…
…
ஒரு இடத்தில் இதைப் படித்தேன்…
முதலில் நீங்களும் படியுங்கள்…
பிறகு சொல்லுங்கள் பார்க்கலாம் –
யார் இதை இத்தனை ரசனையுடன் எழுதி இருப்பாரென்று …?
…………………..
அந்த காலம் தான்
நன்றாக இருந்தது….!
******************
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
*********************
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள் .,
*********************
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
***********************
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
**********************
ரஜினி, கமல் படம் ரிலிஸ்.
KB படங்கள் என்றால்
ஒரு மாதம்அலசுவோம்
***************
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
************************
கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு
*****************
கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
************************
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
*******************
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும் பாடல் கேட்பது
சுகமானது
************************
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்
*********************
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்
**************************
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்
*****************
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS
***************
டான்ஸில் ஆபரேஷன்தான்
பெரிய ஆபரேஷன்
நிறைய பேர்
பண்ணி கொண்டார்கள்
*******************
வானொலி நாடகங்களை
ரசித்து கேட்டோம்.,
**********************
எல்லோரும் அரசு பள்ளிகளில்
படித்தோம்.,
*******************
சாலையில் எப்போதாவது
வண்டி வரும்.,
*******************
மழை நின்று
நிதானமாக பொழியும்
*****************
தமிழ் ஆசிரியர்கள்
தன்நிகரற்று விளங்கினர்.,
***********************
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும்
பாரமாயில்லை.,
***********************
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
*********************
வெஸ்ட் இன்டீசை
வெல்லவே முடியாது.,
***********************
சந்தைக்கு போக
பத்து ரூபாய் போதும்.,
*******************
அம்மா பக்கத்தில் உறங்கினோம்
***********************
கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்
********************
முடி வெட்ட
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைசா
——————-
பருவ பெண்கள் பாவாடை
தாவணி உடுத்தினர்………
சிலிண்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,
******************
சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும்
விலைக்கு வாங்க வில்லை.,
********************
தெருவில் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
*******************
டாக்டர் வீட்டுக்கே வருவார்
********************
காதலிப்பது த்ரில்லிங்கா இருந்தது
*****************
சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்
*****************
மயில் இறகுகள்
குட்டி போட்டன…புத்தகத்தில்.,
******************
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கி்னோம்..,
*****************
மூன்றாம் வகுப்பிலிருந்து
மட்டுமே,ஆங்கிலம்.,
**************
ஐந்தாம் வகுப்பு வரை
அரைக்கால் டவுசர்.,
****************
மொத்தத்தில் மரியாதை இருந்தது..
*******************
தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,
***********************
70 – 80 வயதையொத்தவர்கள் அநேகரும்
இதையெல்லாம் அனுபவித்திருப்பார்கள்….
தோராயமாக யூகிக்க முடிகிறது…
ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை… இல்லையா…?
பரவாயில்லை…. சொல்லுங்கள்…!!!
யார் இதை இத்தனை ரசனையுடன் எழுதி இருப்பார்…?
———————————————————————
பின் சேர்க்கை -(மதியம் 3 மணி…)
வேறு யாராக இருக்க முடியும்….?
நம்ம சுஜாதா சாரே தான்…!!!

.
—————————————————————————————————-



எனக்கு தெரியும்; ஆனால் சொல்ல மாட்டேன்.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று
பார்க்க காத்திருப்பேன்.
தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,
தொலைந்து போனவை நம் நாட்களும், சுகங்களுமல்ல அய்யா, தொலைந்துகொண்டிருப்பது நம் நல்ல மனங்கள் !!!!!!!!!!!
who else could write like this except (late) Mr.Sujatha.
Writer Sujatha sir
many 50 and 60 year olds may also have the same experience
Sir, Is this true?????
எப்படி சாத்தியம்?
30,000/-கோடிகள் கடனை
வெறும் 5,000/- கோடிகளில் அடைப்பது
எப்படி சாத்தியம்?-1
‘Alok textiles’ ன்ற கம்பெனிக்கு பதினைஞ்சி பேங்க் சேந்து 30 ஆயிரம் கோடி ரூபா கடன் கொடுக்குறாங்க.
30 ஆயிரம் கோடி ரூபா கடன வாங்கிட்டு கம்பெனிக்காரனுங்க வட்டியும் கட்டாம,அசலும் கட்டாம ஏமாத்திட்டு இருக்கானுங்க.
இதனால செம காண்டான நம்ம பேங்க் ஆட்கள், டேய் வாங்குன கடனுக்கு வட்டி கட்டாம ஏமாத்துறீங்களே நீங்கெல்லாம் உருப்படுவீங்களடானு கேட்டதுக்கு,
தோ பாருங்க சார் கம்பெனி நட்டமாயிடுச்சி, வட்டியெல்லாம் கட்ட முடியாது ,உன்னால முடிஞ்சது பாத்துக்கோனு அசிங்கப்படுத்தி அனுப்பிட்றானுங்க.
ரொம்ப டென்சன் ஆன நம்ம பேங்க்காரங்க, நேரா NCLT ன்ற தீர்ப்பாயத்துக்கிட்ட போயி கடன வாங்கிட்டு திருப்பி கட்டாம ஏமாத்தினு இருக்கானுங்கயானு பிராது கொடுக்குறாங்க…
அந்த பிராத பாத்துட்டு செம டென்சனான NCLT, அந்த கம்பெனிக்காரனுங்கள கூப்பிட்டு, யோவ் கடனை கட்ட முடியுமா முடியாதானு கேக்குறாங்க, அவனுங்க ஏய் ச்சீ ப்பே கட்ட முடியாதுனு சொல்லி NCLT யையும் அசிங்கப்படுத்துறானுங்க.
வேற வழி இல்லாம NCLT யும்,அதான் இவ்வளோ அடக்கமா நட்டமாயிடுச்சி, கடன கட்டமுடியாதுனு சொல்றானேப்பா,அவன் என்ன வச்சிக்கிட்டா இல்லனு சொல்றான்.
நம்ம வேணும்னா இந்த கம்பெனிய திவால்னு அறிவிச்சு ஏலம் விடலாம், ஏலத்துல வர்ற காச வச்சி கடன கட்டிடலாம்னு ஒரு மாஸ்டர் ப்ளான் போட்றாங்க.
அதே மாதிரி மறுநாள் ஏலத்த நடத்துறாங்க, அந்த ஏலத்துல இந்தியாவோட பரம ஏழை அம்பானி அந்த 30 ஆயிரம் கோடி கடன,5000 கோடிக்கு வாங்கிக்கிறேன்னு பெருந்தன்மையா சொல்றாரு.
NCLT ஆபிசர் எல்லா பேங்க் ஆட்களையும் கூப்ட்டு ,என்னப்பா 5000 கோடிக்கு கொடுத்துடலாமானு ஓட்டெடுப்பு நடத்துறாரு. ஓட்டுப்பதிவுல குறைஞ்சது 75 சதவீதம் ஆதரவு இருந்தாதான் ஜெயிக்க முடியும்.ஆனா கிடைக்கிறது என்னமோ 72 சதவீத ஆதரவுதான்.
அதானால அம்பானி வெறும் கையோட வீட்டுக்கு போய்ட்றாரு.
வீட்டுக்கு போன நம்ம பரம ஏழை, நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுனு கத்திக்கிட்டே நம்ம ஏழைத்தாயோட மகனுக்கு கால் பண்ணி, நீதி செத்துப்போச்சி,நியாயம் புதைஞ்சி போச்சினு அழுவுறாரு.
இதக்கேட்டு இரத்தக்கண்ணீர் வடிச்ச நம்ம ஏழைத்தாயின் மகன், உடனே…அந்த NCLT ஆபிசர்க்கு ஃபோன் பண்ணி, யோவ் 75 சதவீத ஆதரவெல்லாம் தேவையில்லை 66 சதவீதமே போதும்னு ரூல்ஸ மாத்துயானு சொல்லி கோவமா சொல்றாரு.
மறுநாள் நம்ம பரம ஏழை அம்பானி NCLT ஆபிசர் கிட்ட போயி,அதான் 66 சதவீதம்னு மாத்தியாச்சுல,குடுயா கம்பெனியனு 5000 கோடிக்கு அந்தக்கம்பெனிய வாங்கிட்றாரு.
5000 கோடிய பதினஞ்சு பேங்க்கும் சண்ட போடாம பிரிச்சி எடுத்துக்கோங்க…25000 கோடிய ரூபாய காந்தி கணக்குல எழுதுங்கனு நம்ம NCLT ஆபிசர் கடைய சாத்திட்றாரு.
இதுல ட்விஸ்ட் என்னனா …30ஆயிரம் கோடி கடன் வாங்குனவனும் ஒரே ஆள்தான், 5000 கோடி கொடுத்து அந்த கடன அடைச்சவனும் ஒரே ஆள்தான்.அவன் அம்பானிதான்.
ஆகமொத்தம் 25000 கோடி மக்கள் பணம் ..அவுட்டூ.
so nice presentation in tamil
…
Please any BJP supporters tell me, NCLT rules changed or not????? Recently due to this????