…
…

…
சனிக்கிழமை நடந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட திரு.கோகோய் அவர்களுக்கும்,
அரசின் தலைமை வழக்கறிஞர்களுக்கும் மட்டுமே பேச வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள், குற்றச்சாட்டை கூறிய பெண்மணியை,
அல்லது அவர் சார்பாக வழக்கறிஞர்கள் யாரையும்,
பேச வாய்ப்பு கொடுக்கவில்லை.
அவர்களுக்கு உரிய நோட்டீசும் அனுப்பப்படவில்லை.
பாதிக்கப்பட்டவருக்கு, தன் நிலையை எடுத்துச் சொல்ல, விளக்க – எந்த வித வாய்ப்பும்
கொடுக்கப்படாமல், ஒரு தரப்பு மட்டும் பேசியது…
அதுவும் எப்படி ….?
யார் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதோ, அவர் கூறுகிறார் –
————————
என்னை பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால், இதுபோன்ற குற்றச்சாட்டைக்
கண்டுபடித்து என்மீது சுமத்துகிறார்கள்.
இதற்கு பின்புலத்தில் மிகப்பெரிய சதி இருக்கிறது.
மிகப்பெரிய சக்தி பணியாற்றுகிறது.
நீதித்துறையின் செயல்பாட்டை குலைக்க சதி நடக்கிறது.
என் மீது குற்றச்சாட்டு கூறிய பெண் கிரிமினல் பின்புலம் கொண்டவர்.
அவர் மீது ஏற்கனவே இரு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் அவர் பணிக்கு வந்தபோது, அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டது.
முதல் தகவல் அறிக்கை நிலுவையில் இருக்கும்போது,
எப்படி அவர் உச்ச நீதிமன்ற பணியில் இருக்க முடியும்.
மூன்றாவது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபோதுதான்
அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
பிணையில் வெளியே வந்த அந்த பெண் புகார் அளித்தவர்களை மிரட்டி,
விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
அந்த பெண்ணின் கிரிமினல் பின்புலத்தால்,
அவர் 4 நாட்கள் சிறையில் இருந்தார்.
ஒழுக்கமான வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுங்கள்
என்று போலீஸார் இருமுறை எச்சரித்தும் அந்த
பெண்ணை அனுப்பினார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், எந்த நீதிபதியும் வழக்கை முடிவு செய்யமாட்டார்கள். நானும்
இந்த வழக்கில் முடிவு எடுக்க மாட்டேன், ஒதுங்கிக்கொள்கிறேன். வழக்கம் போல் நீதிமன்றத்துக்கு
வந்து வழக்கை ஒத்திவைத்துவிட்டுச் செல்வேன்.
நீதிமன்றத்தின் சுதந்திரம் மிக, மிக தீவிரமான அச்சுறுத்தலில் இருக்கிறது.
இது மிகவும் துயரான சூழல்.
——————————————
இதைப்பற்றி சில கேள்விகள் –
மத்திய அரசுப் பணியில் ஒரு பியூன் வேலைக்கு யாரையாவது
நியமனம் செய்வதாக இருந்தாலும் கூட, உரிய முறையில்
Police Verification Report – பெற்ற பின்னர் தான் செய்ய
முடியும்.
இந்த PVR -மூலம், சம்பந்தப்பட்டவர் மீது
எந்த காவல் நிலையத்திலாவது, எந்த அடிப்படையிலாவது,
எதாவது புகார், FIR பதிவாகி இருக்கிறதா…? வழக்குகள் எதாவது
நிலுவையில் இருக்கிறதா..? சம்பந்தப்பட்ட நபருக்கு
எதாவது அரசியல் கட்சியுடன் தொடர்பு இருக்கிறதா…?
எதாவது சந்தேகமான நடவடிக்கைகளில் எப்போதாவது ஈடுபட்டிருக்கிறாரா –
பொதுவாக அவரது நடத்தை (character) எப்படிப்பட்டது,
என்பது போன்ற விவரங்களை எல்லாம் பெற்று,
எல்லாம் சரியாக இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்ட பின்பு தான்
நியமனம் செய்ய முடியும். இது முக்கியமான சட்ட விதி.
எனவே, 2014-ல் அவர் வேலை நியமனம் பெறும்போது
எந்தவித குற்ற பின்னணியும் அவருக்கு
இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
பணியில் சேர்ந்த பிறகு, அவர் மீது எதாவது FIR பதிவு செய்யப்பட்டிருக்குமேயானால்,
உடனடியாக அது காவல்துறையால், அவரது இலாகாவிற்கு எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டிருக்கும்.
இதுவும் சட்ட விதிகள் கூறுவது. அப்படி தகவல் வந்திருந்தால், இலாகா உடனடியாக
நடவடிக்கை எடுத்திருக்கும்.
பணியில் சேர்ந்த பிறகு, முதலில் கோர்ட்டில் சாதாரண இடத்தில் பணி புரிந்து கொண்டிருந்தவரை,
இரண்டே ஆண்டு சர்வீஸ் அனுபவம் உடைய ஒரு LDCயை (கீழ் நிலை எழுத்தர்…)
தலைமை நீதிபதியின் சொந்த அலுவலகத்தில் பணி புரிய அனுப்பப்பட்டதன் பின்னணி என்ன…?
அந்த அலுவலகம் மிகவும் sensitive -ஆன அலுவலகம்.
பல முக்கிய வழக்குகளின் கோப்புகள் அங்கே கையாளப்படும்.
பல தீர்ப்புகள் அங்கே தயார் ஆகும். இங்கே பணிபுரிபவர்கள்
ரகசியம் காப்பவர்களாகவும், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும்
இருக்க வேண்டியது அவசியம். எனவே, மிகவும் நம்பிக்கையான,
மூத்த, அனுபவம் பெற்ற அலுவலர்கள் மட்டுமே
அங்கு பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தன் அலுவலகத்தில்
பணிபுரிய யாரையும் தேர்ந்தெடுக்கும்/அனுமதிக்கும்
உரிமை அந்த நீதிபதிக்கே உரியது…
இத்தகைய சூழ்நிலையில் – அந்த பெண்ணை அங்கே posting செய்தது யார் விருப்பத்தின்
அல்லது ஆலோசனையின் பேரில்…?
பிறகு, எந்த சூழ்நிலையில் அவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்று தீர்மானிக்கப்பட்டு,
வேறிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்…? அதுவும் சிறிய இடைவெளியில் மூன்று முறை அவர்
இட மாற்றம் செய்யப்பட்டாரா…? ஏன்…?
—————————
// இதற்கு பின்புலத்தில் மிகப்பெரிய சதி இருக்கிறது.
மிகப்பெரிய சக்தி பணியாற்றுகிறது. //
————–
அந்த பெண்ணின் பின்னால் ஒளிந்துள்ள “அந்த மிகப்பெரிய சக்தி” எது / யார் என்று
கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்…?
சர்வ வல்லமையுள்ள துப்பறியும் ஏஜென்சிக்களும்,intelligence -துறையும் கையில்
இருக்கும்போது, அந்த பெண்மணியை உண்மையிலேயே எதாவது வெளி சக்தி இயக்குகிறது
என்றால், 24 மணி நேரம் போதுமே அதை கண்டுபிடிக்க…?
கண்டு பிடித்தார்களா…? அல்லது முயற்சியாவது நடந்ததா …?
எது அந்த சக்தி…? யார் அந்த சக்தி…?
அதை கண்டுபிடித்து வெளியே சொல்வதில் என்ன தயக்கம்….?
—————————————————–
புகழ்பெற்ற, மூத்த வழக்கறிஞரும், சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் முன்னாள் தலைவருமான,
துஷ்யந்த் தவே அவர்கள் கூறுகிறார் –
The proceedings of the court, or rather the Bench, are even more
disturbing. There was no cause, no matter, no petition, and no
reason for the court to take upon itself the perceived duty to
protect its reputation.
More puzzling
The order issued thereon is even more puzzling. If the Bench
comprised three judges, how in God’s name did the order come to be
issued in the name of only two judges? Was it to get over the
salutary principle referred above? Surely it could not have been,
after all that happened in the open court hearing.
Under no circumstances could and should the Supreme Court have done
what it did on Saturday morning. It is an institution to uphold the
majesty of law, not to undermine it. It is a temple of justice, not
an instrument to cater injustice.
It is the highest court of this great land to protect the basic
human values and fundamental rights. It has to protect the most
cherished of those rights, the freedom of speech and expression and
protect the true guardians of democracy, the media.
It has no power to stop them from doing their duty, much less to
advise them “to show restraint, act responsibly as is expected from
them and accordingly decide what should or should not be published
as wild and scandalous allegations undermine and irreparably damage
reputation and negate independence of Judiciary.” Saying that, the
court kindly requests the media “to take off such material which is
undesirable.”
Surely the Supreme Court of India does not have any advisory
jurisdiction except on a Presidential Reference. In fact, time and
again, judges are heard telling lawyers and litigants when requested
to advise on what to do while matters are being dismissed: “it is no
part of our function to advise you.”
————————————
சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் பலர் சேர்ந்து கூட்டாக,
பார் அசோசியேஷன் தலைவருக்கு எழுதியுள்ள
கடிதத்தில் கூறுகிறார்கள் –
1. Two basic principles are central to the doctrine of natural
justice. The first is “no man shall be a judge of his own case” and
the second is “hear the other side”. The CJI has shown disregard to
both these principles. Under no circumstance should the CJI have
been a part of the Bench, nor should he have used his constitutional
office to respond to personal allegations of sexual harassment
2. The CJI should have promptly referred the complaint to the
Supreme Court’s Internal Complaints Committee, headed by Justice
Indu Malhotra. In not doing so, the CJI has exhibited disdain for an
independent inquiry upon the allegations of sexual harassment made
against him
3. Judicial independence does not imply freedom from accountability.
The allegations of sexual harassment, made in a sworn affidavit with
specific details, cannot be conveniently dismissed as being “wild”,
“scandalous”, or politically motivated.
———————————-
நாம் சொல்வது – அந்த பெண்மணி சொல்லும் குற்றச்சாட்டுகள்
நிஜமோ, பொய்யோ, புனையப்பட்டவையோ –
நமக்குத் தெரியாது. தெரிந்திருக்க வாய்ப்பும் கிடையாது.
ஒரு நேர்மையான, வெளிப்படையான,
நம்பகத்தன்மையுடைய விசாரணை அமைப்பு இந்த குற்றச்சாட்டுகளை
விசாரித்தாலன்றி முழு உண்மைகளும் வெளிவராது.
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடமிருந்து
பாலியல் முறைகேடுகள் குறித்த புகார் வந்தால்,
அது எப்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, கையாளப்பட்டு,
உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
ஏற்கெனவே உச்சநீதி மன்றமே உரிய
வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறது.
எனவே, குற்றச்சாட்டு கூறப்படுவது எத்தகைய
உயர் பதவியில் இருப்பவர் மீது ஆனாலும் –
உரிய முறையில், வெளிப்படையான விசாரணை
நடத்தப்படுவது ஒன்றே நீதித்துறையின் மீது
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
இந்த புகாரின் பின்னணியில் வேறு ஏதேனும் “சக்தி”
செயல்படுகிறது என்பது உண்மையானால்,
அது யார், எது என்பதும் வெளிப்படையாக தெரிய வரட்டும்.
———————————————–
latest from the Hindu of 23/04/2019 –
On Monday, the first working day after a tumultuous weekend, the
Supreme Court Bar Association (SCBA), a body of over 6,000 lawyers
practising in the Supreme Court, said Saturday’s hearing was “in
violation of the procedure established by as well as the principles
of natural justice.” In an urgent meeting, the executive committee
of the SCBA said a Full Court should take “all the necessary steps”
under the law in this issue.
“The allegations of the ex-employee have to be dealt with as per the
procedure established by law. The law must be applied in each and
every case uniformly,” SCAORA resolved.
The association said it “strongly disapproves the manner in which
the complaint was dealt with”. It urged for an inquiry and action
into the woman’s complaint. She has already written to 22 Supreme
Court judges, detailing her allegations against the CJI.
The association sought an “immediate appointment of a committee
headed by the Full Court of Supreme Court to impartially investigate
and inquire into the allegations against CJI and give an independent
finding into the matter”.
————
The Women in Criminal Law Association (WCLA), a collaborative group
for women in criminal litigation, had also issued a statement
demanding a fair inquiry into the allegations. In a statement on
April 20, the association said the “complaint should be treated as
per procedure and principles of fairness and justice, including the
fundamental right to equality before law”.
—————————————-
எனவே, மீண்டும் நாம் கூறுவது –
குற்றச்சாட்டு கூறப்படுவது எத்தகைய
உயர் பதவியில் இருப்பவர் மீது ஆனாலும் –
உரிய முறையில், வெளிப்படையான விசாரணை
நடத்தப்படுவது ஒன்றே நீதித்துறையின் மீது மக்கள்
வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
இது நீதிமன்றத்தின் மாண்பை குறைக்கும் செயல் என்று
ஜமக்காளத்தை கொண்டு மூடுவது – எந்த விதத்திலும்
நியாயமாக இருக்காது.
இந்த புகாரின் பின்னணியில் வேறு ஏதேனும்
“சக்தி” செயல்படுகிறது என்பது உண்மையானால்,
அது யார், எது என்பதும் வெளிப்படையாக தெரிய வரட்டும்.
.
——————————————————————–



இந்த இடுகையை நான் பாராட்டுகிறேன். நிறைவாக எழுதியிருக்கீங்க. சரியாகவும் சொல்லியிருக்கீங்க காமை சார்.
நான் முதலில் நினைத்தது, மாண்புமிகு பதவியில் இருப்பதால், புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. டிபார்ட்மெண்ட் ப்ரொசீஜர் படி ஆய்வு செய்தால் போதும் என்று.
அய்யா …! பாலியல் புகார்கள் பல விதம் அதில் எத்தனையோ புகார்கள் — பாதிரியார் குரியகோஸ் … பிஷப் பிராங்கோ … சினிமா காஸ்டிங் இயக்குனர் மோகன் வரிசையாக சுசி லீக்ஸ் ..ஸ்ரீ ரெட்டி … சின்மயி என்று தொடர்ந்து மத்திய இணைஅமைச்சர் அக்பர் — தற்போது இடுகையின் நாயகன் என்று வரிசைகட்டுகிறது … !
பின்வரும் ஒரு செய்தியை படித்தவுடன் தங்களுக்கு தற்போது தோன்றுவது என்ன என்பதை விளக்கினால் ஒரு சில நண்பர்களுக்கு உங்களின் சமன் நிலையான நிலைப்பாடு புரியும் — அந்த நவம்பர் –2011 ல் வெளிவந்த மூன்று பகுதி இடுகைகள் உதவும் — !
// Help us bring Anand back, Sanjana Jon appeals to government // …… https://timesofindia.indiatimes.com/city/delhi/help-us-bring-anand-back-sanjana-jon-appeals-to-government/articleshow/64987901.cms ஆனந்த் ஜான் என்பவருக்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள் …? காலம் …?
நன்றி செல்வராஜன்.
நண்பர்களுக்கு,
நண்பர் செல்வராஜன் குறிப்பிட்டிருக்கும் செய்தியின்
பின்னணியில் முன்பு இந்த தளத்தில் ஒரு விவரமான
இடுகை 3 பகுதிகளாக வெளிவந்தது.
அதன் link-ஐ கீழே தந்திருக்கிறேன். அந்த இடுகைகளை
படிக்க ஆர்வமுள்ளவர்கள் link-ல் “க்ளிக்” செய்தால்
படிக்க கிடைக்கும்….
திருமதி சுஹாசினி – உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை ?
https://vimarisanam.wordpress.com/2011/11/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/
————————
அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2)
https://vimarisanam.wordpress.com/2011/11/05/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D/
—————————
ஆனந்த் ஜானை அமெரிக்க சிறையிலிருந்து வெளியே கொண்டு வர …. (திருமதி சுஹாசினி….கடைசி பகுதி-3)
https://vimarisanam.wordpress.com/2011/11/07/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/
.
– வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இண்டெரெஸ்டிங் இடுகை….. பெண்களுக்கு அநீதி இழைப்பது பெரிய விஷயமில்லை என்று, அதற்கு ஆதரவாக ‘மலையாளி’ இன உணர்வைத் தூண்டிவிட்டிருக்கார்களே… ஜேசுதாசும் சேர்ந்து…… இதுல சுஹாசினி வேறு… வெட்கக்கேடு…
Your way of analysis has not changed much. I appreciate.
நன்றி புதியவன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நீங்கள் சொன்ன கோணத்தில் பிபிசி செய்தியும் சொல்கிறது.-
நீதித் துறை அதிகாரம் துஷ்பிரயோகம்’
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மனோஜ் மிட்டா, நீண்ட காலமாக உச்ச நீதிமன்றம் மற்றும் சட்ட விவகாரங்கள் பற்றி செய்திகள் சேகரித்து வருகிறார்.
இந்தப் பிரச்சினை பற்றி பிபிசியிடம் பேசிய அவர், விரைவாக ஏற்பாடு செய்யப்பட்ட விசாரணையில், உரிய நடைமுறைகள் பின்பற்றப் பட்டதற்கான அம்சங்கள் இல்லை என்று கூறினார்.
அமர்வில் பங்கேற்றதன் மூலம், தன் மீதான பிரச்சினை குறித்து தாமே நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற கோட்பாட்டை மீறியிருக்கிறார். நீதித் துறையில் தனக்குள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அவர், புகார் கொடுத்த பெண்ணின் “முந்தைய கிரிமினல் செயல்பாடுகள்” என்று குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்டவர் மீது அவதூறு கூறுதல் மற்றும் பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்துதல் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
புகார் கொடுத்தவரிடமோ அல்லது அவர் தரப்பில் யாரிடமோ விசாரிக்கப்படவில்லை.
நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக சொன்னாரா ராகுல் காந்தி?
போஸ்டர் ஒட்டியது முதல் பாஜக தலைவர் வரை – அமித் ஷாவின் பயணம்
விரிவான பாலியல் துன்புறுத்தல் புகாரை, நீதித் துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று காட்டுவதற்கு மேற்கொள்ளப் பட்டிருக்கும் முயற்சி, இதை மூடி மறைப்பதற்கான செயலாகக் கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சில வழக்குகள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் நிலையில், குறிப்பாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இவற்றை விசாரிக்க உள்ள நிலையில் இது நடந்திருக்கிறது என்றால், அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்முயற்சியால் விடுமுறையில் சிறப்பு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
இந்தப் பிரச்சினையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கு மேத்தா மற்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை தலைமை நீதிபதி சார்ந்திருக்கிறார் என்பது, நீதித் துறையின் சுதந்திரம் என்ற விஷயத்துடன் அவ்வளவாகப் பொருந்திப் போவதாக இல்லை.
இந்தப் புகார்கள் பற்றி விசாரிப்பதற்கு சிறப்புக் கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு, புகார்தாரர் கடிதம் எழுதியிருக்கிறார்.
பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்கு, உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள உள்ளார்ந்த புகார்கள் கமிட்டியால் இதை விசாரிக்க முடியாத நிலை இருக்கிறது.
ஆனால், பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு, மற்ற நீதிபதிகளை சம்மதிக்க வைக்கும் தார்மிக பொறுப்பு நீதிபதி இந்து மல்ஹோத்ராவுக்கு இருக்கிறது என்று அந்தக் கமிட்டியின் தலைவராக இருக்கும் இந்திரா ஜெய்சிங் கூறுகிறார்.
“பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நியாயமான விசாரணை நடைபெற உதவி செய்வது மற்றும் நீதி நடைமுறைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டியது, பணி வழங்குநரின் பொறுப்பு என்று சட்டம் சொல்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி செய்திக்கான
reference – https://www.bbc.com/tamil/india-48013811
அய்யா ..// .இந்த புகாரின் பின்னணியில் வேறு ஏதேனும்
“சக்தி” செயல்படுகிறது என்பது உண்மையானால்,
அது யார், எது என்பதும் வெளிப்படையாக தெரிய வரட்டும்.// என்கிற தங்களின் கூற்று கொஞ்சம் — கொஞ்சமாக வெளிவர துவங்கி உள்ளது போல தெரிகிறது — பார்ப்போம் ….. ! இன்றைய இந்து பத்திரிகை செய்தி :– // நீதித்துறை , அரசியல் வட்டாரத்தை உலுக்கும் தலைமை நீதிபதி மீதான புகார் // https://tamil.thehindu.com/india/article26926942.ece — இரு வேறான கருத்துக்கள் ..? உண்மை வெளிவந்தே தீருமா …?
செல்வராஜன்,
இந்த செய்தியை இங்கு பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
நான் ஏற்கெனவே ‘பாலியல் புகார் குறித்த வழக்கு’ பற்றி
எழுதியபோது, எனக்கு இன்னும் சொல்ல வேண்டிய செய்திகள்,
கருத்துகள் நிறைய இருந்தன -இப்போதும் இருக்கின்றன.
ஆனால், நான் அது குறித்தெல்லாம் எழுதுவது
எப்படி எடுத்துக் கொள்ளப்படுமோ என்கிற தயக்கத்தினால் –
re-action -ஐ பார்த்துக் கொண்டு, மீண்டும் தொடர்வோம்
என்கிற எண்ணத்துடன் தான் 2-வது பகுதியை முடித்தேன்.
இப்போது எனக்கு இன்னும் பலம் கிடைத்திருக்கிறது.
குஜராத் மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைமை
எழுப்பியுள்ள கேள்விகள் மூலமாக. இனி நான் தயக்கமின்றி
தொடரலாம்.
மாலைக்குள்ளாக, இது குறித்து இன்னும் ஒரு இடுகை
எழுதுகிறேன்… நமது நோக்கம் யார் மீதும் அவதூறு
கிளப்புவது அல்ல… தவறு செய்தவர்கள், எத்தனை பெரிய
பதவியில் இருந்தாலும் – தண்டிக்கப்பட வேண்டும் என்பதே.
சமூகத்திற்கு அதற்கு தேவையான விழிப்புணர்வு,
தைரியம் தேவை என்பதே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சவுக்கு வளைதளத்தில் கொஞ்சம் விரிவாகவே வந்திருக்கு.
https://www.savukkuonline.com/17360/
யாரை தான் நம்புவதோ பேதை நெஞம்.