யார், யாருக்கு பயப்பட வேண்டும் ? அரசியல் சட்டம் எதற்கு …?

யார், யாருக்கு பயப்பட வேண்டும் ?
அரசியல் சட்டம் எதற்கு   …?

இது தமிழ் நாட்டின் தலையெழுத்து.
எங்கே வன்முறை நிகழும் – எங்கே பரபரப்பான
செய்திகள் கிடைக்கும் என்று அலைவதிலேயே
அக்கரை காட்டுகின்றன
தமிழ்ச் செய்தித்தாள்களும் – மீடியாவும்.

நமக்கு, தமிழ் நாட்டுக்கு ஒரு அநியாயம்
நடக்கும்போது,
அது எங்கு நிகழ்ந்தாலும் – அதை வெளிச்சம்
போட்டுக் காட்ட வேண்டாமா ?
அது தமிழ் மீடியாக்களின் கடமை இல்லையா ?

சில நாட்களுக்கு முன் இந்த நாட்டின் அதிக பட்ச
அதிகாரமுள்ள நீதிமன்றத்தில் நிகழ்ந்த சில
வாதங்கள்  –

தமிழ் செய்தித் தாள்களிலோ, மீடியாக்களிலோ
வெளிவரவே இல்லை. எந்தெந்த விதத்தில்
எல்லாம் நமக்கு அநியாயங்கள்  
இழைக்கப்படுகின்றன
என்பதை நீங்களே பாருங்கள் –

கேரள அரசின் சார்பாக வாதாடும் வக்கீல்
ஹரீஷ் சால்வே கூறுகிறார் -உச்ச நீதி மன்றம்
அமைத்த எம்பவர்டு கமிட்டி ஒரு பக்கம்
இருக்கிறபடி இருக்கட்டும்.
இப்போது, இரு மாநில முதலமைச்சர்களும்
கலந்து கொள்ளும்படியான அதிகாரபூர்வமான
ஒரு கூட்டத்தை உடனே பிரதமர் கூட்ட
உச்சநீதிமன்றம் உத்திரவிட வேண்டும்.

நல்ல வேளையாக விழிப்பாக இருக்கும்
தமிழகத்தின் வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் –
உச்சநீதி மன்றமே ஒரு கமிட்டியை அமைத்து,
அதன் அறிக்கையும்
வரவிருக்கும் நேரத்தில் இத்தகைய ஒரு கூட்டம்
எதற்கு ? என்கிறார்.

அதற்கு ஒரு நீதிபதி கேட்கிறார் – அப்படி
என்றால், தமிழ் நாட்டிற்கு பேச்சு வார்த்தையில்
விருப்பம் இல்லை என்று
பதிவு செய்து கொள்ளலாமா ?

இன்னொரு நீதிபதி சொல்கிறார் -பிரதமர் என்பவர்
இந்த நாட்டின் அதிகபட்ச அதிகாரம் உடையவர்.
அவரால் இதற்கு ஒரு முடிவை கொண்டு வர
இயலலாம் !
எனவே மன்மோகன் சிங் தலைமையில் இரு மாநில
முதல்வர்களும் கூடி ஒரு முடிவை எட்டலாம்.

கேரள வக்கீல் சால்வே மீண்டும் கூறுகிறார் –
உச்சநீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட இந்த எம்பவர்டு கமிட்டி ரிப்போர்ட்
வந்தால் மட்டும் என்ன பிரச்சினை தீரப்போகிறதா ?

அது வேறு மாதிரியான பிரச்சினைகளைத்தான்
உண்டு பண்ணப்போகிறது. இது வரை நீதிமன்ற
தீர்ப்புகளால் எந்த பிரச்சினையாவது தீர்வு
கண்டிருக்கின்றதா ? அவை இரண்டு
மாநிலங்களிடையே மேலும் கொந்தளிப்பைத் தான்
உண்டு பண்ணப் போகின்றன.
இதை எல்லாம் பேச்சு வார்த்தை மூலம்
தீர்த்தால் தான் உண்டு.

தமிழ் நாட்டின் வக்கீல் ராமச்சந்திரன் கூறுகிறார் –
கேரளா ஏற்கெனவே நீர்மட்டத்தை 120 அடிக்கு
குறைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கும்
போது – இனி பேசுவதில் என்ன பயன் இருக்கப்
போகிறது ?உச்சநீதி மன்ற  கமிட்டி ரிப்போர்ட்
வரட்டும்-
பிறகு பார்ப்போம்.

இதற்கு ஒரு நீதிபதி கூறுகிறார் – 2 மாநிலங்களும்
ஒத்துக்கொண்டால் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு
செய்யலாம். தமிழ் நாடு ஒத்துக் கொள்ளாத நிலையில்
நாங்கள் என்ன செய்ய முடியும் ?

பிறகு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை
அனுப்ப வேண்டும் என்கிற தமிழக கோரிக்கை
பரிசீலனைக்கு வந்தபோது –

கேரள வக்கீல் கூறுகிறார் – மத்திய படை வந்தால்
அது அநாவசியமாக கேரள மக்களின் கோப உணர்வைத்
தூண்டும் ! அணை உடைந்தால் அவர்கள் தான்
பாதிக்கப்படுவார்கள் என்னும்போது,அவர்களே அணையை
உடைத்து விடுவார்கள் என்று சொல்வதே அபத்தமானது.

வாதங்கள் போகும் திசையைப் பாருங்கள்.
நமக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வரும்படி
எங்கேயாவது பேச்சு நடக்கிறதா ?

இருந்திருந்து கையாலாகாத பிரதமர் மன்மோகன்
சிங் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்து விடுவாராம்.
எனவே கூட்டத்திற்கு ஒத்துக் கொள்ளுங்கள் என்று
தமிழ் நாட்டிற்கு உச்சநீதி மன்றத்திலேயே அழுத்தம்
கொடுக்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற எம்பவர்டு கமிட்டி தீர்ப்பை கொடுத்த
பிறகும் பிரச்சினை தீராது என்று கேரள அரசின்
சார்பில் அதன் வக்கீல் உச்சநீதிமன்ற நீதிபதிகளின்
முன்னாலேயே சொல்கிறார்அவர்களும் அதைக்
கேட்டுக்கொண்டு, சமரசமாகப் போகும்படி
தமிழ் நாட்டிற்கு புத்தி சொல்கிறார்கள்.

என்ன நடந்திருக்க வேண்டும் ?

பிப்ரவரி 27, 2006ல் உச்சநீதி மன்றம் ஏற்கெனவே
சகல விஷயங்களையும் ஆராய்ந்த பிறகு கொடுத்த
தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்த மறுத்து,
உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக ஒரு சட்டத்தை
மார்ச் 17,2006 அன்று இயற்றியது.

தமிழ் நாடு அதைப்பற்றி புகார் செய்து தொடுத்த
வழக்கு தான் இப்போது இன்னும் நடந்து
கொண்டிருக்கிறது.
என்ன செய்திருக்க வேண்டும் நீதிமன்றம் ?

அப்போதே, சுயமாகவே நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு ஒன்றை பதிவு செய்து, உடனடியாக தீர்ப்பை
அமுல்படுத்தச் சொல்லி கேரள அரசிற்கு உத்திரவு
போட்டிருக்க வேண்டும்.

தானாகவே இதைச் செய்யா விட்டாலும், தமிழ்நாடு
அரசு புகார் கொடுத்தவுடனேயாவது செய்திருக்க
வேண்டும்.

அதை விட்டு விட்டு, மீண்டும் விஸ்தாரமாக
விசாரிக்க ஆரம்பித்து, அதற்கு ஒரு கமிட்டியை
போட்டு, அதற்கு ஏற்கெனவே 5 ஆண்டுகளை
வீணாக்கி விட்டு,  இப்போதாவது தீர்ப்பை
கொடுங்கள் என்றால் மீண்டும் பேச்சு வார்த்தை
நடத்துங்கள் என்று சொல்கிறது.  அதுவும் யாரை
வைத்து – மன்மோகன் சிங் என்கிற
பிரத்மரை வைத்து.

உச்சநீதி மன்றம் புதிதாக தீர்ப்பு கொடுத்தால்
மட்டும் பிரச்சினை தீரவா போகிறது என்று
கேரள அரசு வக்கீல் கேட்பதன் அர்த்தம் என்ன ?
நீதிபதிகளுக்கு புரியாதா ? உங்களின்
இந்த தீர்ப்பையும்
நாங்கள் நிறைவேற்ற மாட்டோம் என்பது தானே ?

இதை, இத்தகைய வாதத்தை,  நீதிபதிகள்
அனுமதிக்கலாமா ? பிறகு நீதிமன்றம் எதற்கு ?
தீர்ப்புகள் தான் எதற்கு ?
அரசியல் சட்டம் தான் எதற்கு ?

கேரள சுயநலவாத அரசியல்வாதிகள்,
அணை உடைந்து விடும் என்று வீண் புரளியைக்
கிளப்பி கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும்
நிலையில் –
கேரள மக்களுக்கு உண்மை நிலையை விளக்க
வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக அரசு
கொடுத்த விளம்பரத்தில் என்ன குறை இருக்கிறது ?
எல்லாரும் அமைதி காக்க வேண்டும் என்று
தானே வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது ?

சுப்ரீம்  கோர்ட்டில் விசாரணை நடக்கையில்
நீதிபதிகள் சொன்னதைத்
தானே அதில் திரும்ப எடுத்துச் சொல்லி இருந்தது ?
சொல்லாதது எதையாவது தமிழக அரசு
இட்டுக்கட்டி சொன்னதா ?
அதில் ஏன் குறை காண வேண்டும் ?
அதெப்படி களவாணியையும், காவல்காரரையும்
நீதிமன்றம் சமமாகப் பார்க்கலாம் ?

நமக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை
வரும்படி- எங்கேயாவது, எதாவது, நடக்கிறதா ?

வலுவுள்ளது பிழைக்கும் (survival of the
fittest ) என்கிற பழைய முறைக்கே
மீண்டும் போக வேண்டியது தானா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to யார், யாருக்கு பயப்பட வேண்டும் ? அரசியல் சட்டம் எதற்கு …?

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    என்ன ஒரு விவஸ்தயில்லாத விவாதம்! கொடுமை! நீ எனக்கு சாதக தீர்ப்பு குடுக்கலைன்னா அதை நான் மதிக்க மாட்டேன் என்கிறான் ஒருத்தன். அதையும் கேட்டு சும்மா இருக்காங்க இந்த ‘நீதி பதிங்க’!

  2. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    ”சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ……..”

    கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். மொத்தத்தில் எல்லோரும் மலையாள தேசத்துக்கே சாதகமாக இருக்கிறார்கள். காரணம், இங்குள்ள அரசியல் வியாதிகள் ஓட்டுக்குகளுத்த்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றார்களே தவிர, மக்கள் நலனுக்கு அல்ல.

    பின் எப்படி நமக்கு நியாயம் கிடைக்கும். இந்த லட்சணத்தில் டஜன் கணக்கில் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். என்ன புண்ணியம்.

    வாழப்பாடி ராமமூர்த்திக்கு இருந்த துணிச்சல் இவர்கள் யாருக்கும் இல்லையே!

    வெட்கம் ! கேவலம்!

    தமிழன் தலைகுனிந்து அவமானப்பட்டே நிற்க வேண்டியதுதான். அதற்கு சில தமிழர்களே காரணமாக இருப்பதை நினைத்து வயிறெரிகிறது.

  3. V.MATHIVANAN's avatar V.MATHIVANAN சொல்கிறார்:

    THERE IS NO USE IN SPEAKING AHIMSA.
    IF WE ARE NOT GOING TO FIGHT BACK, THIS WILL AGAIN BECOME THE BLACK ERA OF TAMILS.
    PERIAYARISM IS THE ONLY ANSWER.

  4. shandu's avatar shandu சொல்கிறார்:

    கேரளா கேனபையங்க்ளை நாம் நம்ம ஊரை விட்டு ஓட வைக்கணும் ,அப்பதான் நம்ம பலம் பற்றி அவங்களுக்கு தெரியும்

  5. Senthil Kumar's avatar Senthil Kumar சொல்கிறார்:

    Media peoples are look like PIMPS !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.