முல்லைப் பெரியாறு விஷயத்தில்
மலையாளிகள் –
இது இனப்பற்றா அல்லது வெறியா ?
the weekendleader.com என்கிற
ஆங்கில வலைத்தளத்தில்
திருமதி ராதிகா கிரி எழுதியுள்ள ஒரு செய்திக்
கட்டுரையின் முக்கிய பகுதிகளின்
தமிழாக்கம்(நன்றி-பூங்குழலி)
கீழே தரப்படுகிறது.
மலையாளிகள், உலகின் எந்த பகுதியில்
வசித்தாலும், எந்த அளவிற்கு இன உணர்வுடன்
இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இந்த
கட்டுரை மிகவும் உதவும்.
———————-
சென்னை செய்தியறைகளில் முல்லைப் பெரியாறு
குறித்த செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மை
முல்லைப் பெரியாறு அணை விசயம் குறித்து பல்வேறு
ஆங்கில செய்தி ஏடுகளில் அண்மையில் கிளம்பியுள்ள
செய்திகளைத் தொடர்ந்து நெருக்கமாக கவனித்ததில்,
கேரளத்திலிருந்து வரும் செய்தியாளர்களின் தொழில்
நேர்மை குறித்து எனக்கு முக்கிய சந்தேகங்கள்
எழுந்துள்ளன.
mullai_periyar_370மலையாள செய்தி ஏடுகளில்
எழுதும் செய்தியாளர்கள், உண்மையைப் பற்றிய
அக்கறையின்றி மாநில அரசின் பார்வையையும்
உள்ளுர் மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்த
முற்பட்டுள்ளனர் என்பது வேறு செய்தி. ஆனால்
ஆங்கில ஊடகங்களுக்காக அதுவும் தமிழ்நாட்டில்
பணியாற்றும் மலையாள செய்தியாளர்கள் அதையே
செய்யும்போது நிச்சயம் அது கவனிக்கத்தக்க
விசயமாகும்.
செய்தியாளர்களின் தொழில் நேர்மையில்
அண்மையில் ஏற்பட்டுள்ள சரிவு என்பது, கேரள
அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி
நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், முல்லைப்
பெரியாறு அணை உடைந்தால் கூட, அதற்கு
கீழ்ப் பகுதியில் உள்ள இடுக்கி மற்றும் பிற
அணைகளில் நீர் தேங்கும் என சொல்லியிருப்பதை
செய்தியாக்கியிருக்கும் விதத்தில் தெரிகிறது.
அவ்வறிக்கை அளித்த மறுநாள், சென்னையைச்
சேர்ந்த எந்த ஆங்கில நாளிதழும் அச்செய்தியை
வெளியிடவில்லை.
மலையாளிகள் தாங்கள் அபத்தம் என்றும்
ஏற்றுக் கொள்ள முடியாததும் என்று கருதிய
அவ்வறிக்கையை எதிர்த்து அட்வகேட் ஜெனரலுக்கு
எதிராக கை உயர்த்தி கிளம்பிய பிறகே
அச்செய்தி வெளிவந்தது. அதுவும் அவ்வறிக்கை
எழுப்பிய சர்ச்சையின் அடிப்படையில் மட்டுமே.
நான் குறிப்பிட விரும்பும் செய்தி என்னவெனில்,
கேரளத்தைச் சேர்ந்த எந்த ஒரு செய்தியாளருக்கும்
அட்வகேட் ஜெனரலின் அறிக்கை செய்தியளிக்கத்
தகுந்ததாக படவில்லை – அதை ஒப்புக்கொள்ள
விரும்புவார்களா அல்லது பொய்யென
ஒதுக்குவார்களா என்பது வேறு விசயம்.
வேறு விதத்தில் குறிப்பிட வேண்டுமெனில்,
மலையாள செய்தியாளர்கள், தங்களின் பணி
சார்ந்தும் கூட, தங்களை முதலில்
மலையாளிகளாகவும் பின்பே செய்தியாளர்களாகவும்
கருதுகிறார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக நடந்தவற்றை
நுணுக்கமாக ஆராய என்னைத் தூண்டியது,
டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு,
நவம்பர் 24 அன்று வெளியிட்ட டைம்ஸ் வியூ
(Times View) எனும் செய்திதான்.
அச்செய்தியின் கீழிருந்த கருத்துப் பகுதியில்,
தமிழ்நாட்டு திரையரங்குகள் எதிர்ப்புக்குத்
தலைவணங்கி டாம்999 படத்தை திரும்பப்
பெற்றன’ என்று மிகவும் நல்லவிதமாக
கருத்துரிமைக்கு மதிப்பளித்து தொடங்கியுள்ளது.
ஆனால் வெடிகுண்டு மூன்றாவது வரியில் இருந்தது.
‘ஒப்புக்கொள்ளவேண்டியது என்னவெனில்,
முல்லாப் பெரியாறு அணை ஓர் உணர்ச்சிகரமான
சிக்கல். தென் மாவட்டங்களில் வாழும்
மக்களிடையே ஆதரவினைப் பெற அரசியல் கட்சிகள்
அதைப் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன.”
என்று கூறியது.
முல்லைப் பெரியாறு (‘அய்’ விகுதி இல்லாமல்
‘முல்லாப் பெரியாறு’ என்பது அப்பட்டமான
மலையாள உச்சரிப்பு. இதையே டைம்ஸ் ஆப்
இந்தியா பயன்படுத்த விழைகிறது)
கேரளத்தில்தான் உணர்ச்சிகரமான விசயம்;
தமிழ்நாட்டில் அல்ல. ஆனால், திட்டமிட்ட
முறையில் தாங்கள் பரப்பும் பொய்யான செய்திகள்
மூலம் கேரள அரசு, செய்தியாளர்கள் மற்றும்
மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அதனை
இங்கும் உணர்ச்சிகரமான சிக்கலாக்கி விடலாம்.
எனவே, சந்தேகத்திற்கு இடமின்றி,
அச்செய்தியாளர் சென்னையில் வசித்தாலும் கூட
டைம்ஸ் வியூ வெளியிட்ட செய்தி மலையாள
பார்வையிலானதே ஆகும்.
சென்னையில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியாவில்
செய்தி அறையின் கட்டமைப்புப் பற்றி
ஊடகத் துறை குறித்த உள்ளீடுப் பார்வை கொண்ட
எவருக்கும் தெரியும். அந்நாளிதழின் அனைத்து
முக்கிய பதவிகளிலும் மலையாளிகளே உள்ளனர் –
ஒரு நாயரோ ஒரு மேனனோ அது போன்றவர்களோ.
இருப்பு ஆசிரியர், அரசியல் ஆசிரியர், பெருநகர
ஆசிரியர் அனைவருமே மலையாளிகள்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் முன்பு பணியாற்றிய
ஒரு செய்தியாளர் இவ்வாறு கூறினார் :
“செய்தி அறை மலையாளிகளால் நிரம்பி வழிகிறது.
அவர்கள் எப்பொழுதும் தங்களிடையே
மலையாளத்திலேயே பேசிக் கொள்வார்கள்.
மலையாள பண்பாட்டின் ஆதிக்கம் செலுத்தும்
இருப்பு சென்னை அலுவலகத்தில் எப்போதும்
ஒலித்துக் கொண்டே இருக்கும்”
டைம்ஸ் ஆப் இந்தியாவின் மற்றொரு முன்னாள்
ஊழியர் இவ்வாறு கூறுகிறார்:
“டைம்ஸ் ஆப் இந்தியாவின் தற்போதைய சூழல்
என்னவெனில், தமிழர்கள் அங்கு நுண்ணிய
சிறுபான்மையினராக உள்ளனர். நான் அங்கு
இருந்தபோது, நானும் எனது சக பணியாளர்
ஒருவரும், தமிழ்நாட்டின் நலன்கள்
அலட்சியப்படுத்தப்பட்டாலோ ஒதுக்கப்பட்டாலோ
அதை எதிர்த்து பல முறை வாதிட்டிருக்கிறோம்”
“தமிழர்களை பெரிதும் எரிச்சல்படுத்திய மற்றொரு
நிகழ்வு என்னவெனில், டைம்ஸ் ஆப் இந்தியா
தனது சென்னை அலுவலகத்தை ஓணத்திற்காக
அலங்கரிக்க அனுமதித்த அதே வேளையில்,
தமிழ்ப் புத்தாண்டுக்காக அலங்கரிக்க அனுமதிக்க
மறுத்தது. எங்களில் சிலர் அது குறித்து கேள்வி
எழுப்பினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை”
முல்லைப் பெரியாறு விசயத்தைப் பொருத்தவரையில்,
மலையாள நாளிதழ்களின் துணையுடன்
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு
எதிரான பிரச்சாரத்தை தொடங்கியது கேரள அரசே
ஆகும். கேரள அரசின் முக்கிய நோக்கம் இடுக்கி
அணையிலிருந்து நீர் பெறுவதே. அதனை அடைய
வேண்டுமெனில் முல்லைப் பெரியாறு அணை
உடைக்கப்பட வேண்டும்.
காலப் போக்கில், மாநில அரசின் ‘நோக்கத்தை’
உயர்த்திப் பிடிப்பதில் மலையாள நாளிதழ்கள்
ஒன்றோடு ஒன்று போட்டியிட்டதில்,
அது ஒரு உணர்ச்சிகரமான விசயமாகி போனது.
எனவே, முல்லைப் பெரியாறு ஒரு நீர் வெடிகுண்டு
என்றே கேரளத்தில் உள்ள ஒவ்வொரு மலையாளியும்
நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு எந்த அறிவியல்
அடிப்படையும் இல்லாதபோதும், அணை எந்நேரமும்
உடைந்து விடலாம் என்று மக்கள் இன்று நம்புகிறார்கள்.
இதையே கடந்த பல பத்தாண்டுகளாக சொல்லிக்
கொண்டும் உள்ளனர்.”
இந்த உணர்வுகளோடு பொருந்தி, மலையாள
செய்தியாளர்களும் இதே பார்வையை
கொண்டுள்ளனர். இதில், தற்போது தமிழ்நாட்டில்
உள்ள ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் மலையாள
செய்தியாளர்களின் வலிமையான கட்டுப்பாட்டில்
இருப்பதால், எல்லா நாளிதழ்களும் கேரள
தரப்பினையே கூறுகின்றன.
மலையாளிகளின் உணர்வுகளுக்கு ஏற்ப,
அணையின் பெயரை தவறாக ‘முல்லாப் பெரியாறு’
என்று தொடர்ந்து கூறும் டைம்ஸ் ஆப் இந்தியா
தவிர, சென்னையின் நாளிதழான இந்துவும்
அவ்வாறே உச்சரிக்கிறது.
மக்களின் அச்ச உணர்வை அதிகமாக்கி,
முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதையே
தனது ஒரே நோக்கமாகக் கொண்ட கேரள அரசின்
கருத்தையே மலையாள செய்தியாளர்கள்
எதிரொலிக்க முயலும்போது, ஊடகவியல்
பாதிக்கப்படுகிறது. செய்தியின் நடுநிலைமை
அடிவாங்குகிறது.
முல்லைப் பெரியாறு வலுவிழந்து உள்ளது
என்றும் உடைந்து விடும் என்று உருவாக்கப்பட்டுள்ள
கருத்தாக்கத்திற்கு நீண்ட பின்னணி உள்ளது.
1978-இல் நடந்த நிகழ்வுகளை நேரில்
அறிந்தவரான சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த
செய்தியாளர் இவ்வாறு கூறுகிறார்:
“மலையாள செய்திஏடுகளில் இருந்த
செய்தியாளர்களில் மிக முக்கியமான இடத்தை
உடையவரும், அக்காலத்திய அரசியல்வாதிகளுக்கு
ஆலோசனை சொல்லக்கூடியவரும்,
அவர்களின் பெரும் ஆதரவைப் பெற்றவரும்,
திருவனந்தபுரத்திலிருந்து வரும் மலையாள
மனோரமாவின் தலைமை பொறுப்பிலிருந்தவருமான
திரு.பட்ரோஸ் சும்மாரால்தான் கேரளாவில்
அனைத்தும் தொடங்கியது.
1976-இல் இடுக்கி அணை அமைக்கப்பட்ட
நாளிலிருந்து தேவையான அளவு நீரை நான்கு
பருவ காலங்களிலும் வழங்கவில்லை என்பது
குறித்து ஏமாற்றமுற்று இருந்த அன்றைய கேரள
மாநில மின்சாரத் துறை தலைமைப் பொறியாளரும்
தற்போது கேரள அரசு ஆலோசகருமான
எம்.பி.பரமேசுவரன் நாயருடன் அன்றைய
கேரள காங்கிரஸ் தலைவர் கே.கருணாகரன்
நடத்திய உரையாடலைத் தொடர்ந்து,
கேரளாவில் அப்போது இருப்பதிலேயே
அதிக அளவில் விற்பனையான நாளிதழான
மனோரமா நாளிதழ் 1978இல் முதன் முதலாக
‘முல்லைப் பெரியாறு போட்டான் போருன்னு’
(முல்லைப் பெரியாறு வெடிக்கப் போகிறது)
என்று தலைப்புச் செய்தி தாங்கி வந்தது.
முல்லைப் பெரியாறு இடுக்கிக்கு மேலணையாகும்.
கேரள எல்லைக்குள் உள்ள முல்லைப் பெரியாறு
அணையின் மீது சட்டப்பூர்வ அதிகாரத்தை
ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு பெற்றிருந்தது.
மலையாள மனோரமாவால் முதலில்
உருவாக்கப்பட்ட ‘அச்சம்’ பின்னர் பிற மலையாள
செய்திஏடுகளால் கையிலெடுக்கப்பட்டன.
அந்த நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்ல
வேண்டுமெனில், பிப்ரவரி 2006-இல்
உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒர்
உத்தரவைப் பிறப்பித்தது. அதில் அணை
வலுவிழந்து இல்லை என்றும் தமிழ்நாடு அரசு
நீரின் தேக்க அளவை உயர்த்திக் கொள்ளலாம்
என்றும் கூறியது.
இன்று ஒவ்வொரு மலையாளி செய்தியாளரும்
பட்ரோஸ் சும்மாராக செயல்படுகிறார் என்பதுதான்
வேதனையானது. இந்த வேதனை ஊடகவியலுக்கு
மட்டுமல்ல உண்மைக்குமே. ஆனால்
இந்த செய்தியாளர்கள் புரிந்து கொள்ளத் தவறியது
என்னவெனில், அவர்களின் ஆதிக்க வெறி,
இந்தியாவின் பன்முகத் தன்மையை கிழித்து
எறிந்துவிடும் என்பதைதான்.
கொஞ்சம் நீருக்காகவும், பிரிட்டிஷ் இந்திய அரசு
திருவனந்தபுரம் அரசரிடமிருந்து சட்டப்படி
வாங்கிய நிலத்தை மீட்டெடுப்பதற்காகவும்,
கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் தங்களின்
தொழில் நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?



இந்த மலையாளி பட்ச்சோந்திகள் நாட்டில் உள்ளவரை நம் இழித்தவாயன் தம்ழிளர்கள் சாகவன்டியாயதுதன்
same malayala manorama runs popular tyre industry known as MRF in TAMIL NADU.Hindu editor n.ram studied one of manorama family member RAVI MAMMEN who is no more now.That is the reason why Hindu newspaper does not have a competitor in kerala.
START SPREADING ALL PAPERS, MAGAZINES RUN BY MALAYALIS. SO THAT WE TOGETHER WILL BOYCOTT SUCH THINGS. EVEN A SEPARATE SPREAD FOR THE SAME COULD BE WELCOMMED
‘இந்து’வை ஒரு பத்திரிக்கையாக கருத்தில் கொண்ட காலம் மலையேறிவிட்டது. ஹோஸ்னி முபாரக்கை அரபு பத்திரிகைகள் ‘பொது தொலைபேசி’ என்று கிண்டலடிப்பது உண்டு. யார் சில்லறை போடுகிறார்களோ அவர்களுக்காக பேசுவது என்பது அதன் பொருள். ‘இந்து’வும் அது போல தான். அதுக்கு சில்லறை போட்டவர்களில் சிங்கள அரசு முக்கியமானது. அந்த பத்திரிகையை நான் கையால் தொட்டு 7 வருடங்கள் ஆகிறது.
Since Dayanithi maran became close relative of N.Ram,Sun media group will never have it’s English daily in Thamizh nadu.This is mututual understanding between business people regardless of their mother tongue and religion.we merely judge politicians wat they are talking in front of us without knowing the happenings in their backyard.
One of the ways to counter Kerala’s arguements in favour of breaking Mullai Periar dam is to relay the Kerala’s A.G’s statement in the court in the T.V media of every Tamil channel every five minutes. This way, tamils will come to know of the reality. Even more than one year, the Tamil channel to relay this every five minutes. Lset us see what happens. I doubt whether the Tamil channels will do this.
இந்த வலைதளத்தின் மீது ரூ.100 கோடி கேட்டு டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.