……………………………………….

………………………………………….

……………………………………………….

நினைத்துப் பார்க்க முடியாத அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டுள்ளன…!
( வெள்ளிக்கிழமை மாலையில், 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது ஆதரவை அறிவிப்பதற்கு ஒன்றிரெண்டு மணி நேரம் முன்பாக இந்த இடுகையை பதிவில் ஏற்றி,
சனிக்கிழமை காலையில் வெளியிடலாமென்று தயார் செய்து வைத்திருந்தேன்… திடீரென்று நிலைமை தலைகீழாக மாறியது… விஜய் ஆட்சிக்கு வருகின்ற வித்தியாசமான நிலை உருவானது…
மாறிவிட்ட சூழ்நிலையில் இந்த இடுகையை வெளியிடலாமா, வேண்டாமா என்று கொஞ்சம் யோசித்தேன்…
பின்னர் தோன்றியது – தமிழக அரசியலில் பரம வைரிகளாக இருந்த இரண்டு கட்சிகளும், விஜய் வரக்கூடாது என்கிற ஒரே சுயநல நோக்கில் – அவர்களது 50 வருட பகையை ஓரங்கட்டி விட்டு, வெட்கம்-மானம் எதுவுமின்றி
மக்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்கிற சொரணை
கொஞ்சம் கூட இன்றி,
எதையெல்லாம் செய்யத் துணிந்தார்கள் என்கிற சரித்திர சம்பவங்கள் இங்கே, அவசியம் பதிவில் அவசியம் இருக்கவேண்டும்…
எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று நினைத்து -பதிவேற்றுகிறேன்…. )
………………………………………………………………………………………………………..
தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுகவும், அதிமுகவும் கை கோர்க்கிறார்களாம்! தவெகவுடன் இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கை கோர்த்து தடுப்பானேன்? இதன் பின்னணி என்ன?
‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்கும்’ என்ற நிலைபாட்டை ஸ்டாலின் எடுத்துள்ளார். இதற்கான முன்னெடுப்புகள் வேகம் பெற்றுள்ளன.
மே-5 ஆம் தேதி மாலை எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, ”தவெக ஆட்சி அமைவதை தடுக்க, ”நம் இரு திராவிட இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்..’’ என்று ஆதரவு கேட்ட தகவல் கிடைத்த போது நம்ப முடியவில்லை.
பெரியாரையும், அம்பேத்காரையும் வழிகாட்டித் தலைவராக அறிவித்து செயல்படும் விஜய் திராவிட கருத்தியலுக்கு எதிராக ஒரு போதும் பேசியதில்லையே. ‘பாஜக கொள்கை விரோதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சமரசமே இல்லை’ என கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்திலும் விஜய் உறுதிபடுத்தி உள்ளாரே.
‘அவசரப்பட்டு எதையும் எழுத வேண்டாம்’ என நாம் அமைதி காத்தோம்.
அதன் பிறகு திமுகவிடம் ஆதரவு கேட்ட எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசிய செய்தி வந்தது.
’பரவாயில்லையே அதிமுகவில் ஒரு சிலருக்கேனும் சுயமரியாதை இருக்கிறதே? அறச் சீற்றம் இருக்கிறதே.. தலைமையை தட்டிக் கேட்கும் ஜனநாயகம் இருக்கிறதே’ என நினைத்துக் கொண்டோம்.
அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சுதாரித்துக் கொண்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை புதுச்சேரி தூக்கிச் சென்று தங்க வைத்து, ’’நல்ல செய்தி தரப்போகிறேன். நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம்’’ எனப் பேசிய தகவல்கள் வெளியாயின.
”எடப்பாடியார் ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியிலேயே தங்கியிருப்பார்கள்” என அந்தக் கட்சி நிர்வாகி அன்பழகன் கூறி இருக்கிறார்.
அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடமும் ஸ்டாலின் தகவல் கூறியுள்ளார்.
கட்சிக் கூட்டத்திலும் ”நான் எந்த முடிவு எடுத்தாலும், நீங்க எல்லாம் கட்டுபட்டு நடக்கனும்.. வர்ற 10-ந் தேதி வரைக்கும் சென்னையில் தான் இருக்கனும்” என்று அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார் ஸ்டாலின். அவசரகால முடிவுகளை கட்சி தலைமை எடுக்கும் போது அதனை அங்கீகரிக்க வேண்டும்…’’ என்றும் கூறியுள்ளார், ஸ்டாலின்.
“நிலையான ஆட்சி அமைய, அவசரமான எந்த முடிவையும் எடுக்க” ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி, திமுகவின் உயர் நிலை கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.
”பாஜக முகமுடியை போட்டுக் கொண்டுள்ளது அதிமுக . அதிமுகவிற்கு வாக்களிப்பது பாஜகவின் மறைமுக ஆட்சிக்கு வித்திடுவதாகவே முடியும்” என்று மேடைதோறும் ஸ்டாலினும், உடன் பிறப்புகளும் பேசிய வார்த்தைகளின் ஈரம் இன்னும் காயவில்லை. திடீரென்று அதிமுக புனிதமான கட்சியாகிவிட்டதா திமுகவிற்கு? ‘விஜய் ஆட்சி அமைப்பதைக் காட்டிலும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்தால் பரவாயில்லை’ என நினைக்க வேண்டிய அவசியம் எப்படி வந்தது…?
விஜய் ஆட்சி அமைத்தால், இடதுசாரிகளும், விசிகவும் அதிகாரம் பெறக் கூடிய நிலை உள்ளது. அவர்கள் உடனிருந்து விஜய்யை வழி நடத்தும் வாய்ப்பு ஏற்படும், மதச்சார்பற்ற ஆரோக்கியமான அரசியல் சூழல் கனிந்துள்ளது. அத்துடன் சிறுபான்மையினரை பிரதிபலிக்கும் ஐ.யு.எம்.எல்லிடமும் தவெக ஆதரவு கேட்டுள்ளது. இந்த சிறிய கட்சிகள் அதிமுக, திமுக கூட்டணியில் இன்னும் ஒரு நூற்றாண்டுகள் தொடர்ந்தாலும் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது.
”பாஜக அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாமகவிடம் கூட ஆதரவு கோரமட்டோம்” என தவெக திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இப்படியாக பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கைகோர்த்து தடுப்பானேன்?
பாஜகவின் ஆளுநர் அர்லேகரின் அராஜக செயல்பாட்டுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. ”தவெகவிற்கு பெரும்பான்மை எண்ணிக்கையை காட்ட முடியவில்லை. ஆகவே, ஆட்சி அமைக்க அவர்களை அழைக்க மாட்டேன். தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால் நான் அழைப்பது சாத்தியம் ’’ என்று ஆளுநர் கூறியுள்ளார்.
திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து வரும் வரை விஜய்யை அழைக்கப் போவதில்லை’ என ஆளுநர் காத்திருக்கிறார்…என்றால், விஜய்யை எதிர்க்க திமுக, அதிமுக,பாஜக ஆகியவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
”தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினால், 108 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம்” என தவெக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
தற்போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்;
திமுக, அதிமுக இருவருக்கும் ஒரே பாஸ் தான். அந்த பாஜக என்ற பாஸ் தான் விஜய் ஆட்சிக்கு வருவதை தடுக்க தன்னுடைய இரு அடிமைகளையும் ஒன்றிணைய கட்டளை இட்டுள்ளது.
அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற பாஜகவின் கட்டளை நடிகர் ரஜினிகாந்த் மூலமாக ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ”உங்களால் நீண்ட காலத்திற்கு இடதுசாரிகளையும், விசிகவையும் கண்ரோல் பண்ண முடியாது. விரைந்து முடிவெடுங்கள்” எனச் சொல்லப்பட்டுள்ளது.
அதிமுகவானது திமுக தயவில் ஆட்சியில் அமர்வதை அதிமுகவின் கடைக் கோடி தொண்டன் கூட ஏற்கமாட்டான். அப்படி அதிமுக தலைமை முடிவெடுப்பது என்பது அந்தக் கட்சிக்கே முடிவுரை எழுதிவிடும். அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இந்த அசிங்கமான முடிவை எடுத்தால், கட்சியே அழிந்து போவது திண்ணம். திமுக ஒரு தீய சக்தி என அரை நூற்றாண்டுக்கும் மேலாக எம்.ஜி.ஆரால். ஜெயலலிதாவால் சொல்லிச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவின் தொண்டன் எடப்பாடி பழனிச்சாமியை எள்ளவும் ஏற்கமாட்டான்.
அதே போல தவெகவின் விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்க தனது பரம விரோதியான அதிமுகவை ஆதரிக்க திமுக முடிவெடுப்பதை அந்தக் கட்சியில் எம்.எல்.ஏக்கள் ஏற்கலாம். ஆனால், 56 ஆண்டுகளாக அதிமுகவை அடிமை கட்சியாக காட்டியே அரசியல் செய்த திமுக தலைமை இன்று திசைமாறி கைகோர்ப்பதை அடி நிலை திமுக தொண்டன் கூட அறவே ஏற்கமாட்டான்.
திமுக ஆட்சிக்கு வந்தால் உதயநிதியை முதல்வராக்கி அழகுபார்க்கத் துடித்தார் ஸ்டாலின். அதற்கு குறுக்காக விஜய் விஸ்வரூம் எடுத்து வளர்வதை ஸ்டாலின் விரும்பவில்லை. உதயநிதியின் எதிர்காலத்திற்காக விஜய்யின் வளர்ச்சியை முடக்கத் துடிக்கிறார் ஸ்டாலின். இதற்காக எந்த அசிங்கத்தையும் செய்ய தயாராகிவிட்டார் ஸ்டாலின்.
திமுகவில் உள்ள கொள்கை பற்றாளர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். திமுகவின் கொள்கை வழிப் பயணத்தை திசைமாற்றிக் கொண்டு செல்லத் துடிக்கும் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக திமுகவில் உள்ள சுயமரியாதைக்காரர்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள் என நம்புவோம்.
காங்கிரசும், இடதுசாரிகளும் அதிகாரம் பெறுவதை தடுக்கும் பாஜகவின் சூழ்ச்சிக்கு ஏற்ப செயல்பட்டு இரு திராவிட கட்சிகளும் கைகோர்த்து அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் இடதுசாரிகளும், விசிகவும் இன்னும் உள்ள முற்போக்கு அமைப்புகளும் ஜன நாயகத்தை காக்கும் வரலாற்று கடமையை சரியாக செய்வார்கள் என்று நம்புவோம். ( நன்றி -ஆசிரியர் சாவித்திரி கண்ணன் … )
( நமக்கு அத்தகைய அற்ப ஆசைகள் / நம்பிக்கைகள் எல்லாம் இல்லை கட்டுரை ஆசிரியர் அவர்களே …காவிரிமைந்தன் … )
…………………………………………………………………………………………………………………………………………………..
பிற்சேர்க்கை –
திமுக தலைவரின் கேவலமான செயல் பற்றி வெளிவரும் தகவல் …
………………………………………………………………………………………………………………………………………..



போற வர்ற சாவித்ரி கண்ணன் போன்றவர்களெல்லாம் கட்டுரை எழுதும்படி ஆகிவிட்டது. இவங்கள்லாம் எப்போதான் கொத்தடிமைகளா இல்லாமல், தமிழகத்துக்காக பொதுவா சிந்தித்து எழுதப்போறாங்களோ. //திமுக, அதிமுக இருவருக்கும் ஒரே பாஸ் தான். அந்த பாஜக// //அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற பாஜகவின் கட்டளை நடிகர் ரஜினிகாந்த் மூலமாக ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது// சரியான பயித்தியம் இந்த சாவித்ரி கண்ணன். தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லையே இந்த ஆளுக்கு… ஒருவேளை கடைசி சில மாதங்கள் 200 ரூ வரலையோ? //இடதுசாரிகளும், விசிகவும் இன்னும் உள்ள முற்போக்கு அமைப்புகளும் ஜன நாயகத்தை காக்கும் வரலாற்று கடமையை// – நல்லா ஜனநாயகத்தைக் காக்கும் கடமையைச் செய்தார்களே கடந்த ஐந்து வருடங்களாக. சாவித்ரி கண்ணன் சரியான ஜால்ரா ஆள். இவங்கள்லாம் பத்திரிகையாளர் என்ற போர்வையில் உலா வரும் புல்லுருவிகள்.
த.வெ.க விற்கு தமிழக மக்கள் பெரும்பான்மை ஆதரவை வழங்கியிருக்காங்க. அதனால் விஜய் ஆட்சியமைப்பதுதான் முறை.
விஜய் அனுபவம் இல்லாததினாலோ இல்லை கூட இருக்கும் ஆலோசகர்கள் தவறாலோ, கூட்டணி என்ற கணக்கை ஆளுநரிடம் காட்டி சிக்கலில் மாட்டியிருக்கிறார். ஒன்றும் சொல்லாமல் இருந்திருந்தால் ஆளுநருக்கு இவரை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அதிமுக, மக்களின் செல்வாக்கைப் பெறக் காரணமே அதன் தீவிர திமுக எதிர்ப்புதான். அப்படி இருந்தால்தான் மக்கள் திமுகவைப் பிடிக்காத போது அதிமுகவை நாடி வந்தார்கள், வருவார்கள். ஆனால் எடப்பாடி இந்த தீவிர திமுக எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்துவிட்டார். துரோகி ஓபிஎஸ் ஸுக்கும் எடப்பாடிக்கும் என்ன வித்தியாசம்? இதனால்தான் மக்கள் முழு நம்பிக்கை வைக்காமல் புதிய கட்சிக்கு ஆதரவு அளித்தார்கள்.
தவெக விற்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதனால் மக்கள் முழுமையாக ஆதரிக்கவில்லை என்று பிதற்றுவதைப் போல வேறு ஒன்றும் இருக்க முடியாது. சாதாரண வாக்காளனுக்குத் தெரியும், தமிழக மக்கள் தவெக வைத்தான் ஆதரித்திருக்கிறார்கள் என்று.
சாவித்திரி கண்ணனைவிட அதிக அரசியல் அறிவும் தெளிவும் எனக்கு உண்டு. அதிமுக செய்யவேண்டியது, வாயைப் பொத்திக்கொண்டு விஜய் ஆட்சியமைக்க உதவணும். அது, வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தோ இல்லை கலந்துகொள்ளாமலேயோ இருக்கணும்.
மெஜாரிட்டி என்ற வெத்து வேட்டை வைத்து விஜயை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது. அப்படிச் செய்வதால்தான் பச்சோந்தி திருமாவளவன், சொந்த செல்வாக்கில் கவுன்சிலராகக்கூட வர முடியாத பிளாஸ்டிக் சேர் திருமாவளவன், 2 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு துணை முதல்வர், 1 கேபினெட் என்று டிமாண்ட் வைக்கிறார். லஞ்சப் பணம் வாங்கியே கொழுத்த கம்யூனிஸ்டுகள், 4 சீட்டுகளை வைத்துக்கொண்டு இத்தனை நாட்கள் திமுகவிற்கு தொங்கு சதையாக இருந்துவிட்டு இப்போது கட்சி மாறுகிறார்கள்.
இன்றைய தேதியில் விஜய் முதல்வராகணும். சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தால் அதிமுக கலந்துகொள்ளாமல், தவெக ஆட்சி அமைக்க உதவணும். தமிழக மக்கள் திமுக தீய சக்தி என்று தீர்ப்பளித்திருக்கின்றனர். ஆனால் அதற்கு மாற்று அதிமுக என்று சொல்லவில்லை. த.வெ.க என்றே சொல்லியிருக்கின்றனர். அதிமுக வரலாற்றுத் தவறுகளைச் செய்து, புல்லுருவிகளான கம்யூனிஸ்டுகள் விசிக போன்ற பதர்கள் விஜய் அவர்களை ஆட்டிவைக்க உதவக்கூடாது. இதுவே சரியான அரசியல் நிலைப்பாடு.
விஜய் அவர்களின் நிலைப்பாடும் சரியில்லை என்றே நான் நினைக்கிறேன்.
3 சதம் காங்கிரஸை சேர்த்துக்கொண்டால் ஆயுள் முழுக்க தலைவலிதான். அடுத்த தேர்தல்கள்ல 20 சதம் இடம்னு டிமாண்ட் வைப்பாங்க. அடுத்தவங்க முதுகில் சவாரி செய்தே வாழணும்னு நினைக்கறவங்க இந்த தமிழக காங்கிரஸ் காரர்கள். கட்சியை வளர்க்க ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட மாட்டார்கள். பணபலம் வாய்ந்த திமுக இருந்தபோதே ஒரு சதம் வாக்குகளே பெற்ற கட்சியான கம்யூனிஸ்டுகள், தேர்தலின்போது ஆளுக்கு 15 சீட்டுகள், ஒவ்வொரு சீட்டுக்கும் 2 கோடி பணம்னு டிமாண்ட் வைப்பாங்க. விசிக, இன்னும் அதிகமான சீட்டு மற்றும் வைட்டமின் ப என்று டிமாண்ட் பண்ணும்.
1 சதம் கட்சியான கம்யூனிஸ்டுகள், விசிக போன்றவற்றை எதற்காக, ஆட்சிக்கு வரணும் என்ற ஒரே காரணத்துக்காக கூட்டுச் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
எனக்கு 107 சீட் மக்கள் கொடுத்திருக்காங்க. கூப்பிட்டா கூப்பிடு. இல்லைனா நான் மக்களை சந்தித்துக்கொள்கிறேன் என்று சொன்னால் கெத்து. அடுத்த தேர்தலில் 180 சீட்டுகள் கிடைக்கும். அவ்வளவு வெறுப்பு மக்களுக்கு (இளையோர்களுக்கு) திராவிட அரசியல் மீது.
காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக போன்ற கும்பல்களைச் சேர்த்துக்கொண்டால், திமுகவிற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அமெரிக்கா ஈரான் மீது போர், அதை எதிர்க்கலை பாஜக என்று பார்லிமெண்டில், ராஜ்ஜிய சபாவில் வெளிநடப்பு, ஒன்றிய அரசு காசு தரலை, அதனால் எதையும் நிறைவேற்ற முடியாது என்ற பஞ்சப்பாட்டு, நாங்கள் சொந்த பள்ளிகள் பிஸினெஸில் ஹிந்தி உண்டு, ஆனால் தமிழக அரசுப் பள்ளிகளில் ஹிந்தி கிடையாது ஆனால் உருது உண்டு என்ற நிலை… எங்கேனும் வளர்ச்சி வரப்போகுதுன்னா அந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களை ரியல் எஸ்டேட் மூலம் மொத்தமாக வளைச்சுப்போட்டு பிறகுதான் அந்தத் திட்டத்துக்கு கிரீன் சிக்னல்… இப்படியே திமுகவை காப்பியடித்து காலம் தள்ள வேண்டியதுதான்.
பிங்குபாக்: அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
பிங்குபாக்: அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
பிங்குபாக்: அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்