புத்தாண்டுச் சிந்தனைக்கு – ” நான் யார்….? “


திருவண்ணாமலையிலிருந்து வீசிய ஒளி – உலகம் முழுவதற்கும் வெளிச்சம் காட்டியது…. புதிய ஆண்டின் துவக்கத்தில், நமது சிந்தனையை புதுப்பித்துக் கொள்ள, மகான் ரமணர் அருளிய வார்த்தைகளில் சில –
( மதம் சார்ந்ததல்ல …. ஆன்மிகம்…. அனைவருக்கும் பொருந்தும்…! )


– யாருக்கும் எந்த விதத்திலும், இம்மியளவும் துன்பம் விளைவிக்காத வாழ்வு தான் தவ வாழ்வு….

– அமைதியாக ஆண்டவனிடம் சரண் அடைவதே பிரார்த்தனை… மற்றதெல்லாம் ஆரவாரம்….

– ஜபம், தியானம் என்று தொடங்கிச் செய்வதெல்லாம் மனதை உள் நோக்கிச் செலுத்தவே… ஆன்மிக பயணம் என்பது
அதையும் கடந்து செல்வது…

– சுவாசத்தை உன்னிப்பாக கவனித்தால் போதும்… அது தானாகவே கும்பத்தில் கொண்டு சேர்த்து விடும். அதுவே பிராணாயாமம்….மூச்சுப்பயிற்சி…

– அதீத விருப்பு, வெறுப்பு – இரண்டையும் தவிர்த்து விடுதல் நலம் …

– பிறப்பும், இறப்பும் – வாழ்க்கையின் இரு எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா. அதை உணர்ந்தால், இந்த இரண்டுமே அர்த்தமற்றதாகி விடும். தன்னை உணர்ந்த மனிதன் இந்த நிலைகளை கடந்து விடுகிறான்.
அவனுக்கு இறப்பை பற்றிய கவலை இருப்பதில்லை…..

– ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால்,அதையொட்டி அவனுக்கு மரணத்துக்குப் பின்னர் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால், துன்பம் நிறைந்த அனுபவமே ஏற்படுகிறது….

– எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நன்மை உண்டு. மனதை அடக்கிக் கொண்டிருந்தால், எங்கே இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் நிம்மதியாக இருக்கலாம்.

– மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே தான் இருக்கிறது. வெளியேயுள்ள எந்தவித புறக்காரணங்களாலும் வருவதில்லை….

– விதியை வெல்லவும், அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு –

– ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி.
– இறைவனிடம் முழுமையாக சரணடைந்து விடுவது மற்றொரு வழி.

– பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும்…அவர்களின் இதயத்தில் நன்மை வளரும்…

பிறருக்கு நன்மை,
அனைத்து உயிர்களிடமும் அன்பு,
கடவுள் –
……………………………………..ஆகிய எல்லாமும் ஒன்றே….!!!

..
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஜனவரி 1, 2018

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to புத்தாண்டுச் சிந்தனைக்கு – ” நான் யார்….? “

  1. Srini's avatar Srini சொல்கிறார்:

    Dear KM Sir,
    Wishing you Happy New Year. May God Bless You with Good Health and All that You Wish for.

    On this Special day, I am sharing with you a beautiful song in Youtube. Its a Kabir Das Song – that says God is inside us and in the form of faith. https://www.youtube.com/watch?v=kZCgStafklE

    Ramana also says the same.

    “God dwells in you, as you, and you don’t have to ‘do’ anything to be God-realized or Self-realized, it is already your true and natural state.” Just drop all seeking, turn your attention inward, and sacrifice your mind to the One Self radiating in the Heart of your very being. For this to be your own presently lived experience, Self-Inquiry is the one direct and immediate way.” – Bhagavan Ramana Mahirishi.

    Pranams
    Srini

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மிக்க நன்றி ஸ்ரீநி…

      நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
      உங்களுக்கும், உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் எனது உளமார்ந்த
      வாழ்த்துகள்.

      -நட்புடன்,
      காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஸ்ரீநி,

      இப்போது தான் (இரவு 11.30 மணி) வீடியோவை பார்க்க முடிந்தது. அற்புதம்….!
      பாடல் வரிகளாகட்டும், பாடும் அந்த சிறுமியின் குரல் வளமாகட்டும் – நிஜமாகவே அற்புதம்…
      அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    Wish you and other friends a very happy new year .

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி சுந்தரராமன்,

      உங்களுக்கும், உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் எனது உளமார்ந்த
      வாழ்த்துகள்.

      -நட்புடன்,
      காவிரிமைந்தன்

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    நல்லவன் வாழ்வான் படத்தில் வரும் ” ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் … அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் ” இதுவே எனது ஆங்கில… புத்தாண்டு வாழ்த்துகளாக … நண்பர்கள்
    அனைவருக்கும் …!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி பிரனீஷ்,

      உங்கள் கூர்மையான பார்வையை பாராட்டுகிறேன்.

      உங்களுக்கும், உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

      -நட்புடன்,
      காவிரிமைந்தன்

  4. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    மிக நல்ல தேவையான பதிவு. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  5. M.Thevesh's avatar M.Thevesh சொல்கிறார்:

    உங்கள் எழுத்தை தவறாது படிக்கும் வாசகன் என்ற ரீதியில் எனது
    மனமார்ந்த புதுவருட நல்வாழ்ந்துக்களைத் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்
    நட்புடன் ம.தேவேஸ், Toronto, Canada.

  6. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    தங்களுக்கும் ஏனைய விமர்சனம் தோழமைகளுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  7. GVS's avatar GVS சொல்கிறார்:

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  8. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    தங்களுக்கும், தங்கள் தளத்தின் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.