அவசியம் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய – அருண் கிருஷ்ணமூர்த்தி….




“தந்தி” தொலைக்காட்சியில் தேர்தல் கருத்து கணிப்பு,
தேர்தல் முன்னோட்டங்கள் குறித்த நிகழ்ச்சிகளில்,
திரு.பாண்டே அவர்களுடன், அநேக நண்பர்கள் ஏற்கெனவே
இவரை பார்த்திருப்பீர்கள்…ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும்
பல தொகுதிகளில் விரிவான சர்வே நடத்தி,
தெளிவான புள்ளி விவரங்களை திரு.பாண்டே அவர்களுக்கு
தருவார்…. அது இவரது முக்கிய பணி அல்ல….seasonal job….!!!

இவர் மேற்கொண்டிருக்கும் இன்னொரு பணி – மிக முக்கியமான
சமுதாயப்பணி – ஏரிகளை மீட்டெடுப்பது….!!!

இவர் பேசும் ஒரு காணொளியை கீழே தந்திருக்கிறேன்.
அதுவே இவரைப்பற்றிய ஒரு தெளிவான,அறிமுகத்தை உங்களுக்கு
உண்டாக்கும்… ( இவரைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு என்னுடைய
இளமைக்காலம் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை…!!!)

இவரைப் போன்ற இளைஞர்கள் தான்
நமது சமுதாயத்தின் இன்றைய தேவை.

ஒரு தெளிவான பார்வை…
தீர்க்கமான சிந்தனை…

நம்முடைய சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது….?
உண்மையில் இது எப்படி இருக்க வேண்டும்…?
அந்த சூழ்நிலையை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும்…?

நாம் இதில் உருப்படியாக எப்படி செயலாற்ற முடியும்…?

இவற்றை பற்றி எல்லாம் தீர்க்கமாக யோசித்து, உரிய வகையில்
திட்டங்கள் தீட்டி, உரிய இடங்களில் அனுமதி வாங்கி,
இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி, ஆர்வத்துடன் செயல் புரியும்
இளைஞர் அருண் கிருஷ்ணமூர்த்தி, தனது முயற்சிகளில்
வெற்றி மேல் வெற்றி பெற –

அவருக்கு வாழ்த்து கூறுவதோடு நில்லாமல், எந்த வகையில்
இணைந்து பணியாற்ற முடியும் என்றும் யோசிப்போம்.

அவரது தொண்டு நிறுவனத்தின் பெயர் –
Environement Foundation of India….

————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அவசியம் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய – அருண் கிருஷ்ணமூர்த்தி….

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    இவரது காணொளியை நான் முன்னமே பார்த்திருக்கிறேன். எனக்கு, அந்த கருத்துக்கணிப்பு ‘அருண் கிருஷ்ணமூர்த்தி’ மாதிரியே இருக்கிறாரே இவர் என்று ரொம்ப நாளா சந்தேகம். நீங்கள் எழுதியுள்ளதை மனதில் இருத்திக்கொண்டேன்.

    இந்த மாதிரி வித்தியாசமான, அவசியமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டு இன்டெரெஸ்டிங் ஆக்குக்கிறீர்கள் கா.மை சார். பாராட்டுக்கள்.

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    நன்காெடை என்று யாரிடமும் எதுவும்பெறாமல் நற்பணி செய்கின்ற இவரைப்பற்றி விகடனில் வெளியிட்டு இருந்தார்கள் … கூகுளில் நல்ல சம்பளத்தில் இருந்த வேலையை உதறிவிட்டு இப்பணிகளை செய்வதை மனதார பாராட்டி வரவேற்பாேம்

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // அசத்தும் நெதர்லாந்து விவசாயம்! // …..
    http://www.vikatan.com/anandavikatan/2017-nov-15/interviews—exclusive-articles/135998-the-hi-tech-future-of-farming-in-the-netherlands.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=14438. … படிக்க ஆச்சர்யமாகவும் … அசத்தலாகவும் இருக்கிறது … அதே சமயம் நம் விவசாயம் காணாமல் பாேவதை நினைத்து வருத்தமாக இருக்கிறது …!!!

  4. Gopi's avatar Gopi சொல்கிறார்:

    praneesh,

    That vikatan site is not opening. They are not opening it
    for everybody.

    • பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

      நண்பரே …! எனது பின்னூட்டத்தில் உள்ள ‘ லிங்க் ‘ கை கிளிக் கொடுத்தாலே ஓப்பன் ஆகும் … நன்றி …!!

  5. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Good work, Ban plastics(less than 40 microns),educating the younger minds-sabassh

  6. Prakash P's avatar Prakash P சொல்கிறார்:

    Yes they have restored so many ponds/lakes across tamilnadu. You can follow them in FB -https://www.facebook.com/indiaenvironment/

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.