…
…

…
டெல்லியில் நடந்த கலவரங்களை தடுக்க உரிய நடவடிக்கை
எடுக்கத் தவறிய மத்திய அரசையும், டெல்லி போலீசையும்
இன்று மதியம் ( 26/02/2020 ) சுப்ரீம் கோர்ட் மிகக் கடுமையாக
கண்டித்திருக்கிறது…..
இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தவை சம்பந்தமான
சில செய்திக் குறிப்புகள் கீழே –
டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல்
அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று சிலர் பொதுநல
மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.கவுல்,
கே.எம்.ஜோஸப் ஆகியோர் முன்னிலையில் இன்று
விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜோஸப்,
கவுல் இருவரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு
போலீஸாருக்கும், மத்திய அரசுக்கும் கடுமையான
கண்டனத்தைத் தெரிவித்தனர்.
1) டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார்
தவறிவிட்டனர். அவர்கள் கடமையைச் செய்வதற்கு
மத்திய அரசு ஏன் அனுமதியளிக்கவில்லை…?
2) டெல்லி போலீசார் யாரிடமிருந்தும் அனுமதிக்காக
காத்திருக்காமல், சுயேச்சையாக, சட்டப்படி செயல்பட்டிருக்க
வேண்டும்.
3) டெல்லி போலீஸ் தன் கடமையைச் செய்ய மத்திய அரசு
அனுமதிக்க தவறியதால் தான் கலவரம் பெரிதாக உருவெடுக்க
காரணமாகி இருக்கிறது.
4) வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத மோதல்கள் ஏற்படும்
முன், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியவர்கள்
மீது டெல்லி போலீஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.
5) கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கும் முன் டெல்லி போலீஸார் யாரிடமும் அனுமதிக்காகக்
காத்திருந்திருக்கத் தேவையில்லை.
சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும்.
வெறுப்புப் பேச்சு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால்,
இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.
6) இங்கிலாந்து, அமெரிக்காவில் போலீஸாரைப் பாருங்கள்.
அங்கு ஏதாவது தவறு நடந்தால், யாரிடமும் கேட்காமல்
சட்டத்தின்படி செயல்படுவார்கள்.
– அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்
மேத்தா கூறுகையில், “டெல்லி வன்முறை தொடர்பான
வழக்குகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
வருகின்றன.
டெல்லி போலீஸார் தொடர்பாகக் கடுமையான
கருத்துகள் தெரிவித்தால் அவர்கள் மனவலிமையைக்
குலைத்துவிடும்” எனக் கேட்டுக்கொண்டார்…
இதையடுத்து, டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை
உயர் நீதிமன்றம் விசாரிப்பதால், உச்சநீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக
நீதிபதிகள் தெரிவித்தனர்.
.
————————————————————————————————————————————————————–



எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…