……………………………………………………………..

………………………………………………………………..
நம்பிக்கையோடும்,
எதிர்பார்ப்புகளோடும், காத்திருந்த தமிழக மக்களுக்கு
மகிழ்ச்சி தரும் வகையில் வந்திருக்கிறார் திரு. விஜய் … !!!
சிதைந்து கிடக்கும் தமிழகத்தை சீர்படுத்த –
அவருக்கு, போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது நியாயமே….!!!
…………………………………………………..
இருந்தாலும் –
லஞ்ச ஊழலை ஒழிப்பது,
போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது,
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும் செயல்பட்டு, வெகு சீக்கிரமே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரென்று நம்புகிறோம்……!!!
…………………………………………………………………………………………………………………………………………………



//லஞ்ச ஊழலை ஒழிப்பது,
போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது,
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும் செயல்பட்டு,//
என்னைப் பொறுத்தவரையில், விஜய், கஜானா காலியாக இருப்பதால் பல்வேறு இலவசங்களை உருப்படியா கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவரை மாட்டிவிடுவதற்கென்றே பலரும் விமர்சனம் செய்வார்கள். அதைப்பற்றிக் கொஞ்சம்கூட அவர் கவலைப்படக் கூடாது.
ஜெயலலிதா அவர்களின் பெருமை, அவர் கொடுத்த இலவசங்களால் வந்ததில்லை. அவர் ஆட்சிக்காலத்தில், அவர் கட்சிக்காரன் ஒருவனும் போலீஸ் ஸ்டேஷனில் சென்று அராஜகம் செய்யமாட்டான். செஞ்சால் கட்சியில் இருக்கமாட்டான். கற்பழிப்பு, போதைக் குற்றம் போன்ற விஷயங்களில் ஈடுபடமாட்டான்.
விஜய் அவர்கள், போதை ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, முடிந்த வரை லஞ்ச ஊழல் ஒழிப்பில் ஈடுபட்டாலே அதுவே அவருக்கு நிலையான புகழைத் தரும். லஞ்ச ஒழிப்பை முழுமையாகச் செய்வது மிகக் கடினம். இருந்தாலும் அதில் அவர் முயற்சி செய்ய வேண்டும்.
என் மனதில், அதிமுக பிளவுபட்டு, ஒரு பகுதி விஜய் அவர்களை ஆதரித்தால், அதுவே விஜய், தொங்கு சதைகள் பாராசைட்டுகள் கையில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப் படாமல் இருக்க உதவும். இவர்கள் மூவரும் திமுகவின் ஸ்லீப்பிங் செல் என்பதே என் எண்ணம். அரசியலில் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர் என்ற லிஸ்டில், வை கோவாலசாமி, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகள் வருவர். காங்கிரஸ் கட்சி, அரைக்கிலோ உமியைக் கொடுத்து ஆறு கிலோ அரிசியை எதிர்பார்க்கும் கட்சி.