இளையராஜாவும், எம்.எஸ்.வி….யும் (என் விருப்பம் – 24)


இன்று மாலை சன் தொலைக்காட்சியில் இளையராஜா-75 நிகழ்ச்சி….

டிக்கெட் ரேட் எக்கச்சக்கமாக இருந்தபோதும் மைதானத்தில்
இவ்வளவு கூட்டமா… என்று மலைப்பாகத்தான் இருந்தது…!

நீண்ட நாட்கள் ஆயிற்று – இப்படி 3 மணி நேரம்
ஒரே நிகழ்ச்சியில் இவ்வளவு ஆர்வத்துடன் அமர்ந்திருந்தது…..
டிவியில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே –
மனதில் வேறு நினைவுகளும் ஓடிக்கொண்டிருந்தன…
எனக்கு இருவரையுமே மிகவும் பிடிக்கும்.

இளையராஜா சிறுவயது முதற்கொண்டே, எம்.எஸ்.வி. பாடல்களால்
கவரப்பட்டு, அந்த ஈர்ப்பிலேயே தன் இசைஞானத்தை வளர்த்துக்
கொண்டவர். பல மேடைகளில் ராஜாவே இதை குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்கெஸ்டிரேஷன் என்னும், இசைக்கருவிகளை பயன்படுத்தும்
விதத்தில் இவர்கள் இரண்டு பேருக்கும் நிறைய வேறுபாடுகள்
இருந்தன. இருவருமே நிறைய இசைக்கருவிகளை
பயன்படுத்தினாலும் – எம்.எஸ்.வி. பலமான, அழுத்தமான விதத்தில் கையாள்வார். இளையராஜா மிக மென்மையாக கையாள்வார்….

இருவரும் அவரவர் பாணியில் இயங்கினாலும், இரண்டு வழிகளுமே
அற்புதமாக இருக்கும்.

மாலையில் ராஜாவின் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போதே –
எம்.எஸ்.வி-யின் கர்ணன் திரைப்பட பாடல்கள் நினைவில் வந்தன. எம்.எஸ்.வி. அதிக பட்ச வாத்தியங்களை பயன்படுத்தியது
கர்ணன் பாடல்களில் தான்.

மாலையில் ராஜாவின் பாடல்களை மனம் நிறைய கேட்டாயிற்று.
இப்போது – இரவில் எம்.எஸ்.வி-யின் பாடல்களையும்
கேட்டு இன்றைய தினத்தை இனிதாக்குவோமே ….!!!

அப்பப்பா – எவ்வளவு அருமையான, இனிமையான இசைக்கோர்ப்பு….!!!

——————————————————————

கண்கள் எங்கே –

நிலவும் மலரும் –

என்னுயிர் தோழி –

மஞ்சள் முகம் –

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இளையராஜாவும், எம்.எஸ்.வி….யும் (என் விருப்பம் – 24)

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    4 பாட்டும் 4 லட்டுக்கள்.
    கர்ணனில் அத்தனை பாடல்களும் நன்றாக இருக்கும்.

  2. D. CHANDRAMOULI's avatar D. CHANDRAMOULI சொல்கிறார்:

    Karnan, Immortal songs, excellent lyrics, I guess by Kannadasan, set to lovely tunes by the melody kings MSV-VR. Whenever I listened to the song “Ullathil nalla ullam”, I’m moved to tears and feel elevated to a different plane. Sivaji not only delivered one of his best performances, I just read that he was “Karnan” in real life too, having donated to various national causes through established institutions, and this fact was not publicized by the media then and also now. Tens of crores in current value have been donated by him both in rupees as also gold! Sivaji’s family is so humble never to take credit for this! Great people from a cultured family of our dear Sivaji. Sivaji would live in our hearts as long as we are alive..

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    KM, btw, i must give credit to you for having picked up this topic so that we are not drowned in worries about the country’s situation, both political and economical. “Nalladhor Veenai Seidhey”…………….

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எம் எஸ் வி அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் பேசிக் வித்தியாசம் உண்டு. எம்.எஸ்.வி ஒவ்வொரு இசைக் கருவிகளாகச் சேர்த்து மொத்தமா மாலை கட்டும்போது மிக அழகா இருக்கும். இளையராஜா பேப்பர்ல கற்பனைல ஒவ்வொரு வாத்தியத்தையும் அந்த அந்த இடத்துல எழுதி முடித்தபிறகு, மொத்தமா எல்லாரும் வாசிக்கவேண்டியதுதான்.

    கர்ணன்… கண்ணதாசன் கூட்டணில, எல்லாப் பாடல்களுமே சொல்லமுடியாத அளவான இனிமை..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.