…………………………….

……………………………….
“அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் ” –
என்று கூறிய பிரிட்டிஷ் தத்துவ ஞானியின் வாக்கை
மெய்ப்பிப்பது போல் இருக்கிறது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம்….விஜய் போன்ற நேர்மையாளர்கள்
இங்கே ஜீவிப்பது மிக மிக கடினம்….
ஏற்கெனவே நாம் அனுபவங்கள் மூலம் அறிந்த, அயோக்கியர்களின் வரிசையில்,
புதிதாக ஒருவர் –
என்னை விட்டு விட்டீர்களே – இப்போதாவது என் திறனை புரிந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார் …
அவரிடம் இருப்பது இரண்டே எம்.எல்.ஏக்கள்… அவர்களது ஆதரவு வேண்டுமானால், முதலில் இவரை துணை முதலமைச்சர் ஆக்கி, எம்.எல்.ஏ.வாகவும் ஆக்க வேண்டுமாம்…தன்னைச் சேர்ந்த இன்னும் ஒருவரை கேபினட் அமைச்சர் ஆக்க வேண்டுமாம்…!!!
நல்ல வேளை .. விஜய் அமைதியானவர் தானே தவிர இளிச்சவாயர் அல்ல….
இந்த சட்டமன்றத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு, மறு தேர்தல் நடத்துவது ஒன்றே இந்த பிரச்சினைக்கு நல்ல
தீர்வாகும்….
விஜய் அதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும்…மற்றதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்….
……………………………………………………………….………
இதையும் ஒருமுறை பாருங்கள் –
…………………………………………………………………………………………………………………………………………….



தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை.
விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி (அவருடைய முடிவுல. இவனுக டிமாண்ட் பண்ணுவது பிடிக்காது. ஒரு புரளி ஒரு சில நாட்கள் முன்பு வந்ததாம். அதிமுக ஆதரவு கொடுக்கும் ஆனால் செங்கோட்டையன் அமைச்சராகக் கூடாதுன்னு. விஜய் தரப்புல அவரை சபாநாயகராக்குகிறோம் என்றதற்கு அதுவும் கூடாது வெறும் எம்.எல்.ஏதான் என்றார்களாம். நீங்க எங்களுக்கு கட்டளை போட முடியாதுன்னு டிராப் ஆயிடுச்சாம்) என்ற முடிவு நல்லது.
என்னைப் பொருத்த வரையில் காங்கிரஸுக்கு தொங்குசதையாக ஆகாமல், அவங்க தன் தலைல ஏறி உட்காராத நிலைக்கு வச்சிருந்தால் விஜய்க்கு மிக நல்லது.
நான் நிச்சயமா நம்பறேன் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஒரு தேர்தல் வரும். அதில் வெற்றி பெறும் விஜய் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத இடத்தில் இருப்பார்னு. தமிழகத்துக்கு நன்மை செய்தால் நல்லதுதானே. (விஜய் அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் 50 சதம் கூட நிறைவேற்ற முடியாது)