நமது எதிர்பார்ப்புகளும், குருமூர்த்திஜி விரும்புவதும்…


ரஜினி குறித்து, நமது எதிர்பார்ப்புகளும், குருமூர்த்திஜி விரும்புவதும்…

அதென்ன ஆன்மிக அரசியல் என்று பலரும் வினவுகிறார்கள்… காரணம் -இன்றைய தலைமுறை மக்களுக்கு பழக்கப்படாத அரசியல் – ஆன்மிக அரசியல் என்கிற வார்த்தை.

காந்திஜியின் காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு புரியும் -ஆன்மிக அரசியல் என்றால் என்னவென்று…

காந்திஜி செல்லும் ஊர்களிலெல்லாம் பிரார்த்தனை கூட்டங்கள் நடக்கும். அந்த பிரார்த்தனையில் எல்லா மதத்தினருக்கும் பொதுவான,மத ஒற்றுமையை வளர்க்கும் பாடல்கள் இருக்கும்.

———————————————————————————-
முக்கியமாக – இந்து,முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் – “ரகுபதி ராகவ” பாடல்…

( ஈஸ்வரனும் நீயே, அல்லாவும் நீயே -எல்லாருக்கும் நல்ல மனதை
கொடு ஆண்டவனே… )

– “ரகுபதி ராகவ ராஜாராம் ! பதீத பாவன சீதாராம் !
சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ து ப்யாரே சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !”
———-

அதே போல் -“வைஷ்ணவ ஜனதோ”

( பிறருடைய துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் )

“வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ- ”

—————————————————————————-

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, அனைத்து மதங்களையும் ஆதரிக்கும், மத உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட -இறையுணர்வுடன் கூடிய ஒரு உணர்வு தான் ஆன்மிக உணர்வு. நம் நாட்டில் மக்களிடையே அவசியம் வளர்க்கப்பட வேண்டிய ஒரு உணர்வு….

இதைத்தான் ரஜினி ஆன்மிக அரசியல் என்று சொல்கிறார்…

“கடமையை செய் – பலனை எதிர்பார்க்காதே… அதாவது பலனை எதிர்பார்த்து கடமையை செய்யாதே… உன் கடமை எதுவோ அதைச்செய்… பலன் விளைவது உன் அதிகாரத்திற்குள் இல்லை…”

உண்மை, உழைப்பு, உயர்வு….

உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான – ஜாதி,
மத சார்பில்லாத ஒரு ஆட்சி / நிர்வாகம்… ”

– இந்த கொள்கைகள் எனக்கு நிச்சயம் பிடிக்கின்றன…
நான் இவ்வளவு காலமாக இந்த வலைத்தளத்தில் வலியுறுத்தி எழுதி வருவது கூட ஒரு விதத்தில் இவற்றை எல்லாம் குறித்து தான்…

ஆனால், இதனை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதா…?
இவர் சொல்வதை நடைமுறையில் செய்ய முடியுமா..?
மக்கள் இவருக்கு அந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்களா..?
இவரை அரியணையில் அமர்த்துவார்களா…?
அதற்குரிய பலம் இவருக்கு இருக்கிறதா…?
இவருடன் யார், யார் துணை சேரப்போகிறார்கள்…?
– இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…!

———————————————–

ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பது நம் விருப்பம்.

ஒரு வலிமையான மாநில கட்சியை உருவாக்கி, மாநில கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலுவுடன் வற்புறுத்தி நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி உடையதாக அது இருக்க வேண்டும்.

ஜெயலலிதா அவர்களைப் போலவே, தேர்தலில் கூட்டு சேராமல், ஆனால், தேர்தல் முடிந்த பிறகு அநாவசிய மோதலும் வேண்டாம் – அடிமைத்தனமும் வேண்டாம்… என்று சுயமரியாதையுடன் இயங்கக்கூடிய,

மாநிலத்தின் நலனில் அதிக அக்கறை காட்டக்கூடிய ஒரு கட்சியாக,
மாநிலமாக உருவெடுக்க வேண்டும்…இது நமது ஆசை, விருப்பம்…!!!

———————————————————————————

சரி.. நமது விருப்பம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
பாஜக குருஜி – அதான் குருமூர்த்தி அவர்கள் என்ன சொல்கிறார் பார்ப்போமா..?

ரஜினி கட்சி துவங்குவது பற்றி இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில்
திரு.குருமூர்த்தி தனது கருத்து, விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்….

அவர் கூறி இருப்பதிலிருந்து –

ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் பெறும் மாறுதலை ஏற்படுத்தும். புதிய பாணி அரசியல் ஏற்பட வழி வகுக்கும் என்பதில்
சந்தேகமில்லை.

அவர் கூறும் ஆன்மிகம் கலந்த அரசியல், தெய்வ பக்தி அதிகமாகி வரும் தமிழ்நாட்டில், குறிப்பாக திமுகவுக்கு சவாலாக அமையும்.

அதே போல் திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெற்று வந்த அதிமுக வுக்கும் அது ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

லஞ்ச ஊழலுக்கு எதிராக, குடும்ப அரசியலை ஒழிக்க, தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க, சோ எதிர்பார்த்தபடி ரஜினி அரசியலுக்கு வருவதை துக்ளக் வரவேற்கிறது….

ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள தேசியவாதியான ரஜினிகாந்த் கழகங்களுக்கு மாற்றாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது….. சினிமாவில் புகழ்பெற்ற ரஜினி, புதிய பாணி அரசியலை கடைப்பிடிக்கும் அரசியல் தலைவராக உருவாக வேண்டும்.

அவர் சந்திரபாபு நாயுடுவை போல, தேசிய ஜனநாயக் கூட்டணியில் சேர்ந்து,
தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும். இது நடந்தால்,
தமிழகத்துக்கும் நல்லது. தேசியத்துக்கும் நல்லது. அப்படி நடக்குமா என்பதை வரும் நாட்கள் தான் முடிவு கூறும்.

———————————————————

பின் குறிப்பு –
நண்பர்களின் கருத்துகளை பின்னூட்டங்களின் மூலம்
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to நமது எதிர்பார்ப்புகளும், குருமூர்த்திஜி விரும்புவதும்…

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    பொருத்திருந்து பார்ப்போம்.

    ஆனால்….

    குருஜி வாய் திற‌ந்திருக்கிறாரே…

    அதான் பாஜக இவர் பின்னாலிருக்கோ என்று பலர் சந்தேகப்படுகிறார்கள். இந்த சந்தேகம் எவ்வளவு தூரம் உண்மை…! தெறியாது.

    காலம் தான் சொல்லனும். பொருத்திருந்து பார்ப்போம்

  2. jksm raja's avatar jksm raja சொல்கிறார்:

    “” அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, அனைத்து மதங்களையும்
    ஆதரிக்கும், மத உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட -இறையுணர்வுடன்
    கூடிய ஒரு உணர்வு தான் ஆன்மிக உணர்வு. நம் நாட்டில் மக்களிடையே
    அவசியம் வளர்க்கப்பட வேண்டிய ஒரு உணர்வு….
    இதைத்தான் ரஜினி ஆன்மிக அரசியல் என்று சொல்கிறார்…””

    ஆன்மீக அரசியல் என்பதற்கு ரஜினி வேறு விதமான விளக்கம் கொடுத்துவிட்டார்.

    ஆகையால் நீங்கள் குறிப்பிடுகின்ற ஆன்மீக அரசியல் அவர் மனதில் இல்லை . அவர் மனதில் இருப்பது பிஜேபி யின் ஆன்மீக அரசியல் .

    அவரின் ஆன்மீக அரசியலுக்கான link
    http://namathu.blogspot.in/2018/01/so-called.html

    பிஜேபி யின் வருமான வரி துரையின் மிரட்டலுக்கு பயந்து தான் கட்சி ஆரம்பிப்பதாக அவர் கூறுவதாக நான் நினைக்கிறேன் .

    இதுநாள் வரை பிஜேபி எவ்வளவோ முயன்றும் மத துவேஷத்தை தமிழ் நாட்டில் விதைக்க முடியவில்லை . அதை ரஜினியின் பெயரால் விதைக்க முயல்கிறார்கள்.

    ரஜினிக்கு என்று ஒரு வாக்கு வாங்கி உருவானபின் பிஜேபி அதை கைப்பற்றி அதில் மத துவேஷத்தை விதைத்து தமிழ் நாட்டை கெடுக்க பார்க்கிறார்கள்.

    இப்பொழுதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல், நேர்மையான, மதச்சார்பு இல்லாத அரசியல் என்றுதான் நான் பொருள் கொள்கிறேன். (ஆனாலும் அவர் Impact create செய்யும் வயதைக் கடந்துவிட்டார் என்பது என் எண்ணம்).

    பாஜக, ரஜினியை (அல்லது மற்ற கட்சிகளை) தன்னோடு சேரும்படி சொன்னால், அதன் அர்த்தம், ‘நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டுவருகிறேன்’ என்பதாகத்தான் இருக்கும். தமிழகத்துக்கு பாஜகவினால் நன்மை இல்லை. அவர்களுக்கு அளிக்கும் வாக்கு தமிழகத்துக்கு நன்மை செய்யாது. (ஆனால் பாஜக இந்தியாவுக்குத் தேவை. அதன் காரணம், காங்கிரஸ் என்றொரு கட்சி இருப்பதுதான்)

    ரஜினி, ஒருவேளை மக்களின் ஆதரவைப் பெறுமளவுக்கு வளர்ச்சி அடைந்தால் (அடைந்தால், அடையும் என்று நான் நம்பவில்லை. இன்றைய சூழலில், மக்களும் (மிகப் பெரும்பான்மை) நேர்மையான அரசியலுக்குத் தயார் இல்லை, நம் நாட்டின் சட்டங்களும் அதற்கு ஏற்றமாதிரி இல்லை), ஜெ. வழியைத்தான் மத்திய-மாநில அரசுகளின் உறவில் பேணவேண்டும். Our CM’s job is to think about Tamil Nadu’s ‘நலன். CM, மத்திய அரசுக்கு வால் பிடிக்கவேண்டாம். நல்லது செய்ய, ‘தேசிய ஜன’நாயகக் கூட்டணி’யில் இணைவது தேவையில்லை. கூட்டணிகளே, பணத்தைச் சுருட்டும் வழி என்பது காங்கிரசின் கூட்டணி அரசிலும், இதற்கு முந்தைய பாஜகவின் கூட்டணி அரசிலும் கண்டவைதானே. அந்தக் கூட்டணிகளில் இருந்து, திமுக தமிழகத்துக்கு என்ன நன்மையைக் கொண்டுவந்தது, அவர்களை வளப்படுத்திக்கொண்டதைத் தவிர?

  4. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // `ஆன்மிக அரசியல் என்றால் என்ன?’ – ரஜினிகாந்த் புது விளக்கம் // https://www.vikatan.com/news/tamilnadu/112465-rajini-explains-about-spiritual-politics.html இதில் : // இன்று `ஆன்மிக அரசியல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு `உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல். அறவழி அரசியலே ஆன்மிக அரசியல்.// என்று விளக்கமளித்துள்ளார் ரஜினி….! // உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான – ஜாதி,
    மத சார்பில்லாத ஒரு ஆட்சி / நிர்வாகம்… ”// இப்போதுவரை இது சாத்தியமாகவில்லை என்பதை தானே இந்த வார்த்தைகள் குறிக்கிறது … !

    மகாத்மாவின் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்த காலங்கள் வேறு — தற்போது நடப்பவை வேறு … அவர் மதங்களை ஒருங்கிணைக்க பஜன்களை பாடினார் — இன்று மதங்களை வைத்து அராஜகம் செய்யும் கூட்டம் நாள்தோறும் பல்கி பெருகுவதை யாரும் மறைக்கவோ — மறுக்கவோ முடியாது – ஏனென்றால் நாட்டு நடப்பு அப்படி … !

    // ( பிறருடைய துன்பம் தனதென எண்ணும்
    பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ) … மற்றவர்கள் …. ?

    கையை காட்டிய காங்கிரஸ் … கை விரல்களை விரித்துக்காட்டிய திமுக …. ரெட்டை விரலை காட்டிய அதிமுக போன்றவர்கள் மத்தியில் இவரும் இந்த மூன்றும் அடங்கிய ஒரு சின்னத்தை காட்டுகிறார் — பாவம்யா … தமிழக மக்கள் …!!!

  5. Prabhu T's avatar Prabhu T சொல்கிறார்:

    ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. அது 50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது என்பது.நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !! கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !! இவை அனைத்தையும் யாராவது மறுக்க முடியுமா?

    உயர்கல்வி – பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு – 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 17.6%; மபி – 17.4%; உபி – 16.8%; ராஜஸ்தான் – 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

    கல்வி_நிலையங்களின்_தரம் – 2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில். பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு – 22 ; குஜராத் – 5 ; மபி – 3 ; உபி – 6 ; பீகார் – 1 ; ராஜஸ்தான் – 3. முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில் தமிழ் நாடு – 24 ; குஜராத் – 2 ; மபி – 0 ; உபி – 7. பிகார் – 0 ; ராஜஸ்தான் – 4.

    பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) – இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு. தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்.

    ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். தமிழ் நாடு – 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 10.94 lakh crore (5th Place ; மபி – 7.35 lakh crore (10 th Place) ; உபி – 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் – 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் – 2.77 lakh crore (17 th Place)

    சாப்ட்வேர் ஏற்றுமதி (ஆயிரம் கோடியில்) -தமிழ் நாடு – 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1917 ; மபி – 343 ; உபி – 13,740 ; ராஜஸ்தான் – 712; சத்தீஸ்கர் – 18

    சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு – தமிழ் நாடு – 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 36 ; மபி – 54 ; உபி – 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் – 46 ; இந்திய சராசரி: 40

    ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம் -தமிழ் நாடு – 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 112 ; மபி – 221 ; உபி – 285; ராஜஸ்தான் – 244 ; சத்தீஸ்கர் – 221 ; இந்திய சராசரி : 167

    தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் -தமிழ் நாடு – 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 55.2%; மபி – 48.9%; உபி – 29.9%; ராஜஸ்தான் – 31.9%; சத்தீஸ்கர் – 54%; இந்திய சராசரி : 51.2%

    ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்) – தமிழ் நாடு – 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 890 ; மபி – 918 ; உபி – 902 ; ராஜஸ்தான் – 888 ; இந்திய சராசரி : 919

    தனி நபர் வருமானம்* (Per Capita Income) – ரூபாயில் – தமிழ் நாடு – 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1,06,831; மபி – 59,770 ; உபி – 40,373 ; ராஜஸ்தான் – 65,974 ; சத்தீஸ்கர் – 64,442; இந்திய சராசரி : 93,293

    வீடுகளுக்கு மின்சாரம்* (households having electricity) -தமிழ் நாடு – 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 96%; மபி – 89.9%; உபி – 70.9%; ராஜஸ்தான் – 91%; சத்தீஸ்கர் – 95.6%

    ஏழ்மை சதவீதம் Poverty (% of people below poverty line) – தமிழ் நாடு – 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 16.63%; மபி – 31.65%; உபி – 29.43%; ராஜஸ்தான் – 14.71%; சத்தீஸ்கர் – 39.93%; இந்திய சராசரி : 21.92%

    ஊட்டசத்து குறைபாடு (malnutrition) – தமிழ் நாடு – 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 33.5%; மபி – 40%; உபி – 45%; ராஜஸ்தான் – 32%; சத்தீஸ்கர் – 35%; இந்திய சராசரி : 28%

    மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு) -தமிழ் நாடு – 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 87; மபி – 41 ; உபி – 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

    இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம். உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார் “தமிழ்நாட்டை வடமாநிலங்களோடு ஒப்பிடுவதே தவறு, முன்னேறிய நாடுகளோடுதான் ஒப்பிட வேண்டும்”

    Please read this for the validation of above
    http://www.hardnewsmedia.com/2013/12/6156

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      அமெர்த்தியா சென் அவர்களும் மற்றவர்களும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள். ஆகையால், அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. யாராவது ஆர்எஸ்எஸ்/பாஜக உளறுபவர்கள் இருப்பார்கள். கொண்டுவாருங்கள் அவர்களை, அவர்கள் உளறுவது ச்செ… இட்டுக்கட்டுவது அடச்சே… சொல்வது தான் சரியாக இருக்கும்.

      எங்கே அவர்கள்…?

  6. Suraj's avatar Suraj சொல்கிறார்:

    Nadapathelam Nanmaikay

  7. Prabhu T's avatar Prabhu T சொல்கிறார்:

    ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உண்மைகள் மாறாது. இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் நடுவண் அரசின் பல இணையதளங்களில் கிடைக்கும். ஆன்மிக அரசியல் இங்கு எடுபடுமா? ஏனென்றால் திராவிடம் நீர்த்து போனது போல் தோற்றமளிக்கலாம், ஆனால் சமூகநீதிக்கான கருத்தியலாக்கம் இருக்கும்வரை திராவிடசார் அரசியல் இருக்கும்.

  8. Ramasamy's avatar Ramasamy சொல்கிறார்:

    இராவணன் ஆரியனா அல்லது திராவிடனா ?
    அவனது அரசு ஆரிய சார் அரசா அல்லது திராவிட சார் அரசா ?

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.

    நாம் எடுத்துக்கொண்ட பொருள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த பிறகு,
    மீண்டும் இது குறித்து பேசலாமென்று நினைக்கிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  10. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    முதல் முறையாக நீங்களும் தடுமாறி விட்டீர்கள், காந்தியின் காலம் வேறு இன்றைய சந்தர்பவாத காலம் வேறு, ரஜினியால் பிஜேபி தான் பலன் பெற முயற்சி செய்கிறது. காலம் கடந்த முடிவு, இரண்டு படம் ஓட வேண்டும் இப்போது இப்படி ஒரு முடிவை சொல்லாவிட்டால் ரசிகர்கள் அவரை மதிக்க மாட்டார்கள் என்பதனால் இதனை அறிவித்துள்ளார். தேர்தல் வரும் நேரத்தில் அவர் சிங்கப்பூரில் இருக்கலாம்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் புதுவசந்தம்,

      இதுவரை நான் தடுமாறவில்லை….
      இனியும் “மாற” மாட்டேன்….
      கவலை வேண்டாம்.

      ரஜினி ஒரு நல்ல மனிதர் என்று நான் மனதாற நம்புகிறேன்.
      அவர் தனது முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புவது
      தமிழ்நாட்டின் நன்மையை முன்னிட்டு…
      பாஜக வின் நன்மையை முன்னிட்டு அல்ல….
      பாஜக பற்றி என் நிலையை நன்கு அறிந்த உங்களுக்கு எப்படி
      இந்த சந்தேகம் வந்தது…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் புதுவசந்தம்,

      தொல் திருமாவளவனே நம்புகிறார்… பிறகு நான் நம்புவதைப் போய் தடுமாற்றம் என்று சொல்லி விட்டீர்களே…!!!

      —————–

      ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி தொல்.திருமாவளவன் –

      —————————-

      தன்னுடைய அரசியல் என்பது ‘சாதி மதசார்பற்ற ஆன்மீக அரசியலாக’ இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்து அவர் பொதுமக்களுக்கு உணர்த்த விரும்புவது என்னவென்றால், சாதியவாதிகளோடு, மதவாதிகளோடு கைகோக்கப் போவதில்லை என்பதையும், அதே வேளையில் மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளர்களோடும் சேரப்போவதில்லை என்றும் தெளிவுப்படுத்த முயற்சிக்கிறார் என்பதே ஆகும்.

      அதாவது ஆன்மீகவாதம் வேறு மதவாதம் வேறு என்பதை வேறுபடுத்திக்காட்ட அவர் முயற்சிக்கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் மதவாத அரசியலுக்கு துணைப் போகமாட்டேன் என்பதை அவர் உணர்த்துவதாகத் தெரியவருகிறது. அதே வேளையில், கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் அணிதிரட்ட விரும்புகிறார் என்றும் தெரிகிறது. அவருடைய ‘ஆன்மீக அரசியல்’ மதவாதத்திலிருந்து வேறுபட்டது, விலகி நிற்கக்கூடியது என்பதை எதிர்காலத்தில் அவருடைய செயல்பாடுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

      ‘சாதி மதச் சார்பற்ற’ என்னும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவருக்கு பின்னால் சாதியவாதிகளோ மதவாதிகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார் என்கிற வகையில் அவரது நிலைப்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
      ————————————-

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  11. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    ஆன்மிகம் – மிகவும் புனிதமானது … அரசியல் நம்நாட்டில் சாக்கடையைவிட மோசமானது … இரண்டையும் இணைத்ததே – கேவலமானது ….! பலநாட்கள் , தினம் ஒரு பேச்சு : வருவேன் கண்ணா — கனவுகள் பலிக்கனும் — கிடா வெட்டி சோறு போட ஆசை — காலம் முக்கியம் — அதிக செலவில் தயாரித்த இரண்டு படங்கள் வருகிறது — என்று பேசி வந்தவர் — ரசிகர்களின் சோர்வைக்கண்டு — ஏதோ ஒரு ” நிர்பந்தத்தில் — அவசர முடிவு ” எடுத்து விட்டு தத்தளிக்கிறார் … ” கொள்கையே இல்லாத அரசியல் பாவம் ” என்பது காந்திஜியின் சித்தாந்தம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் — புது கட்சி ஆரம்பிப்பவர்கள் ….!!

    இந்த “ஆன்மீக அரசியல் ” என்ற பெயரை தூக்கி நிறுத்தவும் — தாங்கிப்பிடிக்கவும் — மகாத்மாவின் பிரார்த்தனை கூட்டங்களை — ஒப்பீடாக காட்டியிருப்பது – வருந்தத்தக்கது …. மேலும் — தளத்தில் பல இடுகைகளில் திரு குருமூர்த்தி என்று இருந்தவர் – தற்போது குருமூர்த்திஜி என்று ஆகியுள்ளது பரிணாம வளர்ச்சி — அது தங்களின் விருப்பம் …. கால ஓட்டத்தில் சிலர் மாறுவார்கள் — சிலர் மாற்றப்படுகிறார்கள் — எது எப்படியோ – நல்லதாக நடந்தால் — நல்லது தானே …. !!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      ” காமாலைக்காரருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ” என்பார்கள். அது போல சிலருக்கு “ஜி”யை பார்த்தாலே என்னென்னவோ தோன்றி விடுகிறது…
      நான் மோடி அவர்களை மோடி”ஜி” என்றும், ஜெட்லி அவர்களை ஜெட்லி”ஜி” என்றும் அழைத்தால், நான் பாஜக காரனாக ஆகி விடுவேனா…?

      நான் யாருக்காகவும் பயந்து செயல்பட முடியாது….
      என்னுடைய எழுத்து, நடை – என்னுடைய விருப்பம்…
      உங்களுக்காக நான் என் நடையை மாற்றிக் கொள்ள முடியாது….

      // ஆன்மிக அரசியலுக்காக மஹாத்மாவின் பிரார்த்தனை கூட்டங்களை
      ஒப்பீடாக காட்டி இருப்பது வருந்தத்தக்கது //

      எனக்கு தோன்றியதைத் தான் நான் எழுத முடியும். உங்கள் மனதில் இருப்பதை நான் எழுத முடியாது… அதைத்தான் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே…

      உங்களுக்கு ரஜினியை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு போங்கள்.
      அதற்காக என் கருத்துகளை நான் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

        நன்றி … ! அனைவருக்கும் ஒத்த பார்வை இருக்காது — உங்களை யார் பயம் காட்டுகிறார்கள் — அவரவர் மனதில் இருப்பதை அவர்கள்தான் எழுத முடியும் … பிடிக்கவில்லை என்றால் நீக்கி விடுங்கள் — மிகுந்த கோபம் தேவையில்லாதது — பின்னூட்டம் இடாதே என்று கூறும் உரிமைகூட உங்களுக்கு இருக்கிறது — மீண்டும் உங்களின் கருத்துக்களுக்கு — நன்றி … இனியும் இது பற்றிய விவாதம் தேவையில்லை — இதற்கும் கோபித்துக்கொள்ளாதீர்கள் … !!!

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


          காரணம் இல்லாமலா கோபம் வந்தது…?

          உங்களது முந்தைய பின்னூட்டத்தை மற்றுமொரு முறை படித்துப் பாருங்கள்…. வரம்பு மீறி தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதி இருப்பது தெரிய வரும்….

          • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

            இனி என்னால் தங்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்றும் — இத்தனை ஆண்டுகள் என்னுடைய பின்னூட்டங்களுக்கு அனுமதியளித்தற்கும் — சிலவற்றை இடுகையாக கூட பதிவிட்டதற்கும் தங்களுக்கு நன்றிகூறிக்கொண்டு — இதுகாறும் என்னுடைய பின்னூட்டங்களால் தங்களின் தளத்தின் மேன்மைக்கு எந்த பங்கமும் ஏற்படுத்தாதவன் என்கிற உறுதியோடும் விடைபெற்றுக்கொள்கிறேன் .. !!!

  12. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    இரண்டு மூன்று தினங்களாக சில அலுவல்கள் காரணமாக உடன் பதில் எழுத இயலவில்லை. உங்கள் மீது சிறிதளவும் சந்தேகம் இல்லை. நீண்ட காலமாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். எனது வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      விடுங்கள் புது வசந்தம்…

      நானும் உங்களை நீண்ட நாட்களாகவே அறிவேனே…
      தப்பித்தவறிக்கூட அத்தகைய எண்ணம் வந்து விடக்கூடாதே என்று தான்
      லைட்’டாக எடுத்துச் சொன்னேன்…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  13. Karu's avatar Karu சொல்கிறார்:

    R u born in Kannada?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      கரு……….

      முதலில் தமிழில் கேளுங்கள் …
      பிறகு பதில்……… தருகிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  14. R.Srinivasan's avatar R.Srinivasan சொல்கிறார்:

    Mr.S.Gurumurty, the RSS ideologue not stopped saying what he wanted to say in BJP’s propaganda magazine, The Tuqlak (after Mr.Cho, it became like that), he further went on to say in his twitter message, that “Mr.Rajnikanth, by saying that he wants to do spirutual politics in Tamilnadu, comes closer to Mr.Narendra Modi, who is already doing spirutual politics”. Therefore, the suspicion increases double. Mr.Rajnikanth, though explained the meaning for his comments, he has to do a lot to explain and prove beyond doubt that his politics has got nothing to do with RSS/BJP, which thrives successfully in politics by feeding communal, divisive politics.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.