அந்த 774.98 கோடி+ 299.63 கோடி யாருடையது மிஸ்டர் பிரனாப் முகர்ஜி ?

அந்த 774.98 கோடி+ 299.63 கோடி
யாருடையது மிஸ்டர் பிரனாப் முகர்ஜி ?

1)   கடந்த 2010 -11 ம் நிதி ஆண்டில்
ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது.
இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15
கோடி நகைகளும் அடங்கும்.

2)   கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர்
வரையிலான 7 மாதங்களில் ரூ.299.63 கோடி
கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளார்கள்.
இதில் ரூ.179.59 கோடி பணமும்,
ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும்,
ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும்
அடங்கும்.

இதை இன்றைய தினம் மாண்புமிகு மத்திய
நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்கள்
பாராளுமன்ற மாநிலங்களவையில்
ஒரு கேள்விக்கான பதிலை அளிக்கும்போது
பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

அவருக்கான ஒரே ஒரு சிறிய துணைக்கேள்வி –

இவ்வளவு சொன்ன மந்திரி அவர்களே  –
இதை ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் ?

1) இந்த சொத்துக்கள் எந்தெந்த பெரிய
மனிதர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவை ?

2)அவர்கள் மீது வழக்கு எதாவது தொடரப்பட்டதா ?
தண்டனை எதாவது ?

3) அல்லது எந்த வெளிநாட்டுடனாவது இவர்கள்
பெயரையும் வெளியிடுவதில்லை என்று புதிதாக
எதாவது ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்களா ?

4) ஆமாம் – ஒவ்வொரு தடவையும்
இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் எங்கேயாவது ரெய்டு
போனால் – பரபரப்பாக செய்திகள் விடுகிறீர்கள்.
ஆனால் அந்த ரெய்டில் என்ன பிடிபட்டது
என்பதைப் பற்றி மட்டும் தப்பித் தவறிக்கூட
செய்தி விட மாட்டேன் என்கிறீர்கள் – ஏன் அப்படி?

5) அண்மையில் (நினைவில் இருப்பது இவ்வளவு
தான் )மலையாள நடிகர்கள் மோகன்லால்,மம்மூட்டி,
தமிழ் நடிகர்கள் விஜய், வடிவேலு மற்றும்  ஜெமினி
கணேசனின் மகள்  டாக்டர் கமலா செல்வராஜ்
ஆகியோர் வீடுகளில்  நடந்த ரெய்டுகளின்
தொகைகளும் மேற்கண்ட எண்ணிக்கையில்
அடக்கமா ?

சொல்லுங்கள் மிஸ்டர் முகர்ஜி –
நீங்கள் எங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டு
இருக்கிறீர்கள் !
நீங்கள் சம்பளம் வாங்குவது இதற்கும் சேர்த்து தான் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அந்த 774.98 கோடி+ 299.63 கோடி யாருடையது மிஸ்டர் பிரனாப் முகர்ஜி ?

  1. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    //நீங்கள் எங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டு
    இருக்கிறீர்கள் !//

    ”அதெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோம். இதெல்லாம் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள். முட்டாள் பொது ஜனங்களுடன் இவற்றைப் பகிர்ந்து கொள்ள இயலாது. அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை. ஓட்டுப் போடுவதோடு அவர்களது கடமை முடிந்து விட்டது. மீறி ஏதேனும் பிரச்சனை செய்தால் ’தேசிய பாதுகாப்புச் சட்டம்’ இருக்கவே இருக்கிறது. “ – என்று சொல்வாரோ என்னவோ?

    ஏற்கனவே இது போன்று பிதற்றியவர்கள் தான் முன்னாள் இந்நாள் உள்துறைகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  2. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    இந்த கேள்வியைக் கூட கேட்காமல்
    நமது எம்.பி.க்கள் என்ன தான்
    செய்கிறார்கள் ?

  3. V.MATHIVANAN's avatar V.MATHIVANAN சொல்கிறார்:

    MAANAMUM MARIYATHAIYUM PANATHODU KAI KORTHU NADAKIRATHU. aaYIRAM RUBAI THIRUDINAAL VILAMBARAM. KODI KANAKKIL SEIDHAL PERIYAMANIDHAN.
    IDHU DHAN ULAGAM.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.