It is TOO LATE Sri Sri -ji…. It is not from your Heart…!!!


நேற்று இரவு வெளியிடப்பட்ட செய்தி இது –

.
——————————–

மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை
மக்களவையில் நேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷா
தாக்கல் செய்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,
வங்கதேசம் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட
இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் இந்தியாவில்
6 ஆண்டுகள் வாழ்ந்தால் இந்திய குடியுரிமை வழங்க
வழிவகை செய்கிறது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும்,
பாஜகவுக்கு இருந்த பெரும்பான்மை காரணமாக மசோதா
மக்களவையில் நிறைவேறியது.

இந்த நிலையில் ‘இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்த
தமிழர்களும் இந்துக்கள்தான், அவர்கள் ஏன் இந்த மசோதாவில்
சேர்க்கப்படவில்லை..?” என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.

எனினும், இலங்கை
தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என மத்திய
அரசு தெரிவித்து விட்டது.

இந்த நிலையில் -வாழும் கலை அமைப்பின் நிறுவனர்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் –

“இந்தியாவில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும்
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை
வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன்.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது,
இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென
வலியுறுத்தி அவரை சந்தித்தேன்.

இதுதொடர்பாக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று
மன்மோகன் சிங் அரசிடம் வழங்கினோம்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஐரோப்பா, கனடா உள்ளிட்ட
உலக நாடுகளில் குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால்,
தமிழகத்தில் இன்னும் அவர்கள் அகதிகள் முகாமில்தான்
வசித்துவருகின்றனர்.

தனிப்பட்ட முறையில் அகதிகள் முகாமை நான்
பார்வையிட்டுள்ளேன். அவர்களின் நிலை மிகவும் துயரமானது”
என்று குறிப்பிட்டுள்ளார்.

———————————————

ஸ்ரீ ஸ்ரீ -ஜி அவர்களிடம் ஒரு கேள்வி….

அப்துல் கலாம் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தீர்கள் – சரி.

மன்மோகன் சிங் அரசிடம் கோரிக்கை வைத்தீர்கள் – சரி.

உங்களின் அளவுகடந்த கருணை உள்ளத்தையும்,
தமிழர்கள்பால் உங்களுக்கு உள்ள மிகுந்த அக்கறையையும்
இவை வெளிப்படுத்துகின்றன.

ஆனால் – கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் –
மோடிஜியிடம், அவரது அரசிடம் கோரிக்கை வைத்தீர்களா…?
அவர்கள் உங்களுக்கு என்ன பதில் சொன்னார்கள்…?

ஸ்ரீ ஸ்ரீ -ஜி அவர்களுக்கும், மோடிஜிக்கும் –
ஸ்ரீ ஸ்ரீ -ஜி அவர்களுக்கும் – பாஜக தலைமைக்கும் –
ஸ்ரீ ஸ்ரீ -ஜி அவர்களுக்கும் – ஆர்.எஸ்.எஸ். இயக்கத்
தலைமைக்கும் இடையே உள்ள நெருக்கம்
அனைவரும் அறிந்ததே….

இப்படி ஒரு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
வரப்போகிறது என்று பல நாட்களுக்கு முன்னரே
உங்களுக்கும் தெரியும்….ஊருக்கும் தெரியும்.

பாஜக தனது 2014-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை
முதற்கொண்டே இதைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்த செய்திகளும், விவாதங்களும் பல நாட்களாக
நடந்து வருகின்றன.

மசோதா பாராளுமன்றத்தின் – லோக் சபாவில் கொண்டு
வரப்பட்டு, பலத்த எதிர்ப்பிற்கிடையே நிறைவேற்றப்பட்டும்
விட்டது. இன்று ராஜ்ய சபாவில் அதே வடிவில் மசோதா
நிறைவேற்றப்படவிருக்கிறது.

இவ்வளவு நாட்களாக இது குறித்து, பொதுவெளியில்
எதுவுமே பேசாமல் இருந்து விட்டு, கிட்டத்தட்ட எல்லா
சடங்குகளும் முடிந்து விட்ட நிலையில் –

நேற்றிரவு, திடீரென்று ட்விட்டர் பக்கம் மூலம்
இலங்கைத்தமிழர்களையும் இதில் சேர்க்க வேண்டும்
என்று சொல்வது எதற்காக ? நீங்கள் உண்மையிலேயே
இதனை விரும்பியிருந்தால் – ஏற்கெனவே, மசோதா
தயாரிக்கப்படும் முன்னரே,

பிரதமரிடம், பாஜக தலைமையிடம், ஆர்.எஸ்.எஸ்.
தலைமையிடம் நீங்கள் பேசி இருந்தால் -அவர்கள்
உங்கள் கோரிக்கையை நிராகரித்திருப்பார்களா…?
அப்பேற்பட்டதா உங்கள் உறவு… நெருக்கம்…?

இப்போது மட்டும் – இந்த அறிக்கையை வெளியிடக் காரணம்….?
மனசாட்சி உதைக்கிறதா…?

நாளை உலக அரங்கில் ” உலகம் பூராவும் கருணை…அமைதி”
என்று வாழும் கலை அமைப்பின் மூலம் நீங்கள் பேசும்போது –
நாலு பேர் சிரிப்பாகளே என்று பயமா…?
கேள்விகளை எதிர்கொள்ள பயமா…?

அதற்காகவே – “நான் கூட அப்போதே சொன்னேன்” என்று
பேருக்கு செய்தி வெளியிடுகிறீர்களா…?

Sorry Swamiji – IT IS TOO LATE …

You know that
WE also know that –
and the World also will know that tomorrow.

.
——————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to It is TOO LATE Sri Sri -ji…. It is not from your Heart…!!!

 1. Ramnath சொல்கிறார்:

  Right question.
  He is doing ONLY lip Service.
  He is also proving to be a fanatic.

  • புதியவன் சொல்கிறார்:

   Middle Eastல அவருடைய ஆர்கனைசேஷனுக்கு எவ்வளவு அரபி, இஸ்லாமியர்கள் பயிற்சிக்கு வராங்க, யூரோப்ல அவருடைய சேவைகள் (சிறையில் துன்பப்படுபவர்கள் மற்றும் வெளியில் உள்ளவர்களுக்கு) அதிகம். He is of course taking money for the courses but was told his organization admin cost is much less and funds are used in services . Fanaticனு சொல்வது தவறு. I have personally observed this.

 2. புதியவன் சொல்கிறார்:

  உங்க கருத்தை இடுகை தெளிவாச் சொல்லுது. எனக்கும், பாலுக்கும்காவல் பூனைக்கும் தோழன் என்ற பழமொழியை நினைவு படுத்தியது. பாராட்டுகிறேன் கா மை சார் (இடுகை எழுதிய வித்த்தை, கேள்வி கேட்டது. ஆனாலும் உங்கள் கருத்தை ஏற்கலை. அகதிகள் முகாம் மனித்த்தன்மை உடையதா இருக்கணும். அவர்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படணும்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   .

   புதியவன்,

   1) // “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்”
   என்கிற பழமொழியை நினைவுபடுத்தியது….//

   ஸ்ரீ ஸ்ரீ-ஜி அதைத்தான் செய்கிறார்;
   இது குறித்த அவரது முயற்சிகள் போலியானவை
   என்பது தான் இடுகையின் மையக்கருத்து…
   இதை நீங்கள் ஏற்கிறீர்களா – இல்லையா ?

   2) // அவர்கள், இலங்கைக்கு திருப்பி
   அனுப்பப்படணும் //

   அப்படியானால் –

   // “இந்தியாவில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக
   வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய
   குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு
   வலியுறுத்துகிறேன். //

   – என்று ஸ்ரீ ஸ்ரீ-ஜி கருத்து சொல்வது, போராடுவது –
   எல்லாமே அபத்தமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா…?
   நீங்கள் மதிப்பு வைத்திருக்கும் ஸ்ரீ ஸ்ரீ-ஜி ஒரு தவறான
   கருத்தை வெளியிடுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    சார்… இதற்கு முன்னமேயே மறுமொழி கொடுத்திருக்கணும். கொஞ்சம் பெர்சனல் விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டியதாகப் போயிற்று. பயணம் வேறு.

    /நீங்கள் ஏற்கிறீர்களா – இல்லையா ?// – அப்படி நினைப்பதால்தான் அந்தப் பழமொழியைச் சொன்னேன்.

    /நீங்கள் மதிப்பு வைத்திருக்கும் ஸ்ரீ ஸ்ரீ-ஜி ஒரு தவறான கருத்தை வெளியிடுகிறார் என்று// – உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அதற்காக உங்கள் கருத்துக்கள் எல்லாமே என் கருத்தோ இல்லை நான் ஆதரிப்பதாகவோ ஆகிவிடுமா? அவர் ஒரு ஆர்கனைசேஷன் தலைவர். அவருடைய இந்த ஸ்டேட்மெண்ட், என்னைப் பொறுத்த வரையில் ஆர்கனைசேஷன் தலைவர் என்ற முறையில் சொல்லப்பட்டது என்றுதான் எண்ணுகிறேன். அவருக்கு நிறைய கிளைகள் ஈழத்தமிழர் வசிக்கும் பகுதிகளில் உண்டு (உலகில்)

    இலங்கைத் தமிழ் அகதிகள் – இதைப் பற்றி இன்னும் யோசிக்கிறேன். நிறைய பெண்கள், தமிழகத் தமிழர்களைத் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் வாழ்க்கை நடத்துகிறார்கள். அவங்க தமிழர்களோடு கலந்து தமிழ் நாட்டில் வாழ்ந்துவிட்டால் என்ன கேடு நேர்ந்துவிடும், குறைந்த பட்சம் நம்ம மொழி பேசுகிறவர்கள் என்ற எண்ணமும் தோன்றுகிறது. அந்த எண்ணம் சரி இல்லை எனவும் தோன்றுகிறது. Clear thinking வரட்டும்.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  முதலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சாமியார் இல்லை .
  சுதர்சன் க்ரியா என்று மூச்சுப் பயிற்சி சொல்லிக் கொடுக்கிறார் .

  வயித்தெரிச்சல் பிடித்த சிலர் சொல்வது :
  மகரிஷி மஹேஷ் யோகி ,விபாசனா வோட காப்பி !
  அவரின் சொந்த சரக்கு இல்லை .

  இதற்கு அவர் பணம் வாங்குகிறார் – இல்லை நன்கொடை !
  அப்புறம் டிரஸ்ட் என்பதால் ஐ டி கிடையாது .
  அங்கே இருப்பவர்கள் கமிஷன் அடிப்படையில் பணம்
  பெறுகிறார்கள் . அதனால் மார்க்கெட்டிங் சிறப்பாக உள்ளது

  நல்ல துட்டு – அவ்வளவுதான் !

 4. Ezhil சொல்கிறார்:

  அது ஒண்ணுமில்லை சார்.. இப்படி பேசலைனா வர்ற காசு கொஞ்சம் குறைஞ்சிடும்.. இல்லேன்னா இதை காரணம் காட்டி இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம்.. அவ்வளோ தான் அதுக்கு தான் இவ்வளோ ஸ்டண்ட் …

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  வாட்ஸ் அப் ? வாட்ஸ் ஹாப்பெனிங் ?
  நத்திங் மச்
  சோ சாட் !
  காசு , பணம் , துட்டு , மணி , மணி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.