…
…
தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் ஒரு அறிக்கை வெளிவந்திருக்கிறது…. இப்படி ஒரு சங்கத்தையோ, இதன் தலைவர் கி.வே. பொன்னையன் என்பவரை பற்றியோ, இதற்கு முன்னால் கேள்விப்பட்டதுண்டா…?
ஆனால், அவர் சொல்லி இருக்கும் செய்தியை பார்க்கும்போது, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனசாட்சி சொல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது…
————————————————————————-
கருணாநிதி வீட்டிற்குள் ரஜினியை அனுமதித்து இருக்க கூடாது..
தற்சார்பு விவசாயிகள் சங்கம் சீற்றம்….
…

…
கருணாநிதியை சந்திக்க சென்ற ரஜினியை கோபாலபுரம்
வீட்டிற்குள்ளே அனுமதித்து இருக்கவே கூடாது என்று தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே. பொன்னையன் குறிப்பிட்டு உள்ளார்.
ரஜினி கருணாநிதியை சந்தித்தது குறித்து பெரும் விமர்சனங்கள்
எழுந்து உள்ளது. இதுகுறித்து தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர்
கி.வெ.பொன்னையன் கூறுகையில், ரஜினி – கருணாநிதி இருவரும்
சினிமாவில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டும் தான் அவர்களுக்குள்ளான ஒற்றுமை.
திராவிட இயக்கத்தின் கொள்கைகள், சமூக நீதி கோட்பாடு, அரசியல் வேறு. அதற்கு நேரதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ரஜினிகாந்த்.
தன்னுடைய கொள்கையாக ஆன்மிக அரசியல் என்று எதையோ சொல்லி வருகிறார். அப்படி ஒரு அரசியலே இல்லை.
வாய்க்கு வந்ததை சொல்லிக்கொண்டாலும், மதவாத அரசியல் பாதை தான் அவரது வழியாக இருக்கும். பாஜக தலைவர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளிப்பதிலேயே இந்த விஷயம் நன்கு தெரிகிறது.
ஒரு முக்கிய நடிகர் எதோ பிறந்தநாள், திருமணநாளுக்கு வாழ்த்து பெற
போகிறார் என்றாலோ அல்லது உடல்நிலை முடியாமல் இருக்கும் கருணாநிதியை நலம் விசாரிக்க செல்கிறார் என்றாலோ சந்திக்க அனுமதி அளித்து இருக்கலாம்.
ஆனால், அவரோ தனிக்கட்சி தொடங்க போவதாக கலைஞரிடம் வாழ்த்து பெற போய் இருக்கிறார். இதை எப்படி ஸ்டாலினும், கருணாநிதியின் குடும்பத்தினரும் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.
திமுக தொண்டர்கள் குழப்பம்:
ரஜினி கட்சி ஆரம்பித்தால் மற்ற கட்சிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், திமுக மற்றும் அதிமுகவிற்கு நிச்சயம் பிரச்னை ஏற்படும். அதிமுக உட்கட்சி பிரச்னையால் அங்கேயே நிறைய குளறுபடிகள்.
திமுக அப்படி அல்ல; கட்டுக்கோப்பாக இயங்கி வருகிறது. அதை குலைத்து, தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் படியான செயலை ரஜினி செய்து இருக்கிறார். இதை கருணாநிதி புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தாரா என்பது தெரியவில்லை.
அவர் நிச்சயம் இந்த சந்திப்பை விரும்பி இருக்கமாட்டார். ரஜினியிடம்
எச்சரிக்கை தேவை ரஜினியின் அரசியலில் எந்த புதுமையும் இருக்க
போவது இல்லை. இத்தனை நாட்களாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க
செய்ததை அவர் தமிழகத்தில் செய்ய போகிறார்.
ஏற்கனவே, ஆர்.கே நகர் தேர்தலின் போது பிரதமர் மோடி சந்தித்து விட்டு சென்றார். இதனால் அங்கு டெபாஸிட் போனது. இப்போது ரஜினி வந்து சென்றிருக்கிறார். எனவே, திமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
———————————————————————————



அறிவழகு,
எவரோ ஒரு விலாசம் இல்லாத ஆசாமி எதையாவது
உளறினால் அதையெல்லாம் எதற்காக இங்கு கொண்டுவந்து கொட்டுகிறீர்கள்…?
அவர் எழுதியிருப்பதெல்லாம் உண்மையா…?
உங்களுக்கு தெரியுமா…?
நீங்கள் பொறுப்பேற்க முடியுமா..?
உங்களுக்கு எதாவது கருத்து சொல்ல வேண்டுமானால், அதை நாகரிகமான
முறையில் இங்கு சொல்லவும்… நீங்கள் சொல்லும் கருத்துகளுக்கு நீங்கள்
பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் உணரவும்.
இந்த மாதிரி அடுத்தவர் உளறுவதை எல்லாம் இனி
இங்கே கொண்டு வந்து கொட்ட வேண்டாம்.
-காவிரிமைந்தன்
தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள் ஐயா.
இது ஸ்டாலினின் மனசாட்சி சொல்வதா, அல்லது நடந்த தவறைப் பூசி மொழுக இந்த அறிக்கை அதற்குரிய ஆட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதா என்பது யாருக்குத்தான் தெரியும். ‘தற் சார்பு விவசாய சங்கம்’ நிச்சயம் திமுகவின் ஒரு கிளைதான்.
தமிழ் நாட்டில் ஏகப்பட்ட லெட்டர்பேட் கட்சிகள் சங்கங்கள் இருக்கின்றன என இந்த அறிக்கை மூலம் தெரிந்துகொண்டேன்.