மிஷன் இம்பாஸ்ஸிபிள் ஹீரோவும்- நமது அரசும் …..

மிஷன் இம்பாஸ்ஸிபிள் ஹீரோவும்-
நமது அரசும் …..

இன்றைய தினத்தில் உலகத்திலேயே மிக
உயரமான கட்டிடம் –
துபாயின் புர்ஜ் கலிபா டவர் ஓட்டல்
(Burj Khalifa tower) !

அதன் உச்சியில், கிடு கிடுக்க வைக்கும் உயரத்தில், நூறு மாடிகளுக்கும் மேலே,
1000 அடி   உயரத்தில்
ஓட்டல் ரூமின் கண்ணாடி சுவற்றை
உடைத்துக்கொண்டு, வெளியே பாய்ந்து,
ஜன்னலுக்கு வெளியே சுவற்றைப் பிடித்து
தொங்கிக் கொண்டு அந்த ஒற்றன் புரியும் சாகசங்கள் –
மெய்சிலிர்க்க வைக்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத கம்பிகளால் அவர் பத்திரமாகப்
பிணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை -ஏற்கெனவே
ஷூட்டிங் எடுக்கப்பட்ட விதத்தை காட்டிய படத்தில்
நாம் பார்த்து விட்டோம்.. இருந்தாலும் டூப் போடாமல்
டாம் க்ரூய்ஸ்  நிகழ்த்தும் அந்த சாகசங்கள்
பிரமிக்கத்தக்கவை.
எவ்வளவு தான் டெக்னாலஜியை
பயன்படுத்தினாலும் – அதற்கும் ஒரு மூளைத்திறன், ஒரு தைரியம் வேண்டுமல்லவா ?
மிஷன் இம்பாசிபிள் -4  (ghost protocol)
படம் பார்த்தது
என்னுள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய சாகசங்களை உண்மையிலேயே
செய்யக்கூடிய ஏகப்பட்ட வீரர்கள் நம் ராணுவத்தில், கமாண்டோ படையில் இருக்கிறார்கள்.
அவர்களை  நம் அரசு உரிய விதத்தில்
பயன்படுத்திக் கொள்ளாதது தான் வருந்துதற்குரிய
விஷயம்.

அந்த வீரர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய
விதத்தில் பயன்படுத்தி இருந்தால் – இன்று
பொழுது விடிந்தால்,
பொழுது போனால் நிகழும் குண்டு வெடிப்பு
சம்பவங்கள் நிகழுமா ?

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில்
நம்பர் 1.
போர்ப் பத்திரிகையின் செய்தியின்படி,
உலக அளவில் தேடப்படும் குற்றவாளிகளில்  நம்பர் 4.
2003-ல் மும்பையில் 250 க்கும் மேற்பட்ட அப்பாவிகள் குண்டுவெடிப்பில் துடிதுடித்து சாக, காரணமானவன்.
2009-ல்  மும்பையில் நிகழ்ந்த தீவிரவாதிகளின்
தாக்குதலுக்கு ஆயுத சப்ளை செய்தவன் என்று
இப்போதும் மும்பை சிறையில் இருக்கும்
பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் வாக்குமூலத்தில்
சொல்லப்படுபவன்.
ஆயுதக் கடத்தல்,  போதைப் பொருள்கள்
கடத்தல்-வியாபாரம்,
இந்தியாவில் தாக்குதல்களில் ஈடுபடும்
தீவிரவாதிகளுக்கு பணம், ஆயுதம் கொடுப்பவன்.
தன் மகளை பாகிஸ்தானின் முன்னாள்
கிரிக்கெட் கேப்டன் ஜாவேத் மியான் தா  வின்
மகனுக்கு துபாயில் பகிரங்கமாகதிருமணம்
செய்து கொடுத்தவன்.
இப்போதும் அவனுக்கு துபாயில் வியாபாரத்
தொடர்புகள் இருக்கின்றன.
மாதா மாதம் துபாய் வந்து போகிறான்.
பாகிஸ்தானில், வீட்டு எண் 37, 30வது தெரு,
டிஹெஸ்,  என் கிற விலாசத்தில் கராச்சியில்  
வசிக்கிறான்.
அவனுக்கு பாகிஸ்தான் ராணுவமும்,
ஐஎஸ் ஐயும் பாதுகாப்பு  கொடுக்கின்றன.

இத்தனை விவரங்களும் தெரிந்தும் –
சாதிக்கக்கூடிய ராணுவ வீரர்களும்,
கமாண்டோக்களும்,
ஷார்ப் ஷூட்டர்களும்  நம்மிடையே கணிசமாக
இருக்கின்றார்கள் என்கிற  நிலையிலும் –
இந்த தாவூத் இப்ராஹீம் என்கிற
கொலைக்குற்றவாளியை பிடித்துக் கொடுங்கள்
என்று 8 வருடமாக பாகிஸ்தானையும்,
இண்டர்போலையும் கெஞ்சிக்கேட்டுக்
கொண்டிருக்கிறோமே இது நமக்கு
அவமானம் இல்லை ?

இந்த அரக்கனை, அவன் இருக்கும்
இடத்திலேயே தீர்த்துக்கட்ட –
நினைத்தால் நம்மால் முடியாதா ?
பின்னர் ஏன் நினக்கவில்லை ?

என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எத்தனை பேர்கள்
இருக்கிறார்கள் நம்மிடம் !
அவர்கள் உள்ளூருக்கு மட்டும் தானா ?
ஏன் – இரண்டு மாதம் அவர்களுக்கு கராச்சி
தூதரகத்தில், வேறு பெயர்களில், பதவிகளில், டூட்டி போட்டால்
காரியம் முடிந்து விடாதா ?

நம் அரசில், அரசியலில் –
அதிகாரத்தில் இருப்பவர்கள் –
இந்த விஷயத்தில் மட்டும்
ஏன் இப்படி கோழைகளாக இருக்கிறார்கள் ?

லஞ்சம், ஊழல், திருட்டு,
கூலிப்படையை வைத்து ஆள் கடத்தல்,
கொலை, கொள்ளை  – அத்தனையும் செய்யத்தயங்காத நம் அரசியல்வாதிகள்  – இதற்கு மட்டும்
அஞ்சுவது ஏன் என்பது தான் புரியவில்லை !

சொந்த லாபங்களுக்காக அல்லாமல்,
இந்த நாட்டு மக்களுக்காக,  துணிந்து செயல்
படக்கூடிய தலைவர்கள் நமக்கு எப்போது
அமைவார்களோ ?

அமெரிக்கா பின் லேடனை அழிக்க
செய்தது போல்,  பாகிஸ்தானுக்குள் விமானங்களை எல்லாம்
அனுப்ப வேண்டும் என்கிற அவசியமே
நமக்கு இல்லை.
ஆளைத்தெரியும் –
இருக்கும் ஊரைத்தெரியும்,
விலாசமும்  தெரியும் –
செய்ய வேண்டியது -துணிச்சலாக முடிவுக்கு
பொறுப்பேற்றுக் கொண்டு இரண்டு
கமாண்டோக்களை கராச்சி இந்திய தூதரகத்தில்
போஸ்டிங்  போட வேண்டியது மட்டும் தான்.

இதை  செய்யக்கூடிய தலைவர்கள்
நம்மிடையே இன்று இருக்கிறார்களா ?
முன்னால் இருந்தார் -இந்தியாவின்
“இரும்பு மனிதர்” வல்லபாய் படேல் !

இன்று ………?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to மிஷன் இம்பாஸ்ஸிபிள் ஹீரோவும்- நமது அரசும் …..

  1. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    உங்களுக்கு ரொம்ப தான் தமஷா போச்சு போங்க…
    நம் அரசு அதிகாரிகள் பற்றி தெரியுமா தெரியாதா?
    கமலின் குருதி புணல் பார்த்தீர்களா? அதில் கமல் வேறு வழியின்றி தீவிரவாதியின் ஏஜன்ட் ஆவது போல காட்டுவார்கள்…

    நம்ம மேல் மட்ட அதிகாரிகள் பணத்துக்காக அப்படி தான் இருக்கிறார்கள் .. அரசின் அனைத்து மூவும் தாவுதுக்கு அனுப்பி அவனிடம் லஞ்சம் வாங்கும் இவர்களா அவனுக்கு எதிராக இருப்பார்கள் ?

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    வெந்நீரே போடத்தெரியாத சமையல்காரனை வைத்துக்கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்ய ஆசைப்பட்டானாம் ஒருத்தன்…அதுமாதிரி இருக்கு நீங்க சொல்றது..
    அது சரி..என்னிகாவது ஒரு நாள் நடக்கும் அல்(ல)வா?

    • yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

      இதுக்கு பொருத்தமானவர் ஒருத்தரை
      எனக்குத் தெரியும்.
      ஆனால் – நான் அவர் பெயரை சொல்ல
      மாட்டேன்.
      கண்பத் சார் சொன்னால் தான்
      சரியா இருக்கும் …… !

  3. R. gopalakrishnan's avatar R. gopalakrishnan சொல்கிறார்:

    Dear Mr.Kaveri Maindan,
    I don’t know how your keeping still the belief, ‘If not to-day, this country will change tomorrow’ still? I am in the last phase of my life. I have lost all hope of positive change in our country. Probably you may see the sea change in our people to-morrow. Good luck sir.

  4. P. Saravanan's avatar P. Saravanan சொல்கிறார்:

    Excellent. But ur expectation???

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஆசைபடலாம்….அனால் உங்களுக்கு பேராசை!
    நம்ம ஊரில் பிடிபட்டவர்களுக்கே இவனுங்களாலே (நிச்சயமாக இவனுங்களுக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை) ஒரு தண்டனையையும் கொடுக்கமுடியவில்லை. இதுலே கராச்சிக்கு போஸ்டிங்க் போட்டு…. தமாஸு….தமாஸூ!

    கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களே
    மனிதனுக்கு நம்பிக்கைதான் வாழ்க்கையே!
    “நம்பினார் கெடுவதில்லை”!
    “நீ எதுவாக எண்ணுகிறாயோ அதுவாகிறாய்”
    வாருங்கள் நல்லதையே நினைப்போம்…
    நம்பிக்கையோடு வாழ்வோம்.
    மாற்றம் நிச்சயம் நடக்கும்….வெகு விரைவில்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.