-வீடியோ …அமீரக நாட்டின் முதல் இந்து கோயில் ….



ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அபுதாபி நகரில்
அமையவுள்ள முதல் இந்து கோயிலுக்கு
நேற்று முன் தினம் அடிக்கல் நாட்டப்பட்டது

ஸ்ரீ அக்சரபுருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா
அமைப்பு இந்தக் கோயிலை நிர்மாணிக்க உள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் கோயில் அமைப்பதற்கான
இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு செங்கல் வைத்து
யாகம், பூஜை, சடங்குகள் நடைபெற்றன.

அபுதாபி-துபாய் நெடுஞ்சாலையில்
14 ஏக்கர் நிலப்பரப்பளவில் இந்த கோயில் அழகுற அமைகிறது.
கோயிலில் – கலாசார வளாகம், ஆர்ட் கேலரி,
தியான மண்டபங்கள், நூலகம், உடற்பயிற்சிக் கூடம்
உள்ளிட்டவை அமையவுள்ளன.

இந்த கோயிலுக்கான தூண்கள், சிற்பங்களை
இந்தியாவில் உள்ள சிற்பக் கலைஞர்கள்
உருவாக்குகின்றனர். பின்னர் அவை
துபாய் கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்படும்.

இந்தக் கோயில் வழிபாட்டுக்கான இடமாக
மட்டுமல்லாமல் – மனித மேம்பாடு மற்றும் சமுதாய
நல்லிணக்கத்தையும் உருவாக்கும் இடமாக
இருக்குமென்று நம்புவோம்….

முன்னதாக நேற்று முன்தினம் அல் மக்தூம்
சர்வதேச விமானநிலையத்தில் சுவாமி மகராஜ்
மற்றும் அவரது பிரதிநிதிகளை அபுதாபியின்
இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான்
சென்று வரவேற்றார்.

அமீரக அரசின் – பெருந்தன்மையையும்,
மத நல்லிணக்க செயல்பாடுகளையும் –
மனமாரப் பாராட்டுவோம்.

வளைகுடா வாழ் மக்கள் அனைவருக்கும்
நமது நல்வாழ்த்துகள்……!!!

….

….

.
———————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to -வீடியோ …அமீரக நாட்டின் முதல் இந்து கோயில் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இது அமீரக நாட்டின் முதல் இந்துக்கோவில் இல்லை. அபுதாபியில் அப்படி இருக்கலாம் (அதுவும் நிச்சயமில்லை).

    துபாயில் கிருஷ்ணன் கோவில், சிவன் கோவில் எல்லாம் இருக்கின்றன.25-30 வருடங்களுக்கு மே. சிவன் கோவிலில் லிங்கம் இருக்கின்றது. அருகில் முருகர் சன்னிதியும் இருக்கு. இது உள்ளே கோவில் போன்ற சூழ்நிலையைக் கொண்டது. அங்கு சீக்கியர்களின் குருத்வாராவும் இருக்கிறது. இவை எல்லாம் சிந்தி தொழிலதிபர்களின் பணத்தில் நன்கு நடக்கிறது.

    வெள்ளிக்கிழமைகளில் அல்லது முக்கிய தினங்களில் ரொம்ப அதிகமான கூட்டம் இருக்கும். இந்தக் கோவில்களைச் சுற்றி பூக்கடை, பூஜைப்பொருட்கள் கடை, இந்திய/தமிழக பொருட்கள் கடைனு நிறைய இருக்கு.

    வெள்ளிதோறும் மாலையில் பிரசாதம் (உணவு போன்று… ரொட்டி/சென்னா, இனிப்பு பூந்தி போன்று) நிறைய கொடுப்பார்கள்.

    பஹ்ரைனிலும் பெரிய கிருஷ்ணர் கோவில் இருக்கு. (ஆனால் கிருஷ்ணர்.. விக்ரஹமில்லை. அடையாளம்தான்) அங்கும் வருடத்துக்கு ஒரு தடவை, திருப்பதியிலிருந்து வந்து, ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் (மற்ற இடங்களில் நடத்துவதுபோல்) நடத்துவார்கள். படங்களை பிறகு உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      நீங்கள் அந்த பகுதியில் இருந்தவர் என்கிற முறையில் நீங்கள் சொல்வது
      சரியாகத்தான் இருக்கும்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை. சார்… சில இந்தியர்களுக்கு (பாரம்பர்யமாக அந்தப் பகுதிகளில் தொழில் செய்துவருபவர்கள்) அந்த அந்த நாட்டின் குடிமகன் என்ற தகுதியையும் கொடுத்திருக்கிறார்கள். பஹ்ரைனில் இந்துக்களுக்கும் அப்படி குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் பெரியவர் ஒருவர் இறந்தபோது எரியூட்டப்பட்டது, சிலரின் முணுமுணுப்பை அப்போது சம்பாதித்தது.

        //மத நல்லிணக்க செயல்பாடுகளையும்// – பெரும்பாலான கல்ஃப் நாடுகளில் அடுத்த மதங்களின்மீது வெறுப்பு இல்லை. ஆனால் அவைகள் இஸ்லாமிய நாடுகள் என்பதை மற்றவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். அங்க உள்ள பழக்கவழக்கங்களை மதித்து அதன்படி நடந்துகொள்கிற வரையில், ‘வீட்டுக்குள் என்ன செய்கிறீர்கள்’, ‘உங்களுக்குச் சொந்தமான இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் என்ன செய்கிறீர்கள்’ என்ற கேள்விகளே வருவதில்லை. நிறைய சத் சங்கங்களும், சாய்பாபா பஜனைகளும் மற்ற இந்து கலாச்சார நிகழ்ச்சிகளும் நிறைய நடக்கும். அதுக்காக, மைக், ஒலிபெருக்கி வைத்து, சுற்றி இருக்கும் இஸ்லாமியர்களுக்குத் தொந்தரவோ இல்லை அவர்களுடைய புருவங்களை உயர்த்தும்படியாக எதையுமோ செய்யக்கூடாது. இந்த நாடுகளில் நெற்றியில் விபூதி போன்றவை பூசிக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் பிரச்சனை இல்லை. ஆனால், இஸ்லாமியர்களுக்கு முக்கியமான நாட்களில் அந்தக் கலாச்சாரத்தை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ரமதான் மாதத்தில் பகலில் எங்கும் உணவு, நீர் உட்கொள்ள முடியாது. (வீட்டிற்குள்தான் சாப்பிட முடியும். சில ரெஸ்டிராண்டுகள் ஸ்பெஷன் பெர்மிஷனில் உணவு தயாரிப்பார்கள் ஆனால் பார்சல்தான் வாங்கிக்கொண்டு வீடுகளில் சாப்பிட முடியும்).. குழந்தைகளுக்கும் மிக வயதானவர்களுக்கும் விதிவிலக்கு. இதை மீறினால் கடுமையான தண்டனை (துபாயில் உடனே சிறையில் அடைத்து ரமதான் மாதம் முடிந்ததும் விசா கேன்சல் செய்து அனுப்பிவிடுவார்கள். சவுதியில் இன்னும் கடுமையான தண்டனை)

        பொதுவாக புருவம் உயர்த்தமுடியாத உடைகளை அணியவேண்டும். கால்டரவுசர் அணிந்தாலும் முட்டி வரை அணியணும். அரசு அலுவலகங்களில் ஸ்மார்ட் டிரஸ்தான் போட்டுக்கொண்டு செல்லணும் (அரை டிரவுசரில் செல்லமுடியாது…. மின்சாரம் துண்டிப்பது சம்பந்தமாக அந்த அலுவலகத்துக்கு மனைவியிடன் டிரவுசரில் சென்றபோது, என்னை மட்டும் மரியாதையுடன் ‘அனுமதிக்கவில்லை’. நேரம் இல்லாததால் பக்கத்து கடையில் அவசர அவசரமாக ஸ்போர்ட்ச் பேண்ட் குறைந்த விலையில் வாங்கி அதனைப் போட்டுக்கொண்டு சென்றதும் அனுமதித்தனர். அப்போதும் அந்த அதிகாரி என்னிடம் ‘சாரி… அரசு அலுவலகங்களில் மட்டும் முழு உடை அணிந்திருந்தால்தான் அனுமதிப்பார்கள் என்று சொன்னார்.

        பெண்களுக்கு கல்ஃப் நாடுகள் தரும் மரியாதை இந்தியாவில் கிடையாது. பெண் கம்ப்ளெயிண்ட் செய்தால் உடனே ஆக்‌ஷன் எடுப்பார்கள். அது யாராக இருந்தாலும் சரி. அதாவது எந்த தேசத்துப் பெண் என்றாலும், எந்த கவர்ச்சியான உடை அணிந்திருந்தாலும் நாம் வரைமுறை தவறி தொடவோ கிண்டலடிக்கவோ முடியாது.

        என்னதான் நட்புடன் இருந்தாலும் லோக்கல் நண்பர்களிடம் பெண்களைப் பற்றிக் கிண்டலடிப்பது, மற்ற மோசமான பேச்சுக்கள் போன்றவற்றை வைத்துக்கொள்ளமுடியாது. அவர்கள் அத்தகைய பேச்சுக்களை ‘ஹராம்’/தவறு என்று உளமார நினைப்பவர்கள். நிறைய எழுதிக்கொண்டே செல்லலாம்.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


          புதியவன்,

          நிறைய தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
          இந்த மாதிரி வித்தியாசமான தகவல்கள் எனக்கு நான் அறியாத ஏரியாக்களில்,
          பல விஷயங்களை தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கின்றன.
          மிக்க நன்றி.

          இது ஒரு two way traffic தளம்.
          இந்த தளத்தின் கருத்துப் பறிமாற்றங்கள் மூலம் நானும்
          நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

      • SHAMEER AHAMAED's avatar SHAMEER AHAMAED சொல்கிறார்:

        உண்மைதான் காவிரிமைந்தன் அவர்களே. தினமும் அந்தப்பகுதியில் நடை பயிற்சி செய்பவன். வெள்ளிக்கிழமை காலை வேளையில் மக்கள் பர்துபையில் வழிபாடு முடித்து திரளாக வருவார்கள் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.