Category Archives: தமிழ்

சல்மான் கான் – வருத்தம் தரும் சில கேள்விகள் …..

This gallery contains 1 photo.

. சல்மான் கான் வழக்கு முடிவு – ஓரளவு விவரங்கள் அநேகமாக எல்லாருக்கும் தெரியும். எனவே சுருக்கமாக – 2002 செப்டம்பர் 28-ந்தேதி நள்ளிரவு / விடியற்காலை, மதுவிருந்து ஒன்றில் கலந்துகொண்டு விட்டு, தனது ஆடம்பர காரில் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார். ‘ஹில்’ சாலையில் வரும்போது கார் தறிகெட்டு தாறுமாறாக ஓடுகிறது. சாலையை விட்டு, இடது புறம் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

சின்ன மருத்துவர் அய்யா மீது என்ன வழக்கு …..?

This gallery contains 1 photo.

வழக்கு இருக்கிறது …. வழக்கு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, என்ன ஏது என்று விவரமாக இதைப்பற்றிய விஷயங்கள் தமிழ் செய்தித்தாள்களில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. “வருங்கால முதல்வர்” வேட்பாளராக அவரும் இருப்பதால், விமரிசனம் தள நண்பர்களுக்காக அந்த வழக்கு பற்றிய விவரங்களை கொஞ்சம் சேகரித்தேன்….. விவரங்கள் கீழே – அவர் மத்திய சுகாதார அமைச்சராக … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

டாக்டர் அன்புமணியின் சூப்பர் சிக்ஸர் ….!!!

This gallery contains 1 photo.

கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை…. டாக்டர் அன்புமணி இவ்வளவு அருமையாக ஆடுவாரென்று….!!! ஸ்டாலின் ஆடியது அழுகுணி ஆட்டம். பாவம் ஓபிஎஸ்….. “விசுவாசம்” என்கிற கயிற்றால் தன்னைத்தானே கட்டிக்கொண்டு, பதிலுக்கு எதுவும் செய்ய முடியாமல் மௌனமாக, நிராயுதபாணியாக – தன்னந்தனியே நிற்கும் அவரை, துரத்தி துரத்தி வசைமாறி வார்த்தைகளால் அடித்து துன்புறுத்தினார் ஸ்டாலின். சற்றும் எதிர்பார்க்காத விதமாக, பார்வையாளராக … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

குஜராத்தின் “சீப் ” மினிஸ்டர் – மறைக்கப்பட்ட உண்மைகள் – CAG அறிக்கை வெளிப்படுத்துகிறது …..!!!

This gallery contains 1 photo.

“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது ” – இவை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் இறவா – மறவா வரிகள்…. அதை சற்றே மாற்றி ” திட்டம் போட்டு மறைக்கிற கூட்டம் மறைத்துக் கொண்டே இருக்குது ” என்று போட்டால் இந்த இடுகைக்கு பொருத்தமாக இருக்கும். “கெட்டிக்காரன் பொய்யும் புளுகும் …….. நாளைக்கு “ … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மோடிஜியின் – ” விவசாய நிலத்தை பிடுங்கும் ” திட்டம் …….

This gallery contains 3 photos.

மக்களிடையே தோன்றியிருக்கும் கடும் எதிர்ப்பு காரணமாக மோடிஜியின் “விவசாய நிலங்களைப் பிடுங்கும் ” திட்டத்தைப் பற்றி தமிழக பாஜக தலைவர்கள் பேச பயந்து கொண்டிருந்தார்கள். மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி – தமிழக மக்களிடம் விவரமாக எடுத்துச் செல்லாததற்காக – சென்ற வாரம் மோடிஜி, தமிழக பாஜக தலைவரை டில்லிக்கு அழைத்து “டோஸ்” விட்டிருக்கிறார். உடனே … Continue reading

More Galleries | 34 பின்னூட்டங்கள்

மோடிஜி ஆட்சியில் ஒரு நல்ல திட்டம் …… ஆனால் ….?

This gallery contains 1 photo.

அண்மையில் மத்திய தரை மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சர் திரு நிதின் கட்காரி அண்மையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சில விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல புதிய நீர்வழித்தடங்களை உருவாக்குவதில் மத்திய அரசு முனைந்துள்ளது. ஏற்கெனவே 5 நீர்வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றிற்கான வேலைகள் துவங்கி விட்டன. ( இதில் -கங்கை, … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

காவல் துறையில் ஒரு நல்ல நிகழ்வு …….

This gallery contains 2 photos.

. திருச்சி வந்திருக்கிறேன். ஒரு நல்ல தகவல் கிடைத்தது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படும் வளர்ச்சிகளை பொதுமக்கள் நலன் சார்ந்த அரசுத்துறைகளில் சரியாகப் பயன்படுத்தினால், எந்த அளவிற்கு அது மக்களுக்கு உபயோகமாக இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு – ” ஹல்லோ திருச்சி போலீஸ் ” திட்டம். திருச்சி காவல் துறை – “ஹல்லோ திருச்சி போலீஸ்” … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்