இப்படியும் சில பேச்சாளர்கள் …. !!!

………………………………………..

……………………………………………………………………….

பேச்சாளர் ஒருவர் காட்டு வழியாப் போய்க்கிட்டிருந்தார்.
அப்போது ஒரு சிங்கத்துக் கிட்ட மாட்டிக்கிட்டார்.
சிங்கம் அவரைத் தின்னப் போறதாச் சொல்லி மிரட்டிச்சு.
( இங்கே – சிங்கம் பேசுமா என்றெல்லாம்
கேட்கக்கூடாது – கதைக்கு லாஜிக் எல்லாம் ஏது ….)

அவரும் பதறிப் போய், “ஐயோ.. நான் ஒரு பேச்சாளன். நான் பேசறதுக்காக
ரொம்ப பேரு காத்திருப்பாங்க. எல்லா ஏற்பாடும் கெட்டுப் போயிடுமே”ன்னு
சொல்லிப் புலம்பினார்.

உடனே சிங்கம், ”ஓ.. நீ பேச்சாளரா? அப்படின்னா உன் பேச்சால
என்னை மயக்கு பார்க்கலாம்” அப்படின்னது.

அவர் உடனே, “பெரியோர்களோ, தாய்மார்களே, சிங்கங்களே,
கரடிகளே”ன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிஷம் பேசினார்.

கேட்டுக்கிட்டே இருந்த சிங்கம் திடீர்னு மயக்கம் போட்டு
கீழே விழுந்திருச்சி.

பேச்சாளர் ”அப்பாடா தப்பிச்சோம்”னு சொல்லிக் கிட்டே ஓடிப்போனார்.

அவர் அந்தப் பக்கம் போனதும் – சட்டுன்னு எழுந்திருச்ச சிங்கம்,
“அப்பாடா… நல்ல வேளை மயக்கம் போட்ட மாதிரி நடிச்சேன்.
இல்லன்னா இவன் என்னை பேசியே கொன்னிருப்பான்”னு
சொல்லிட்டே காட்டுக்குள்ள ஓடிப் போச்சு.

ஒரு பேச்சு எப்படி இருக்கக் கூடாதுங்கறதுக்கு
இந்தச் சின்னக் கதை ஓர் உதாரணம்.

இந்தக் கதையைச் சொன்ன பேச்சாளர் :
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்… !!!

…………………

இதன் தொடர்ச்சியாக இன்னும் கொஞ்சம் –

பேச்சாளர் இந்த கதையை சொல்லி முடித்து விட்டு பார்த்தார் …
அரங்கம் முழுவதும் காலி….
ஒரே ஒருவன் மட்டும் இன்னமும் உட்கார்ந்திருந்தான்.

மகிழ்ந்து போனார் பேச்சாளர்…
அவனைப்பார்த்து கேட்டார் –
அத்தனை பேரும் போய் விட்டார்களே -நீ மட்டும் எப்படி இன்னமும்….???

அவன் பேச்சாளரிடம் சொன்னான் –
“வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது…
செத்து விடலாமென்று தோன்றியது…
ஆனால், உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு என் எண்ணத்தை
மாற்றிக் கொண்டு விட்டேன்….”

சந்தோஷமாக, பேச்சாளர் அவனிடம் காரணமென்னவென்று கேட்டார்.

அவன் சொன்னான் – “ஓண்ணுக்கும் உதவாத நீயெல்லாம்
வாழும்போது, நான் ஏன் சாக வேண்டும்…? “😊😊😊

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக