5 ஸ்டார் ஹோட்டல் அரசியல்….!!!


இந்திய சரித்திரத்திலேயே ஒர் ஃபைவ் ஸ்டார் ( 5 star hotel )
ஹோட்டலில் துவங்கப்பட்ட முதல் கட்சி இதுவாகத்தான் இருக்கும்.

தன்னைத் தானே “அதி மேதாவி” என்று நினைத்துக் கொள்ளும்
ஒரு அகம்பாவம் பிடித்த, சுத்த சுயநலவாதி புதிய கட்சி ஒன்றை
ஆரம்பிக்கிறார்…. மன்னிக்கவும், ஆரம்பிக்கப்போவதாக
அறிவித்திருக்கிறார்.

ஏன் ?

வயதாகி விட்டதாலும்,
கதாநாயகன் தவிர வேறு எந்தவித
பாத்திரங்களிலும் நடிக்க விரும்பாததாலும்…?

இவருடனான பழைய அனுபவங்கள் காரணமாக
இவரை வைத்து முதல் போட புதிய தயாரிப்பாளர்கள் யாரும்
தயாராக இல்லாததால்…?

சினிமா உலகில் உத்திகள் மாறி விட்டதால்… ?
சினிமா உலகில் value குறைந்து விட்டதால் ?
புதிய சினிமா வாய்ப்புகள் இல்லாததால் ?

தான் எப்போதும் மீடியாவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கப்பட
வேண்டும் என்கிற பேரவா காரணமாக ?
ரஜினிகாந்த் வருவதற்குள் முந்திக்கொண்டு அரசியல் சூழ்நிலையை
மாற்றி விட வேண்டும் என்பதால் ?

ஒரு அரசியல்வாதியின் முதல் தகுதி –

அவர் பேசுவது பொதுமக்களை சென்றடைய வேண்டும்.
மக்களுக்கு எளிதாக புரியும்படி இருக்க வேண்டும்.
இவர் சாதாரண மக்களுக்கு புரியும்படி எப்போதாவது பேசியதுண்டா..?
இவர் ட்விட்டர்கள் மூலமும், ஸ்டார் ஓட்டல்களிலும், தான் பேசுகிறார்.

இது தமிழ்நாட்டின் பாமரர்களை எப்படி சென்றடையும் ?

தன்னை அதி மேதாவி, சிந்தனைச்சிற்பி என்று மற்றவர்கள்
நினைத்துக் கொள்ள வேண்டும் என்றே, இயற்கையாக இல்லாமல்,
மிகவும் யோசித்து –

செயற்கையான, புழக்கத்தில் இல்லாத – வார்த்தைகளை உருவாக்கி
எழுதுகிறார், பேசுகிறார். காரணம் தாழ்வு மனப்பான்மையா அல்லது

உயர்வு மனப்பான்மையா… ?

திரு.அர்விந்த் கெஜ்ரிவாலின் பல உத்திகளை இவர் மேற்கொள்ள
முயன்று வருகிறார்..

ஆனால் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இருந்த சில (favourable)
சாதகமான சூழல்கள் இவருக்கு இல்லை… அதை இவர்
புரிந்துகொள்ளவில்லை.

முதல், முக்கியமான காரணம் – அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு
PAST HISTORY – பழைய வாழ்க்கை எந்தவிதத்திலும் எதிரானதாக
இல்லை….

இவருக்கு அப்படியா…?
இவரது 60 ஆண்டுக்கால வாழ்வும், சரித்திரமும்
தமிழக மக்களுக்கு நன்கு தெரியுமே…
அது நிச்சயம் பாசிடிவ்வாக இல்லையே…

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு க்ளீன் இமேஜ் இருந்தது.
அண்ணா ஹஜாரே அவர்களின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில்
(India Against Corruption) மிகத்தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூழ்நிலை அது. மக்களிடம் அவருக்கு அப்போது மிகுந்த செல்வாக்கு இருந்தது.

டெல்லி மாநிலம் என்பது கிட்டத்தட்ட முழுவதுமான ஒரு நகர
சூழ்நிலை… மக்களை சுலபமாக சென்றடைந்து விடலாம். மக்கள் – ஆண்களும், பெண்களும், வயதானவர்களும், இளைஞர்களும் –
கெஜ்ரிவாலையும், அவரது இயல்பு, பின்னணிகளையும் மிக நன்றாக
அறிந்திருந்தார்கள்.

கெஜ்ரிவாலுக்கு இருந்த அதே ப்ளஸ் பாயிண்டுகள் – இவருக்கு
நெகடிவ் பாயிண்டுகளாக இருக்கும்….

இவரது பழைய பின்னணி –
தன்னை வைத்து படம் எடுத்த முதலாளிகளுக்கு
இவர் கொடுத்த தொல்லைகள் –
சினிமா வாழ்க்கையில் இவர் தனக்கென
உருவாக்கிக்கொண்ட இமேஜ் –

படத்துக்கு படம் வித்தியாசமான முத்தக் காட்சிகள்…
தன்னை முற்போக்குவாதியாக பிம்பப்படுத்திக் கொள்ள –
செயற்கையாக, தேவையே இல்லாமல் –
இந்து மதத்தையும்,
இந்து கடவுள்களையும் கேலியும் கிண்டலும் செய்தது….

குடும்ப வாழ்வை பற்றியும், திருமண வாழ்வை பற்றியும்
இவரது கொள்கைகள்…
முன்னாள் மனைவிகள், துணைவிகளுடனான இவரது வாழ்க்கை..

எப்போதும் அடித்துக் கொள்ளப்படும் ” சுயதம்பட்டம்..”
இத்தனை வருடங்களாக, இத்தனை சம்பாதித்தும், தன்
சம்பாத்தியத்திலிருந்து, பொதுமக்களுக்காக சல்லிக்காசு கூட
செலவழிக்காதது….

அறுபது வயது வரை, பொதுமக்களின் பிரச்சினைகளைப்பற்றி
எந்த கவலையும் கொள்ளாமல், அரசியலில் ஈடுபடுவது என்று
தீர்மானித்த பிறகு காட்டும் திடீர் ஈடுபாடு (involvement…)

எப்போதும், எதிலும், பிடி கொடுக்காமல் வழுக்கிக்கொண்டே போவது… இன்னமும் கூட அவர் தனது கட்சி பற்றி தீர்மானமாக எதையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அறிமுகப்படுத்திய APP பற்றி பேசும்போது கூட
ஒரு “பயம்” – குழப்பம். செய்தியாளினி ஒருவர் “சார் இந்த APP
பற்றி கொஞ்சம் விவரமாக சொல்ல முடியுமா..?” என்று கேட்டவுடன்
பதறிப்போய், “அதெல்லாம் இப்போ முடியாது… சொன்னால் மற்றவர்கள் காப்பி அடித்து விடுவார்கள்…. எல்லாம் உறுதிசெய்த பிறகு ஜனவரியில் சொல்கிறேன் ” .

ஒரு விதத்தில் – அவருக்கு இயற்கை சில விஷயங்களை
கற்றுக் கொடுக்க இந்த வாய்ப்பு பயன்படும்.
வாழ்க்கையில் அவர் “முன் வினை” – “பின்-வினை”
ஆகியவற்றைப்பற்றி எல்லாம் உணர ஒரு வாய்ப்பு ஏற்படும் –

இந்த காரணங்களுக்காகவாவது அவரது முயற்சிகள் தொடரட்டும்
என்று தான் சொல்ல வேண்டும்….

ஆனால் அநேகமாக, அவரது இப்போதைய முதல் கவலை –
நேற்றைய 5 ஸ்டார் ஓட்டல் பில்லுக்கான செலவை
எப்படி மீட்பது என்பதாகத்தான் இருக்கும்… என்று நம்பலாம்.

—————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

35 Responses to 5 ஸ்டார் ஹோட்டல் அரசியல்….!!!

  1. Raj's avatar Raj சொல்கிறார்:

    கமலுக்கு அத்தனை நெகட்டிவ் இமேஜ் ம் ரஜினிக்கு இருக்கும் போது
    ரஜினியே அரசிலுக்கு ஆசைப்படும் போது தான் ஆசைப்பட கூடாதா என்ற ஆதங்கம் தான்

  2. tyaguu's avatar tyaguu சொல்கிறார்:

    He has already asked money from his Fans to start the party. I have never seen the fan club banner and its activities so far except few banners outside his house.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எல்லோரும் கமலஹாசனை அரசியலுக்கு வரவேற்க வேண்டும். எதிர் மறையாக எதையும் சொல்லாதீர்கள். இதைவிட அவருக்குப் பாடம் கற்பித்துக்கொடுக்கும் வாய்ப்பு நமக்கும் கிடைக்காது, பாடம் கற்க அவருக்கும் வாய்ப்பு கிடைக்காது.

    1. எம்ஜியார் நல்ல பிம்பம் வைத்திருந்தார். அவர் தங்களுக்காக உழைப்பவர், தங்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்பதை பசுமரத்தாணிபோல் பாமரர்கள் மனதில் பதியச் செய்தவர்.

    2. ரஜினி, சொந்த வாழ்க்கையில் குற்றம் குறை இருப்பினும், முகத்தைச் சுளிக்கும் அளவு எதையும் செய்யாதவர். அதைவிட, ‘அல்லது’ நடந்தபோது, தைரியமாக மேடையில் பேசி, அதன் மூலம் தனது தைரியத்தை நிரூபித்தவர். எம்ஜியார், சிவாஜி போல, எம்ஜியாரை மக்கள் விரும்பினார்கள், சிவாஜி நடிப்பை ரசித்தார்கள், ரஜினி-கமல், ரஜினியை மக்கள் மதித்தனர், கமல் நடிப்பை ரசித்தனர்.

    3. கமல் புத்திசாலி என்பதால், சிவாஜிபோல் சொந்தக் காசை செலவழிக்காமல், கட்சி ஆரம்பிக்கும்போதே ரசிகர்களிடம் பணத்தை எதிர்பார்க்கிறார். அதனால் அவர் சொந்தப் பணத்தை இழக்கமாட்டார். இழக்காமலேயே அருமையான பாடத்தைக் கற்றுக்கொள்வார்.

    கமலுக்குள்ள disadvantages
    1. அவர் புரியும்படி பேசமுடியாது. அவர் பேசுவது ரசிகக் குஞ்சுகளைத் தவிர வேறு யாருக்கும் புரியாது.
    2. அவரிடம் Strong Stand எதிலும் கிடையாது. தைரியமும் கிடையாது. கழுவும் நீரில் நழுவும் மீனாக கருத்து சொல்லுவார்.
    3. இவர் நேர்மையானவராக இருந்ததே இல்லை (ராயப்பேட்டை பெனெஃபிட் பண்ட் முதல் அவரைவைத்து படம் எடுத்த முதலாளிகளின் நிலைமை வரை…. அவரை வைத்துப் படமெடுத்த முக்தா ஸ்ரீனிவாசனையே வருத்தப்படும்படி துச்சமாகப் பேசியவர்)

    அவருடைய சொந்த வாழ்க்கையை (பெண்கள் விஷயம்) மக்கள் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஆனால், தேவையானபோதெல்லாம் கமல் குரல் கொடுக்காமல் பம்மி இருந்ததையும் மறக்கமாட்டார்கள்.

    • மருதன்'s avatar மருதன் சொல்கிறார்:

      “நடந்தபோது, தைரியமாக மேடையில் பேசி, அதன் மூலம் தனது தைரியத்தை நிரூபித்தவர். ”

      செம காமெடி
      ஜெயா மீது மக்கள் பெரும் வெறுப்பில் இருந்த போது ஜெயாவை கடுமையாக விமர்சித்தார்
      ஜெயா வென்ற போது ஆதி பராசக்தி என்கிறார்

      பல்டி க்கு இலக்கணமே ரஜினி தான்

      • மருதன்'s avatar மருதன் சொல்கிறார்:

        மக்களை பொறுத்தவரை இரண்டு பேரும் கூத்தாடிகள் தான் ( ரஜினி ,கமல் )
        மகோரா நிலை வேறு
        அவர் ஆரம்ப நாள் முதல் கவனமாக தன் இமேஜை உருவாக்கி வந்தார்
        இவர்கள் இருவரும் அப்படி அல்ல
        ரஜினிக்கு ரசிக குஞ்சுகள் எண்ணிக்கை பெரிது அவ்வளவுதான் வேறுபாடு
        ஆனால் ரசிக குஞ்சுகள் ஏதாவது பெரும் கட்சி ஆதரவாளனாக இருந்தால் அவன் வாக்கு கூட கிடைக்காது

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        மருதன்-உங்கள் அப்சர்வேஷன் தவறு. 96ல் தைரியமாக ரஜினி ஒரு நிலையை எடுத்தார். பிறகு 96-2001ல் கருணானிதி ஆட்சியையும் காட்சியையும் பார்த்து, ‘இவரை நம்பி அவரைக் குறை சொன்னோமே’ என்று புரிந்துகொண்டதால், இருவரையும் ஒருசேர ஆதரிக்கும் மனோபாவத்துக்கு வந்தார். இருவரையும் பகைக்கவேண்டாம் என்ற நிலையையும் எடுத்தார் (திரைப்பட வியாபாரத்துக்காக, அவரது ஸ்டாண்ட் பலரைப் பாதிக்கும் என்பதால்). இப்போதும் அவர் வந்தால் ஆதரவு நிச்சயமாக இருக்கும் (ஜெ.வின் இடம் நிரப்பப்படவில்லை. ஸ்டாலின்/திமுக நல்ல பெயர் பெறவில்லை). ஆனால், அந்தோ பாவம், அவருக்கு வயதும் உடலும் இல்லை.

        நான் பாஜக, மோடி செய்த சிலவற்றை கடுமையாக ஆதரித்தேன். இப்போது சிலவற்றை யோசித்து, தவறு செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. இதேபோல்தான் பலர், தங்கள் நிலைமையிலிருந்து மாறலாம். இதற்குப் பெயர் பல்டி இல்லை, அனுபவமும் படிப்பும் கற்றுக்கொடுக்கும் பாடம்.

        • திருமாவேலன்'s avatar திருமாவேலன் சொல்கிறார்:

          இப்போது எவ்வளவோ ரஜினி கற்றிருப்பார்
          இப்போது திமுக தொடர்பான நிலைப்பாடு என்ன ?
          அவரால் பகிரங்கமாக சொல்ல முடியுமா ?
          மோடியின் நாணய நீக்கம் தொடர்பான ரஜினி கருத்து என்ன ?
          நாணய நீக்கத்துக்கு ஆதரவு அளித்த கமல் கூட மன்னிப்பு கேட்டுள்ளார்
          ஆனால் ரஜினி நிலைப்பாடு என்ன ? ( ஆரம்பத்தில் ஆதரவு அளித்தவர் ரஜினி )

    • Raj's avatar Raj சொல்கிறார்:

      “இவர் நேர்மையானவராக இருந்ததே இல்லை (ராயப்பேட்டை பெனெஃபிட் பண்ட் முதல் அவரைவைத்து படம் எடுத்த முதலாளிகளின் நிலைமை வரை…. அவரை வைத்துப் படமெடுத்த முக்தா ஸ்ரீனிவாசனையே வருத்தப்படும்படி துச்சமாகப் பேசியவர்)”
      .
      .
      உங்களுக்கே காமெடியாக இல்லையா ?
      கமலை அறிமுகப்படுத்திய பாலசந்தருக்கு அடிமையாக இருக்கலாம் .. அது நியாயம்
      ஆனால் அவர் நடிச்ச அத்தனை பட தயாரிப்பாளர்களுக்கும் அடிமையாக இருக்கணுமா ?
      முக்தா ஸ்ரீனிவாசனை விமர்சனம் செய்யவே கூடாதா ? எவ்வளவு மட் டமான அடிமை புத்தி உங்களுக்கு
      .
      கமல் வாய்ப்பில்லாத காலத்தில் வாய்ப்பு கொடுத்து இருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்
      ஆனால் கமல் முக்கிய நடிகரின் ஒருவராக இருக்கும் போது அவரை வைச்சு படம் எடுத்தது முக்தாவின் வியாபார உத்தி
      .
      இந்த வியாபாரத்தில் சிக்கலை வெளியில் சொன்னால் குற்றமா ?
      .
      நாளைக்கு ஒரு தயாரிப்பாளர் நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தால் அதை வெளியில் சொன்னால் தப்பு என்பீர்கள்

  4. தமிழ்'s avatar தமிழ் சொல்கிறார்:

    தங்கள் படங்கள் கர்னாடகாவில் ஓட வேண்டும் என்பதற்காக இரண்டே நாளில் காவிரிப் போராடத்திற்காக கொடுத்த ஆதரவை திரும்பப் பெற்றவர்கள் ஆயிற்றே கமல் ரஜனி. பிழைக்கத் தெரிந்த சுயநலவாதிகள்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      தங்கள் குடும்ப பிசினெஸ் வளரவேண்டுமே என்பதற்காக, காவிரி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் விட்டவர்களைவிடவா? தமிழ்நாட்டில், ‘காவிரி, கர்னாடகா தண்ணீர் விடு’ என்றெல்லாம் தங்கள் தொலைக்காட்சியில் பல்ப் காண்பித்துவிட்டு, கர்னாடகா தொலைக்காட்சியில், ‘தண்ணீர் விடக்கூடாது’ என்று அதற்கேற்றவாறு நிகழ்ச்சிகளை வெளியிட்ட திமுகவின் மாறன் சகோதரர்களைவிடவா? தினகரன் நாளிதழ் தங்களுக்கு விற்றதற்காக, கட்சிப் பதவியான எம்.பி. பதவியை அளித்தவர்களைவிடவா ரஜினி சுயனலவாதியாகிவிட்டார்?

  5. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    நேற்று GRT hotel – ல் கிட்டத்தட்ட 200 பேர், பெரும்பாலும் டெல்லி, வட இந்திய
    தொலைகாட்சி சேனல் நிருபர்கள், கேமராமென். டெல்லி டிவிக்களில் லைவ் பேட்டி வந்தது. அதை முன்னிட்டு அத்தனை பேருக்கும் கமல் ஸ்டார் ஓட்டல் விருந்தளித்தார். தன் கட்சிக்கான வரவு செலவுகள் அனைத்தும் வெளிப்படையாக
    வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்று கமல் அறிவித்திருக்கிறார்.
    இன்னமும் கமல் குறிப்பிட்ட 30 கோடி ரூபாய்க்கான வசூல் திட்டம் துவங்காததால், இந்த விருந்திற்கான “பில்”லை யார் கொடுத்தது என்பதை
    கமல் முதலில் விளக்கினால் நல்லது.
    இதிலிருந்தே அவரது “வெளிப்படையான ” கணக்கு வழக்கு விவகாரங்களை துவக்கலாம்.

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      @இளங்கோ – இதில் ரெண்டு விஷயம் இருக்கு. ஊடகங்களின் வேலை என்ன? செய்தி சேகரித்து அதை வெளியிடுவது. அவர்களுக்கு ஊடகம் சம்பளம் தருது. சேனல்களுக்கு விளம்பர வருவாய். இப்படி இருக்கும்போது, ஓசி தீனி தின்னும் இந்த ஊடக நண்பர்கள் (விருந்தில் கலந்துகொண்டவர்கள்), மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் யோக்கியதை உண்டா? (வாக்காளனே.. லஞ்சம் வாங்காதீர்கள், அரசே ஊழல் செய்யாதே என்பதைப் போன்று)

      கமல் அவர்கள் கட்சி பற்றிய அறிவிப்பு போன்றவைக்கு, எதற்கு லஞ்சம் கொடுப்பதுபோல் விருந்து தரவேண்டும்? அவர் என்ன உண்ண உணவில்லாதவர்களுக்கு எப்போதாவது விருந்தளித்திருக்கிறாரா?

      இதைப் பார்க்கும்போது, கமல் முயல்வது, மற்றவர்கள் செய்யும் ஊழலை ஒழிக்கவா அல்லது அதனைக் கண்டுபிடித்து தான் இன்னும் மேம்பட்ட ஊழல் செய்வதற்கா?

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        கமல் இதைச்செய்வது அது இரண்டையும் தாண்டி –

        தனக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது மீடியாவில்
        விளம்பரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக….

        செய்தியாளர் கூட்டத்திற்கு வரும் நிருபர்களுக்கு “கவர்” கொடுக்கும்
        அரசியல்வாதிகளை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்…
        அது போன்றது தான் இதுவும். சுலபமாக விளம்பரம் தேடும் வழி…

        நேற்று ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் டிவி – எல்லாம் பார்த்தீர்கள் அல்லவா ?
        அகில இந்திய அளவில் டெல்லி ஆங்கில சேனல்களில் லைவ் ஒளிபரப்பு
        செய்யக்கூடிய நிகழ்வா நேற்று நடந்தது…? ஆனால் அவர்கள் “பரப்பினார்களே…”…!!!

  6. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    Anyone will be better personalities than existing Party heads in all aspects

  7. Justin Robers's avatar Justin Robers சொல்கிறார்:

    நண்பரே, வணக்கம்,
    டிடி – பொதிகையில், வாரந்தோறும் ‘காவிரிமைந்தன்’ என்பவர், கவிஞர் கண்ணதாசனின் பாட்டெழுதும் திறன் பற்றி குறிப்பிட்டு, பழைய திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்குகிறார். நேற்று இரவு கூட (07.11.2017) பார்த்தேன். அந்த டிடி – பொதிகை காவிரிமைந்தன் நீங்கள்தானா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப Justin Robers.

      இல்லை நண்பரே. அது நான் இல்லை.

      நான் பொது நிகழ்ச்சிகளில் எப்போதாவது கலந்துகொள்ள நேரிட்டால்,
      அங்கு என் சொந்தப்பெயரில் தான் அறியப்படுவேன். “காவிரிமைந்தன்”
      என்பது என் புனைப்பெயர்… இந்த வலைத்தளத்திற்காக மட்டும் தான்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  8. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    சில பேர் உண்மையை உணராது அல்லது அறிய மறுத்து பக்கம் பக்கமா ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு தான் ரொம்ப ஞாயவான் மாதரி காண்பித்துக் கொள்வார்கள்.

    நீங்கள் என்ன தான் அவர்கள் எழுத்தை கண்டித்து எழுதினாலும் அதற்கும் அதிமேதாவித்தனமாக அதற்கும் ஒரு பின்னூட்டத்தை இடுவார்கள். அவர்களின் நோக்கம் திசை திருப்பலே.

    இன்னும் தன்னை எல்லாம் தெரிந்தவர்களாக காண்பித்து கொள்ளும் ஒருவித மன அரிப்பாக கூட இருக்கலாம். பாவம்.

    கமல் ஹாசன் சம்பந்தப்பட்ட மேலேயுள்ள இடுகைக்கும் திமுக/ஸ்டாலின்/சன் டிவி ஆகியவற்றிற்கும் ஏதாவது தொடர்பிருக்கா? அல்லது திமுக ஊழல் செய்யவில்லையென்றொ அல்லது அதை ஆதரித்தோ யாராவது இங்கு எழுதினார்களா?

    விட்டுவிடுவோம்.

    இது ஒருவிதமான மன அரிப்பு.

  9. Antony's avatar Antony சொல்கிறார்:

    I believe a good criticism will discuss both positives and negatives. Have you found anything positive in his speech or in the event?

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      Absolutely you are right, everyone have whole wright to critisise, this blog and its most of the articles are doing the same thing. But you have no wright to diversion from the content. Right.

      • Antony's avatar Antony சொல்கிறார்:

        Dear “அறிவழகு”,
        Who is diverting the content?
        See the reply below by KM. KM is not a person to expect his readers to do ‘Ching Chuck’. The purpose of this blog is to initiate discussion as he said sometime back. So please stop doing ‘Ching Chuck ‘ or at least let others to initiate a productive discussion.

        • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

          Antony,

          Diversion’s been not pointed at you.

          What I’ve wrote at top and read it first if you do that you might have come to know that what’s happening here for long time if you have any sense.

          Without any knowledge about ‘diverting’ the content at many articles repeatedly happening here you use unparliament word that shows your rank.

          I forgive you this time.

          • Antony's avatar Antony சொல்கிறார்:

            If it is not pointed at me, why did you mention it in the comment replying me?
            My comments were made for the post. So anything posted as a reply to my comment will be considered as pointing at me. And thanks for your generosity of forgiving me even though without asking :p :p. I shall forgive your ignorance on how comment structure works in this blog.

          • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

            Still ”you” have no knowledge. Anyway thanks for accepted it.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Antony,

      இந்த நிகழ்வினால் நான் எதிர்பார்க்கக்கூடிய “நல்ல” விளைவு…

      இவர் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் பல தவறுகளை
      தெரிந்தே செய்திருக்கிறார்…. இதுவரை தண்டனையிலிருந்து
      தப்பி இருக்கிறார். இந்த முயற்சியின் விளைவாக அவருக்கு
      தண்டனையும், அவமானமும் கிட்டலாம்.

      இன்னுமொரு விளைவு –
      அது பாசிடிவ்வா அல்லது நெகடிவ்வா என்று இப்போதைக்கு
      என்னால் சொல்ல முடியவில்லை.

      இவர் தனியே ஒரு கூட்டணியை உருவாக்குவார்.
      பாஜகவிற்கு எதிரான ஓட்டுகள் கொஞ்சம் சிதறலாம்.
      திரு.ஸ்டாலினுக்கான வெற்றி வாய்ப்புகளை இவர் குறைக்கக்கூடும்.

      இது மிகவும் துவக்க நிலை…
      விளைவுகளை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Antony's avatar Antony சொல்கிறார்:

        “இன்னுமொரு விளைவு –
        அது பாசிடிவ்வா அல்லது நெகடிவ்வா என்று இப்போதைக்கு
        என்னால் சொல்ல முடியவில்லை”
        – 🙂 🙂
        Usual KM touch.
        Anyway, I still believe Kamal deserve a chance to prove his social awareness. May be he should start with the public statement of the yesterday’s bill settlement..

      • Sanmath AK's avatar Sanmath AK சொல்கிறார்:

        KM Sir,

        What is this – “பாஜகவிற்கு எதிரான ஓட்டுகள்’ ? Do you really think they have got a vote share in TN to be broken ? My perspective is that, efforts are being taken by promoting Kamal so that the ADMK opposing votes are not cast to DMK. Kamal can’t even make a considerable difference. He is hardly accessible. What all you could find with JJ in dealing her party-men, same is there with Kamal too – one exception is that he speaks to media and he is active in present day social media too. In fact JJ used to talk with clarity especially in “communicating” things.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          வருக Sanmath AK,

          // What is this – “பாஜகவிற்கு எதிரான ஓட்டுகள்’ ?
          Do you really think they have got a vote share in TN to be broken ?//

          பாஜக விற்கு தமிழ்நாட்டில் பெரிய ஓட்டு share இருக்கிறது
          என்று இதற்கு அர்த்தமில்லை. திமுகவை நேசிக்காத சில
          கட்சியினர் கூட, பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காக
          திமுகவிற்கு ஓட்டு போட வாய்ப்பு உண்டு ( கம்யூனிஸ்டுகள்,
          வி.சி.க.வினர் போன்றவர்கள்…)

          கமல் வந்தால் அவர்களிலிருந்து சிலர், திமுகவை விட்டு விலகி,
          கமல் பக்கம் போகக்கூடும் என்பது தான் அதன் அர்த்தம்.

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

  10. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இடுகைக்கும் இந்த பின்னூட்டத்திற்கும் சம்பந்தமில்லை. இன்று வந்த நெட்டிசன்கள் டிமானிடைசேசன் கலாய்ப்புகளில் எனக்கு பிடித்த சில:

    ”கருப்பு பணத்தை கைப்பற்றுவோம் என்று கூறி கருப்பாயின் சுருக்கு பணத்தை கைப்பற்றிய நாள்..” – v rajavelu raja

    ”வெள்ளிப்பூட்டை உடைத்து வெளக்கமாத்தை எடுத்த நாள் இன்று!” – saravanan

    மக்கள் தெளிவாத்தான் இருக்கிறார்கள்.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      இன்னும் சில,

      முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி, ‘ஆயிரம் ரூபாய்’ , ‘ஐந்நூரு ரூபாய்’ நோட்டு…!

      ”டீமானிடைசேஷனை உடனே எதிர்த்தவன் புத்திசாலி மனுசன். கொஞ்சநாள்ல எதிர்த்தவன் சராசரியான புத்தியுள்ள மனுசன். ரொம்பநாள் கழிச்சு எதிர்த்தவன் குறைபுத்தியுள்ள மனுசன். ஆனா இப்ப வரைக்கும் ஆதரிக்கிறவன் பாஜக மனுசன்.” – அஷோக் . ஆர்

      அப்படி போடு..!

  11. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    என்னவெல்லாம் காரணம் கண்டுபிடிக்கறாங்கப்பா:
    லேடஸ்ட் செய்தி :

    “பணமதிப்பழிப்பு காரணமாக இந்தியாவில் பாலியல் தொழில் குறைந்துள்ளது. பாலியல் தொழில் காரணமாகப் பெருமளவிலான பணம் இங்கிருந்து நேபாளத்துக்கும் வங்க தேசத்துக்கும் சென்றுகொண்டிருந்தது. தற்போது இவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
    இந்தியாவில் பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுவதும் பணமதிப்பழிப்பு காரணமாக குறைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்
    மத்திய அமைச்சர் திரு.ரவிஷங்கர் பிரசாத் அவர்கள்.

  12. ravikumar r's avatar ravikumar r சொல்கிறார்:

    Any operation would take time to good result. Patience is required

  13. Chaaru's avatar Chaaru சொல்கிறார்:

    கொஞ்சம் பெரிய பின்னூட்டம்.
    திமுக, அதிமுக இரண்டு பெரிய கட்சிகளுமே மக்களிடம் பணம் வாங்கி நடத்தப்படுபவையே.
    பொதுகூட்டங்களுக்கு வியாபார்களிடம் “கேட்டு” வாங்குவார்கள்.
    வேட்பாளர்களிடம் கேட்கப்படும் கேள்வியே “கட்சிக்கு எவ்வளவு செலவளிப்பீங்க” என்பதுதான்.
    கமல் மக்களிடம் வாங்குவதில் தவறு ஒன்றும் இல்லை. கொடுத்தால் கொடுக்கலாம். பிடுங்கமாட்டார்.

    எம்ஜியார், கலைஞர், அம்மா, அவர்களின் தனிப்பட்ட வாழ்வும் கூட கேள்விக்குறியதுதான். கமல் வெளியே சொல்கிறார். மற்றவர்கள் சொல்வதில்லை!
    இதற்கு மேல் விவாதம் செய்வதும் சரியாக இருக்காது.

    அவர் டிவிட்டரில் பேசுவது புரியவில்லை. உண்மைதான். மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறேன்.

    பைவ் ஸ்டார் ஹோட்டல் என்பது கமலின் தரத்திற்கு மிகவும் சாதாரணமான விஷயம். சொந்த காசில் நடத்துகிறவர் எங்கு வேண்டுமானாலும் நடத்தட்டுமே.
    hospitality என்பது press conference-இல் முக்கியமானது. பணமாக அல்ல உணவு, தீனி போன்றவை ஏற்பாடு செய்வது எதற்கு என்றால்
    நியுஸ் காண்பரன்ஸ் ஒரு மணிக்கு என்றால் சாப்பட்டு நேரம், பசி எடுக்கும் நிறைய நிருபர்கள் உணவுக்காக அல்லாடுவார்கள்.
    அவர்களுக்காக உணவு தேவைதான்.
    பைவ் ஸ்டார் ஹோட்டலின் பில் அவருக்கு சாதாரணம்.
    அவரின் சொந்தக்காசு என்றால் அதை திருப்பி எடுக்க நினைப்பதில் தவறு இல்லை – அதாவது சரியான வழிகளில் .

    பொதுக்கூட்டகளுக்கு முன்பு போல் ஆட்கள் வருவதில்லை. முக்கால்வாசி டிவி-இன்டர்நெட்-போண் ஆகியவற்றில்தான் அரசியல் பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.
    இன்றைய நிலையில் கூட்டங்களுக்கு ஆட்களை வரவைப்பது ஒரு “பிஸினஸ்”. காசு கொடுத்து டார்கட் வாங்கிவிடலாம்.

    சினிமாவில் முப்பது வருடங்களாக இருப்பதே சாதனைதான்.
    கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் நாலு படங்கள் வந்தன. தூங்காவனம், பாபனாசம், உத்தம வில்லன், விஸ்வரூபம் எல்லாம் தயாரிப்பாளர்கள் – பைனான்சியர்களிடம் முறைத்துக்கொண்டால் வந்திருக்காது.
    வசூலில் கூட ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித், விஜய்க்கு போட்டிதான்.
    அந்த குறிப்பிட்ட தயாரிப்பாளரின் மனக்குமுறல் உண்மையாகக்கூட இருக்கலாம்.
    நடிகர்கள் தயாரிப்பாளர்களை ஆட்டுவிப்பதும். தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகையரை கஷ்டப்படுத்துவதும்
    சினிமா உலகில் சாதாரணமானதுதான். இதையல்லாம் தாண்டி கமல் பணத்தை கையாடல் செய்த்தாகவோ, சூது வாது செய்ததாகவோ எதுவும் பெரிய புகார் இல்லை.
    இன்றைய இளம் இயக்குனர்கள் கமலை ஆதர்ச நாயகனாகவே சொல்கிறார்கள். இவ்வளவும் சொல்வதற்கு காரணம்
    சினிமாவில் அவரின் இருப்பு எதுவும் குறையவில்லை.

    இன்றைய தமிழக அரசியலில் கலைஞர் இனி அரசியலில் வீச்சாக இறங்க வாய்ப்பில்லை. எல்லாம் ஸ்டலின் தான்.
    அம்மாவிற்கு பிறகு அதிமுக வின் செயல்பாடுகள் கேலிக்குறியன. தேமுதிக, பமக எல்லாம் உதிரிகள்தான்.
    காங்கிரஸ், பஜக இரண்டுமே தமிழகத்தில் பெரிய கட்சிகளில்லை.
    இனி ஒரு வெற்றிடம் ஏற்படும். அதில் கமலுக்கு ஒரு வாய்ப்பு உண்டு.

    கமலின் அரசியல் வருகையை அவரின் வெற்றி-தோல்வியை தாண்டி, நல்லவர்கள் சாதாரண மக்களும் அரசியலுக்கு வரலாம் என்பதைப்போலத்தான் பார்க்கிறேன்.
    மற்றபடி ஒரு Constructive criticism இருப்பது நல்லதுதான் என்று நினைக்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சாரு,

      // எம்ஜியார், கலைஞர், அம்மா, அவர்களின் தனிப்பட்ட வாழ்வும் கூட கேள்விக்குறியதுதான். கமல் வெளியே சொல்கிறார். மற்றவர்கள் சொல்வதில்லை! //

      கமலை தவிர வேறு யாரும் தங்கள் தவறை
      நியாயப்படுத்தி பேசியதில்லை.

      //அவர் டிவிட்டரில் பேசுவது புரியவில்லை. உண்மைதான். மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறேன்.//

      நேரில் பேசுவது மட்டும் புரிகிறதா ?

      மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டியது
      சாருவா அல்லது கமலா ? அவர் வேண்டுமென்றே தானே
      அப்படி செய்கிறார் ? அவர் எப்படி மாற்றிக்கொள்வார் ?

      //பைவ் ஸ்டார் ஹோட்டல் என்பது கமலின் தரத்திற்கு மிகவும் சாதாரணமான விஷயம். //

      கமல் தன் தரத்திற்காகத் தான் அரசியல் செய்யப்போகிறாரா ?
      தன் தரத்தில் உள்ளவர்களை மட்டும் தான் நம்பி இருக்கிறாரா ?

      // நியுஸ் காண்பரன்ஸ் ஒரு மணிக்கு என்றால் சாப்பட்டு நேரம், பசி எடுக்கும் நிறைய நிருபர்கள் உணவுக்காக அல்லாடுவார்கள்.//

      சாப்பாட்டு நேரத்தில் நியூஸ் கான்பரன்ஸ் வைப்பது எதற்காக ?
      வேறு நேரம் கிடைக்கவில்லையா ?

      //சினிமாவில் முப்பது வருடங்களாக இருப்பதே சாதனைதான்.//

      அவருடைய 30 களை எல்லாம் தாண்டி இன்னும் successful ஆக
      இந்திய திரையுலகிலேயே இருப்பவர்களை “சாரு” அறிய மாட்டாரா ?

      //தூங்காவனம், பாபனாசம், உத்தம வில்லன், விஸ்வரூபம் எல்லாம் தயாரிப்பாளர்கள் – பைனான்சியர்களிடம் முறைத்துக்கொண்டால் வந்திருக்காது.//

      விஸ்வரூபம்-2 ஏன் இன்னும் வெளிவரவில்லை ?

      //கமல் பணத்தை கையாடல் செய்த்தாகவோ, சூது வாது செய்ததாகவோ எதுவும் பெரிய புகார் இல்லை.//

      பொதுவாக விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன். ஒருவேளை
      நடித்தால், அது “பெற்றால் தான் பிள்ளையா ?” என்கிற
      தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் என்றார். போத்தியில்
      முதல் முதலாக நடித்தபோது முதலில் கொடுத்து விட்டதாக
      அறிவிப்பு வந்தது. பின்னர் இல்லை என்று வந்தது. இது குறித்து பலமுறை, பல தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இன்று வரை
      இந்த விவரம் விளக்கப்படவில்லை. இது குறித்து விமரிசனம் வலத்தளத்திலேயே விரிவாக கட்டுரைகள் வந்தனவே. சாரு பார்க்கவில்லையா ? அல்லது சௌகரியத்திற்கு மறந்து விட்டாரா?
      பூனை கண்ணை மூடிகொண்டால் பூலோகம் இருண்டு போய்விடாது.
      “சாரு” இல்லை என்று சொல்லி விட்டால், எதுவும் இல்லையென்று
      ஆகிவிடாது.

      // நல்லவர்கள் சாதாரண மக்களும் அரசியலுக்கு வரலாம் என்பதைப்போலத்தான் பார்க்கிறேன். //

      நல்லவர், சாதாரண மக்கள் அரசியலுக்கு வருவதை இங்கு யார்
      எதிர்க்கிறார்கள் ?
      வருபவர் நல்லவரா, சாதாரணமானவரா ?
      எதற்காக வருகிறார் ? எந்த சூழ்நிலையில், எந்த பின்னணியில் வருகிறார் ?
      வருவது பொது நலனுக்காகவா, சுயநலத்தினாலா என்பதெல்லாம் தான்
      விவாதத்திற்குரிய விஷயங்கள்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  14. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    எனக்கு ஒரு சின்ன பெரிய சந்தேகம். ஒரு வேளை ரஜினியை முன்னிறுத்த இந்த கமலை பயன்படுத்துகிறார்களா?? கமலை நெகடிவ் ஹீரோ ஆக்கி ரஜினியை ப்ரொஜெக்ட் செய்து முதல்வர் ஆக்க பிஜேபி அல்லது வேறு யாராவது கட்சி செய்யும் சூழ்ச்சியாக இருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது. எல்லாம் சைகொலோஜி சயின்ஸ் செய்து மக்களை முட்டாள் ஆக்க முற்படுவது போல் உள்ளது.

  15. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    அரசியல் என்பது ….? எத்தனையோ யோக்கியர்கள் போல தங்களை காட்டிக்கொண்டு இதன் உள்ளே புகுந்தவர்கள் — தற்போது எவ்வளவு அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதை கண்டு இருக்கிற நம்மக்களுக்கு — பத்தோடு பதினொன்றாக இவரும் வந்துவிட்டு போகட்டுமே — இவர் வந்து மட்டும் என்னத்தை கழட்டப் போகிறார் என்கிற எண்ணம் எப்போதுமே உண்டு …

    சட்டசபை வாசலை மிதிக்க மாட்டோம் — உறவினர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டோம் — அப்படி நிகழ்ந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்று வீரராப்பு பேசியவர்களையும் — 50 – நாட்களில் இதனால் பலன் ஏற்படவில்லை என்றால் தூக்கில் தூங்குவேன் என்றவர்களையும் — இன்னும் வித – விதமான ” மக்களை ஏமாற்றும் ” டயலாக்குகளை விட்டவர்களையும் ஒன்றுமே கேட்க முடியாமல் — வாய் பொத்திக்கிட்டு விட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்கிற மக்கள் நிறைந்த இந்த நாட்டில் இவர் வந்தால் என்ன … ? தடைபோட்டுவிட முடியுமா … ?

    வருவதற்கே பெரும் முதலீடு கேட்கும் நபரால் — வந்தபின் என்ன நடக்கும் என்பது ஊரறிந்த விஷயம் — சென்ற தேர்தல்களின் போது மீடியாக்கள் உசுப்பேத்தி விட்டு அவருக்கு அவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்று பீலா விட்டு – அவரை கூட்டணியில் சேர்க்க படாத பாடு பட்ட அரசியல் கட்சிகளும் — பழம் நழுவுது — பாலில் விழப்போவுது – என்று கூறியவர்களும் – ” பெட்டி பேரம் ” அது – இது என்று பரவலாக பேசப்பட்டதையும் — இறுதியில் அவர் கட்சி உடைந்ததையும் மறக்க முடியுமா … ? அதேபோல் ஏதாவது நடக்காமலா போகும் இவருக்கும் … ?
    எல்லாம் ஒரு நப்பாசைதான் — எளிதாக ” சம்பாரிக்க ” இந்த அரசியல் சாக்கடையை விட்டால் வேறு வழி எது — ? என்கிற எண்ணம் பரவலாக இருப்பதால் வரும் விளைவுகள் இவை என்பதை மறுக்க முடியுமா … ?

    பதவி போதை — பணத்தாசை — ஏறியபின் இறங்க மனமில்லாமை போன்றவை முக்கிய பங்காற்றும் அரசியலால் — ஒரு கட்சியின் நிலைமை தற்போது எந்த கதிக்கு ஆளாகி — அடிமைப்பட்டு ” லும்பன்களிடம் ” மாட்டிக்கொண்டு முழி பிதுங்குகிறது என்பதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் — வரட்டும் இவர் — வரட்டுமே இவர் … வந்து …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.