அலிபாபா – பயமுறுத்தும் டெக்னாலஜி…!!!


சீனாவில் Huiyang, ( ஹுய்யாங்….??? ) என்கிற இடத்தில்
அமைந்துள்ள, உலகப்புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தின் கோடவுன்
எப்படி ரபோட்’களால் இயங்குகிறது என்பதை வியப்பூட்டும்
விதத்தில் இங்கே காட்டி இருக்கிறார்கள்…

ரபோட்’கள் பிரமாதமாக செயல்படுகின்றன. துல்லியமாக நகர்கின்றன…
ஒரு விதத்தில் இவ்வளவு வேகமாகவும், அழகாகவும் பணி நடப்பது
மகிழ்ச்சியளித்தாலும் –

மனித உழைப்பில் ( human work force ) 70 சதவீதத்தை இது சாப்பிட்டு
விடுகிறது என்று தெரிய வரும்போது “திக்”கென்கிறது.

மனிதரின் வேலைகளை எல்லாம் ரபோட்கள் பிடுங்கிக்கொண்டால்,
பிறகு அத்தனை மனிதர்களும் வேலைக்கு / சாப்பாட்டிற்கு எங்கே
போவார்கள்…? என்ன செய்வார்கள்…?

மனிதர்களின் பிழைப்பிற்கும், வயிற்றுப்பாட்டிற்கும் பாதிப்பு இல்லாத வகையில் டெக்னாலஜி வளரும்போது தான் உண்மையான மகிழ்ச்சி ஏற்படும்……

டெக்னாலஜியின் வளர்ச்சி என்பது, சகலருக்கும் வாழ்க்கைத்தரத்தில் வளர்ச்சியை, ( better standard of living ) உண்டுபண்ணுவதாக
அமைய வேண்டும். அதுவே மனித குலத்திற்கு நல்லது……..

டெக்னாலஜி என்பது, சமூகத்தில் மேலும் வளத்தை சேர்க்க வேண்டும்…
இன்னும் அதிக வேலை வாய்ப்புகளை உண்டுபண்ணுவதாக இருக்க வேண்டும்…….. அல்லவா..?

..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to அலிபாபா – பயமுறுத்தும் டெக்னாலஜி…!!!

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இன்னும் driver இல்லா வாகனங்கள் பயிற்ச்சி ஓட்டத்தில் இருக்கின்றன. அதுவும் புழக்கத்திற்கு வந்துவிட்டால் சொல்லவேண்டியதேயில்லை. எதிர்கால சந்ததியினருக்கு பெரும் நெருக்கடி காத்துக் கொண்டிருக்கு.

  2. R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

    May be or may not be a threat. When the initial cars were replacing carriages pulled by horses, they called them as horseless carriage (https://en.wikipedia.org/wiki/Horseless_carriage).

    Its better we the society and governments are thinking of alternative ways of income for those who are affected. Long term thinking is need of the hour but the question is does the world have such visionary leaders with humility and love.

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    சீனாவில் மட்டுமின்றி உலகமே ” செயற்கை நுண்ணறிவு ” தானியங்கள் உற்பத்தி முறைக்கு மாறுகின்ற ஆபத்து ஏற்பட துவங்கி விட்டது — நம் இந்தியாவும்
    இதன் கரங்களில் அதைப்பற்றி :– // ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி மயத்தால் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புகளில் 5.7 கோடி வேலைவாய்ப்புகள் குறைந்துவிடும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

    இதுகுறித்து மெக்கின்சே குளோபல் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’தானியங்கி மயம் மற்றும் ரோபோடிக்ஸ் போன்றவற்றால் உற்பத்தி அதிகரிப்பு, பணி நேரம் குறைவு, பணியிழப்பு போன்றவை சாதாரணமாக நடைபெறுகிறது. எதிர்காலத்தில் இந்தியா வேளாண் துறையிலிருந்து வெளியேறி, தொழில் மயமாக்கல் பாதையில் செல்வது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தானியங்கி மயமும் அதிகரிக்கும். எனவே 2030ஆம் ஆண்டுக்குள் 5.7 கோடி வேலைவாய்ப்புகளைத் தானியங்கி மயம் மற்றும் ரோபோடிக்ஸ் போன்றவை பறித்துவிடும். // என்று வெளிவந்த செய்தி :– http://www.minnambalam.com/k/2017/12/05/1512457004 ….

    இது மட்டுமில்லாது ” செயற்கை நுண்ணறிவு ” மூலம் தானியங்கி தொழில் நுட்பம் அடுத்த பத்தாண்டுகளில் 38 % வேலைவாய்ப்புகளை காவு வாங்க உள்ளதாக ” பல ஆய்வறிக்கைகள் ” எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துள்ளன …. தற்போதே ஐ.டி . – மருத்துவம் போன்ற துறைகளில் புகுத்தப்பட்டு நிறைய மனித வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன — தொழில் நுட்பம் — பொறியியல் கல்லூரிகள் இந்தியாவில் இந்த ஆண்டே 300 க்கு மேற்பட்டவை பல காரணங்களினால் ஊற்றி மூடிவிட்டார்கள் என்ற செய்தியும் வருகிறது … அடுத்த ஆண்டு மூடு விழா இன்னும் அதிகரிக்கும் — பின்னே வேற வழி ஆட்டோமேஷன் உள்ளே நுழைந்தால் இதுதான் நடக்கும் ….

    // டெக்னாலஜி என்பது, சமூகத்தில் மேலும் வளத்தை சேர்க்க வேண்டும்…
    இன்னும் அதிக வேலை வாய்ப்புகளை உண்டுபண்ணுவதாக இருக்க வேண்டும்…….. அல்லவா..? // இருக்குமா … ? இருக்கவே – இருக்காது … ?

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    Yes, it’s absolutely a threat.

    குதிர வண்டியிலிருந்து மோட்டார் காருக்கு மாறும்போது வண்டிதான் மாறினதேயொழிய மனித வள மேம்பாட்டிற்கு மேலும் அவை உறுதுணையாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதிகமான வேலைவாய்ப்பினை கொண்டுவந்தன.

    இது அப்படியா….?

    இந்த ரொபோட்களும் டிரைவர் இல்லா வாகனுங்களும் பெறுகி ஒரு நாட்டில் உலகளவில் எத்துனை வேலையில்லா திண்டாத்தை உருவாக்கும். இதற்கு எத்துனை நீண்ட அகண்ட விஷன் கொண்ட தலைவர்கள் வந்தாலும் முடியாது.

    இன்று நிலவும் திண்டாத்தை தீர்க்கவே ஒரு விஷனையும் காணோம். அது தெறிந்தால் நம்ம தலைவர் மோடிக்கு எவ்வளவு உதவியா இருக்கும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடி இருக்காது…!

    இதுல அவைகளெல்லாம் வந்தால்…?

    விவசாயத்திற்கு ஏர் உழ கதிரறுக்கன்னு மெஷின்கள் வந்தப்புறம் எத்துனைபேர் வேலையிழந்துள்ளார்கள். ஒரு சிலர் அடையும் வருமானம் தவிர்த்து பெரும்பாலோர் இழந்துள்ளார்களே. என்ன செய்துவிட்டோம். இது ஒரு துறை சார்ந்த இழப்பு நமக்கென்ன வந்தது.

    ஆனால், அவைகள் பெருகினால்…?

    விஷன் உள்ளவர்கள் தெரிவிக்கலாம்.

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    Non Productive Jobs – இதில் ஆட்டமேஷன் புகுவது தவறல்ல. இந்த Warehouseல், பொருட்களை அங்கும் இங்கும் நகர்த்துவதற்கு எத்தனை மனித உழைப்பு தேவை. இவைகள் போய், அந்த இடத்தில், நகரும் வண்டிகள், டிரைவர் என warehouseல் பல வருடங்களுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. ஒரு warehouse எப்படி செயல்படுகிறது என explain பண்ணினால் புரிந்துவிடும். பல Racks, Aisles என்று இருக்கும் இடத்தில், மேல் தட்டில் பொருட்களை ஏற்றி வைப்பது, இறக்குவது போன்றவை பெரும் மனித உழைப்பைக் கோரும் செயல்கள். அதற்காகத்தான் சிறிய இடத்தில் நகரும் வண்டிகள் வந்தன. இப்போது அடுத்த கட்டமாக, தானியங்கி மெஷின் வந்துள்ளது. நான், மூட்டைகளையும், pallots களையும் மனிதர்கள் நகர்த்தும்போது அது எவ்வளவு கடினமான பணி என்று எண்ணியிருக்கிறேன். அதனால் அலிபாபாவின் முழுவதும் தானியங்கிமயமாக்கப்பட்ட warehouse நல்ல முன்னேற்றம். இதனை வரவேற்கணும்.

    இதுபோல, non productive jobs செய்துகொண்டிருந்த வங்கிப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் (இப்போதும் அப்படித்தான். வெறும்ன கணிணியில் எல்லாம் ஏற்றுகிறார்களே தவிர பணியாளர்கள் ஓரளவுக்குத்தான் குறைத்துள்ளனர்) போன்றவர்கள், கணிணிமயமாக்கப்படும்போது முக்கால்வாசி வேலை இழப்பார்கள். அதுவும், அடுத்த தலைமுறை, அனேகமா எல்லோரும் கல்லூரிப் படிப்பு முடிக்கும்போது, நிச்சயம் பல வேலைகள் காணாமல்போயிருக்கும் (இப்போ SBIல், வாங்கன்னு சொல்ல ஒருத்தர், form கொடுக்க இன்னொருத்தர் போன்ற வேலைகளெல்லாம் இனி இருக்கவே இருக்காது). நம்ம ஊர் மாதிரி டிராபிக் போலீஸ் என்ற கூட்டமே மற்ற நாடுகளில் கிடையாது (மந்திரி ஆகாயத்தில் வந்தால் அட்டென்ஷன் போடுவதற்கு). இங்கும் ஆட்கள் குறைப்பு இருக்கும்.

    இன்றைக்கு நம்ம ஊரில் சின்னச் சின்ன சூப்பர் மார்கெட்டில், நிறை பணியாளர்கள் (குறிப்பாக பெண்கள்) வேலைபார்க்கிறார்கள். இதுவும் 40 வருடங்களில் முழுவதுமாக மாறிவிடும். வெளி’நாடுகளிலேயே நிறைய பணியாளர்களை சூப்பர்மார்கெட்டில் பணி அமர்த்துவதில்லை (ஆட்டோமேஷன்)

    நம்ம நாட்டில், விவசாயத்தில் ஆட்டோமேஷன் மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறது. இது மிக மிக அதிகமாக விரிவுபடும். (விரைவில்). இப்படி விரிவுபடுத்த முக்கியத் தேவை, நிலங்கள் அதிகமாகவும், உரிமையாளர்கள் குறைவாகவும் இருக்கவேண்டும் (இல்லைனா, கூட்டுறவு போன்று, ஒரு குழுவிடம், 500 ஏக்கர் நிலம் இருக்கணும்). அப்படி இருக்கும்போது, automation தவிர்க்கமுடியாது.

    இதற்குத்தான் Human Resource என்ற அமைச்சகம் இருக்கு. அவங்கதான் திட்டம்போட்டு, வேலை வாய்ப்பை, அல்லது வேலை கிடைக்கும் படிப்புகளை அதிகமாக்குவது போன்றவற்றைச் செய்யவேண்டும். இப்போ நர்சிங் துறையில் மிக அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இத் துறையில் மலையாளிகள்தான் மிக அதிகம். Retail Sectionல வேலை வாய்ப்பு இருக்கு, ஆனால் இதற்குரிய படிப்பு தமிழ்’நாட்டுல பிரபலமாகவில்லை. கணிணித் துறையில் நிச்சயம் வேலைவாய்ப்பு மிகக் குறையும். அதில் Pyramid அதிகம். (அதாவது மேலே உயருவது கடினம்). அதுவும்தவிர 35 வயது ஆகிவிட்டால், 25 வயதுக்காரர்களைத்தான் prefer செய்வார்கள். 40 வயதில் வாய்ப்புகள் மிகவும் குறையும் (unless the person is brilliant and updates himself constantly). இதுபற்றி நிறையவும் எழுதலாம். இப்போவே அதிகமாகிவிட்டது.

    தமிழ்நாட்டில் வேலை இழந்துவிட்டார்களே – என்று நாம நிச்சயமா கண்ணீர் வடிக்கவேண்டாம். தமிழ்நாட்டில் பெரும்பாலும், வேலை செய்யும் மனோபாவம் (Mid rangeக்குக் குறைவான வேலை-கதிர் அறுப்பது, நாற்று நடுவது, களை எடுப்பது, கடைகளில் வேலை செய்வது, கொத்தனாரின் எடுபிடி, ரோடு போடுவது போன்று பல வேலைகள்) மிகவும் குறைந்துவிட்டது. அவர்களின் வேலைகளை, வட நாட்டிலிருந்து வருகின்றவர் எடுத்துக்கொண்டிருக்கின்றனர் (கடந்த 10 வருடங்களுக்கு மேல்). இதற்கு ஒரு காரணம், டாஸ்மாக்காக இருக்கலாம். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், சென்னையில் எந்தக் கடையிலும் போய்ப் பாருங்கள். (அதுக்கு முதலாளிகள் சொல்லும் காரணம், நம்ம ஆட்கள், சட் சட் என்று லீவு போட்டுடுவாங்க, 8 மணி நேரம்கூட வேலை பார்க்கமாட்டாங்க. வடநாட்டவர்களுக்கான ஏஜென்ட்ஸ், ஒருத்தன் இல்லைனா இன்னொருத்தனை உடனே அனுப்பிடுவாங்க என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில், இரவு ரோந்துக்குத்தான் நேபாளிகள் இருந்தார்கள். இப்போது சரவணபவன் முதற்கொண்டு, பெண்கள் இல்லைனா வடவர்கள் என்று ஆக்கிரமித்துள்ளார்கள்)

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //@அறிவழகு – குதிர வண்டியிலிருந்து மோட்டார் காருக்கு மாறும்போது வண்டிதான் மாறினதேயொழிய மனித வள மேம்பாட்டிற்கு மேலும் அவை உறுதுணையாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதிகமான வேலைவாய்ப்பினை கொண்டுவந்தன.//

    அப்படி இல்லை. ஒவ்வொரு மாற்றமும் வேறுவகையான விளைவுகளைக் கொண்டுவரும். அந்த வெள்ள ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படுபவர்களைப் பற்றி யாருக்கும் நினைவிருக்காது.

    நான் என் சிறிய வயதில் குதிரைவண்டியில் ஸ்டேஷனிலிருந்து வீடு சென்றேன் (பரமக்குடியில்). வாடகைக்கார் வந்தபோது, அவர்கள் அனைவரும் வாழ்வாதாரம் இழந்தனர். தொலைக்காட்சி வந்தபோது, பலவித கலைகளால் நம்மை மகிழ்வித்தவர்கள், வாழ்வாதாரம் இழந்தனர் (பொய்க்கால் நடனம் போன்ற பலர்). தொலைக்காட்சி-கேபிள் ஆபரேடர்கள் என்று நிறையபேருக்கும், தொலைக்காட்சித் தொடர் அது இது என்று பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுத்தது. வாடகைக்கார், அது சம்பந்தமான பலருக்கும், கார் கம்பெனிகளுக்கும், மெக்கானிக்குகளுக்கும் வாழ்வாதாரம் கொடுத்தது. இதுபோல் ஒவ்வொரு மாற்றமும் வேறு செக்டார்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும். அதுக்கு ஏற்றவாறு புதிய தலைமுறை கற்றுக்கொள்ளவேண்டும்.

    As an information, ஒரு கணிணியில் எல்லா வழக்குகள் தொடர்பாகவும் பதிவு செய்து, பயனாளியே, தன் வழக்குகள் சம்பந்தமானவைகளை அதில் எழுதி, அதற்கேற்ற அறிவுரையை கணிணி கொடுக்குமானால், சாதாரண வக்கீல்களுக்கு வேலை இல்லாமல்தான் போகும். இதுபோல் மருத்துவத்திலும் இப்போது ஆராய்ச்சி நடக்கிறது. ரோபோவே மருந்துகளை (சாதாரண வியாதிகளுக்கு) பரிந்துரை செய்யப்போகிறது. இது மருத்துவர்களுக்கும் ஒரு சவால்தான்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நான் விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல… வாழ்க்கையை சுலபமாக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கது தான்…

      ஆனால், அந்த விஞ்ஞான வளர்ச்சி, ஆயிரக்கணக்கான சாதாரண மக்களின் வயிற்றிலடித்து விட்டு தான் வருமென்றால், அத்தகைய வளர்ச்சி நமக்கு தேவையில்லை என்று தான் நான் சொல்கிறேன்.

      காந்திஜி, ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்தை ஏன் வலியுறுத்தினார் என்று யோசித்துப் பாருங்கள்…. அதன் லாஜிக் என்ன…?

      எந்த ஒரு துறையிலும் automation -ஐ கொண்டு வரும் முன்னரே, அதனால் வேலை வாய்ப்பை இழக்கக்கூடியவர்களுக்கு மறு வேலைக்கு உத்திரவாதம் செய்ய வேண்டியது அவசியம்.

      உங்களைப்போன்றவர்கள் வசதியான இடங்களில் அமர்ந்து கொண்டு, மேலும் மேலும் வசதிகள் வருவதைப்பற்றி யோசிக்க முடியும்… வரவேற்க முடியும்.
      ஆனால் சோற்றுக்கே திண்டாடும் பஞ்சப்பரதேசிகள் இன்னமும் இந்த நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் உணர்ந்திருப்பது சமுதாயத்தின் ஒரு புறத்தை மட்டுமே.

      எந்த வேலை கிடைத்தாலும் செய்யத்தயாராக இருந்தும், எந்த வேலையும் கிடைக்காத லட்சக்கணக்கான மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். என்ன – உங்கள் பார்வை அந்த பக்கம் போகவில்லை…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        இல்லை கா.மை. சார். மாற்றம் என்பது மானிடத் தத்துவம். இன்னும் நிறைய ஆட்டோமேஷன் எதிர்பார்க்கலாம். அது நமது வேலையை சுலபமாக்கும்.

        ஆனால், அது பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அச்சுறுத்தல்தான். இதில் நம் எல்லோரின் பங்கும் இருக்கிறது. எந்த விஞ்ஞான வளர்ச்சியும், பழைய முறையைச் சார்ந்திருந்தவர்களின் வயிற்றிலடித்துவிட்டுத்தான் வரும். அடுத்த தலைமுறை அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் (Employable). இது ஒரு தொடர்ச்சியான battle. அப்படி மாறும்போது, தன் சூழ்’நிலையில் இருக்கும் சக மனிதர்களுக்கு உபயோகமாகவும் நடந்துகொள்ள அந்த அந்தப் பகுதி மக்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

        Just to deviate from the topic, நாம நம் சுவையை மேல்’நாட்டு உணவுக்குத் திருப்பும்போது, வட நாட்டு உணவுக்குத் திருப்பும்போது, நாம், நம் பாரம்பர்ய உணவைத் தயார் செய்பவர்களின் வயிற்றில் அடித்துவிட்டுத்தான், அதனைச் செய்கிறோம் என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

        ‘கண்டுபிடிக்காதீர்கள்’ என்று சொல்லமுடியாது. அரசின் Human Resource இதனை மனதில் கொண்டு காலத்துக்கேற்றவாறு மாற்றம் கொண்டுவரவேண்டும்.

        //வேலை வாய்ப்பை இழக்கக்கூடியவர்களுக்கு மறு வேலைக்கு உத்திரவாதம் செய்ய வேண்டியது அவசியம்.// – உங்கள் கருத்தை, ‘ஒழுங்காக வேலை செய்பவர்களை’ நினைத்து ஏற்றுக்கொள்கிறேன். இன்றைக்கு பொதுத்துறை நிறுவனங்களில் உங்கள் திருப்திக்கு ஏற்றவாறு சேவை கிடைக்கிறதா? வங்கிகளில் கிடைக்கிறதா? பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள எல்லா இடங்களிலும் அந்த சேவை கிடைக்கிறதா? ‘ஆம்’ என்பதுதான் எல்லோரின் பதில் என்றால், ‘ஆட்டமேஷனால் வேலை இழக்கக்கூடிய அத்தகையவர்களுக்கு’ நானும் வருத்தப்படுகிறேன், மாற்று ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்று எண்ணுகிறேன். ‘இல்லை’ என்ற பதிலை நாம் சொல்லுவோம் என்றால், அத்தகையவர்களுக்காக நாம் ஏன் கவலைப்படவேண்டும்? Sorry, if this observation is rude.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          புதியவன்,

          // காந்திஜி, ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்தை ஏன் வலியுறுத்தினார் என்று யோசித்துப் பாருங்கள்…. அதன் லாஜிக் என்ன…? //

          இதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே…

          // இன்றைக்கு பொதுத்துறை நிறுவனங்களில் உங்கள் திருப்திக்கு ஏற்றவாறு சேவை கிடைக்கிறதா? வங்கிகளில் கிடைக்கிறதா? //

          ஆக, இந்தியாவின் 125 கோடி மக்களும் இவற்றுள் அடங்கி விட்டார்களா…? மிஞ்சி மிஞ்சி போனால் எவ்வளவு கோடி பேர் இவற்றில் இருப்பார்கள்…?
          உங்கள் தினசரி வாழ்வுடன் சம்பந்தப்படாதவர்களின் நினைப்பே உங்களுக்கு வராதா..?

          // Sorry, if this observation is rude. //

          வருந்தவே வேண்டாம். நான் விவாதங்களை வரவேற்கிறேன். அதுவும் உங்களைப்போன்ற விவரம் தெரிந்தவர்களிடமிருந்து விவாதத்தை அவசியம் வரவேற்பேன்…!!!

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

  7. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    இவ்விடம் அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் படைத்த ” செயற்கை மனிதர்கள் ” குறைந்த வாடகைக்கு கிடைப்பார்கள் … முன் பதிவுகள் வரவேற்க படுகின்றன …. !!!

  8. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    @புதியவன்,

    ஏனய்யா, உங்கள் நீண்ண்ண்ட பின்னூட்டத்தின் வாயிலாக என்ன சொல்லுகிறீர்கள்.

    ‘இந்த மாற்றங்களினால் பாதிப்பு இருக்கும்’.

    அத தானய்யா நாங்களும் சொல்கிறோம்.

    அந்த மாற்றம் வரும் வரப்போகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள்……? அதற்கு என்ன தீர்வு…?

    அத தொடவே இல்ல…. !

    இந்த இடுகையின் நோக்கம் இவ்வளவு விபரம் அல்ல.

    உங்கள் நோக்கம் உங்களை விபரம் தெரிந்தவர் என்று எல்லோரும் அறியனும். அதானே.

    கே.எம் சாரும் பாராட்டிவிட்டார். சந்தோஷம் தானே.

    ஒரு வேண்டுகோள்!

    இந்த வழவழா கொழகொழா இல்லாமல் சுருங்கச்சொல்ல தெரியாதா?

    ரொம்ப ஆயாசமேற்படுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.