விஜய் டிவியில் ஒரு கொள்ளை கும்பல் ….
மக்களை ஏமாற்றுவது எப்படி ?
ஒரு கோடி பணம் தருவதாக சொல்லி ஒரு
புரோகிராம் பண்ணி நம்மிடமிருந்தே
கோடி கோடியாகக் கொள்ளை
அடிக்கிறது ஒரு கும்பல்.
எப்படி ?
ரொம்ப சிம்பிள் –
மக்களை ஏமாற்ற வழிகள் எத்தனையோ –
ஆனால் பார்முலா ஒன்று தான். தாம்
ஏமாற்றப் படுகிறோம் என்பது மக்களுக்குத்
தெரியாமலே அவர்களை
ஏமாற்றிப் பிடுங்க வேண்டும்.
அதில் தான் சாமர்த்தியம்.
அதுவும் கேரளத்தவருக்கு சொல்லிக்
கொடுக்கவும் வேண்டுமா ? (விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்
–
அவர்களே !)
டிவியில் – பத்திரிகைகளில் –
பரபரப்பாக ஏகப்பட்ட விளம்பரங்கள்.
“உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய
ஒரு கேள்வி – பதில் சொல்லி -ஒரு கோடியை வெல்ல வாருங்கள் “- என்று
கவர்ச்சிகரமான அழைப்பு !
மிக மிக சுலபமான (அபத்தமான என்று கூட
சொல்லலாம்!) ஒரு கேள்வி –
உதாரணம் –
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள,-
அணுமின் நிலையத்துடன் தொடர்பு கொண்ட இடம் –
கீழ்க்கண்ட 4 பதில்களில் எது சரி ? –
1) காங்கேயம் 2) கூடங்குளம்
3) கோயம்புத்தூர் 4) கோவில்பட்டி
இன்றைய தேதியில், தினந்தோறும் செய்தியில்
அடிபடும் கூடங்குளம் அணுமின் நிலையம்
பற்றி அறியாதோர் எத்தனை பேர்
தமிழ் நாட்டில் இருப்பார்கள் ?
ஆஹா -இவ்வளவு சுலபமான கேள்விகளா –
என்று கவர்ந்து இழுக்கப்பட்டு, உடனடியாக
பதில் அனுப்ப வேண்டும் என்கிற அவா –
டெம்ப்டேஷன் -ஏற்படாதவர்களே இருக்க
முடியாது.
பதில் அனுப்பும் முறையோ – படு சுலபம்.
அவர்கள் கொடுத்திருக்கும் எண்ணுக்கு –
செல்போனில் குறுஞ்செய்தி (sms ) அனுப்பலாம்.
அல்லது அவர்கள் கொடுத்திருக்கும்
4 எண்களில் எதாவது
ஒன்றிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பதிலை பதிவு செய்யலாம்.
சரி – இதில் மக்கள் எந்த விதத்தில்
ஏமாற்றப்படுகிறார்கள் ?
ஒன்று – அநேகமாக அத்தனை பேருமே
சரியான விடை அனுப்பி இருக்கக்கூடிய நிலையில், அடுத்த நிலைக்கு
(next stage ) போட்டியாளர்களை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது
எங்கும் விளம்பரப்படுத்தப்படவில்லை.
சரியான விடை அளிக்கும் அத்தனை பேரும்
அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்
என்பது எங்குமே சொல்லப்படவில்லை.
போட்டியின் முக்கியமான விதிமுறை எங்குமே
சொல்லப்படாமலே போட்டிக்கு வலை வீசப்படுகிறது.
இரண்டு – இது மிக பயங்கரமான ஒரு மோசடி.
கோடிக்கணக்கான நபர்கள் தொலைபேசி
அல்லது sms மூலம்
தொடர்பு கொள்வார்கள் என்கிற நிலையில்,
தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
செய்துகொண்டு, இந்த விளம்பரம் வாயிலாக வரும் அழைப்புகளுக்கு
ஒரு அழைப்புக்கு இவ்வளவு ரூபாய்
நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு
தரப்பட வேண்டும் என்கிற வகையில்
ஒரு ஏற்பாடு.
இந்த பணத்தை தொலைபேசி நிறுவனங்கள்
தங்கள் பங்கிலிருந்துகொடுக்க வேண்டாம்.
அதை உபயோகிப்பாளர்களிடமிருந்து
வசூலித்து கொடுக்க வேண்டும் – அவ்வளவு தான்.
அதெப்படி – உபயோகிப்பாளர்கள் அவ்வளவு
சுலபமாகக் கொடுத்து விடுவார்களா ?
இங்கு தான் இருக்கிறது ட்ரிக்.
சாதாரணமாக ஒரு sms க்கு 50 காசுகள் என்றால்,
இந்த அழைப்பிற்கு மட்டும்
சில கம்பெனிகளுக்கு 5 ரூ., சிலதுக்கு 6 ரூ., ஒரு கம்பெனிக்கு ரூபாய் 6.99 . …
என்று பில்லில் சேர்த்து வசூலிக்கப்படும்.
இதற்கு ஒத்துக்கொண்டு தான் நீங்கள் இந்த
வசதியை பயன்படுத்துகிறீர்கள் !
நாங்கள் எப்போது ஒத்துக்கொண்டோம்
என்கிறீர்களா ?
அந்த விளம்பரங்களுக்கு கீழேயே கண்களுக்குப்
புலப்படாத எழுத்துக்களில் இந்த கண்டிஷன் கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தொலைபேசி வசதிகளை நாம் உபயோகித்து
பதிலை அனுப்புவதன் மூலம், அதை படித்து,
ஏற்றுக்கொண்டு தான்
பயன்படுத்துகிறோம் என்பதை நாம் உறுதி
செய்கிறோம்.(நமக்கு தெரியாமலே!)
உங்கள் வீட்டில் இந்த விளம்பரங்கள் கொண்ட
பத்திரிகைகள் இருந்தால் மீண்டும் எடுத்துப்
பாருங்கள். நாம் ஏமாந்திருப்பது புரியும்.
சில சிறுவர்களிடம் நான் பேசிப் பார்த்தபோது
இதன் விபரீதம் புரிந்தது. சிலர் 4, 5 பதில்கள்
கூட அனுப்பி இருக்கிறார்கள். சிலர் வெவ்வெறு தொலைபேசிகளை
பயன்படுத்தி பல பதில்களை
அனுப்பி இருக்கிறார்கள்.
ஆசை !! டிவியில் தோன்ற ஆசை –
போட்டியில் வெல்ல ஆசை !!
இந்த தொலைபேசி அழைப்புகளின் மூலம்,
sms களின் மூலம் – தொலைபேசி நிறுவனங்கள்
மூலமாக பல கோடி ரூபாயை
நம்மிடமிருந்து – நமக்குத் தெரியாமலே –
அபகரித்துக்கொண்டு,
அதிலிருந்து , அப்படி கொள்ளை அடித்த
பணத்திலிருந்து ஒரு பகுதியை பரிசாக
கொடுக்கப் போகிறார்கள் !
இப்பேற்பட்ட ஒரு மெகா மோசடியை எப்படி
யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்
என்பது தான் புரியவில்லை. காவல்துறை
இத்தகைய மெகா திட்டங்கள், போட்டிகளை
கண்காணித்து உரிய எச்சரிக்கைகளை
கொடுத்திருக்க வேண்டும்.
போட்டி தொலைக்காட்சிகள் பல இருக்கின்றன –
அவையும் காட்டிக் கொடுக்கவில்லை.
(ஒரு வேளை பின்னால் அவர்களும் இதே
வழியில் இறங்கத் தீர்மானித்திருக்கலாம் ).
பத்திரிகைகளாவது விழிப்புணர்வுடன் இவற்றை
எல்லாம் கவனித்து மக்களுக்கு
எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா ?
(ofcourse – ஒரு பத்திரிகை விடாமல், அத்தனை
பத்திரிகைகளையும்
“கவனித்து” கொண்டிருக்கிறார்கள் -)
எல்லாவற்றிற்கும் அரை அரை பக்கங்களில்
ஏகப்பட்ட விளம்பரங்கள் –
அதுவும் காரணமாக இருக்கலாம் !
பண்டிகை காலங்களில் அனுப்பப்படும்
வாழ்த்துச்செய்திகள் அடங்கிய sms களுக்கு
அதிக தொகை வசூலிப்பதை கூட
ஆட்சேபித்திருக்கும் தொலை தொடர்பு
ஒழுங்குமுறைஆணையம் இதை,
இந்த முறைகேட்டை, மோசடியை கவனிக்க
வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுத்து
மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை
தவிர்க்க வேண்டும்.
மக்களும் தங்களது கடுமையான எதிர்ப்பை
விஜய் டிவி க்கு தெரிவிக்க வேண்டும்.
ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
நாம் தான் ஏமாறுவதிலேயே –
பெருமை கொள்பவர்கள் ஆயிற்றே !



காவிரி மைந்தன்,
இந்த பகற்கொள்ளை முதல் முறை அல்ல. ஏற்கெனவே பல சேனல்களில் ‘வெற்றிகரமாக’ ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியையே வேறு விதமாக நமக்குள் புகட்டிக் கொண்டிருக்கிறார்கள். கலைஞரின் இசையருவி, ராஜ் டிவி, நியோ ஸ்போர்ட்ஸ், எஸ் எஸ் மியூசிக்… மேலும் சிலவற்றில் (பெயர்கள் நினைவில் இல்லை) இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இருவேறு முகங்களை – தாடை மற்றும் கன்னம் – மட்டும் தெரியும்படி காட்டுவார்கள் (சினிமா நட்சத்திரங்கள் அல்லது கிரிக்கெட் வீரர்கள்). சின்னப்பசங்க கூட எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய அதை, அவர்களது ஆட்களே போன் செய்து தவறாக சொல்வார்கள். அதற்குள் முந்திக்கொண்டு நாம் சொல்லிவிடவேண்டும் என்று லைனில் காத்திருப்போர் பட்டியல் நீளும். காத்திருக்கும் செலவு நிமிடத்திற்கு பத்து ரூபாய்! இது எப்படி இருக்கு!!
It is the greed of easy money that drives these programs. Stop blaming Channels. We should be alert.
இது இன்று நேற்றா நடக்கிறது, காவிரி மைந்தன்?
90களிலேயே “கோன் பனேகா கடோட்பதி” அப்படின்னு ஆரம்பிச்சுட்டாங்களே!
உங்கள் கருத்தில் உள்ள ஞாயம் புரிகிறது. ஆனால் அது அனைத்து தொ க நிருவனங்களும் சரிசமமாக செய்து நம்மை மொட்டையடிக்கின்றன என்பது என் கருத்து. இதில் தமிழ் நிர்வாகமோ மளையாள நிர்வாகமோ அல்லது ஆங்கில நிர்வாகமோ விதிவிலக்கல்ல
இன்று கூட ஏகப்பட்ட பத்திரிகைகளில்
பெரிய பெரிய விளம்பரங்கள் வந்திருக்கின்றன.
தொடர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள்.
தமிழில் இதுவரை இவ்வளவு பெரிய
கொள்ளை நடந்தது இல்லை.
இந்த fraud மக்களுக்கு எப்போது தான்
புரியும் ? அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது ?
Breach of contract /commitment.என்பதே மோசடிஆகும்.அவ்வகையில் நம்மை தொடர்ந்து பல ஆண்டுகளாக மோசடி செய்து கொண்டிருப்பது நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளே.
விஜய் டி வி செய்வது Exploitation என்ற பிரிவின் கீழ் வரும்.இங்கு Exploit செய்யப்படுவது மக்களின் அதீத பேராசையே!multi level marketing,share market போன்றவைகளும் இப்பிரிவில் வரும்.
இப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
நம்மை மொட்டை அடிப்பவர்கள் சோனியா,கருணா,ஜெயா போன்றவர்கள்.அதன்பிறகு நமக்கு சந்தனம் விற்பவர்கள் ஊடகங்கள்,ஆன்மீக வாதிகள்,,மருத்துவ மனைகள்,கல்வி நிறுவனங்கள் பல்பொருள் விற்பனை நிறுவனங்கள்,ஜோசியர்கள் ஆகியோர்!
நம்மால் முடிந்தது என்னவென்றால் நாவிதர்களையும்,சந்தன வியாபாரிகளையும் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பது தான்!இதனால் (நம்)செல்வம் ஓரிடத்தில் குவியாமல் பரவி பரிமளிக்கும்.
ஜெய் ஹிந்த்
இங்கும் இவையுண்டு; சிலசமயம் கேள்வி ஒன்றும் ஒன்றும் எவ்வளவு எனும் வகையே! ஆனால் அழைப்புக்களுக்கு இவ்வளவு அறவிடப்படும் என அவை தெளிவான எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளதுடன், அறிவிப்பாளரின் குரலிலும் சொல்லப்படும்.
பல நிகழ்ச்சிகள் மிஸ் பிரான்ஸ் உட்பட சகல போட்டிகளிலும் பார்வையாளர் வாக்குக்கள் எனும் ஒரு அபந்தம் திணிப்பதே! இந்தக் காசு கறக்கத்தான்.
இங்கு தொலைக்காட்சி ஒரு நடன, பாடல், அல்லது உண்மைக்காட்சிகளெனும் போர்வையில் கொஞ்சச் சிறுசுகளை ஒரு இடத்தில் 2 மாதம் அடைத்து வைத்துக் கூத்தடிக்க விடுதல்…. இவ்வகை நிகழ்ச்சிக்கு ஆள் தெரியும் போது இங்குள்ள வெளிநாட்டவரின் பணத்தில் குறிவைத்து போட்டியாளர் தேர்வில் முதல் தகுதியாவோரில் 20 பேராகில் அதில் கட்டாயம் 2 ஆபிரிக்கர்கள், 2இஸ்லாம் நாடுகளான அல்யீரியா, மொரக், துனிசியா வைச் சேர்ந்தவர், 2 தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தோர், இப்போ சமீபகாலமாக 2 இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம்
போட்டியாளர்களையும் சேர்த்து அந்தந்த நாட்டாரின் காசைக்கறக்க இயன்றவரை கடைசிவரை கூட்டி வந்து
இறுதியில் எப்படியோ ஒரு பிரான்சியரைத் தேர்வாக்கி, நிகழ்ச்சி நடத்த ஆன செலவு போக மில்லியன் கணக்கில் இலாபம் கண்டு; இந்த நிகழ்ச்சிகளை வருடாவருடம் தொடராகவே நடத்துகிறார்கள்.
இந்த உண்மைக்காட்சிகள் அடங்கிய “”ரியலிற்றி சோ””வில் பங்கேற்கும் சிறுசுகளுக்கு எவ்வளவு சில்லறைத்தனம் காட்டமுடியுமோ அதைக் காட்டுங்கள்.
பாலுறவு உட்பட எனச் சொல்லியே அனுப்பப்படுகிறது.
அதை 24 மணி நேரம் ஆயிரத்துக்கு மேற்பட்ட படப்பிடிப்புக் கருவிகள், மலசலகூடம் உட்படப் பொருத்திப் படம் பிடித்து, ஒரு பகுதியைச் சாதாரண தொலைக்காட்சியிலும், ஏடாகூடங்கள் கட்டணத் தொலைக்காட்சிக்கும், இணையத்துக்கும் விற்றும் காசு பார்க்கிறார்கள்.
ஒட்டு மொத்தம் அமெச்சூர் நீலப்படங்களாக அங்கீகரிக்கப்பட்டு, ஒலிபரப்பாக்கிக் காசு பார்க்கிறார்கள். இதில் பிரபங்கேற்போரும் காசும், பிரபல்யமும்
கிடைப்பதால் கூச்சநாச்சமே இல்லாமல் போட்டி போட்டுக் காட்டுகிறார்கள்.
இவை நம் நாடுகளில் வெகுவிரைவில் வர சாத்தியமுண்டு.
அதனால் நமது பணத்தில் நாமே கவனமாக இருக்கவேண்டும். எவனும் சும்மா தரமாட்டான், இதையும் புரிய வேண்டும்.
public awareness is the only solution to this. Every one should individually
propogate the fraud involved in this.
வருக நண்பர்களே,
நிறைய கருத்துப் பரிமாற்றம் தேவை
என்று கருதி தான் இதை எல்லாம்
முனைந்து எழுதுகிறேன்.
நீங்கள் எடுத்து வைக்கும் கருத்துக்களுக்கு
நன்றி.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் –
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
மற்றவர்களுடன் இந்த மாதிரியான விஷயங்களை
பகிர்ந்து கொள்ளுங்களேன்.
இத்தகைய மோசடி பேர்வழிகள் எல்லாம் –
இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு
நாள் மாட்டாமலா போவார்கள் ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
why you blame to telecommunication companies and other commercial companies. First get your part and think.
Another thing, You should know the truth of the human mind. because nobody gives lot of money to someone who needs. so this is the way to collect small amount from each viewers and give someone to get rich. Just think if they give money to every week for one person, how they survive? , Other thing is our people have helping sense but they haven’t economy stability to help to big amount. But they don’t think when their desire comes they spent money.
So don’t you get current business world?. Please go through the business line and get the knowledge then blame when you feel if this is cheating.
2011 ஆம் ஆண்டு நடந்த TOP நூறு மோசடிகளை பட்டியலிட்டால்,
கருணாநிதி,
மன்மோகன் சிங்,
சோனியா,
மாறன சகோதர்கள்,
கனிமொழி,
தி.மு.க அமைச்சர்கள்
ஆகியோர் செய்தவை முதல் பத்து இடங்களை பிடிக்கும்.
“பேரூழலில் தி.என்றும் அ என்றும் உண்டோ?”
எனும் பாரதியின் அமர வரிகளுக்கிணங்க,
ஜெயா,தான் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் செய்தது, கடைசி எட்டு இடங்களுக்குள் வரும்.
“எல்லாவற்றிக்கும் காரணம் என் தோழிதான்” என சொல்வதுபோல, ஜெயா எடுத்த நடவடிக்கையை,
“இது சரியானது!,இனி தமிழகத்தில் நல்லாட்சி தான்”
என்று சோ சொல்வது 99 ஆவது இடத்தையும் பிடிக்கும்
நூறாவது இடத்தை வேண்டுமானால், விஜய் TV க்கு வழங்கலாம்
Dear Mr. KM,
I got this msg from my friends in india. This is little bit informative. கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்………ஆம…் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்… விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி “பிக் சினர்ஜி” எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் ” நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சி…..
முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது…. இவர்கள் தினமும் 30 – 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்…. இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.
இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் “ஒன்னும் செய்யமுடியாது”. உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்….. தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்…. தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள் நான் பப்ளிக் லிட்டிகேஷன் போட முயற்ச்சி செய்கிறேன்,
அக்ஷய திரிதியைக்கு தங்கம் வாங்கினால் அந்த வருஷம் முழுவதும் தங்கமா குவியும்னு நம்பற மக்கள் இருக்கற வரைக்கும், பழைய ஸ்டாக் துணிகளை ஆடிக்கழிவில் வாங்குவதற்கு தி.நகரை மொய்க்கும் மக்கள் இருக்கின்ற வரைக்கும், நடிக, நடிகைகளை அவர்களின் நடிப்பிற்கும் அப்பாற்பட்டு புகழ்கிற அல்லது அவர்கள் தலைவர்களாகி நமக்கெல்லாம் நல்ல எதிர் காலத்தை தந்துவிடுவார்கள் என்று நம்புகிற மக்கள் உள்ள வரைக்கும், நாட்டைப் பற்றியோ, நாட்டின் பொருளாதாரத் தைப் பற்றியோ, குறைந்தது தம் தெரு அல்லது பக்கத்து வீடு பற்றி அக்கரை சிறிதும் இல்லாமல் சுயநலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மக்கள் இருக்கின்ற வரைக்கும் இந்த மாதிரி பணம் பறிக்கும் கும்பல்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதில் விஜய் டீவி என்ன சூரியா என்ன? நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை பதிவேற்றிய கா.மை அவர்களுக்கு நன்றி.
சில மாதங்களுக்கு முன் ஒரு வலைதளத்தில் படித்தது. ஒருவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகின்றது. அந்த நபரும் ஏதோ முக்கியமான அழைப்பாக இருக்குமோ என்று நினைத்து மீண்டும் அழைத்தால், ‘நீங்கள் ஆன்களிடம் பேச வேண்டுமா அல்லது பெண்களிடத்தில் பேசவேண்டுமா’ என்ற பதிவு செய்யப்பட்ட குரல். உடனே அழைப்பைத் துண்டித்துவிடுகிறார். ஆனால் அவரது கணக்கிலிருந்து 6 ரூபாய் எடுக்கப்பட்டுவிட்டது. இது மாதிரி கொள்ளையை என்ன என்று சொல்வது.
I saw your comments. It is very true.You have created awareness.Thanks for your message.
Balu.
இதெல்லாம் காலம் காலமாக நடப்பதாயிற்றே!
இதற்கு மக்களின் பண, புகழாசையும் ஒரு காரணம். ஆனால் இதைத் தவறென்று சொல்ல முடியாது. எப்படியாவது ஏதாவது கிடைத்து விடாதா என்ற மனப்பான்மை தான்.
ஊசி இடம் கொடுப்பதால் நூல் நுழைகிறது. என்ன சொல்லி என்ன பயன்? இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
விஜய் டிவி ஷோ, யாராவது கேரளால இருந்து கூட்டிட்டு வந்து 1 கோடி குடுப்பாங்க
Criminal action should be taken against the T.V . Concerned.
senthil Kumar pathivukai naan varaverkiren , thanks for your informative sharing to the article
dear fellow citizens,
it is easy to blame and shout at others.there are thousands of great things happening around us.change your perspective of life you will really change india in specific and the whole world in general.stop complaining strat thinking positively.if wer all focus our time and energy looking for great initiatives and inovations we can really transform india.joine me if you wish to. i urge all to appreciate and support govt initiatives and great tv shows etc.lets try to be pro gov,pro society.i am proud to ba an indian especially a tamilian
shanmugam
dubai