……………………………………….

………………………………………
தமிழக மக்களின் அவல நிலையை, அதிருப்தியைப்பற்றி, ஒரு நாள் கூட விவாதிக்காமல்,
திமுக ஆட்சியில் ஐந்து வருடமாக நடந்த தவறுகளை, – லஞ்ச ஊழல்களை சுட்டிக்காட்டாமல் –
மக்களுக்கு விசுவாசமாக இல்லாமல் –
ஊடக தர்மத்தை புறந்தள்ளி விட்டு,
முழுக்க முழுக்க ஆளும் கட்சிக்கே ஜால்ரா அடித்ததன் விளைவு, முதல்வரே தோற்று திமுக அரசு தூக்கி எறியப்பட்டு, மாற்றத்தின் அடையாளமாக தமிழக வெற்றி கழகத்தை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த சொம்புகள், தாங்கள் சொல்வதை எல்லாம் மக்கள் நம்புகிறார்கள் என்று நினைத்து கொண்டு தங்களுக்கு சப்ளை கொடுக்கும் கட்சிக்கு ஜால்ரா அடித்தாலும்,
இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள், மக்களை தொடர்ந்து முட்டாள்களாக்கும் முயற்சியில்,
தங்களுக்கு படியளிக்கும் ஆளும் கட்சி சார்பாக, ஒரு தலைபட்சமாக –
எல்லை மீறி ஜால்ரா அடித்து கொண்டிருந்ததால்-
திமுக ஆட்சி மீது மக்களுக்கு உண்டான வெறுப்பு –
ஒரு தலைப்பட்சமாக, காசுக்கு மாரடித்த இந்த சின்ன, பெரிய சொம்புகள் மீதும் அளவு கடந்த வெறுப்பாக மாறி இருப்பது உண்மை…
தேர்தல் முடிவுகளை கண்ட பிறகாவது இந்த சொம்புகள் திருந்தும் என்று பார்த்தால், இப்போது முன்னை விட மோசமாக, அதாவது புதிய ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக –
கேவலப்படுத்தியும், அசிங்கப்படுத்தியும் வேறு கோணத்தில் எழுதவும் /பேசவும் – துவங்கி விட்டார்கள்…
அவர்களது பழைய காண்டிராக்ட் தொடரும் என்றும், சன்மானத்திற்கு எந்த விதத்திலும் பங்கம் வராது என்றும்,
புதிய ஆட்சியை/கட்சியை தொடர்ந்து அசிங்கப்படுத்துங்கள் என்றும் அதே எஜமானர்கள் சொல்லி விட்டார்கள் என்று தெரிகிறது….
தொடருங்கள் ..சொம்புகளே – தொடர்ந்து உங்கள் முகத்தில் நீங்களே சாணியை வாரி அப்பிக்கொள்ளுங்கள்….
உங்களுக்குத் தான் சன்மானங்கள் தொடரும் என்று உறுதி அளிக்கப்பட்டு விட்டதே …. !!! (உதவி -வலைத்தளம் … )
………………………………………………………………………………………………………………………………………



Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…