” வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசி…… கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் “



தமிழகத்தின் உச்ச விளம்பரமோகி, இன்று வெளியிட்டிருக்கும் ஒரு
ட்விட்டர் செய்தி இது.


இந்த ட்விட்டர் செய்தியின் பின்னால் உள்ள கதை என்ன…?
கதை, வசனம், டைரெக்டர் யார்…? அந்த குழந்தை நடிகர் யார்..?
அதை வீடியோவாக எடுத்து போடப்பட்டதன் பின்னணி என்ன…?
என்கிற விவரங்கள் எல்லாம் யூகிக்கக்கூடியவையே…!!!

நான் இதை சீரியசான விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை…
இந்த இடுகை பூரா பூராவும் காமெடி ….
இன்னொரு சபாஷ் நாயுடு மாதிரி…. அவ்வளவு தான்…!!

நான் சொல்ல வந்தது வேறு விஷயம் – pure entertainment….!!!

இந்த ட்விட்டரில் எழுதப்பட்டிருக்கின்ற “தமிழ்” – என்ன தமிழ்…?
யார் கண்டறிந்த தமிழ்…? இதற்கு பதவுரை, பொழிப்புரை
எழுதி விளக்க யாராவது முன்வருவரா..? அல்லது குறைந்த பட்சம்
அதற்கான ஒரு “ஆப்” (APP )- ஆவது வெளியிடப்படுமா…?

———————————————–

நண்பர்களே, இன்று உங்களை இந்த அளவோடு விட்டு விடுவதில்
எனக்கு திருப்தி இல்லை. ஒரு வழக்குமொழி உண்டு –

சந்தோஷமான விஷயத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால்,
அந்த சந்தோஷம் கூடும், பல்கிப் பெருகும். அந்த சந்தோஷம்
அனைவரையும் தொற்றிக் கொள்ளும்.

ஆனால், துக்கத்தை பகிர்ந்து கொண்டால்,
பகிர்ந்து கொள்பவருக்கு துக்கத்தின் பாரம் பெருமளவு குறையும்..

ஆனால், அந்த துக்கம் யாரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதோ,
அவர்களுக்கு அந்த துக்கம் பெருமளவில் பரவும்…!!!

ஒரு நண்பர் எனக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறார்.
விமரிசனம் தளத்தில் போட முடியுமா என்கிற வேண்டுகோளுடன்…!!!

அனுப்பியவர் பெயர் etc. பற்றிய ரகசியத்தை பாதுகாக்க வேண்டிய
பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனவே, அவர் பற்றிய விவரங்களை
சொல்லாமல், அவர் அனுப்பிய செய்தியை மட்டும் கீழே பகிர்ந்து
கொள்கிறேன்…

யான் பெற்ற இன்பம் / துன்பத்தை – என் வலைத்தளத்து நண்பர்கள்
அனைவரும் பெற வேண்டும் என்கிற பெரும் விருப்பத்தோடு,
கீழே அதனை பதிப்பிக்கிறேன்….!!!

இது இன்பமா இல்லை துன்பமா…. அவஸ்தையா அல்லது ஆனந்தமா..?
என்பது போன்ற கேள்விகளுக்கான விடை – படிப்பவரின் மனநிலையை
பொறுத்தது….!!! என்னைப்பொருத்த வரை … நல்ல காமெடி….
எனக்கு, கிரேசி மோகன் டிராமா எதையோ, படிப்பது போல் இருந்தது…!!!

இனி உங்களுக்கான அந்த அனுபவ அன்பளிப்பு –

————————————————-

எச்சரிக்கை : சட்டை, பனியன் இரண்டையும் கழற்றி வைத்துவிட்டுப்
படிக்கவும்.

புதிய அரசியல்வாதியை பேட்டி காண பத்திரிகையாளர்கள்
வந்திருக்கிறார்கள்.

“எதற்காக எங்களை அழைத்தீர்கள்?” என்று நிருபர்கள் கேட்கிறார்கள்.

அதற்கு கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட
அடித்தொண்டையில் “நான் அழைத்தேன் என்பதை விட நீங்கள்
வந்திருக்கிறீர்கள் என்பதுதானே நிஜம்?”

நிருபர்கள் குழம்பிப் போகிறார்கள்.

“அப்படியானால் நீங்கள் யாரையும் அழைக்கவில்லையா?”

“அழைத்தேன் என்பதை விட அழைக்கச் சொல்லிச் சொல்லப்பட்டவர்
தன் பணியைச் செவ்வனே செய்ததன் அடையாளமாய்த்தானே
அழைக்கப்பட்டவர்கள் தவறாது வந்திருக்கும் நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது?
வருபவனும் அழைப்பின் ஒரு அங்கம்தானே?”

”என்னங்க இது ஆதி சங்கரர் மாதிரி பேசறீங்க?”

“நான் சொல்வதைத்தான் ஆதி சங்கரரும் சொல்லியிருக்கிறார் என்று
நீங்கள் நினைப்பதைச் சொல்லாக வெளியிடும் போது ஆதிசங்கரரும்
நானும் சர்வ சமம் என்பதால் எதற்கு எதை சமன்படுத்துவது என்பதில்
வேறுபாடுகள் இன்றி….”

“விட்ருங்க சார் வயித்தைக் கலக்குது. நீங்க ஏன் இப்ப அரசியல்ல
குதிக்கறீங்க?”

“உப்பு சத்தியாக்கிரஹத்துக்கு ஆதரவாக நான் குரல் எழுப்பிய போதே
என் அரசியல் பணிகள் தொடங்கிவிட்டன”

“அப்ப நீங்க பிறக்கவே இல்லை சார்?”

“பிறப்புரிமை பற்றிப் பேசுவது உப்பு சத்தியாக்கிரஹம். பிறந்த பிறகு
வருவதா பிறப்புரிமை? உரிமை இருப்பதால்தானே பிறக்கிறோம்?
அப்படியானால் பிறப்புரிமை பிறப்புக்கு முன் வருவதுதானே?”

“பிறக்கிறதுக்கு முன்னேயே ஆதரிச்சிட்டீங்களா?”

“என் பிறப்பு ஆதரிக்கப்பட்டதால் நிகழ்ந்தது. என் தாயை என் தந்தை
ஆதரித்ததால் நிகழ்ந்தது. என் தாய் திருமணத்தை ஆதரித்ததால்
நிகழ்ந்தது. அவர்கள் இருவரையும் அவர்கள் பெற்றோர் ……”

“மன்னிச்சிடுங்க சாமி. ஆதியிலேர்ந்தே அரசியல்ல இருக்கீங்கன்னு
ஒத்துக்கிடறோம். கருப்பு சட்டை போட்டிருக்கீங்களே நீங்க திராவிடக்
கட்சிக்கு ஆதரவா?”

“கருப்பில் திராவிடம், ஆரியம், ஆத்திகம், நாத்திகம்
எல்லாம் இருக்கிறது”

“என் நிறம் காவியல்லன்னு சொன்னீங்களே?”

“காவியும் கருப்புக்குள் இருக்கிறது. பச்சை, ஊதா, மஞ்சள் எல்லாமும்
இருக்கிறது”

“நிறங்கள் எல்லாத்தையும் கலந்தா வெள்ளைதாங்க வரும், கருப்பு
இல்லை”

“கருப்பு என்றால் என்ன? இருட்டு. இருட்டில் எல்லா நிறமும் கருப்பாய்த்
தெரிவது இயற்கையல்லவா என்பதை செயற்கையாக சத்தமாகச்
சொல்ல வேண்டிய இழிநிலைக்கு எதிராகக் குரல் கொடுக்க
மக்களுக்காக முதல்வராகத் தயார்”

“அதுக்கு முதல்வர் பதவி எதுக்குங்க? சும்மாவே குரல் கொடுக்கலாமே?”

“நான் ஆங்கிலத்தில் சொன்னதைத் திரித்துக் கூறும் ஊடகக்காரர்களின்
குறும்பினால் பதவி என்று நான் சொல்லாத வார்த்தை சேர்ந்து
கொண்டது என்று சொல்ல விழைகிற போது நான் ஊடகத்தின்
எதிரியாகச் சித்தரிக்கப்படும் அபாயங்கள் தெரிந்தே நான் …..”

“ஐயோ ராமா! முதல்வர்ங்கிறது பதவி இல்லையா?”

“முதல்வர் என்பது பதவியல்ல. பதவிக்கு முதல்வர் என்று பெயர்”

“என்ன இழவு வித்யாசங்க?”

“கல்லூரி முதல்வர், கட்சிமுதல்வர், ஆட்சி முதல்வரெல்லாம் பதவியின்
பெயர்கள். ஓட்டப் பந்தய முதல்வர் என்பது பதவியின் பெயரா? நடிப்பில்
முதல்வர் என்றால் பதவியின் பெயரா? அவையெல்லாம் பெயரின்
பதவிகள். ஆகவே முதல்வர் என்பது…”

டர்ர்ர்ர்ர்ரென்று சப்தம்.

கேள்வி கேட்ட நிருபர் சட்டையைக் கிழித்துக் கொள்கிறார்.

அவரிடம் போய் இன்னொரு நிருபர் “ஏன் சட்டையைக் கிழிச்சிகிட்டீங்க?”
என்கிறார்.

“சட்டையை நான் கிழித்தேனா அல்லது சட்டை என்னால்
கிழிக்கப்பட்டதா என்பதையெல்லாம் யோசிப்பதற்கு பதில் சட்டை
கிழிந்திருக்கிறது என்பதுதானே நிஜம்? கிழிந்த சட்டைகள் தைக்கப்பட
வேண்டும். தைக்கிறவனெல்லாம் தையற்காரனல்ல. சமூகத்
தையற்காரர்கள் கிழிந்த சமூகத்தை ….”

இப்போது நூற்றுக் கணக்கான சட்டைகள் கிழியும்.. சாரி கிழிக்கப்படும்
… சாரி கிழிந்த சட்டை….சப்தங்கள்

( நான் இதை வெறும் வேஷ்டி மாத்திரம் கட்டிக் கொண்டு பனியனோ
சட்டையோ இல்லாமல்தான் எழுதினேன்… படிப்பவர்களின் நன்மையை கருதித்தான் அவர்களுக்கும் துவக்கத்திலேயே வார்னிங் கொடுத்து விட்டேன்… )

———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to ” வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசி…… கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் “

  1. arul's avatar arul சொல்கிறார்:

    காவேரி மைந்தன் சார் ..இதில் இவர் அரசியல் வியாதி ஆனதில் இருந்து ரஜினி பத்தி பேசாமல் இருப்பதில்லை ..ரஜினி சிவாஜி மணிவிழாவில் பேசிய கருத்துக்கு பிறகு கொஞ்சம் அவர் பத்தி பேசுவதை குறைத்து கொண்டார் ..ஆனால் மீடியா அவரிடம் ரஜினி பத்தி கேட்காமல் விடுவதில்லை ..மேலும் இவருக்கு மீடியா மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதோ திட்டமிட்டே என்று நினைக்க தோன்றுகிறது ..இப்போ அரசியல் வியாதி ஆனதில் ஒரு மாற்றம் என்னவென்றால் திரு ரஜினி பத்மபூஷன், பத்ம விபூஷண் ..மற்றும் எந்திரன் போன்ற படங்களில் நடித்த பொழுது பாராட்டதவர் இப்பொழுது நந்தி விருதுக்கு திரு ரஜினியை “சூப்பர் ஸ்டார்” என்று கூறி பாராட்டு பாத்திரம் வாசித்திருக்கிறார் ..எல்லாம் அரசியல் செய்யும் வேலை ..என்னத்த செய்ய ..மாத்தி மாத்தி பேசி கோமாளியாகி விட்டார் ஆனால் உண்மையில் இவர் ஒரு நம்பக தன்மை இல்லாத பழி வாங்கும் எண்ணம் உடைய ..பக்க சுயநலவாதி ..

  2. Sundar Raman's avatar Sundar Raman சொல்கிறார்:

    i have enjoyed this beyond words ….

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    நிருபராவது அவராக கிழித்துக் காெண்டார் … ஆனால் இதுவே தாெடர்ந்தால் … தானாகவே கிழியுமா .. இல்ல கிழிக்கப்படுமா … கிழிந்தால்
    தைக்க முடியுமா .. தைக்காமலே தானே தைத்துக் காெள்ளுமா ..தைக்கத்தான்
    வேண்டுமா … கிழிசல்…தையல்… கிழிசல்…தையல்….. ஹி…ஹி….ஹீ… கிழிந்து …தைத்தது …அஹக்கா..அஹக்கா….?

  4. avudaiappannav's avatar avudaiappannav சொல்கிறார்:

    very good ..i enjoy much …thanks

  5. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    எங்களை பார்த்தா பாவமா இல்லையா சார். இதற்காக தான் அவர் ட்விட்டருக்கே போவதில்லை. எல்லாத்திற்கும் சேர்த்து வட்டியும் முதலுமா… நாங்களெல்லாம் பாவம்….அழுதுடுவோம்.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      ஆனால், அவர் வெளியிட்ட அந்த வீடியோ… எவ்வளவு வன்மத்துடன் பிஞ்சிலேயே கொலையை கற்பித்து குரோதத்துடன் வளர்க்கப்படுகின்ற குழந்தைகள்… நாளை இவர்கள் என்னவாகி நிற்பார்கள்.

      இவர்கள் தான் இந்த அமைப்புகளின் உருப்பினர்கள் என்றால்…ஏற்கனவே இருப்பவர்களும் இந்த குழந்தைகள் போல் வார்த்தெடுக்கப் பட்டவர்கள் என்றால்…இவர்கள் தேசியவாதிகள்?

      இந்தியாவில் இன்றும் என்றும் இவர்கள் நடத்தும் வன்முறைகளும் கொலைகளும் அதன் போது செய்யும் கொள்ளைகளும்….

      இந்தியா படுபயங்கரமான‌ எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளது.

      • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

        அறிவழகு

        அந்த வீடியோவை நிஜமென்று நம்புகிறீர்களே.
        சும்மா பப்ளிசிடிக்காக இவர்களே தயாரித்திருக்கிறார்கள்.

        • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

          அப்படியா…? இவ்வளவு தில்லுமுல்லா…!

          அப்ப தமிழகம்…?

        • புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

          இந்த வீடியோவை இவர்களே தயாரித்து என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்கள் ?

          இது தயாரிக்கப்பட்டது என்றாலும், இது மாதிரி பயிற்சிகள் கொடுக்க படுகிறது என்பது உண்மையே.

  6. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    நீங்கள் செலக்ட் செய்து போட்டிருக்கிற புகைப்படங்கள் சூப்பர்.
    மிகப்பொருத்தமாக இருக்கிறது.

  7. சிவா's avatar சிவா சொல்கிறார்:

    இந்த செய்தி(?)யை பேஸ்புக்கில் எழுதியவர் இதயம் பேத்துகிறது வலைதளத்தின் ஓனரான திரு. கே.ஜி. ஜவஹர் அவர்கள். பல பேர் எழுத்தளர் பெயரை விட்டு பர்வேர்டு பண்ணி பண்ணி, எழுதியவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உங்கள் தகவலுக்கு நன்றி சிவா.

      எனக்கு இதை அனுப்பியவர், தான் எழுதியது இல்லையென்றும் யார் எழுதினார்
      என்பது தெரியாதென்றும் எழுதி இருந்தார்…

      இதை எழுதியது திரு.கே.ஜி.ஜவஹர் தான் என்று தெரிந்திருந்தால் –
      இடுகையில் அப்போதே அதை குறிப்பிட்டு எழுதி இருப்பேன்.

      திரு.கே.ஜி.ஜவஹர் அவர்களுக்கு நமது நன்றியும், பாராட்டுகளும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  8. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // எகிப்து – சூடான் இடையே, 800 சதுர மைல் இடத்துக்குத் தன்னை அரசனாக அறிவித்த இந்தியர்! // https://www.vikatan.com/news/india/107845-an-indian-declared-as-king-for-an-unclaimed-area-between-egypt-and-sudan.html …. இதுவும் ” ஒரு வினோதம் ” தானே …!

  9. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கமலஹாசன் ட்விட்டர்லாம் பார்க்கறதேயில்லை.

    ஒருத்தர் எழுதும்போது, தனக்காவது புரியணும்னு நினைச்சுக்கிட்டு எழுதமாட்டாரா? கொஞ்சம் விசிலடிச்சான் குஞ்சுகள் தன் எதிரில் இருந்து ‘ஆஹா ஓஹோ’ என்று சொன்னால், தமிழகமே தன் பக்கம்தான் என்று நினைத்துக்கொள்கிறாரே. பாவம் கமலஹாசன். (அவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை… நடிப்பில் உள்ள நல்ல பெயரை நிச்சயம் கெடுத்துக்கொள்ளப் போகிறார்).

    அவருடைய அண்ணன் சாருஹாசன், சரியாக கணித்திருக்கிறார், கமலஹாசனுக்கு வாக்குகள் விழாது என்று.

    ‘சட்டை பனியன்…’ – இதைப் படித்தபோது துக்ளக் சத்யா எழுதியிருப்பாரோ என்று நினைத்தேன். கேஜி ஜவர்லால் அட்டஹாசமா எழுதியிருக்கிறார்.

  10. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    இது நிஜமான பேட்டி இல்லை…திரு.கே.ஜி.அவர்களின் சடையர்.கண்களில் கண்ணீர் வர ரசித்தேன் .நன்றி!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.