செத்தும் கொடுத்த …..
மாநிலங்கள் அவையில் இன்றைய தினம் மத்திய
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரால்
கொடுக்கப்பட்ட தகவல் இது –
காலம் சென்ற தலைவர்கள் இரண்டு பேர் –
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு
பத்திரிகைகளில் மத்திய அரசு விளம்பரங்கள்
கொடுத்த வகையில் செலவு –
19 நவம்பர் 1917 ல் பிறந்தவர்
பெயரில் செலவு – 2.46 கோடிகள்
20 ஆகஸ்டு 1944 ல் பிறந்தவர்
பெயரில் செலவு – 4.79 கோடிகள்
ஆக மொத்த செலவு – 7.25 கோடிகள்
லால் பகதூர் சாஸ்திரியும்,
மொரார்ஜி தேசாயும் கூடத்தான்.
இந்த நாட்டில் பிரதமர்களாக இருந்து மறைந்த
புகழ் பெற்ற தலைவர்கள்.
எளிமையின் – நேர்மையின்
எடுத்துக் காட்டாக வாழ்நாளின் இறுதிவரை
இருந்தவர்கள் அவர்கள்.
ஆனால் – இன்று வரை அவர்கள் நினைவைப்
போற்றி சல்லிக்காசு கூட செலவு செய்ததில்லை அரசு.
காரணம் ?
இவர்கள் – இன்றைய காங்கிரஸ் தலைவருக்கு
எந்த விதத்திலும் சொந்தமில்லையே !





Those are the useless expenses which cause the indian economy to down
and nobody is here to raise the questions?
உங்களுக்கு அவங்க பேரை சொல்ல பிடிக்கலியா? இல்லை விருப்பம் இல்லையா? முதலாமவர்: இந்திரா காந்தி, இரண்டாமவர்: ராஜீவ் காந்தி. …!!! இப்போது உங்கள் கட்டுரையின் தலைப்பை “செத்தும் கெடுத்த” என்று மாற்றிகொள்ளுங்கள்…!!!
வருக நண்பர் பொன்ராஜ் மதியழகன்,
இதைத்தான் –
இத்தகைய ஒரு மறுமொழியை
யாரிடமிருந்தாவது
எதிர்பார்த்து தான் அப்படி
ஒரு தலைப்பையும் -பெயர் விடுதலையும்
செய்திருந்தேன்.
சரியாக உணர்ந்து, பிடித்து விட்டீர்கள்.
நன்றி..
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
// முதலாமவர்: இந்திரா காந்தி, இரண்டாமவர்: ராஜீவ் காந்தி!! //
இது கூட எமக்குத் தெரியவில்லை என்றால் அப்புறம் காவிரி மைந்தனை இவ்வளவு நாள் படித்ததற்கு பொருளே இல்லாமல் போய் விடுமே!
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். அதனாலேயே இந்த மௌனம். 😦
நன்றி ரமணன்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
Indira & Rajiv