இன்னும் கொஞ்சம் வைகோ (தொடர்ச்சி…)


காலையில் போட்ட பதிவின் தொடர்ச்சியாக, திரு.வைகோ அவர்கள் அதே விஷயம் குறித்து இன்னும் விவரமாக பேசும் மற்றொரு காணோளி கீழே –

How The 2G Spectrum Scandal Money was Brought to DMK Headquarters –
Vaiko Revealing Shocking News –

———————————————————————————-

இங்கே விக்ரம்-வேதா ஸ்டைலில் –
பதில் தெரிந்தாலும் சொல்ல முடியாத வகையில் சில கேள்விகள்… 🙂 🙂

– இப்படிப்பட்ட வைகோவுடன் இப்போது கூட்டு சேர்வதால் என்ன பலன்
கிடைக்கும் என்று ஸ்டாலின் நம்புகிறார்…?

-தேர்தல் மேடைகளில் இப்போது தளபதி’யை போற்றி, பாராட்டி –
வைகோ பேசும்போது, மக்களுக்கு வைகோவின் ‘மேற்படி டைப்’ பழைய பேச்சுகள் நினைவிற்கு வராதா…?

– நம்பகத்தன்மையற்ற வைகோவை திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்வதால் திமுகவுக்கு ….. லாபமா, நஷ்டமா….?

– திமுக கூட்டணியில் சேர்ந்து திருச்சி எம்.பி.தொகுதியில்
நின்று ஜெயிக்க வைகோ விரும்புகிறார்…அதற்காக ஸ்டாலின்
என்ன டிமாண்ட் வைத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்…

– ஆனால் – திமுகவின் – லோக்கல் “செயல்”வீரர்கள்…
வைகோவை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு,
அவரது வெற்றிக்கு பாடுபடுவார்களா…?

– அல்லது வைகோவின் பழைய (மேற்படி.. போன்ற ) பேச்சுகளை நினைவில் வைத்துக்கொண்டு, “நல்ல சமயம் இது நழுவ விடுவாயோ தோழா” – என்று ‘வைத்து-செய்துவிடு’ வார்களா…?

.
—————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இன்னும் கொஞ்சம் வைகோ (தொடர்ச்சி…)

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    விக்கிரமாதித்தன்-வேதாளம் கதையில் பதில் தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால், மண்டை வெடித்து சிதறி விடும். எனவே, எனக்கு தெரிந்த சரி என்று தோன்றூம் பதிலை, சொல்லி தலையை காப்பாற்றிக் கொள்கீறேன்.

    வைகோவை, ஸ்டாலின் திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், அவர் எதிரணியுடன் சேர்ந்து, ஒருவேளை ஜெயித்தாலும் ஜெயித்து தனது அரசியல் வாழ்வை தொடர்ந்து, தனக்கும் தொல்லையாக இருப்பார்… ஸ்டாலினுக்கு, அவரை அழிக்க ஒரே வழி, வைகோ கேட்கும் தொகுதியை அவருக்கு கொடுத்து, திமுக அணியிலேயே, தன்னுடனேயே அவரை சேர்த்துக்கொண்டு, “கூடவே வைத்துக்கொண்டு-செய்து விடுவது” தான்.

    ஒரே கல்லுல ரெண்டு மாங்கா; வைகோவை எதிரணியில் போகவிட்டு,
    எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்றை கூட்டிக்கொள்ள வேண்டாம்.
    “வைத்துச்-செய்”வதன் மூலம், அவரை ஒருவழியாக அரசியலிலிருந்து அகற்றி விடலாம்.

    எப்பூடி சார் எங்க விளக்கம் ?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      ஒருவேளை வைகோ கேட்ட தொகுதியைக் கொடுக்காமல் (கொடுத்தால், வைகோ அவருடைய தொகுதியில் முடங்கிவிடுவார், மாநில பிரச்சாரத்துக்குச் செல்வது கஷ்டம். நமக்கு, ‘ஸ்டாலின் கலைஞரை விட அரசியல் சாமர்த்தியமும் எழுச்சியும் மிக்கவர், நான் பிறந்ததே ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமரவைக்கத்தான் என்றெல்லாம் வைகோ பேசுவதைக் கேட்கும் கஷ்டம்), வேறு தொகுதியைத் தள்ளிவிட்டால், வைகோ தோல்விக்குப் பயந்து தனது படைத் தளபதியிடம் தொகுதியை ஒப்படைத்து திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்து ‘வெச்சு செஞ்சுடுவார்’. எப்படி இருந்தாலும் நமக்கு நல்லதுதான். என்ன சொல்றீங்க அரவிந்தன்?

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // எனக்கு எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை.. சர்ட்டிபிகேட் பெற்ற சினேகா.. குவிகிறது பாராட்டு //

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/no-caste-no-religion-certificate-341279.html … அரசின் நிலைப்பாடு எப்படியிருக்கும் …?

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    JUST A FOOLISH PUBLICITY STUNT.
    Neither anyone can demand nor
    Govt. Officers have any authority to issue such a CERTIFICATE.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.