…
…

…
வாட்ஸாப் செய்தி ஒன்றை சில பாஜக அன்பர்கள் தீவிரமாக சகலருக்கும் அனுப்பி வருகிறார்கள்…. மார்ச் 2016-ல் மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ
தனது முகநூல் பக்கத்தில் எழுதியது அது….
செய்தியை நமது தள வாசகர்கள் பார்க்க வசதியாக கீழே
பதிந்திருக்கிறேன்….
…

…
இது குறித்து அப்போதே வெளியான செய்தி காணொளி ஒன்றும் கீழே –
…
…
வரவிருக்கிற பாராளுமன்ற தேர்தல் குறித்து பயங்கர டென்ஷனில் இருக்கும் பாஜகவினர் “சாந்தி” பெற உதவும் என்கிற நல்லெண்ணத்தில் தான் இந்த தகவலை இங்கே பதிவு செய்திருக்கிறேன்…. 🙂 🙂
ஆனால் – ஒரே ஒரு குட்டி சந்தேகம் …
இந்தியாவில் 2014-ல் தேர்தல் என்று சரியாக கணித்த நாஸ்டர்டாம் –
அடுத்து 2019, 2024 என்று கடந்து –
அதற்குப் பிறகு 2029-ல் தானே அதற்கடுத்த தேர்தல் வரும்…. என்பதை
யோசிக்கத் தவறி விட்டாரா அல்லது காரணமாகத்தானா …?
2026 என்று நடுவில் முடிக்கிறாரே – ஒருவேளை யோகிஜியோ, கட்கரிஜியோ – 2026-ல் இடப்பெயர்ச்சி செய்து விடுவார்களோ….?
450 வருடங்களுக்கு முன்னே செத்துப்போன நாஸ்டர்டாமஸ் –
அதையும் க்ளியராக – அடுத்து வருபவர் –
மொட்டை அடித்திருப்பாரா இல்லை கிராப்’பா
என்பதையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்தால் இப்போது
இந்த சந்தேகத்திற்கே இடமிருந்திருக்காது அல்லவா !!! ….. 🙂 🙂
.
—————————————————————————————————————–



ஒருவேளை “மொட்டை” தான் என்று
நாஸ்டர்டாமஸ் எழுதியிருந்தாரென்றால் –
கட்கரிஜியும் உடனடியாக “மொட்டை” போட்டு விடுவாரென்று
நினைக்கிறேன்… 🙂 🙂
சபாஷ் ஸரியான போட்டி – இப்போதிலிருந்தே ? 🙂
அய்யா … ! சசிகலாவின் ஆட்சி 9 ஆண்டுகளாம்! நாஸ்டர்டாமே கணித்து விட்டாராம்!
மேலை நாட்டு தீர்க்கதரிசி எனப்படும் நாஸ்டர்டாமையும் சசி ஆதரவாளர்கள் விட்டு வைக்கவில்லை. கிரக நிலைகளைக் கணக்கிட்டு ஜோதிடம் சொல்லும் நாஸ்டர்டாம், 4 வரி செய்யுள் வடிவில், ‘இது ஜோதிடத்தின் தீர்ப்பு’ என்று திட்டவட்டமாக வெளியிட்ட கருத்துக்களில் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்கள். அந்தக் கருத்து இதுதானாம் –
Dieu grec ne peut pas sauver la dame de fer Son Maître mourra aussi le lendemain Son amie fille de trois tribus gouvernera pendant neuf ans Terre de trois eaux deviendra super puissance
இதற்கான அர்த்தத்தை கூகுள் டிரான்ஸ்லேட்டில் தெரிந்து கொண்டு இப்படிச் சொல்கிறார்கள் –
‘கிரேக்கம் கடவுள்.. இரும்பு பெண்மணி காப்பாற்ற முடியாது…… என்றும்
Dieu grec ne peut pas sauver la dame de fer கிரேக்கம் கடவுள் இரும்பு பெண்மணி காப்பாற்ற முடியாது. அப்பலோ என்பது கிரேக்க கடவுள். ஜெயலலிதா இரும்பு பெண்மனி என்று அழைக்கப்படுபவர். அப்பலோவில் சிகிச்சை பலன் இன்றி அவர் இறப்பார் என்பதையே இந்த வரி காட்டுகிறது. அடுத்த வரி Son Maître mourra aussi le lendemain. அவரது மாஸ்டர் அடுத்த நாள் இறப்பார் என்பது. சோ அவர்கள் மரணத்தையே இது காட்டுகிறது மூன்றாவது வரியை பார்ப்போம். Son Ami de trois tribus gouvernera pendant neuf ans மூன்று பழங்குடியினர் அவரது நண்பர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்வர்…..என்றும்
இங்கு Ami de trois tribus என்பதை கூகிள் ‘அவரது மூன்று பழங்குடியினர் பெண் நண்பர் ‘ என மொழி பெயர்க்கிறது. இதை முக்குலத்தை சேர்ந்த அவரது பெண் நண்பர் என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது, இரும்பு பெண்மணியான ஜெயலலிதா அப்பலோவில் இறந்து, அவரது குருவான சோ அவர்களும் இறந்த பிறகு, ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தை சசிகலா ஆட்சி செய்வார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது…. என்றும் கூட செய்திகள் பல இணையதளங்களில் உள்ளது —
பாவம் சசிகலா கர்நாடகா சிறையில் ஆட்சி நடத்துகிறார் … ? அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி விளக்கங்கள் — நாஸ்டர்டாமஸ் …?
எப்போவோ படித்தேன் அதன் காரணத்தையும். மோடி அவர்களின் ஆயுள் அப்போது முடியும் என்று. அதனால் உங்களுக்கு இப்போதைக்கு சந்தேகம் தீர்ந்ததா?
இந்த நாஸ்ட்ராடமஸ் சொன்னதை வைத்து அவரவர் பாணியில் கயிறு திரிப்பதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்.
புதியவன்,
மோடிஜி நூறாண்டுகள் நோய் நொடியின்றி நீடூழி வாழட்டும்…
நமக்கு குறுகிய புத்தியெல்லாம் கிடையாது…
நமது விமரிசனம் எல்லாம் அவரது அரசியல் நடவடிக்கைகள் பற்றியதே.
அத்தகைய விமரிசனங்கள் தவிர்க்க இயலாதவை.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
// இந்த நாஸ்ட்ராடமஸ் சொன்னதை வைத்து அவரவர் பாணியில் கயிறு திரிப்பதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்.//
நான் இந்த இடுகையில் கிண்டல் செய்வதும் அதையே தான்…!!!
இன்னொன்று… வலம்புரி ஜான் அவர்கள் எழுதியிருந்தது. அவர் ஜெ. அதிமுகவுக்கு நுழையும் ஆரம்பகாலத்தில் (?), அவருடைய ஜாதகத்தை (இரண்டாகக் கொடுத்திருந்தாராம் ஜெ., ஒவ்வொன்றுக்கும் பலன் கேட்டு) வட நாட்டு பிரபல ஜோதிடரிடம் கொடுத்து கணித்ததில் அவர் சொன்னாராம் இந்த ஜாதகம் பெரிய பெரிய பதவிகளுக்கு வரக்கூடியது. இவர்களை 2016 வரை அரசியலில் கோலோச்சுவார் என்று. இதை நான் ரொம்ப வருஷமா நம்பினேன். அதுனாலதான் அவர் தேர்தலிலும் வெற்றி பெறுவார்னு நினைத்தேன். அவருக்கு உடல்நிலை சரியாக இல்லாமல் இருந்ததில் அதுதான் கடைசி வருடமாக இருக்குமோன்னும் நினைத்தேன். அதுனால, ஜோதிடத்தில் உண்மை இருக்கும், ஆனால் கணிக்கும் ஆட்கள் தங்கள் ஆசையை நுழைத்தால் அது உண்மை நிலையைத் தெரிவிக்காது.