………………………..

………………………….
நடுக்கடலில் மிரட்டிய பேய் கப்பல்…. !!!!
1872-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மேரி செலஸ்டி – கப்பல், இத்தாலியின் ஜெனோவாவுக்கு 1,700 பீப்பாய்கள் மதுபானங்களுடன் புறப்பட்டது.
கப்பலில் கேப்டன் பெஞ்சமின் பிரிக்ஸ் (Benjamin Briggs), அவரது மனைவி, மகள் மற்றும் 7 பணியாளர்கள் என மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர்
ஐரோப்பிய கடற்கரை வழியாக பயணத்தை தொடர்ந்த கப்பல் டிசம்பர் 4ஆம் தேதி அட்லான்டிக் கடலின் நடுப்பகுதியில் அசோரிஸ் தீவுகள் பகுதி வழியாக காற்றை கிழித்துக் கொண்டு அலைகளில் மிதந்தபடி அமைதியாக சென்று கொண்டிருந்தது.
அந்த வழியாக வந்த டே கிரேஷியா என்ற பிரிட்டிஷ் கப்பலில் சென்றவர்கள் நடுக்கடலில் மற்றொரு கப்பல் செல்வதை பார்த்து மகிழ்ந்தனர்.
மேரி செலஸ்டி கப்பலில் சென்றவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர். இதற்காக பல்வேறு சிக்னல்கள் கொடுத்தனர். ஆனால், எந்த பதிலும் இல்லை. கப்பலை நெருங்கி வந்து சத்தம் போட்டனர். அப்போதும், அந்த கப்பலில் எந்த சலனமும் இல்லை.
எவ்வித பதிலும் வராததால் அதில் ஏறி தளம்தளமாக சென்று தேடினர்.
ஆனால், ஒருவரைக்கூட காணமுடியவில்லை. எல்லாரும் எங்கே போனார்கள்..? பிரிட்டிஷ் பயணிகளுக்கு ஆச்சரியம். மேல் தளத்தில் ஆரம்பித்து கீழ் தளம் வரை பாத்ரூமைக்கூட விடாமல் தேடினர். ம்ஹூம். ஆள் அரவமே இல்லை.
‘இந்த கப்பல் விபத்தில் சிக்கியிருக்கலாமோ’ என்று ஒருவர் சொன்னார். விபத்தென்றால் சிறு சேதமாவது இருக்க வேண்டும். மேலும், ஒன்றிரண்டு பேராவது மிஞ்சியிருப்பார்கள். அதுவும் இல்லை. போராட்டம், சண்டை நடந்ததற்கான அறிகுறியும் இல்லை. கொள்ளை நடந்ததுபோலவும் தெரியவில்லை. எல்லா பொருட்களும் அப்படியே இருக்கின்றன. உணவுகள் தயாராக உள்ளன. தயாரித்தவர்கள் யார் எனத் தெரியவில்லை.
கப்பலில் இருந்த உயிர் காக்கும் படகை (lifeboat) மட்டும் காணவில்லை.
பயணிகள் அனைவரும் மாயமாகியிருந்தனர். ஆனால், அவர்களின் உடமைகள் மற்றும் ஏராளமான உணவுப் பொருட்கள் பத்திரமாக இருந்தன.
உணவு மேஜையில் காலை உணவு அப்படியே தயாராக இருந்தது.
என்னதான் நடந்தது இந்த கப்பலில்…? யாருமே இல்லாமல் கப்பல் மட்டும் பயணத்தை அமைதியாக தொடர்ந்தபடி இருந்தது. பிரிட்டிஷ் பயணிகளுக்கு பீதி அதிகரித்தது. பேய்க் கப்பலாக இருக்குமோ…? சந்தேகத்துடன் இதயத் துடிப்பும் பலமடங்கு அதிகரித்தது. அலறி அடித்துக்கொண்டு கப்பலை விட்டு இறங்க முயன்றனர்.
திடீரென ஏதோ உருண்டு விழும் சத்தம் கீழ் தளத்தில் கேட்டது. பயணிகள் யாரும் நகரவில்லை. பதற்றத்துடன் சில நொடிகள் கடந்த பிறகு, சாம்பல் நிற பூனை தாவி ஓடி வந்தது. பிரிட்டிஷ் மக்களை பொறுத்தவரை, கப்பல் பயணத்தின் போது பூனையை காண் பது நல்ல சகுனம்.
அந்த சூழ்நிலையில் அங்கு பூனையை பார்த்ததும் அவர்களுக்கு சற்று நிம்மதி. அடுத்த சந்தேகம்.. யாருமில்லாத கப்பலில் பூனை எப்படி தனியாக இருக்கிறது…?
‘இதையெல்லாம் சிந்திக்க நேரமில்லை. தாமதித்தால் நாமும் மாயமாகக்கூடும். ஓடு, தப்பி ஓடு’ என்றபடி அவசர அவசரமாக மேரி செலஸ்டி கப்பலை விட்டு வெளியேறினர்.
கப்பலில் கடற்படை வரலாற்றின் மிகப்பெரிய மர்மமாக இது கருதப்படுகிறது.
பேய் கப்பல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சம்பவம் நடந்தது 1872ல்.
154 ஆண்டுகள் ஓடிவிட்டன. கப்பலில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற விபரம் இதுநாள் வரை தெரியவில்லை. கப்பல் மர்மங்கள் வரலாற்றில் இதுவும் இடம் பிடித்திருக்கிறது.
………………………
கப்பலில் பயணம் செய்தவர்கள் ஏன் அவசரமாக வெளியேறினர் என்பதற்குப் பல காரணங்கள் யூகித்துச் சொல்லப்படுகின்றன.
கப்பலில் கசிந்த மதுபான ஆவியின் காரணமாக ஏற்பட்ட சிறிய வெடிப்பு அல்லது தீப்பிழம்பு பற்றிய பயத்தினால், கேப்டன் கப்பலை மூழ்கிவிடும் என்று தவறாக எண்ணி உயிர் காக்கும் படகில் அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறியிருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மற்றபடி, மோசமான வானிலை, பழுதுகள் அல்லது கடற் கொள்ளையர்களின் தாக்குதல் போன்றவையும் இதற்கான காரணங்களாக இருக்கலாம் என பிரிட்டானிக்கா கூறுகிறது.
எப்படி இருந்தாலும், மேரி செலஸ்டி கப்பலில் பயணித்த 10 பேருக்கு என்ன நடந்தது என்பது இன்றளவும் முழுமையாக தீர்க்க முடியாத ஒரு புதிராகவே உள்ளது. ( உதவி – பிரிட்டானிகா …ஆர்தர் கானன் டாயில் – )
………………………………………………………………………………………………………………………………………….



ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…