ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????

……………………………..

………………………………………………………………………………………………………………………………………

ஒரு நாள் உங்கள் உடல் கெட்டுப் போய்விடும்.

ஒரு நாள் நீங்கள் இறந்து போவீர்கள்.

ஆனால் அந்த நேரத்தில் தியானம்/தவம் செய்ய நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் நமது கைநழுவி போய் விட்டிருக்கும்.

ஆனால் இப்போதோ நமது உடல்

இங்கேயே இருக்கிறது.

நாமும் இன்னும் சுவாசித்து

கொண்டுதான் இருக்கிறோம்.

ஆகவே இப்பவே இறந்து போகலாம்.

நாம் உயிரோடு இருக்கும் போதே இறப்பது என்பது ஒரு மிக புதிய அனுபவம்.

இது தைரியமிக்கவர்களுக்கு ஒரு சோதனையாகவும் ஒரு பயிற்சியாகவும் ஒரு நல்ல அனுபவமாகவும் இருக்கும்.

தினமும் நாம் இறந்து போகலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை இறப்பதற்காக ஒதுக்கி வைக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 23 மணி நேரம் வாழ்வது என்பதே போதுமானது.

ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் வெறுமனே நாம் இறப்பிற்கும் ஆழமாக போக வேண்டும்.

நமது உடல் உயிரற்று நாம் இறந்து போய்விட்டது போல் அங்கே கிடக்கலாம்

அதை நாம் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.

வெறுமனே ஒரு சாட்சியாக நாம் இருக்க வேண்டும்.

அப்போது என்ன நடந்தாலும் சரி

நாம் செயல் புரிபவராக இருக்கக் கூடாது.

இப்படி இருந்தால் நமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும்.

முதல் நாள் நமக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கும்.

ஏதோ ஒன்று எப்போதுமே நம்முடைய உடம்பில் நடப்பது போலவே இருக்கும்.

நம்முடைய கால்களில் குளிர் அடிப்பது போல் உணர்வோம்.

நமது வயிற்றில் வலி ஏற்படலாம்

அல்லது நமது உடலின் ஏதோ ஒரு பகுதியில் எறும்பு ஊர்வது போல தோன்றும்.

ஆனால் நாம் அந்த எறும்பை தேடினால் அங்கு அது இருக்காது.

நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஏனென்றால் அவை அனைத்தும்

நம்முடைய கற்பனையே!

மனம் நம்மிடம் காட்டிய வித்தைகளே!

மனமானது ஆயிரத்தோர்

காரணங்களை கொடுக்கும்.

நீங்கள் எழுந்து உங்களுடைய

வேலைகளைப் பார்க்கத் தூண்டும்.

ஆனாலும் நீங்கள் ஒவ்வொரு நாளும்

ஒரு மணி நேரம் இறந்து போங்கள்.

போகப் போக உங்களுக்கு மனதின் தந்திரங்கள் புரிந்துவிடும்.

பிறகு அது உங்களை எழுந்து ஓடி, ஆட, வேலையில் மூழ்கிப் போக நெருக்கும் போது நீங்கள் அதனிடம் “நான் ஏற்கனவே இறந்து விட்டேன்.

நான் இப்போது என்ன செய்ய முடியும்?” என்று சொல்வீர்கள்.

பல நாட்கள் இதை பயிற்சி செய்துவந்தால், போகப் போக உங்களுடைய சுவாசத்தின் வேகம் குறைந்து கொண்டே போவதை நீங்கள் உணர்வீர்கள்.

நீங்கள் இந்த பயிற்சியை அதிகமாக மேற்கொள்ள, மேற்கொள்ள உங்களுடைய சுவாசம் வலுவிழந்து மேலும் வலுவிழந்து போகும்.

அப்போது ஒரு தருணம் வரும்.

உங்கள் சுவாசம் திடீரென முற்றிலுமாக நின்று போய் ஒரு பிணத்தைப் போல

உங்கள் உடல் அங்கே கிடக்கும்.

அந்த தருணத்தில் முதல் முறையாக உங்களுக்கு நீங்கள் உங்கள் உடலில்

இருந்து தனித்து இருப்பது தெரியவரும்.

“அமுது” என்றால் என்ன என்பதை அத்தருணத்தில் உணர்வீர்கள். .

ஞானப் பாதையின் சாராம்சம் இதுவாகவே, இதுவாக மட்டுமே இருக்க முடியும்.

அழியக்கூடியதையும் அழிவற்றதையும் தனித்தனியாக பிரித்து பார்க்க கூடிய தன்மையை அடைவதும் –

நாம்” என்றால் என்ன…?

நம்முடைய உடல் என்றால் என்ன…?

என்பதை தெரிந்து கொள்வதும்தான்.

பிறகு, நீங்கள் மற்றவர்களை போல வாழ மாட்டீர்கள்.

உங்களுடைய வாழ்க்கையானது ஒரு உன்னதமான நிலையை அடைந்து விட்டிருக்கும்.

நீங்கள் உள்ளே உயிர்ப்பு தன்மையுடனும், வெளியே ஒரு பிணத்தை போலவும் காணப்படுவீர்கள்.

இதுதான் உண்மையான ‘ சமாதி’ நிலை.

இப்போது நீங்கள் எதற்கும் பயப்பட மாட்டீர்கள்.

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக