ரஜினி – நமது எதிர்பார்ப்புகள்… குருமூர்த்திஜி விரும்புவது ……!!!


அதென்ன ஆன்மிக அரசியல் என்று பலரும் வினவுகிறார்கள்…

காரணம் -இன்றைய தலைமுறை மக்களுக்கு பழக்கப்படாத அரசியல் – ஆன்மிக அரசியல் என்கிற வார்த்தை.

காந்திஜியின் காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு புரியும் -ஆன்மிக அரசியல் என்றால் என்னவென்று…

காந்திஜி செல்லும் ஊர்களிலெல்லாம் பிரார்த்தனை கூட்டங்கள் நடக்கும். அந்த பிரார்த்தனையில் எல்லா மதத்தினருக்கும் பொதுவான,மத ஒற்றுமையை வளர்க்கும் பாடல்கள் இருக்கும்.

———————————————————————————-
முக்கியமாக – இந்து,முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் – “ரகுபதி ராகவ” பாடல்…

( ஈஸ்வரனும் நீயே, அல்லாவும் நீயே -எல்லாருக்கும் நல்ல மனதை
கொடு ஆண்டவனே… )

– “ரகுபதி ராகவ ராஜாராம் ! பதீத பாவன சீதாராம் !
சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ து ப்யாரே சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !”
———-

அதே போல் -“வைஷ்ணவ ஜனதோ”

( பிறருடைய துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் )

“வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ- ”

—————————————————————————-

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, அனைத்து மதங்களையும் ஆதரிக்கும், மத உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட -இறையுணர்வுடன் கூடிய ஒரு உணர்வு தான் ஆன்மிக உணர்வு. நம் நாட்டில் மக்களிடையே அவசியம் வளர்க்கப்பட வேண்டிய ஒரு உணர்வு….

இதைத்தான் ரஜினி ஆன்மிக அரசியல் என்று சொல்கிறார்…

“கடமையை செய் – பலனை எதிர்பார்க்காதே… அதாவது பலனை எதிர்பார்த்து கடமையை செய்யாதே… உன் கடமை எதுவோ அதைச்செய்… பலன் விளைவது உன் அதிகாரத்திற்குள் இல்லை…”

உண்மை, உழைப்பு, உயர்வு….

உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான – ஜாதி, மத சார்பில்லாத ஒரு ஆட்சி / நிர்வாகம்… ”

– இந்த கொள்கைகள் எனக்கு நிச்சயம் பிடிக்கின்றன…
நான் இவ்வளவு காலமாக இந்த வலைத்தளத்தில் வலியுறுத்தி எழுதி வருவது கூட ஒரு விதத்தில் இவற்றை எல்லாம் குறித்து தான்…

ஆனால், இதனை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதா…?
இவர் சொல்வதை நடைமுறையில் செய்ய முடியுமா..?
மக்கள் இவருக்கு அந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்களா..?
இவரை அரியணையில் அமர்த்துவார்களா…?
அதற்குரிய பலம் இவருக்கு இருக்கிறதா…?
இவருடன் யார், யார் துணை சேரப்போகிறார்கள்…?
– இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…!

———————————————–

ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பது நம் விருப்பம்.

ஒரு வலிமையான மாநில கட்சியை உருவாக்கி, மாநில கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலுவுடன் வற்புறுத்தி நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி உடையதாக அது இருக்க வேண்டும்.

ஜெயலலிதா அவர்களைப் போலவே, தேர்தலில் கூட்டு சேராமல், ஆனால், தேர்தல் முடிந்த பிறகு அநாவசிய மோதலும் வேண்டாம் – அடிமைத்தனமும் வேண்டாம்… என்று சுயமரியாதையுடன் இயங்கக்கூடிய,

மாநிலத்தின் நலனில் அதிக அக்கறை காட்டக்கூடிய ஒரு கட்சியாக, மாநிலமாக உருவெடுக்க வேண்டும்…இது நமது ஆசை, விருப்பம்…!!!

———————————————————————————

சரி.. நமது விருப்பம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
பாஜக குருஜி – அதான் குருமூர்த்தி அவர்கள் என்ன சொல்கிறார் பார்ப்போமா..?

ரஜினி கட்சி துவங்குவது பற்றி இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில் திரு.குருமூர்த்தி தனது கருத்து, விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்….

அவர் கூறி இருப்பதிலிருந்து –

ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் பெறும் மாறுதலை
ஏற்படுத்தும். புதிய பாணி அரசியல் ஏற்பட வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவர் கூறும் ஆன்மிகம் கலந்த அரசியல், தெய்வ பக்தி அதிகமாகி வரும் தமிழ்நாட்டில், குறிப்பாக திமுகவுக்கு சவாலாக அமையும்.

அதே போல் திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெற்று வந்த அதிமுக வுக்கும் அது ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

லஞ்ச ஊழலுக்கு எதிராக, குடும்ப அரசியலை ஒழிக்க, தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க, சோ எதிர்பார்த்தபடி ரஜினி அரசியலுக்கு
வருவதை துக்ளக் வரவேற்கிறது….

ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள தேசியவாதியான ரஜினிகாந்த்
கழகங்களுக்கு மாற்றாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது….. சினிமாவில் புகழ்பெற்ற ரஜினி, புதிய பாணி அரசியலை கடைப்பிடிக்கும் அரசியல் தலைவராக உருவாக வேண்டும்.

அவர் சந்திரபாபு நாயுடுவை போல, தேசிய ஜனநாயக் கூட்டணியில் சேர்ந்து,
தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும். இது நடந்தால்,
தமிழகத்துக்கும் நல்லது. தேசியத்துக்கும் நல்லது. அப்படி நடக்குமா என்பதை வரும் நாட்கள் தான் முடிவு கூறும்.

———————————————————

பின் குறிப்பு –
நண்பர்களின் கருத்துகளை பின்னூட்டங்களின் மூலம்
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ரஜினி – நமது எதிர்பார்ப்புகள்… குருமூர்த்திஜி விரும்புவது ……!!!

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

    ஒரு டெக்னிகல் கோளாறு காரணமாக இதே இடுகை, இதையடுத்து, மீண்டும் ஒரு முறை, “நமது எதிர்பார்ப்புகளும், குருமூர்த்திஜி விரும்புவதும்…” என்கிற தலைப்பில் பதிவாகி இருக்கிறது. பின்னூட்டம் எழுதும் நண்பர்கள் அங்கேயே எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.