வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட்
ஆகி உள்ளே போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா
என்று பார்த்து விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை
சொன்னால் பெரிய எழுத்தில் ‘வேண்டாம்…!’ என்று சொல்லி விடுங்கள்..
முடிந்தால் அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்…!!!
எல்லா டாக்டர்களும் நல்லவர்கள். திறமைசாலிகள்.
சிக்கல் என்னவென்றால் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும்
அவயவங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட், கிட்னியையே
கவனிப்பார். ஹார்ட், ஹார்ட்டையே. சுவாச நிபுணர் சுவாசத்தையே..!
யாராவது ஒருவர் பொதுவாக பொறுப்பேற்று செய்யாவிடில்
அகப்படுவீர்கள்.
ஒவ்வொரு டாக்டரும் சிற்றரசர்கள் போல குட்டி டாக்டர் புடைசூழ
வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கை அருகே நிற்பார்கள்.
அன்று அதிர்ஷ்ட தினம் எனில் ஏறிட்டு பார்ப்பார்கள். இல்லையேல்
தலைமாட்டில் இருக்கும் சார்ட்(chart) தான்.
“ஹவ் ஆர் யூ ரங்கராஜன் ?” என்று மார்பில் தட்டுவார் சீனியர்.
குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்.
“ஸ்டாப் லேசிக்ஸ்..இன்க்ரீஸ் ட்ரெண்டால்..!” என்று
கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார்.
அடுத்து, அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோமுறையோ.
“யார் லேசிக்சை நிறுத்தியது..?”…இவர்கள் இருவருக்கும்
பொதுவாக வார்ட் சிஸ்டர் எனும் பெரும்பாலும் மலையாளம்
பேசும் அப்பிராணி.
ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம்.
சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்
போது, நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்திருக்க,
கண்ட நேரத்தில் கண்டவர் வந்து கண்ட இடத்தில் குத்தி
ரத்தம் எடுத்து, க்ளுக்கோஸ் கொடுத்து ,
பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து,
ஷகிலா ரேஞ்சுக்கு உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன்
அணிவித்து …
ஆஸ்பத்திரியில் நிகழ்வது போன்ற மரியாதை இழப்பு மந்திரியின்
முன்னிலையில் கூட நிகழாது…!
———————————————————————————
உண்மையில் நான் இங்கு எழுத முற்பட்டது மருத்துவ உலகில்
நிகழும் மோசடிகள், கூட்டுக்கொள்ளைகளைப்பற்றி தான். இதை
கொஞ்சம் சுவாரஸ்யமானதாக்க சுஜாதா அவர்களை துணைக்கு
அழைத்துக்கொண்டேன்.
அண்மமையில் அதிக அளவில் செய்திகள் வெளிவந்தன…
டாக்டர்கள் – ஸ்கேன் செண்டர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு
நோயாளிகளை கொள்ளை அடிப்பது குறித்து.
ரத்தப் பரிசோதனை நிலையங்கள், ஸ்கேன் செண்டர்கள், மருந்து
உற்பத்தியாளர்கள் ஆகியோரும் –
பெரும்பாலான டாக்டர்களும் சேர்ந்து கொண்டு –
இவர்களை நாடும் – கதியற்ற, அப்பாவி நோயாளிகளை ஏமாற்றி
கொள்ளையடிப்பதை அரசாங்கம் நினைத்தால் தடுக்க முடியாதா…?
ஸ்கேன் நிறுவனங்கள், ரத்தப்பரிசோதனை நிலையங்கள் (லேப்…)
அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாதா…?
அத்தனை நிறுவனங்களும், சுகாதார இலாகாவிடம் பதிவு பெற்று தான்
இயங்க வேண்டும் என்றும், அரசே ஒரு நியாயமான விலையை
நிர்ணயித்து, அதனை மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்றும்
உத்திரவுகளை பிறப்பித்து நடைமுறைப்படுத்த முடியாதா…?
மீறும் நிறுவனங்களின் லைசென்ஸை ரத்து செய்ய முடியாதா…?
டாக்டர்களுக்கும் – இத்தகைய நிறுவனங்களுக்கும் உள்ள கள்ளத்தொடர்பை
அறுத்தாலே, பல நோயாளிகள் தேவையே இல்லாமல் ரத்தப்பரிசோதனைகளுக்கும், ஸ்கேன் -களுக்கும் உட்படுத்தப்படுவதை
தடுக்க முடியுமே…
சாராயத்திற்கு விலை நிர்ணயிக்க முடிகிறது…
சினிமா கொட்டகைகளில் டிக்கெட் விலை நிர்ணயிக்க முடிகிறது…
மக்களுக்கு மிகவும் அவசியப்படும் இந்த பரிசோதனை நிலையங்களுக்கு
மட்டும் விலை நிர்ணயிக்க ஏன் முடியவில்லை…? சில விஷயங்களுக்கு
நிர்ணயித்த விலை மீறப்படுவதை ஏன் தடுக்க முடியவில்லை….?
ப்ரைவேட் ப்ராக்டீஸ் செய்யும் எத்தனை டாக்டர்கள் தாங்கள்
பெறும் பணத்திற்கு ரசீது கொடுக்கிறார்கள்…?
டாக்டர்களுக்கும், மருந்து கடைகளுக்கும் –
டாக்டர்களுக்கும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் –
டாக்டர்களுக்கும், ஸ்கேன் செண்டர்/ பரிசோதனைசாலைகளுக்கும் –
உள்ள தொடர்புகளை கண்டுபிடித்து ஒழிக்க, தண்டிக்க – அரசால்
இயலாதா…?
எவ்வளவு நாட்கள் மக்கள் இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்று மாநில / மத்திய அரசுகள் நினைக்கின்றன…?



ரொம்ப நியாயமான ஆதங்கம். ஒரு மருத்துவரிடம் போகும்போது, அவரை நாம் கடவுளாக நினைப்பது, ‘அவருக்கு மட்டும்தான் தெரியும் என்ன செய்து இந்தத் துன்பத்திலிருந்து நம்மை மீட்பது’ என்ற காரணத்தினால்.
அரசு இதெல்லாம் செய்யுமா? இங்கெல்லாம் அரசியல்வாதிகளின் பினாமிகள் இருக்கமாட்டார்கள் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் (வாங்க நாங்க இருக்கோம்-ஞாபகம் வருதா?)
இதைப் போன்றே, வக்கீல்கள் தொழிலும். ஆனால் இங்கு குற்றம் செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே செல்கிறார்கள். ஆனால் நோய் என்பது பெரும்பான்மையானவர்களுக்கு வரக்கூடியது.
மிகுந்த ஆயாசம்தான் ஏற்படுகிறது… அரசை நினைக்கும் போது. ( எல்லா அரசுகளும், பழைய, புதிய… ஒன்றுக்கும் வித்தியாசமில்லை). எனக்கென்ன ஒரு சந்தேகம் என்றால், அரசின், அமைச்சர்களின், அல்லகைகளை விடுங்கள்..ஒரு மாநிலத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதலமைச்சருக்கு மக்களின் சில அடிப்படை தேவைகள், அதற்க்கான வழி முறைகள் தெரியாமலா இருக்கும் ? அவர்களின் சில ஆலோசர்களின் வழிகாட்டுதல் கூட புரியாமலா இருந்திருக்கும் ?
சரி கட்சி நடத்த பணம் வேண்டும், தேர்தலில் ஜெயிக்க பணம் வேண்டும்.. அதற்க்காக இப்படியா ? இவர்கள் என்னதான் நினைத்துக்கொண்டு ஆள்கிறார்கள் ? ஒரு காமன் மேன் கா. மை க்கு புரிவது கூட மெத்த படித்த அதிகாரிகள் சூழ்ந்திருக்கும் முதல்வருக்கு புரியாதா ?
நான் இப்போதெல்லாம் கர்மாவை அதிகம் நம்புகிறேன்.. அது ஒன்றுதான் இவர்களை திருப்பி அடிக்கும். எழுந்திருக்க முடியாதபடி.
ராஜ் – எனக்கு எப்போதுமே வியப்பை அளிக்கும் கேள்வி இதுதான். Just ஒரு விஷயம், எல்லா ஏரி, குளங்களை நல்ல கம்பெனி மூலம் தூர்வாருவது. ஏரிகளுக்கு வேலி போடுவது. இதை 3 வருடங்களில் செய்து, பின்பு செத்துமடிந்தாலும் போதும். 50 ஆண்டுகளுக்கு நம் பெயரை வரலாறு சொல்லும். இதற்காக எல்லா ஊழல் செய்பவர்களையும் பகைத்துக்கொள்ளலாம். இது ஏன் யாருக்குமே தோன்றமாட்டேன் என்கிறது? ஆயிரம் கோடி பணம் என் கணக்கில் இருந்தாலும் நோயுற்றுப் படுத்துவிட்டால் நானும் பிச்சை எடுத்துப் பிழைப்பவனும் ஒன்றுதான். ஒருவேளை அந்த seat மாற்றிவிடுமா? கண்முன்னால் திரிபுரா, மேற்குவங்க முதலமைசஃசர்களைப் பார்த்திருக்கிறோமே. காமராஜரைப் பற்றி எங்கும் படித்திருக்கிறோமே. ஆச்சர்யம்தான் தற்கால so called முதலமைச்சர்கள் செய்வது. ஆர்கே நகர் தேர்தல் பற்றிக் கவலையில்லை. நான் கன்யாகுமரி மீனவர்களின் துயரத்தில் பங்கெடுப்பேன், இரண்டு நாளாவது, என்று சொல்லக்கூட மனதில்லை.
கியூபா ….!
YES PRANEESH !!!
Exactly – எனக்கு தோன்றியதும் இதே தான்.
பலர் க்யூபாவை பல்வேறு காரணங்களுக்காக குறைகூறுவார்கள்…
ஆனால், உலகில் எந்த நாடும் செய்யாத அதிசயத்தை பிடல் செய்து காட்டினார்.
மக்களின் மீது அக்கறை காட்டும் அரசு தான் நமக்கு தேவை..
அது யாருடைய அரசாக இருந்தால் என்ன…?
மக்களைப்பற்றி கவலைப்படாத அரசியல்வாதிகளை
விரட்டி அடிக்க வேண்டும். மக்களுக்கு அந்த விழிப்புணர்வு வர வேண்டும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஐயோ…!
அவர் கம்யூனிஸ்ட். அவரபற்றி எழுதினால் ‘அவங்களுக்கு’ கோபம் வராதா…?
யாராவது பாஞ்சி பிராண்ட போராங்க பாருங்களேன்.
அடித்தளம் வளுவானதாக அமைக்க தவறிய தலைவர்களால் வந்த வினை தான் இவ்வளவு காேளாறுகளும் , தவறுகளும் …. இன்று பக்கத்தில் இருக்கும் சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து உலகமே வாயை பிளக்கிறது என்றால் அதற்கு காரணம் பலமான அடித்தளம் அமைத்த மா .வாே தான் … இதை கூறினாலும்சிலருக்கு கடுப்பு ஏற்படும் … உண்மை அதுதானே …
தற்காத்துக் காெள்வதிலும் , கன்பூசியஸ் தத்துவத்திலும் , புத்த மதத்திலும் ஊறிக்கிடந்த மக்களை … அதிலிருந்து மாற்றி … தன் நாட்டுக்கேற்ப ஒரு ” கம்யூனிசத்தை ” உருவாக்கி உன்னத நிலைக்கு உயர்த்தியவராயிற்றே அவர் … ஒரு நல்ல தலைவனால் தான் மக்களுக்கு நல்லதுசெய்ய முடியும் ..பிடலை பாேல …!!!