இது ராமாயணமா…? என்ன கொடுமை சரவணா …!!!



” ஏசியன் சம்மிட் -2017 “-ல் நேற்றைய விழாவில் உலக நாடுகளின்
பல முக்கிய தலைவர்களின் முன்னிலையில் ராமாயண இசை நடன
நிகழ்ச்சி நடைபெற்றது என்று செய்திகளில் பார்த்தேன்.

பிலிப்பைன்ஸில் நடக்கும் இவ்வளவு பிரபலமான ஒரு நிகழ்வில்
இந்திய பண்பாட்டை பிரதிபலிக்கும் இசைநடன நிகழ்ச்சியா என்று
ஆவலுடன் தேடினேன்…

யூ ட்யூபில் … கிடைத்தது…..!!!

இதை ராமாயணத்தின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய
ஒரு நிகழ்ச்சி – ‘Rama Hari’ based on ‘Maharadia Lawana’
-( which means ‘King Ravana’. ) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நிகழ்ச்சியை பார்த்த பிறகு நமது பிரதமரும் கூட சொல்லி விட்டார் –
” Various parts of the Ramayana were beautifully highlighted
in this Rama hari ….” என்று…..!!!

மோடிஜிக்கு தெரியாத ராமாயணமா…?
ஆனால், அவர்கள் இது தான் ராமாயணம் என்று சாதிக்கும்போது –

பாவம் பிரதமர் வேறு எப்படி சொல்ல முடியும்…?
இருக்கிற தொல்லைகள் எல்லாம் பத்தாது என்று,
பிரதமராக இருப்பதில், இப்படி எல்லாம் வேறு சங்கடங்கள்
இருக்கின்றன பாருங்கள்… 🙂 🙂 🙂

இதை ஒரு அழகான, “பாலே” இசை நடன நிகழ்ச்சி என்று நிச்சயம்
சொல்லலாம்…. ஆனால்,

ராமாயணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தான்
புரியவில்லை….!!! ராமாயணத்தின் எந்தெந்த பகுதிகள் இதில் சித்தரிக்கப்படுகின்றன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்…!

நண்பர்களும் பார்க்க காணொளி கீழே –

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இது ராமாயணமா…? என்ன கொடுமை சரவணா …!!!

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    // மோடிஜிக்கு தெரியாத ராமாயணமா…?
    ஆனால், அவர்கள் இது தான் ராமாயணம் என்று சாதிக்கும்போது –

    பாவம் பிரதமர் வேறு எப்படி சொல்ல முடியும்…?
    இருக்கிற தொல்லைகள் எல்லாம் பத்தாது என்று,
    பிரதமராக இருப்பதில், இப்படி எல்லாம் வேறு சங்கடங்கள்
    இருக்கின்றன பாருங்கள்… 🙂//

    Super Sir. 🙂 🙂

  2. meyyappan's avatar meyyappan சொல்கிறார்:

    This is from the philippine version of Ramayana. (There are variations of Ramayana in the world.) This is an interpretation in Ballet. I am enclosing the link to a video with an introduction by Ms V and with sub-titles that explain the dance:

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      மெய்யப்பன்,

      உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. ராமாயண பாலே நிகழ்ச்சிக்கு அந்த
      சிறுமி கொடுத்திருக்கும் கதைச்சுருக்கமும் அருமை. அந்த சிறுமிக்கு
      என் வாழ்த்துகளை அவசியம் தெரிவிக்கவும்.

      நான் இந்த இடுகையை எழுதுவதற்கு முன்பாக உங்கள் வீடியோவை
      பார்த்திருந்தால் என் இடுகை இப்படி அமைந்திருக்காது.

      நீங்கள் இந்தோனேஷியா / பிலிப்பைன்ஸில் இருக்கிறீர்களா…?
      எப்படி இந்த இடுகையை பார்க்க நேர்ந்தது…?
      உடனே விளக்கமும் கொடுக்க தோன்றியது…?
      தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
      முடிந்தால் பின்னூட்டத்தில் எழுதவும்.
      ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        மெய்யப்பன்,

        உங்களை இந்த வலைத்தளத்தில் இப்போது தான் முதல் தடவையாக
        பார்க்கிறேன். நீங்கள் வழக்கமாக இந்த தளத்தை பார்ப்பவரா…?
        இந்தோனேஷியாவில் உள்ள தமிழர்களைப் பற்றி சில தகவல்களை
        தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நான் விவரமாக அதைப்பற்றி
        கேட்டால், உங்களால் தெரிவிக்க இயலுமா…?

        நன்றி.

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

        • meyyappan's avatar meyyappan சொல்கிறார்:

          I usually don’t write replies to postings but I thought in this case I should say some thing because I knew about different versions of Ramayana in south east Asian countries. A.K. Ramanujan has written about hundreds of different Ramayanas in India and elsewhere. I was looking for an article in the web that I could include in my reply and I found this video which is apt because it has the sub-titles for the dance and the girl’s explanation fs a bonus. I don’t know the girl, she could be Indian. You may have to ask the person who posted the video on YouTube.
          If you like, you could send your appreciation to the girl in the comments part of the YouTube video.
          I don’t live in Philippines or Indonesia so I can’t help you there.
          I have been visiting your site for a while now and I enjoy your postings, especially the non-political ones.

          • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            மெய்யப்பன்,

            உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
            you-tube தளத்தில் என்னுடைய பாராட்டுதல்களை,
            அந்த சிறுமிக்கும், அந்த வீடியோவை உருவாக்கியவர்களுக்கும்
            தெரிவித்திருக்கிறேன்.

            .
            -வாழ்த்துகளுடன்,
            காவிரிமைந்தன்

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    டெல்லி…. புதுவை துணை நிலை ஆளுனர்கள் பாேல தமிழ் நாட்டு ஆளுனரும் நடக்க முனைந்திருப்து … அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதா …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.