…………………………………..

” ஈரோடில், சில இடங்களில் திமுக கூட்டணியில் –
வாக்காளர்களை கவருவதற்காக,
மடக்கி அங்கேயே
தங்க வைப்பதற்காக,
ஷெட் போல அமைத்து அங்கே சினிமா உள்ளிட்ட
கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.
சில இடங்களில் 3 வேளை உணவும் கூட வழங்கப்படுகிறதாம்.”
- மானங்கெட்ட தமிழர்கள் இதை விரும்புவதால் தானே தொடர்ந்து நடக்கிறது ….?
மாநில தேர்தல் கமிஷனின் குடுமி, மாநில அரசின் கைகளில் பிடியுண்டு கிடக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்…
மத்திய தேர்தல் ஆணையம் எப்படி இதை தொடர அனுமதிக்கிறது….?
வருமான வரித்துறை …. அமலாக்கத்துறை- இவை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகின்றன…..? ஏன் அத்தனை பேரும் ஊமைகளாய், செயலற்றவர்களாய் இந்த அசிங்கங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்….?
இந்த அசிங்கத்தில் ஈடுபடுவோரை தண்டிக்க ஒரே வழி – ஈரோடு கிழக்கு தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும்…. இதுவரை அவர்கள் செலவழித்த காசு நாசமாக, விழலுக்கு இரைத்த நீராகப் போக வேண்டும்……
அடுத்த முறை தேதி அறிவிக்கும்போதும், இதே ஊழல் தொடர்ந்த்தால், இதேபோல் மீண்டும் ரத்து….. மீண்டும் மீண்டும் ரத்து என தொடர வேண்டும்.
கொள்ளையடித்த பணம் அத்தனையும், இந்த வழியிலேயே கரையட்டும்….
பத்திரிகையாளர் மணி சரியாகவே சொல்கிறார்…..
………………………………
.
………………………………………………………………………………………………………………………………………………..
பாஜக வினால் தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவு திமுகவுக்கு இருப்பதால் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலைமை இருந்ததால், அதனைப் பொறுக்க முடியாமல், மத்திய அரசு தேர்தலை ரத்து செய்துவிட்டது. நாங்கள் கோர்டுக்குப் போவோம் என்று திமுக, காங்கிரஸ் மற்றும் லஞ்சம் வாங்கிக் கூட்டணி வைத்துள்ள அவர்களது கூட்டணிக் கட்சிகள் சொல்லும். இதனையே மையமாக வைத்து விவாதங்கள் நடத்தில் திமுகவைக் குளிர வைத்து பணம் பெற்றுக்கொள்ளும் பெரும்பாலான சேனல்கள்.
அதனால் இத்தகைய அராஜகங்களின்மீது யாரும் நடவடிக்கை எடுக்கத் துணைபோக மாட்டார்கள். ஒருவேளை ஒரே தொகுதி என்பதால் துணை ராணுவத்தை வரவழைத்தால், மக்கள், தங்களுக்கு வரும் கொள்ளைப் பணத்தை யாரோ தடுக்கிறார்கள் என்று கோபம் கொள்ளுவர்.
மக்களோ, தங்களுக்கு வரும் வரவின்மீது மத்திய அரசு கைவைத்துவிட்டதாக அதிருப்தி கொள்ளுவர்கள். மக்களே (காசு வாங்கி அதற்கேற்றபடி வாக்களிக்கும்) பிச்சைக்காரர்களாக ஊழல்வாதிகளாக ஆனபின்பு, அவர்களுக்கு வெட்கமாவது, மானமாவது? குடிகாரப் பயல்கள். (அப்படி காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள்) மற்றும் பிச்சைக்காரர்கள்.
.
வருமான வரித்துறை,
அமலாக்கப்பிரிவு – எல்லாம் எங்கே
உறங்கிக்கொண்டிருக்கின்றன….?
அவர்கள் இந்த “ஷெட்” களின் மீது
படையெடுப்பதை – ரெய்டு செய்வதை
யார் தடுக்கிறார்கள்….?
.
ஏற்கனவே படையெடுத்து பயங்கரமா கட்டுப்படுத்திட்டாங்க. இவங்களோட (இந்தத் துறைகள்) சட்டமும் நாடகமும் நகைக்கும்படியா இருக்கு. வருமான வரித்துறைக்கு, கொள்ளையடித்த பணத்தில் வரி கட்டினால் போதுமானது. அமலாக்கப் பிரிவோ, இவைகளைப் பற்றி, தங்களுக்கு புகார் வந்தாலொழிய கண்டுகொள்ளாது. சாராய அமைச்சரின் லஞ்சப் பணத்தை (முன்பு) இவங்க எப்படி ஹேண்டில் செய்தார்கள் என்பதை (வேலை வாங்கித் தருகிறேன் என்று பெற்ற பல கோடிகள்) நாம்தான் பார்த்துக்கொண்டிருந்தோமே.
மணி, தமிழகத்தில் பலகாலம் இருந்த மாதிரியே தெரியலை. திருமங்கலம் ஃபார்முலாதான் தமிழகத்தின் முதன் முதல் லஞ்சம் கொடுத்து வாக்குகளைப் பெறும் ப்ரொஃபஷனல் முறை. அதில், அனேகமாக எல்லா வாக்காளர்களுக்கும் 2000 ரூபாய் கொடுக்கப்பட்டது. ஒரு வீட்டில் 5 வாக்காளர்கள், அவர்கள் சென்னைல இருந்தால், சென்னையிலிருந்து திருமங்கலம் வருவதற்கு டிக்கெட் பணம், மற்றும் 5 பேருக்கு 10,000 என்று சப்ளை செய்யப்பட்டது. கருணாநிதிக்கே 90 சதத்துக்கு மேல் வாக்குப் பதிவு, பெரும் வெற்றி என்பது மிக ஆச்சர்யம். அதன் பிறகு முக அழகிரிக்கு தென் மண்டலச் செயலாளர் பதவி கொடுத்தார் (அந்தத் தேர்தலுக்குப் பிறகே அழகிரிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது)
அது சரி…இவருக்கு மாத்திரம் ஜனநாயகப் பண்பு இருந்த மாதிரியே தெரியலையே. ஓவரா திமுகவிற்கு ஜால்ரா போட்டு, வரவு இல்லை என்றதும் இப்போது நடுநிலைமை என்று நாடகம் போடுகிறாரே இந்த மணி (அட்டூழியத்தின் பிதாமகள் ஜெயலலிதா என்று பொய் சொல்கிறார். ஒருவேளை, அப்படியாவது திமுக தனக்கு காசு, முக்கியத்துவம் கொடுக்கும் என்று நம்புகிறார் போலிருக்கிறது. தமிழகத்தின் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா திருமங்கலத்தில்தான் ஆரம்பித்தது)