2,20,000 – நன்றிகள் !!
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2011 முடிந்து, 2012 துவங்கும் இன்றைய
தினத்தில்,
இன்றில்லா விட்டாலும்,
நாளையாவது மாறும் அல்லவா –
என்கிற நம்பிக்கையுடன் தொடர்ந்து மாறுதல்
வேண்டி நடை போடுவோம்.
விமரிசனம் வலைத்தளத்தில் கடந்த 2011 ஆம்
ஆண்டு மொத்தம் இரண்டு லட்சத்து இருபதாயிரம்
வருகைகள் ( 2,20,000 ) பதிவு செய்யப்பட்டுள்ளன !
வருகை புரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த வலைத்தளத்திற்கு கிடைக்கும் இந்த
அன்பான,கணிசமான எண்ணிக்கையிலான வரவேற்பு
என்னை மேலும் பொறுப்புள்ளவனாக்குகிறது.
முக்கியமாக, மறுமொழிகள் அதிகரித்துள்ளன.
ஒவ்வொரு இடுகையின் மீதும்
வாசக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை நல்ல
முறையில், நாகரீகமாக தெரிவிக்கிறார்கள்.
நல்ல ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்த
வலைத்தளம் பாலமாக அமைவது மகிழ்ச்சிக்குறியது.
தொடர்ந்து வருகை தாருங்கள் –
நல்லதொரு சமுதாயம் உருவாக
சேர்ந்து பணி புரிவோம்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்




உங்கள் எழுத்துக்கு தீவிர வாசகன். எங்கள் வாழ்த்துகள்.
LET US MOVE FORWARD THIS YEAR WITH YOU.
MATHI
உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
௨
(மீள்பதிவு)
காவிரி மைந்தன்,rishi,yatrigan,balahanuman உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அடுத்த ஐந்து மணிநேரமும் அதைத்தொடரும் 365 நாட்களும்,அதைத்தொடரும் பல்லாண்டுகளும் நீங்கள்
மனமகிழ்ச்சியும்,அமைதியும்,ஆரோக்கியமும் நிறைந்து வாழவும்,மற்றும் நேர்மை, எளிமை, திறமை, மிக்க ஒரு இளைய தலைவர் இந்தியாவை நல்வழிபடுத்த அருளுமாறு இறைவனைப்பிரார்த்திக்கிறேன்!
(புதியபதிவு)
விமரிசனம் வலைத்தளம் 2012 ஆம்
ஆண்டு மொத்தம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்
கோடி வருகைகள் ( 1760000000000) பதிவு செய்யப்பட என் வாழ்த்துக்கள் !
சில நாட்களுக்கு முன் கஜானா காலியாகிவிட்டது என்று கூறி பால் விலையிலிருந்து பேருந்து கட்டணம் வரை ஏற்றிய “தமிழக” அரசு,
ஆங்கில புத்தாண்டு தினத்தில் அரசு அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இது எப்படி சாத்தியம்?
ஏன் எந்த பத்திரிக்கை/தொலைக்காட்சியும் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை?
அரசு அலுவலர்கள் எத்தனை சதவிகிதம் உள்ளனர்?
இன்றைய அரசு “நெட்வர்க் மார்க்கெட்டிங் கம்பனி”களைவிட மிக கேவலமாக அல்லவா நடந்துக்கொள்கின்றன!
@சைதை அஜீஸ்
அருமையான கேள்வி !
வரும் துக்ளக் ஆண்டு விழாவில்
அரசின் கொ.ப.செ, சோ வை
இந்த கேள்வி கேட்கலாம்!
முந்தய அரசிற்கும் இன்றைய அரசிற்கும்,
ஒரே ஒற்றுமை:
இரண்டும் மக்கள் விரோத அரசு
ஒரே வேற்றுமை:
முந்தய அரசை கேள்வி கேட்டால் பதில் வராது
இன்றைய அரசை கேள்வி கேட்டால் ஆட்டோ வரும்!
வாழ்த்துகள் காவிரி மைந்தன்.
தொடரட்டும் உங்கள் சேவை
புது தின வாழ்த்துக்களுடன்…
அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து சந்திப்போம் !
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
அன்பரே..
ஒரே தோற்றம் கொண்ட ஏழு நபர்கள் இருப்பதாய் அறிகிறோம். புனைப் பெயரிலும்கூட அதே பெயரில் இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்பதை இப்போதே அறிகிறேன். தங்களைப் பற்றி விவரங்கள் அறியக் காத்திருக்கிறேன்.
காவிரிமைந்தன் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், பம்மல், சென்னை 600 075 kmaindhan@gmail.com
வருக நண்பரே!
கிட்டத்தட்ட கடந்த இரண்டரை வருடங்களாக
இந்தப் பெயரில், இந்த வலைத்தளத்தில்
எழுதி வருகிறேன்.
இதே பெயரில் இன்னும் ஒருவர் இருப்பது குறித்து
அண்மையில் நண்பர் பொன்ராஜ் மதியழகன்
மூலம் அறிய நேர்ந்தது.
இப்போது நீங்கள் …..
என்னைப் பற்றிய விவரங்கள்
வலைத்தளத்தில் about ஐ க்ளிக்கினால் கிடைக்கும் !
உங்கள் வருகைக்கும், தொடர்புக்கும் நன்றி.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்