மதுபாலா ….


இன்று பிப்ரவரி,14, 2019 – Google search engine புகழ்பெற்ற,
மறைந்த ஹிந்தி நடிகை மதுபாலா’ வின் 86-வது பிறந்த நாளை
நினைவுபடுத்தி, சிறப்பித்திருக்கிறது.

என் பள்ளி நாட்கள் நினைவிற்கு வருகின்றன.
என் சிறு வயதில், மதுபாலா நடித்த
பல ஹிந்தி திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஹிந்தி திரையுலகில் 70 திரைப்படங்களில் நடித்து, லட்சக்கணக்கான
ரசிகர்களைப் பெற்று தனது மிகச்சிறிய (36) வயதிலேயே
( 14 February 1933 – 23 February 1969 ) இதய நோய் காரணமாக இறந்து
போனவர் மதுபாலா….

சில வருடங்கள், அப்போதைய புகழ்பெற்ற ஹீரோவான திலீப்குமாருடன் காதல் வசப்பட்டு, பிறகு பல காரணங்களால் அது கைகூடாமல், பின்னர் புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட பாடகர் மற்றும் நடிகரான கிஷோர்குமாரை மணந்தார். அவரது மணவாழ்வு 9 வருடங்களே நீடித்தது… நீடித்த நோயும் இறப்பும் – அவரை கிஷோர் குமாரிடமிருந்தும், இந்த உலகிலிருந்தும் பிரித்து விட்டது.

இன்றும் மதுபாலா’ வை நினைவுபடுத்துவது 1960-ல் ரிலீசான,
அந்த காலத்தில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமான
“மொகலே ஆசம்..”

கே.ஆசிஃப் தயாரித்த அந்த படம் அனார்கலி-சலீம் காதல் கதையைச் சொல்லும் படம்…தயாரிப்பில் மிக நீண்ட காலத்தை – கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை – எடுத்துக் கொண்டாலும், மிகப்பெரியதொரு வெற்றிப்படமாக அமைந்தது அந்தப்படம்.

பின்னர், ஜெமினி வாசன் அவர்கள் அதன் தமிழ்ப்படுத்தும் உரிமையை வாங்கி, “டப்” செய்து, “அக்பர்” என்கிற பெயரில் தமிழில் வெளியிட்டார்.

அதில் வரும் “காதல் கொண்டாலே பயமென்ன…? ( ஹிந்தியில் – ப்யார்
கியா தோ டர்னா கியா…) பாடலுடன் வரும் அனார்கலியின் நடனம் என்றும் மறக்க இயலாதபடி, அற்புதமான இசை, வண்ணம், ஒளிப்பதிவுடன்
படமாக்கப்பட்டது.

மதுபாலாவின் மிகசிறந்த அந்த நடனக்காட்சியே, அவருக்கான
நமது பிறந்த நாள் நினைவாக அமையட்டும்…!!!

.
—————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மதுபாலா ….

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    அந்தக் காலத்தில் திலீப்குமார் சிரிக்க வேண்டுமென்றால், தனியே காசு கொடுக்க வேண்டுமாமே நிஜமா சார் ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மணி,

      நான் நிறைய திலீப்குமார் படங்கள் பார்த்திருக்கிறேன்…. பெரும்பாலும் அவர் சிரிக்கும் சீன்’கள் வருவது அபூர்வமே.
      எப்போதும் சீரியஸ் முகத்துடன் தான் வருவார் – அநேகமாக காதல் காட்சிகளில் கூட.

      ஆனால், இது அவருடைய ஸ்டைல் என்று கருதப்பட்டது… அவ்வளவே.
      தனியே காசு….சில விமரிசகர்கள் கிண்டலுக்காக அப்போதே அப்படிச் சொல்வதுண்டு.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.